வணக்கம்.
சூரிய குடும்பத்தின் ஆறாவது கிரகமும் இரண்டாவது பெரிய கிரகமுமாகிய சனி கிரகத்தின் பெயரால், சனிக்கிழமை வழங்கப்படுகிறது. பூமியைவிட சுமார் 9 மடங்கு பெரியதாக உள்ள சனி கிரகம் சுரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 30 ஆண்டுகளாகும். ஆனால் அது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் பத்தரை மணி நேரமே ஆகும். வியாழனைப்போன்றே இதுவும் வாயுக்களினால் ஆன ஒரு கிரகம்தான்.நாம் கைவிரல்களில் மோதிரம் போட்டுக்கொள்வோமே அது மாதிரி சனியும் தன்னை சுற்றி மோதிரம் போன்ற வளையங்களை போட்டுக் கொண்டுள்ளது. இந்த வளையங்கள் பெரும்பாலும் பாறைத்துகள்கள் மற்றும் பனிதூள்களால் ஆனது.நம் சூரிய குடும்பத்திலேயே அதிக துணைக்கோள்களைக் கொண்டது சனி கிரகம்தான். இதற்கு 62 துணைக்கோள்கள் உள்ளன.இவற்றில் சில்வற்றில் உயிர் வாழ்வதற்கு தேவையான பிராண வாயு இருப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் உண்டு.
சனிக்கிழமை என்றாலே சந்தோஷம்தான்...வார இறுதி ...ஓய்வு எடுக்கலாம், நிதனமாக நம் வேலைகளை கவனிக்கலாம்,இஷ்டப்படி ஊர் சுற்றலாம் என்று இப்படிப்பட்ட சனிக்கிழமையில் நகைச்சுவை, அனுபவம் விழிப்புணர்வு, கவிதை .....இப்படி பலதரப்பட்ட பதிவுகளைப்பார்க்கலாம்.
கொலு பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்ன ஆகும்? பீக் அவரில் நாம் பஸ் பிடிக்க பிரயத்தன படுவது போல பொம்மைகளும் சீட் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்கிறார் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார். உயிர் வந்த பொம்மைகள் என்ன செய்யும் அப்படின்னு தெரிஞ்சுக்கணும்மா? வாங்க நவராத்திரி கொலு!!!க்கு போய் பார்க்கலாம்.
மாடவீதியில் எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டு இருந்தார்களாம்.சரி தேவர்கள் எல்லாம் எந்த ஸ்தியில் இருந்தார்கள்?அது பற்றி தெரிஞ்சுக்கணுமா? RVS சாரோட மாடவீதி பொம்மைகளுக்கு போய்தான் தெரிஞ்சுக்கணும்.
பேபி ஸ்பெஷல் ஜோக்....,பவர் ஸ்டார் ஜோக்ஸ், என்று டிவிட்டுகள் ஜோக்குகள் போட்டு நம்மை சிரிக்க வைக்கும் சிபி செந்தில்குமார், சென்னைப்பெண்பதிவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம், போன்ற விழிப்புணர்வு பதிவுகளை கொடுத்து நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார். மேலும் சினிமா விமர்சனம் என்றால் இவரது பதிவுதான்.அருமையாக விமர்சனம் செய்வார்.வசனங்களை நினைவில் வைத்து எழுதுவதில் சிறந்தவர்.
இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதும் ஒருவகை திருட்டுதான் என்று கூறும் வெங்கட் நாகராஜ், “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்கிறார் தன்னுடைய கண்ணெதிரே ஒரு கொள்ளை, என்ற பதிவில்.
இனிமேல் முன்னேறவே முடியாது என மூலையில் ஒதுங்கி இருக்கறவங்க கூட மனம் வைத்து விடாமல் உழைத்தால் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை உணர்த்தும் விதமான பிரபலங்களின் வாழ்கையை உதாரணம் காட்டுகிறார் ராஜேஷ் தனது, பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்..பதிவில்.
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளி வரும் ஒவ்வொரு ஒரு செய்திகளின் விமர்சன தொகுப்பாக ஆணிவேர்... பக்கதை வடிவமைக்க விரும்புகிறார் சூரியஜீவா. சமூக நலனில் இவருக்குள்ள அக்கறை போற்றுதலுக்குறியது.இவருடைய மறுபக்கத்தை, கதை கவிதையில், பார்க்கலாம்.
காஸ் சிலிண்டர் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது?
தெரிஞ்சுகோங்க.. என்று சொல்லிக்கொடுக்கிறார் குணசேகரன்.இம்மாதிரி நிறைய தெரியாத விஷயங்களை நமக்கு தெரியப்படுத்தும் இவரின் கேள்வி பதில்.. பதிவுகளும் அருமையாக இருக்கும்.
மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறு பிறவி எடுக்கும் எல்லாப் பெண்களும் தெய்வம்தான் என்கிறார்.ராஜபாட்டை ராஜா தனது, பெண்கள் எல்லாம் தெய்வமா? என்ற பதிவில்.
மெளனம் கலையும் போது,சோகங்கள் விடியும் போது,கண்ணீர் உறையும் போது............என்று காதல் உயர்வாய் தெரியும் தருணங்களை உணர்த்துகிறார், மஞ்சுபாஷிணி தனது, காதல் உயர்வாய் தெரிகிறது. கவிதையில்.
பேச்சு,செயல்,வாசனை என உலகத்தில் எந்த ஒரு செயலாலும் ஒருவரின் நினைவை தூண்டிவிட முடியும்,ஒரு மனிதனை சந்தோஷ படவைக்க, வருத்தப்பட வைக்க, ஏங்க வைக்க, தோற்கடிக்க என எல்லவற்றையும் செய்ய முடியும், நினைவுகளால்.. என்கிறார் கார்த்திகேயனி.
இங்க ஒருத்தர பாருங்க, கல்யாணம் ஆன புதுசுல வீட்டு சாவியை கணவர் எடுத்துக்கொண்டு அலுவலகம் போய்விட பாவம் இன்னொரு சாவி இல்லாம கஷ்டப்பட்ட இவங்களோட நிலைமைய அழகா பகிர்ந்திருக்காங்க, வண்ட்டூ மாமா. பதிவுல. இப்ப நிலைமை எப்படீங்கற வெங்கட் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா ஆதி?
ஸ்ரீராம் மற்றும் இன்னும் நான்கு பேர் சேர்ந்து ஆ’சிரி’யர்களாக இருந்து, கதை,கட்டுரை அனுபவம் ,நகைசுவை என்று கலக்கராங்க, பாலமுரளி, Mr.Ali.. ஆன கதையை தெரிஞ்சுக்கணுமா? வாங்க எங்கள் Blog க்கு
எப்பவுமே மத்தவங்க பொருளுக்கு ஆசைபடக்கூடாது, ஆசைப்பட்டு சபைக்கு முன் தலைகுனியக்கூடாதுன்னு அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்கிறார் நாஞ்சில் மனோ.அதற்காக அவங்கப்பா சொன்ன கதையை எங்கப்பா சொல்லித்தந்த நீதி....பதிவுக்கு போய் பார்த்து நாமும் தெரிஞ்சுக்கலாம்...
தான் சின்ன வயசுல இருந்தப்ப போஸ்ட் கார்ட் எல்லம் 15 பைசவுக்கு கிடைத்தது, இப்ப மொபைய்ல்,இ-மெயில் எல்லாம் வந்ததுல தபால் கடிதம் எழுதும் பழக்கமே விட்டுப்போச்சு என்கிறார் மாதவன் தனது, சின்ன வயசு ஞாபங்கள்..என்கிற பதிவுல.
கிராமத்து நினைவுகளை நிறைய எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச்சொல்லும் சுவை அதற்கு இருக்கு என சொல்லுகிறார் குமார் தனது கிராமத்து நினைவுகள்:பொன்வண்டும்,சில்வண்டும். என்கிற பதிவுல..
கழைக்கூத்தாடியின் கயிற்று நடைதான் ஆண் பெண் தோழமை.நூலிழை இடைவெளியை நூதனமாக கையாளத்தவறினால் என்ன ஆகும் என்று உணர்த்துகிறார், சத்ரியன் தனது, நூலிழை தவம் என்கிற கவிதையில்.
நேரமின்மை ஒரு மாயை-விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா? அது போல குழந்தைகளின் வளரும் பருவத்தில் நேரம் ஒதுக்கி அவர்களை நல்வழி படுத்த எப்படி டீன் ஏஜ் பருவத்தில் குழந்தைகளிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று விளக்குகிறார் மாதவி தனது, டீன் ஏஜ். பதிவில்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
ரமாரவி.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஎன் வலைப்பூவினையும் என் துணைவியின் வலைப்பூவினையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
இப்ப அவங்க கிட்டேயே ரெண்டு சாவி இருக்கு.....
தோழர்,
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு நன்றி...
எல்லா அறிமுகங்களும் சுவாரஸ்யமான அறிமுகங்களே.பகிர்விற்கு நன்றி.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇவ்வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும், ஒரு கோள் பற்றிய சிறு தகவல்களுடன், வலைப்பதிவுகளையும் தொகுத்து சிறப்பாக பதிவிட்டு வருகின்றீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
இன்று என் வலைப்பக்கத்தையும் அறிமுகப் படுத்தியிருக்கீங்க. நன்றி
என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றி நண்பா
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்...(எனது அறிமுகமும் சேர்த்து) :-)
ReplyDeleteஎனக்கு நிறைய பேர் புதுசு நன்றி
ReplyDeleteஅடியேனையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மேடம். :-)
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteNanri Ramvi ennaiyum aRimukappadithiyadhaRku!
ReplyDelete//வெங்கட்//
ReplyDelete//சுரேஷ்//
//ராஜி//
//சத்ரியன்//
மிக்க நன்றி.
//ராஜா//
ReplyDelete//மாதவன்//
//மோகன்குமார்//
மிக்க நன்றி.
//RVS//
ReplyDelete//மாதவி//
மிக்க நன்றி.
என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி,மேம்!
ReplyDeleteCongratulations to all concerned.
ReplyDeleteVery Good introductions.
vgk
'எங்கள்' அறிமுகத்துக்கு நன்றி!
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... எனது பதிவையும் அறிமுகபடுதியமைக்க்கு மனம் கனிந்த நன்றிகள்...
ReplyDelete