Tuesday, December 20, 2011

அறிவும் வளரணும் அன்பும் வளரணும்

வளரும் தூரல்





திரு. ராதாமோகன் அவர்கள் "அபியும் நானும்" என்ற திரைப்படத்தின் மூலம் பல அப்பாக்களின் வயிற்றில்(மகளின் வயிற்றிலும் தான்) பால் வார்த்திருக்கிறார்.  இப்படத்தை என் அப்பாவுடன்  பார்த்து முடித்த பின் பகிர்ந்து கொண்ட  புன்னகைக்கு விலை மதிப்பே இல்லை. ஒவ்வொரு அப்பாவும் சொல்ல நினைப்பதை ராதாமோகன் சொல்லிவிட்டார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னர் அப்பாக்கள் பெரும்பாலானோர் தம் அன்பை வெளிகாட்ட  தெரியாதவர்களாகவும் நேரமில்லாதவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இன்றைக்கு அப்படி இல்லை. ராதா மோகனுக்கு தம் அனுபவத்தை பதிப்பித்து நன்றி சொல்லியிருக்கிறார் விசரன்.   குழந்தைகளின் சிறு அசைவில் தொடங்கி, அவர்கள் வளரும் ஒவ்வொரு கணமும் ஒரு தந்தையும் கற்று தெளிவதை மிருதுவாய் இசைத்திருக்கிறார். நம்மாலும் உணர முடிகிறது.   "ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்"  எனும் வசனம் குறுங்கவிதை.  விசரன் எழுதிய "புறம் பேசுபவர்கள்" "பால்வீதிப் பயணங்கள்" போன்ற பதிவுகள் மொழியில் அவரிருக்கிருக்கும் தேர்ந்த நடையழகை தனித்து காட்டுகிறது.

வளர்ச்சியின் பெரும்பங்கு நல்வழிப்படுத்துதல். பெற்றோரின் பங்கு இதில் இன்றியமையாதது. எனக்கெல்லாம் நீதிக்கதைகள் சொல்லி வளர்த்ததாக நினைவில்லை.  நம்மை சுற்றி நடைபெறும் நல்லது கெட்டது புரிந்த பின்னரே இது போன்ற கதைகளின்  முழு அர்த்தம் புரிந்து கொள்கிறோம்.

இக்கால பெற்றோர்கள் கணினியில் வேலைபார்த்துக்கொண்டே  தினம் ஒரு கதை படித்து இரவு பிள்ளைகளுக்கு கதையாடலாம். சிறுவர் உலகம் என்ற வலைதளத்தில் காஞ்சனா ராதாக்ருஷ்ணன் நீதிக்கதைகள் தற்கால குழந்தைகளின் சூழல் மற்றும் பேச்சு வழக்கு மொழிகளுக்கு ஏற்ப மாற்றி வழங்கி வருகிறார்.  மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இவரின் கதைகளை தொகுத்து புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

சின்ன வய்தில் அம்மா சொன்ன கதைகளில் நிறைய தேவதைகளும்  இளவர்சர்களும் மான் மயில் கிளிகளும் வரும். ஒவ்வொரு கதையை கேட்கும் பொழுதும் அதில் பிடித்தமான  பாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்ட பின்னரே கதையை மேலும் ரசிக்கத் துவங்குவேன். கதையின் பாத்திரமாய் மாறுவது இன்னொரு கனவுலகத்தில்  நாம் பறப்பதற்கு இணை. 'Alice in wonderland' கதைகளில் வரும் ஆலிஸாக நம்மில் பலரும் இருப்போம். எத்தனை வயதானாலும் இன்னமும் 'டிங்கிள்' கைக்கு வந்தால் பெரியவர்களும் ஒரு முறை படித்து விடுவர்.இப்புத்தகங்களையும் கதைகளையும் நினைவுகூர்ந்தாலே மனம் லேசாகி பிள்ளைகளாகி விடுவோம்.

சந்தனமுல்லை தமது பதிவில் சிறுவர் கதைகளின் நினவுகளில் பயணித்து,  படிக்கும் ஒவ்வொருவரையும் தம்முடன் இட்டுச்செல்கிறார். இவரின் மற்ற பதிவுகள் பலதும் சிறுவர்களின் உலகைச் சார்ந்தைவைகளாக இருக்கிறது. அம்மா-பிள்ளைகளுக்குள் நடக்கும் பேச்சு பரிமாற்றங்களை 'சிறார் கதைகளாக', 'குழந்தை வளர்ப்பின்' சுவையான சம்பவங்களாக எழுதியிருக்கிறார். மழலை கொஞ்சும் தம் மகளுடன் குதூகலிக்கும் பட்டாம்பூச்சி அம்மா.


இருவரும் சம்பாதிப்பது அவசியத் தேவையாகவே மாறிவிட்டது. எல்லாம் சரி தான். காலத்திற்கு ஈடு கொடுக்கும் இந்த வேக ஓட்டத்தில் தொலைத்து விட்டது நம்மவர்களுக்காக ஒதுக்கும் நேரம். குட்டி அம்மு வுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி. எப்படியெல்லாம் பேசிக் களிக்கிறாள் பாருங்களேன். குட்டி அம்முவின் கதை மனதை நெருடுகிறது. ஒரு குறும்படத்திற்கான கதைக் கருவை அழகாக கையாண்டிருக்கிறார் கதாசிரியர். ஒளியவன் சிறுகதைகள் எழுதுவதை பல வருடம் முன்னரே நிறுத்திவிட்டாரா?  அல்லது இணையத்தில் எழுதுவதில்லையா? இன்னும் சிறிது முயன்றால், எழுத்து நடையும் கதை சொல்லும் பாங்கும் மேலும் மிளிரும். "சத்தமின்றி பூக்கும் பூ" என்ற கதையில், கதை சொன்ன விதமும், எழுத்தின் அடர்த்தியும் மிகவும் பிடித்திருந்தது.

பாலகுமாரன் பெசுகிறார் என்ற வலைச்சரம் அவரது நண்பர்கள் சிலரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.  பெருமபாலும் ஆன்மிகத்தில் அவர் சென்ற தூரங்களைப் பற்றியதான பதிவுகள் இருக்கும்.  எத்தனை தான் வளர்ந்துவிட்டால் என்ன. பெற்றவர்களின் இழப்பு ஆழமான பிளவை கீறிவிடும்.  ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் தோழியாய், ஆசிரியையாய், ஆதரவாய் கூட இருப்பவள் தாய். பாலகுமாரன் அவர்கள் தன் தாயைப் பற்றி வாஞ்சையுடன் நினைவு கூர்ந்து அவளது இழப்பை எழுத்தில் வடித்திருக்கிறார். அம்மா பற்றி பாலகுமாரன் நினைவுகள். பணிவு உட்பட,  ரஜினியிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய  என்று இந்தப் பதிவு  சொல்கிறது. பாலகுமாரன் அவர்களுடன் சில சுவாரஸ்ய கேள்வி பதில் பகுதி  .  மொத்ததில் எழுத்துச் சித்தரின் ரசிகர்களுக்கு இவ்வலைதளம் விருந்து.


பெண்ணுக்கும் அம்மாவுக்குமான உறவு வருடங்கள் உருண்டோட மேலும் கெட்டியாய் பிணைத்துக்கொள்ளும். அப்பாவின் செல்ல மகளும் கூட அம்மாவின் ஆருயிர் தோழியாகிப் போவாள். மென்மையான புரிதலை நற்கவிதையாக்கி தந்தியிருக்கிறார் கீதமஞ்சரி. கரைபார் கரைத்தால், போன்ற சிறுகதைகள் மூலமும் குழந்தை வளர்ப்பை பற்றியும் சொல்லியிருக்கிறார்.  எனக்கு மிகவும் பிடித்த சிவப்பி  கதை சமூகத்தின் குன்றிய வளர்ச்சிக்கு சாட்சி.

சிறுவயது நினைவுகளில் பல இனிக்கும். சில துவர்க்கும், புளிக்கும், ஒன்றிரண்டு கசக்கும். என்ன சுவை என்ற பெயரிடமுடியாமல்  தவிக்கும் நினைவுகளும் உண்டு. மண்ணின் வாசம், பழைய காலத்து மனிதர்களில் குரல், அவர்களைப் பற்றி நாம் கொண்டிருந்த பயம், மரியாதை, இனம்புரிக்க முடியாத மங்கலான அபிப்ராயங்கள் இவையெல்லாம்  வளர்ந்த பிறகும் சரி, மனதின் கடைசி அறையில் பூட்டி வைத்திருப்போம். என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு  சொல், நிகழ்ச்சி, சின்ன வாசனை கூட அதை திறந்து விடும். மடை திறந்த வெள்ளமாய் பொங்கும்  நினைவுக்கு மகிழம்பூச்சரம்  தொடுத்து அணைகட்டியிருக்கிறார் சாகம்பரி.  விசாக்கா  என்னை மிகவும் பாதித்த கதை.   சாகம்பரி எழுதும் மனவளம் தொடர்பான தொடர்கள் படித்து தெளிந்து கொள்ளக் கூடியவை என்றால், ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்  தொடர்பான விஷயங்கள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டியவை.

கேள்விகள் கெட்டுச் சலித்தும் விடை வராமல் போவதும் தீர்வு காணாமல் இருப்பதும் எங்கே போய் முடியும்? பெற்றோர்களின் அலட்சியப் போக்கா? பள்ளி நிர்வாகிகள் தலையிடுவதில்லையா? தொலைகாட்சி பல்சுவை விருந்துகளில், பள்ளிகளில் கல்லூரிகளில் சிறுவர்கள் சகிக்க முடியாத சில அசைவுகளுடன் நடனம் ஆடுவதும், வயதுக்கு மீறிய பேச்சு, செய்கை, பாட்டு என திறமை தேடல் ஒரு புறமிருக்க, அதற்கு ரசிக மன்றங்களும் வளர்ந்து வருகையில் எங்களைப் போன்றவர்களுக்காக  கரூர் கிறுக்கன் (உங்களை வேற எப்படித்தான் அழைக்கிறதாம்!!) குரல் கொடுத்திருக்கிறார்.  செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று அறிஞர்கள் சொல்லும் ஆராய்ச்சி முதல் அரசியல் வரை எல்லாமும் பல்சுவையாய் இவரது தளத்தில் கிடைக்கிறது.


சரியான வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்து வரும் இளம் பிராயத்தினர் வன்முறைகளில் ஈடு படுவதும், செய்யத் தகாத விசயங்களைச் செய்து சின்னதிலேயே வெம்பி விடுவதும் ஆற்றொணா துயரைத் தருகிறது. மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்துவிட்டாலும் நம் நாட்டில் இந்த அபாய நிலை இல்லை என்ற எண்ணம் தூர ஓடிக்கொண்டிருக்கிறது. புகைபிடித்தல், மதுஅருந்துதல், ஒழுக்கக்கேடான சிந்தனைகள் அதிகரித்துவிட்டது. அறியாப்பருவத்திலேயே குழந்தைத்தனத்தை  தொலைத்து பொருளால் வாங்கக்கூடிய  எல்லாம் பெற்ற பிறகும்  பெறாத ஒன்றுக்காக நாளை ஏங்கும் பொழுது அவர்களுக்கு யார் துணை!

அடுத்த தலைமுறையினருக்கு ஒழுக்கமும், பண்பும் நாம் விட்டுச் செல்லவில்லையென்றால் எதிர்கால உலகம் கேள்விக்குறியாகிவிடும். இந்தத் தலைமுறையை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று அன்புடன் வருந்துகிறார் அருணா. இவரது அன்பை வழிகாட்டியாக இருந்து அடுத்த தலைமுறையினருக்கு பங்கிட்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

பயமாய்த் தான் இருக்கிறது. எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? வளர்தலுக்குறிய அனைத்து வளமும் இழந்த குன்றிய வளர்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு பரிசளித்து செல்லவிருக்கிறோமா?

வளரும் அவர்களை விட, வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் நாமும் சிரத்தையுடன் இப்பணியை செய்யவேண்டும். உலகிற்கும் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல குடிமக்களை விட்டுச் செல்வதே மேலான பணி. வளரும் தளிர்களுக்கு புத்துணர்வூட்டுவோம்.

(நாளை பொலிவோமா!......)


30 comments:

  1. அருமையான பகிர்வு

    பல புதிய வலைப்பூக்கள் அறிந்து கொண்டேன்.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி புதுகைத் தென்றல் :) வலைப்பதிவுகளை சேகரித்து வந்த பொழுது என்னைக் கவர்ந்த பல வலைதளங்களில் உங்கள்தும் ஒன்று :)

    தொடர்ந்து வந்தால் மகிழ்வேன் :)

    ReplyDelete
  3. உலகிற்கும் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல குடிமக்களை விட்டுச் செல்வதே மேலான பணி. வளரும் தளிர்களுக்கு புத்துணர்வூட்டுவோம்.

    பொலிக! பொலிக!!

    அருமையான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அபியும் நானும் எனக்கும் பிடித்தமான ஒரு தமிழ் படம்:)

    ReplyDelete
  5. வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி :)


    @mazhai.net

    எல்லோருக்கும் பிடித்த படம் :)
    அப்பாவுக்கும் மகளுக்குமான மென்மை உறவு :)

    வளரும் தூரலுகளுக்கு வருகை தந்த மழையே....நன்றி :)

    ReplyDelete
  6. ”அறிவும் வளரணும் அன்பும் வளரணும்”
    என்ற நல்லதொரு பாடல் வரிகளை தலைப்பாக வைத்து பல நல்ல விஷயங்களைப்பகிர்ந்துள்ளீர்கள்.

    ”அபியும் நானும்” எவ்வளவு நல்லதொரு திரைப்படம் ! ;))))

    இன்றைய அறிமுகங்கள் யாவும் மிகவும் அருமை.

    மகிழம்பூச்சரத்தின் வாசனையைக் கொண்டு வந்திருப்பது மிகச்சிறப்பு.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  7. அழகான விளக்கங்களோடு, அருமையான பதிவுகளின் அறிமுகங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. @nizamudeen,

    தொடர் வருகைக்கும், படித்து பின்னூட்டமிட்டு உற்சாகமளிப்பதற்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  9. நன்றி vgk sir.

    அப்பாவும் நானும் சேர்ந்து பார்த்த படம் :D ப்ரகாஷ் ராஜ் hats off !!

    மகிழம்பூச்சரம் தொடுக்காமல் இருக்க முடியுமா! சமீபத்தில் படித்த அவரின் "விசாக்கா" கதையும் அதை சொல்லிய விதமும் என்னை மனதில் ஆழப் பதிந்து விட்டது!

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமையான பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. பதிவுகளை அறிமுகப்படுத்தும் விதமே அசத்தலாக உள்ளது. என்னுடைய வலைப்பூவையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஷக்திபிரபா. குறிப்பிட்டுள்ள வலைப்பூக்களில் மகிழம்பூச்சரம் தவிர மற்ற வாசங்களை நுகரந்ததில்லை.. விரைவில் அனைத்திற்கும் செல்கிறேன். பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  13. சிலரது வலைப்பூக்கள் அறிந்தவை. அறியாதவற்றை வாசிக்கிறேன் நன்றி. அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  14. ஷக்தி அட்டகாசமா எழுதறியே இவ்வளோ வலைப்பூக்களை நீ அறிமுகம் செய்தஒஇன்னும் வாசிக்காம போய்டுவோமா நன்றி மிக.

    ReplyDelete
  15. வணக்கம் ஜலீலா கமல். வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி :)

    ReplyDelete
  16. வாங்க மகேந்திரன். உங்கள் தொடர்வருகை எனக்கு மகிழ்ச்சியா இருக்கு :)

    ReplyDelete
  17. //பதிவுகளை அறிமுகப்படுத்தும் விதமே அசத்தலாக உள்ளது. என்னுடைய வலைப்பூவையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஷக்திபிரபா. //

    வாருங்கள் கீதா! உங்கள் வலைப்பதிவு அருமை! நன்றி. என் இடுகைக்கு சரியானதொரு தேர்வாக உங்கள் கவிதை எனக்கு கிடைத்தது மகிழ்ச்ச்சி :)

    //விரைவில் அனைத்திற்கும் செல்கிறேன். பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி :)

    ReplyDelete
  18. வாங்க ராமலக்ஷ்மி :) தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தறீங்க. Thankyou so much :) உங்களுக்கும் அனைத்து பதிவர் அறிமுகங்களும் பிடிக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  19. //ஷக்தி அட்டகாசமா எழுதறியே இவ்வளோ வலைப்பூக்களை நீ அறிமுகம் செய்தஒஇன்னும் வாசிக்காம போய்டுவோமா நன்றி மிக.
    ///

    வாங்க ஷைலஜா....லிங்க் அல்லது குறிப்பு எடுத்துட்டு மெதுவா வாசிங்க. நிறைய ஆக்கங்கள் எனது பார்வையில் அருமையா இருக்கு.


    தொடர்ந்து வந்து என் தோள் தட்டி குடுக்கறீங்க. Thanks a tonne :)

    ReplyDelete
  20. நல்ல பல அறிமுகங்களை தந்த உங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  21. வாருங்கள் அன்புடன்-ராஜா,

    கட்டாயம் வருகிறோம். பின்னூட்டத்திற்கு நன்றி :)


    வாருங்கள்....கோவை2தில்லி,

    உங்கள் தொடர் வருகையும் கருத்தும் மிக சந்தோஷமளிக்கிறது.

    ReplyDelete
  22. தந்தை என்றால் அறிவு என்பதை சற்று மாற்றி தந்தை என்றால் அன்பு என்பதும் தாய் என்றால் அன்பு என்பதை மாற்றி தாய் என்றால் அறிவு என்பதும் கடைசியாய் தந்தையும், தாயும் அன்பும் அறிவும்.

    பல விசயங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அறிமுகங்களுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  23. நன்றி v.radhakrishnan :) தொடர் வருகை மிகுந்த உற்சாமளிக்கிறது.

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி காஞ்சனா...
    உங்கள் blog கதைகளை என் பெண்ணுக்கு வாசிச்சு காண்பிக்கப் போகிறேன். அருமை.

    ReplyDelete
  25. தங்களின் அறிமுகப்பதிவுகள் அருமை. விசாக்காவை இவ்வளவு பெரிய... வார்த்தைகளில் அறிமுகம் செய்ததற்கும் நன்றி. உண்மையில் விசாக்காவை பற்றி கதை எழுதியபின் தான் என் மனம் அமைதியடைந்தது. அந்த உணர்வுகளை பலமுறை தங்களுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தியமைக்கும் நன்றி சக்திபிரபா.

    ReplyDelete
  26. வாங்க சாகம்பரி. வருகைக்கு நன்றி :)

    விசாக்காவை அறிமுகப்படுத்தியது எனக்கும் திருப்தி.

    அது என்னவோ தெரியவில்லை, எத்தனை முறை font edit செய்தாலும் விசாக்கா பெரிசாகத் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தாள். நானும் விட்டு விட்டேன் :))

    //கதை எழுதியபின் தான் என் மனம் அமைதியடைந்தது. //

    :) .............

    ReplyDelete
  27. நன்றி மஞ்சு.

    உங்க சுட்டி யாருக்கானும் பயனுள்ளதா இருந்தா மகிழ்ச்சி.

    ReplyDelete
  28. ரொம்ப ந்ன்றிங்கபா!

    ReplyDelete
  29. வருகைக்கு நன்றி அருணா:) பதிவை கோர்த்ததில் பெருமகிழ்ச்சி :)

    ReplyDelete