வணக்கம்.
வெள்ளிக்கிழமை நம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளியின் (வீனஸ்) பெயரால் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி கிரகம் தன்னைதானே சுற்றிக்கொள்ள எடுக்கும் கால அளவு 243 நாட்களாகும்.அது சூரியனை ஒரு முறைசுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவும் ஏறக்குறைய தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் கால அளவே ஆகும்.(225 நாட்கள்).வெள்ளியை பற்றி முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த கிரகம் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல், ‘இடமிருந்து வலமாக’ தன்னைதானே சுற்றுகிறது. வெள்ளி கிரகம் சுக்கிரன் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்புமிக்க வெள்ளியில் ஆன்மீக பதிவுகளை பார்க்கலாம்.
ஆன்மீக பதிவு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது, இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள்தான். நம் கண்ணை கவரும் வகையில் படங்களும் கருத்தை கவரும் வகையில் கோவில்கள் பற்றிய தகவல்களும் நிறைந்ததாக இருக்கும் அவரது பதிவுகள்.
தக்குடு தன்னோட பதிவுல, அம்பாளப்பத்தி வர்ணனை செய்துட்டு, “இந்த மாதிரி ரூபத்துல அம்பாள மனசுல நினைச்சுப்பாருங்கோ, அதுக்கப்புறம் நாம் வேறு யாரையும் சுந்தரியா நினைக்க மாட்டோம்” அப்படின்னு சொல்லரார்.அம்பாள எப்படி வர்ணனை பண்ணரார்ன்னு தெரிஞ்சுக்கணுமா? வாங்க, உம்மாச்சி காப்பாத்து பதிவுக்கு.
“அம்பாளின் அருள் வெள்ளமானதும் நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் முழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது” என்று அம்பாளின் அருளைப்பற்றி நமக்கு விளக்குகிறார் கீதா சாம்பசிவம் அவர்கள் தமது ஸெளந்தர்ய லஹரி.. பதிவுல..
துயரம் எல்லை கடந்து தாள இயலாமல் நிற்கும்போது அதை இறக்கி வைக்க கடவுள் நமக்குத் தேவைப் படுகிறார்.ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும்? சரணாகதி தத்துவம் மிகவும் எளிமையானது என்று திரு.ஐய்யப்பன் கிருஷ்ணன், அதீதம் கடைசிப் பக்கத்தில் தெரிவிக்கிறார்.
திருப்பதி பெருமாளைப்பற்றி அரிய தகவல்கள் தெரிய வேண்டுமா.வாங்க மகாராஜன் அவர்களின், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரகசியங்கள் பதிவுக்கு. இவருக்கு கிடைத்த திருப்பதி பெருமாள் பற்றிய விவரங்களை தொகுத்துக்கொடுத்திருக்கிறார்.பெருமாளைப்பற்றி நிறைய புது தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
முருகப்பெருமான் தெய்வானையை மணந்துகொண்ட இடம் எது? முருகப்பெருமானின் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் எது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதற்கான விடைகளை ராஜி அவர்களின் அறுபடைவீடுகள்.. பற்றி ஆரம்பித்திருக்கும் பதிவில் தெரிந்து கொள்ளலாம். அறுபடைவீடுகள் பற்றிய அரிய தகவல்கள் திரட்டிக்கொடுத்திருக்கிறார்.
நீர்,நிலம்,கடல்,காற்று ,எறும்பு,பறவை,பொன் பொருள் இப்படி நாம் பார்க்கும்,உணரும் இடங்களில் எல்லாம் ஆண்டவன் நிறைந்திருக்கிறான்,அவன் இந்த உலகை ஆள்பவன் என உணர்த்துகிறார் மலிக்கா தனது, ஆண்டவனில்லை. என்கிற கவிதையில்.
அலுவலகம் ஆனாலும் சரி, வீடு ஆனாலும் சரி,நமது கடமைகளை வரிசைப்படுத்தி தவறாது செய்யவேண்டும் என சொல்லுகிறார் ஹுஸைன்னம்மா தமது, கடைசிக் கடமை.. பதிவில். ஹஜ் யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள அருமையான பதிவு இது.
ஜகத்குருவின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள எல்.கே.அவர்களின் பதிவுக்கு செல்ல வேண்டும். சங்கரரின் வாழ்கையை மிக அழகாக எளிய முறையில் விளக்குகிறார் தமது, ஜகத்குரு. என்ற பதிவுத்தொடரில். இவர் தற்போது தனது பாகீரதி பதிவு பக்கம் வருவது மிகவும் குறைந்து விட்டது. தொடர்ந்து ஜகத்குருவைப்பற்றி தெரிந்து கொள்ளும் முகமாக பதிவுகளை எதிர்ப்பார்க்கலாமா, கார்த்திக்?
கோவில்களில் உருவ வழிபாடு செய்வதற்கும், த்வஜஸ்தம்பம் என்கிற கொடிமரம் அமைப்பதற்கும் உண்டான காரணத்தினை நமக்கு அழகாக சொல்லுகிறார், ராஜி தமது , கோவிலின் சில தாத்பர்யங்கள். என்ற பதிவில்.கோவிலுக்கு சென்று நாம் வணங்கும் பொழுது பஞ்ச பூதங்களும் எவ்வாறு நம் உடலுக்கு இடம் பெயர்ந்து நன்மையை கொடுக்கிறது என அருமையாக விளக்கியுள்ளார்.
தர்ம வழியில் நமது செயல்கள் இருப்பது உத்தமம் என்று கூறும் சீனிவாச கோபாலன்,மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்கு செய்யாமல் இருப்பதே தர்மம்,என்று தர்மத்திற்கு அர்த்தம் கூறுகிறார் தனது, பகவத் கீதை தொடரில்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? ஐயா திரு ரத்தினவேல் நடராஜன் அவரிகளின் பதிவுக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்,சதுரகிரி சித்தர் மலை கோவில் ஆகியவற்றை பற்றிய அழகிய படங்களுடன் அரிய தகவல்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
நாளை மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
ரமாரவி.

ஆன்மீக பதிவு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது, இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள்தான். /
ReplyDeleteமுதல் பதிவாக பெருமைப்படுத்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
அனைத்து அருமையான பதிவுகளுக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteசவால் சிறுகதைப் போட்டியில் வென்ற தங்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுகள். வாழ்க வளமுடன்!
ReplyDeleteஇந்த பதிவில் நிறைய பெண்களா இருக்காங்க. ஆண்களுக்கு 33% சதவீத இட ஒதுக்கீடு தரவும் :)))
ReplyDeleteஒரு வேளை ஆன்மீக பதிவுகள் பெண்கள் தான் நிறைய எழுதுறாங்க போல !
நல்ல தொகுப்பு .. நன்றி
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே
ஒவ்வொரு நாளும் பதிவர்கள் அறிமுகத்துடன் நாட்பெயரில் உள்ள கிரகம் கோள் பற்றிய முன்னுரை சூப்பர்..அனைத்து நாட்களுமே மிக நல்ல பரிந்துரைகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteயுரேனஸ் மற்றும் புளூட்டோவும் கூட வீனஸ் போலவே திசை சுழற்றும் செய்கிறது.
ReplyDelete// கிரகம் தன்னைதானே சுற்றிக்கொள்ள எடுக்கும் கால அளவு 243 நாட்களாகும். //
வீனஸ் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் நேரமும் சூரியனை சுற்றும் நேரமும் (கிட்டத் தட்ட) ஒன்றாக இருப்பதால் ஒரு பகுதி பல்லாயிரம் வருடங்களுக்கு பகலாகவும், மற்ற பகுதி இரவாகவும் இருக்குமே ?
Very Good Post of Today [Friday] that too with the very first introduction of Mrs. Rajarajeswari Madam. I am very very Happy. Thank you very much for the same.
ReplyDeleteMy Best Wishes to all others who have been introduced by you today.
vgk
@ Mohan Kumar // ஒரு வேளை ஆன்மீக பதிவுகள் பெண்கள் தான் நிறைய எழுதுறாங்க போல ! //
ReplyDeleteஹி.. ஹி.. நாமாத்தான் கிரிக்கெட்டு, சினிமா, மொக்கைனு போட்டு தாக்குறோம் போல..
//ஆன்மீக பதிவு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது, இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள்தான்.//
ReplyDeleteரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.
தெளிவாவும் கண்ணைக் கவரும் படங்களோடும் விளக்கங்களோடும் அவங்க ஆன்மிகப் பதிவு மனசு நிறைஞ்சு இருக்கும்
எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி மேடம்,மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆன்மிகம் என்றாலே எனக்கும் நினைவுக்கு வரும் இராஜராஜேஸ்வரியின் பதிவையும், திருப்பரங்குன்றத்தை சுற்றிக் காட்டிய ராஜியின் பதிவையும் மிக ரசித்தேன். மற்ற பதிவுளும் லயித்துப் படிக்க வைத்தன. ஆன்மீக வெள்ளியில் உங்கள் அறிமுகங்கள் அனைத்தும் டாப். எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு என் நன்றி...
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதானே!
ReplyDeleteராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பூவைக் குறிப்பிடாமல் ஆன்மீகம் பற்றிய பகிர்வுகளை நிறைவு செய்திட முடியுமா?
மற்றுமுள்ள அறிமுகங்களும் சிறப்பானவைகளாக இருக்கின்றான.
இன்றைய அறிமுகத்தில் இருக்கும் அத்தனை பதிவர்களும்
ReplyDeleteவாசம் வீசும் பூங்கா போன்ற வலைத்தளம் கொண்டவர்கள்.
அங்கே ஆன்மிகம் மலர்ந்து மனம் வீசும்...
அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
எங்கள் மனம் கவர்ந்த ஆன்மீகப் பதிவர்களை
ReplyDeleteமிக அழகாக அறிமுகப் படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்
இன்று வெள்ளி, ஆன்மீக அசத்தல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்ப்டுத்தியமைக்கு நன்றி. புதிய தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர். கண்டிப்பாக சென்று வருகிறேன். நன்றி வணக்கம்
ReplyDeleteThanks for telling about my blog and atheetham
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteமுன்குறிப்பாக வரும் விசயங்கள் அனைத்தும் அறிந்து கொண்டேன்
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி
அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான அறிமுகங்கள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteவாழ்த்துகள் ராம்வி. வலைச்சரம் ஆசிரியரானது தெரியாது. அருமையான அறிமுகங்களுக்கும் நன்றி. என் பதிவுக்குச் சுட்டி கொடுத்ததுக்கும் நன்றி.
ReplyDeleteதொடர
ReplyDelete//இராஜராஜேஸ்வரி,//
ReplyDelete//மோகன் குமார்//
//ராஜா//
//ஆசியா//
//மாதவன்//
மிக்க நன்றி.
//வை.கோ,சார்//
ReplyDelete//ராஜி//
//கணேஷ்//
//லக்ஷ்மி அம்மா//
//சத்ரியன்//
மிக்க நன்றி
//மகேந்திரன்//
ReplyDelete//ரமணி சார்//
//பிரகாஷ்//
//ராஜி//
//ஆதி//
மிக்க நன்றி.
//கார்திக்//
ReplyDelete//அமைதிசாரல்//
//வெங்கட்//
மிக்க நன்றி.
//ரமேஷ்//
ReplyDelete//angelin//
//கீதா மாமி//
மிக்க நன்றி.
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகளும், என் பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகளும் ராம்வி.
ReplyDeleteவெள்ளிக் கிரகத்தைப்பற்றி அருமையான செய்தியுடன் அழகாக பதிவர்களை அறிமுகப்டுதிருக்கீங்க... வாழ்த்துக்கள்...
ReplyDelete