Thursday, November 17, 2011

வலைச்சரத்தில் வியாழன்...


வணக்கம்.

File:Jupiter gany.jpg



வியாழக்கிழமை சூரிய குடும்பத்தின், ஐந்தாவது கிரகமாகிய வியாழனைக் குறிக்கிறது. ஜுப்பிடர் எனப்படும் வியாழன் சூரியனை சுற்றி வரும் கிரகங்களிலேயே மிகப்பெரியதும் ஆகும்.இது புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற பாறைக்கிரகங்கள் மாதிரி அல்லாமல் முழுவதும் வாயுக்களினால் ஆன கிரகமாகும்.இதன் உட் பகுதியில் சிறிதளவு உலோகக்கலவை இருந்தாலும் மேற்பரப்பு முழுவதும் திட பொருட்கள் ஏதுமில்லாமல் வாயுக்களால் நிறம்பப்பெற்றுள்ளது.வியாழன் மிகப்பெரிய வடிவமாக இருந்தாலும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் 10 மணி நேரம் மட்டுமே ஆகும்.சூரியனை சுற்றும் இதன் நீள் வட்டப்பாதை பெரியது ஆதலால் இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 12 வருடங்கள் ஆகும். இதன் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிட அதிகமாகும்.


வியாழன் கிரகம் பிரகஸ்பதி என்றும் கூறப்படுகிறது.பிரகஸ்பதி என்றால் குரு என்று அர்த்தம். தனக்கு தெரிந்தை, தான் கற்றதை சொல்லிக் கொடுத்து அஞ்ஞானம் என்கிற இருட்டைப்போக்குவதால் ஆசிரியர்களை,  "குரு" என்கிறோம். அப்படி நமக்கு கற்றுத் தருபவர்களைப்பார்க்கலாம் குரு நாளாகிய இன்று.


இயந்திரகதியாகிவிட்ட இந்த நாட்களில் ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்கக் கூட நாம் கணணியையும்,தொலைப்பேசியையும் நாடுகிறோம்.நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது மிகக்குறைந்துவிட்டது. நேரில் செல்லாவிட்டலும் பரவாயில்லை ஒரு அழகான வாழ்த்து அட்டையாவது அனுப்பலாம் அல்லாவா? Angelin Sundaram  தனது,  காகிதப்பூக்கள்.. பதிவில் நமக்கு அழகான வாழ்த்து அட்டைகள் மற்றும் பலவித கைவேலைப்பாடுகள் செய்ய சொல்லித்தருகிறார். அதை பார்த்து நாமும் செய்யக்கற்கலாம் வாருங்கள்.....


புகைப்படம் எடுப்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடாது. உங்களுக்கு அழகிய புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா?அதைப்பற்றியும் அதன் தொழில்நுட்பம் பற்றியும் அறிய வேண்டுமா? இதோ தமிழில் புகைப்பட கலையை கற்றுத்தருகிறார்கள்.பிட். (PIT_Photography in Tamil) என்ற குழுவினர்.


 ‘பிட்’ பதிவை பார்த்து புகைப்பட கலையை தெரிந்து கொண்டுவிட்டோம். இப்பொழுது புகைப்படம் எடுப்பது சுலபமாகிவிட்டதா? சரி, அதை எப்படி அசைய வைப்பது?  ஸ்ரீதர்.சாதாரண படங்களை அனிமேஷன் படம் ஆக்க கற்றுத்தருகிறார் தனது,  சித்திரம் பேசுதடி.. பதிவில்.


புகைப்படம் எடுத்து அனிமேஷன் செய்ய கணணியை பயன் படுத்த வேண்டுமே! கணணியை எப்படி கையாள்வது?  கவலையை விடுங்கள். கணணியைப்பற்றிய அடிப்படையான விஷயங்களை கற்றுத்தருகிறார் வாசுதேவன் திருமூர்த்தி,தமது தொண்டு கிழங்களுக்கு கணணி என்கிற பதிவில்.


ஜோதிடம் தமக்கு தொழில் அல்ல எனக்கூறும் திரு. சுப்பையா அவர்கள், தான் படித்த, கற்றுணர்ந்த ஜோதிடத்தை பலரும் தெரிந்து கொள்ளும்விதமாக, தனது திறந்தவெளி வகுப்பறையில் எழுதுவதாக தெரிவிக்கிறார்.  நாமும் ஜோதிடம் கற்கலாம் வாங்க இவரது வகுப்பறையில்..


வலைத்தலங்கள் பற்றி ஏதாவது தகவல் தேவையா? இலவச மென்பொருட்கள் தரையிறக்குவது பற்றிய தகவல்கள் தேவையா? அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் சசிகுமார். இவரது வந்தேமாதரம்..  பதிவிலிருந்து நாம் வளைத்தளம் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம்.


நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் தேவை.நம் உடலை எப்படிப் பேணி பாதுகாக்க வேண்டு என்று விளக்குகிறார் ரமேஷ் அவர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக நிறைய பயிற்சிகளை கற்றுத்தருகிறார் தமது,  அன்பு உலகம் பதிவில்.



தையல் கலை, அழகு குறிப்புகள், வர்ணவேலைப்பாடு, கைவினைப் பொருட்கள் இவற்றைப்பற்றி கற்க வேண்டுமா? வாங்க தமிழ் குடும்பம், பதிவுக்கு செல்லலாம்,  இது உங்க குடும்பம் என்று நம்மை அழைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள்.


வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு போறீங்களா? அங்க கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும்? கேட்கப்படும் கேள்விகளுக்கு தடுமாற்றம் இல்லாமல் பதில் சொல்லணுமாம். எப்படீன்னு இந்திரா நமக்கு சொல்லிக்கொடுக்கறாங்க. வாங்க இந்திராவின் கிறுக்கல்கள். இங்க போய் நாமும் நேர்முகத்தேர்வுக்கு எப்படி தயாரா இருக்கணும் அப்படீன்னு தெரிஞ்சுக்காலாம்.


நீங்க பொறியியல் படிப்பு படிக்கறவரா? அப்படீன்னா வாங்க தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பதிவுக்கு. மெக்கானிகல் துறையினருக்காக..தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.படித்து பயன் பெறலாம்.






நாளை மீண்டும் சந்திப்போம்.


அன்புடன்,
ரமாரவி.

37 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நன்றி ரமா!
    குரு என்ற பதத்துக்கு கனமானது என்றும் பொருள் உண்டு. வியாழந்தான் மிகவும் கனமான கிரகம்! முன்னோர்கள் அதை எப்படி அறிந்திருந்தார்கள்? :-)))

    ReplyDelete
  3. வாவ்!பன்முக பரிமாணங்களில் பதிவர்களையும் பதிவுகளையும் எல்லாருக்கும் பயனுள்ள வகையில் அறிமுகம் செஞ்சுருக்கீங்க மேடம்.
    இன்றைய அறிமுகங்கள் பலருக்கு பயனுள்ள பதிவுகள் தந்தவங்களா இருக்காங்க.இவங்களை வியாழன் அன்று
    எடுத்துரைத்தது நல்ல பொருத்தம்.பகிர்விற்கு நன்றி.எல்லா பதிவுகளுக்கும் போய் வருகிறேன்.

    ReplyDelete
  4. வியாழன் சிறப்பையும். தொழில்நுட்ப பதிவுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  5. எனது சி என் சி(cnc) பற்றிய தொடரை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து குறிப்பிட்டு காட்டிய ராம்வி சகோ அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய தகவல்களுடன் தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. விழாயனை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி... அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. குரு (வியாழன்) விளக்கமும் அருமையான பதிவர்கள் அறிமுகமும் கலக்கல் ரமா அக்கா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பதிவுலகிற்கு வந்து மிகக்குறுகிய காலத்தில் வலைச்சரம் உங்கள் வசம் ஆனது ஆச்சரியம் தான் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு

    ReplyDelete
  11. பயனுள்ள அறிமுகங்கள்.. நன்றி ராம்வி.

    ReplyDelete
  12. அறிமுகப்பட்டியலில் என்னுடைய பதிவினையும் இணைத்ததற்கு நன்றி..
    மற்ற சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சிறப்பான பதிவுகள் அறிமுகத்திற்கு நன்றி ரமா.

    ReplyDelete
  14. மிக்க நன்றி வாசுதேவன் திருமூர்த்தி.

    ReplyDelete
  15. ரொம்ப நன்றி ராஜி தங்களின் கருத்துக்கு.

    ReplyDelete
  16. மிக்க நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  18. மிக்க நன்றி குமார்.

    ReplyDelete
  19. மிக்க நன்றி செந்தில்குமார் தங்களின் வாழ்த்துகளுக்கு.

    ReplyDelete
  20. நன்றி லக்‌ஷ்மி அம்மா.

    ReplyDelete
  21. மிக்க நன்றி ராஜா.

    ReplyDelete
  22. மிக்க நன்றி மாதவன்.

    ReplyDelete
  23. மிக்க நன்றி இந்திரா.

    ReplyDelete
  24. நன்றி சாகம்பரி மேடம்.

    ReplyDelete
  25. வியாழன் பற்றிய செய்தி சூப்பர், அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கும்...

    ReplyDelete
  26. பயனுள்ள பதிவுகள். நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. மிக்க நன்றி மனோ.

    ReplyDelete
  28. மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  29. கலக்கல் பகிர்வுகள், தொடருங்கள் உங்கள் வேட்டையை

    ReplyDelete
  30. வியாழன் பற்றிய அருமையான பகிர்வு .என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரமா .மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் .எல்லாரையும் சென்று பார்க்கிறேன் .தொடருங்கள் .

    ReplyDelete
  31. குருவாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குருவானவர்களுக்குப் பாராட்டுக்க்ள். வாழ்த்துக்கள்.

    நன்கு தேர்ந்தெடுத்து பல்வேறு திறமையானவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    விடிந்தால் வெள்ளி அம்பாளுக்கு உகந்த நாள். அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

    தொடரட்டும் தங்கள் சிறப்பான பணி.

    அன்புடன் vgk

    ReplyDelete
  32. மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  33. மிக்க நன்றி angelin

    ReplyDelete
  34. மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  35. அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    வியாழன் வாழ்த்துகள்..

    ReplyDelete
  36. PiT அறிமுகத்துக்கு மிக்க நன்றி. அறிமுகமாகியிருக்கும் மற்றவருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வியாழன் கிரக சிறப்பையும் அன்பர்களின் அறிமுகங்களும் அருமை .

    என்னையும் மற்றவர் அறியத்தந்தமைக்கு நன்றி சகோதரி .

    தாமதத்திற்கு மன்னிக்கவும் .கணினியில் அமரவில்லை ,அதான் தாமதம்

    மற்றைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete