துவங்கும் துளி
துவக்கம் எனும் சொல் அனைத்தையும் அடக்கியது. செடியின் வளர்ச்சிக்குறிய அத்தனையும் விதையில் இருப்பது போல், எந்த ஒன்றின் துவக்கமும் சூல் கொண்டு நிற்கும் சூழ்நிலைகளிலிருந்து தான் ஆரம்பமாகிறது. ஒற்றைச் சொல் உதிரும் வரை அதனை சுமந்து நிற்கும் மனமும் கருவறை தான்.
அனைத்தையும் உள்ளே அடக்கியிருக்கும் பிரமாண்ட ரகசியம். பிரபஞ்சத்தின் துவக்கமே சூன்யத்தின் நிலைத்திருக்கதென்றால் சூன்யம் என்பது எப்பேர்பட்ட கனமான கருவறை!
பஞ்ச பூதங்களில், ஆகாயம், பல அதிசயங்கள் ரகசியங்கள் நிறைந்த புரியப்படாத ஒன்றாக பிடிபடாமல் வழுக்கிக் கொண்டிருக்கிறது. நம் பிறப்பின் துவக்கமும் கூட வானில் புதைந்திருக்கும் ரகசியங்களில் ஒன்றாமோ என்ற நினைப்பை விதைத்து தன்னுள் நம்மை புதைய செய்யும் வானம்... தாயாகி, தந்தையுமாகிய வானம்...
"வானம் எனக்கொரு போதி மரம்" என்கிறான் கவிஞன். அனைத்தும் தன்னுள் அடக்கி நமக்கு பாடம் புகட்டும் ஆசானாகவும் பரிமாணம் கொள்கிறது. அடங்காமல் விரிந்திருக்கும் வானின் பெருமைக்கு தலை வணங்கி, வாழ்த்தி நாமும் அதன் தாய்மையை shriprajna வுடன் கொண்டாடுவோம். Shriprajna அண்மையில் தான் வலையுலகிற்கு வருகை தந்திருக்கிறார். "நிறப்பிரிகை" "சிதைவுகள்", "நினைவுகளில்" போன்ற கவிதைகள் நன்கு துவங்கியிருப்பதை பறைசாற்றுகிறது.
நல்லதொரு ஆரம்பத்திற்கு சரியான வித்து அவசியம். குப்பைகளையும் கழிவுகளையும் சேமித்தால் அதையே சுமக்கவும் நேரிடும். கர்பம் தரித்திருக்கும் வானுக்கு மரங்களும், இயற்கை வளமும் உரமாவது போல், பிறக்கும் உயிர்க்கு நல்ல உரமாவது சீரிய எண்ணங்கள், சிந்தனைகள், இதமான இனிமையான பேச்சு, அதே போல் நல்ல சங்கீதம். இசையின் அருமை பெருமையை எளிய நடையில் சுவையா சொல்லிருகார் கோகுல்.
நம் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் சப்தத்திலும்...ஏன், நிசப்தத்திலும் கூட இசை ரீங்கரிக்கிறது என்பது பலரும் உணர்ந்த உண்மை. இசையை நாம் தேடிப்போக வேண்டாம். அன்றாட நொடிப்பொழுதின் அசைவுகளில் உணர்ந்தாலே போதும். மிருதுவான பேச்சும் சிந்தனையும் கூட நல்லிசை. ரசிக்கும் பரிமாணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு படும். எழுத்தை தன் வசம் வைத்திருக்கும் பிரபல எழுத்தாளர் எஸ். ராமக்ருஷ்ணன் வரிகளில் இன்னிசைப் பயணம் அற்புதமாக இருக்கிறது. எப்போதாவது இசையை கேட்கும் இவர் சில மேல்நாட்டு கலைஞர்கள் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரித்திருக்கிறார். தனது ஆர்வத்தை ஒட்டகத்துடன் ஒப்பிடும் உவமையில் இசையோடு சேர்ந்த எழுத்தும் மிளிர்கிறது.
கலையின் ஒவ்வொரு அம்சமும் அதனுள்ளே புதைத்திருக்கும் கனமாதொரு துவக்கத்தின் வெளிப்பாடு. கவிதையின் பிறப்பும் அப்படித் தான். குழந்தை பிரசவிப்பது போலவே கவிதையின் பிரசவம் என்றால் பல கவிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள். பிறந்த குழந்தையிடம் தாயின் வாஞ்சையை ஒத்திருக்கும் ஒவ்வொரு கவிதையின் பிறப்பிற்கு பிறகும் கவிஞனின் மனம். பல ஆண்டுகளுக்கு முன் புதுக்கவிதையைப் பற்றி கா.நா.சு. அவர்களின் விளக்கம் மிக அருமையாய் இருக்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கப்படும் கவிதை புதுசாய் பிறக்கிறது, அப்பொழுது பழங்கவிதையும் புதுக்கவிதை ஆகிறது என்கிறார்:) கவிதைக்குறிய லட்சணங்களையும் விளக்கும் அருமையான பகிர்வு.
பிறப்பிற்குறிய மூலத்தை தாங்கி வருவது மரபணு. அதனின் கூறாக விளங்கும் DNA பற்றிய எளிய தமிழாக்கத்தை தந்துள்ளார் ANALYST. இவரின் முயற்சிக்கு பெரிதும் பாராட்டி, பூங்கொத்து வழங்குவோம். ஒரே ஒரு நிமிட காணொளி தான்! வாருங்கள் அடிப்படையைத் தெரிந்து கொண்டு வருவோம். மென்மேலும் பல அறிவியல் ரீதியான எளிய தமிழாக்க காணொளிகளையும் விளக்கங்களையும் தமிழில் வழங்கி வருகிறார்.
கேட்டு பேசி சிந்திக்கும் சப்தங்களிலும் நல்ல கர்பபம் தாங்க வேண்டும். தீயதை கேட்காதே, பேசாதே, சொல்லாதே என்றனர் முன்னோர். இதற்கெல்லாம் முலமாக விளங்கும் 'கெடுதலை சிந்தியாதே' நம் சிந்தைனைக்கேற்றவாறு நம் உடல் மனம் ஆன்மா மாற்றமடைகிறது.
"As u thinketh so u are"
"As u thinketh so u are"
விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றாய் இணையும் இந்த தகவலைப் பாருங்கள். குறிப்பிட்ட ஒலி உச்சரிப்புகள் மூலம் மரபணுக்களை மாற்ற அமைக்க முடியும் என்கிற விஞ்ஞான உண்மையை என்றோ கண்டுள்ளனர் நம் முன்னோர்கள் என்கிறார் சுபானு.
ஒரு பிரசவம் பல துவக்கத்திற்கு காரணமாகிறது. மனிதனின் துவக்கம். பாச பந்தங்களின் துவக்கம். உணர்ச்சிகளின் துவக்கம். தாயின் துவக்கம் மட்டும் மனிதனின் துவக்கத்திற்கு முன்னமே நிகழ்ந்துவிடுவதால் மேலும் சிறப்பு. பிரசவிக்கும் தருணமானது விஞ்ஞான முன்னேற்றத்தை தாண்டியும் அடி மனதில் அச்சத்தை ஏற்படுத்த வல்லது. வெறும் நாற்பத்தேழு செக்கெண்டில் அந்த உணர்வை தட்டி எழச்செய்து குழந்தை பிறப்பை கண்முன் கொணர்கிறது இந்தக் காணொளி. தமிழில் மருத்துவ தகவல்கள் அளித்து வருகின்றது தமிழ்மருத்துவம் வலைதளத்திற்கு நன்றி.
சதையோடு பின்னிப்பிணைந்த உறவு. தன் உதிரத்தை பங்கீன்று பிறப்பெனும் பரிசளித்தவள். நாம் துடித்தால் அவளும் துடிக்க இதுவே பெரியதொரு காரணம். இவ்வளவு தான் தாய்மையா? இவ்வரிகளில் கட்டிப்போட்டு விட முடியுமா சிந்தும் கருணையை?
இதுவும் தாய்மை. இதனைத் தாண்டிய வானத்தின் வள்ளல்தன்மையில், பூமியில் பொறுமையிலும் கூட அன்னையின் பரிவைக் காண்கிறோம். அன்பு வைக்கும் எல்லா இடத்திலும் கிளைத்து நிற்பது. ஒவ்வொரு முறையும் தாயுணர்வு தாங்கி அதன் முழுமையை எதிர்நோக்கும் இவர்களை விட சிறந்த இலக்கணம் தாய்மைக்கு உண்டா எனக் கேட்கிறார் அப்பாவி தங்கமணி. மிக மெல்லிய உணர்வுகளை அழகாய் சொல்லிய சிறுகதை. நிச்சயம் படித்துப் பாருங்கள். பிடிக்கும்.
எங்கெல்லாம் தவறுகள் உணர்ந்து திருத்தப்படுகிறது. அங்கே மனிதம் பிறக்கிறது. ஒரு முழு மனிதன் பிரசவிக்கப்படுகிறான். அழகானதொரு துவக்கம் ஆரம்பிக்கிறது. ஹைதர் அலி வலையுகத்தில் கூறும் இச்சிறு நெகிழ்கதையுடன் நம் துவக்கமும் இனிதே நிறைவுடன் விடைபெறுகிறது.
*******
ஒரு வழியா துவங்கியாச்சு...இனி, அடுத்த பதிவில் வளர்வோம்... :)
ரெம்ப அழகா எழுதி இருக்கீங்க சக்திபிரபா, படிக்கறவங்கள கட்டி போடுற எழுத்தாண்மை எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. என்னையும் இந்த பதிவில் சேர்த்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரி,
ReplyDelete/////ஒற்றைச் சொல் உதிரும் வரை அதனை சுமந்து நிற்கும் மனமும் கருவறை தான்.///
எவ்வளவு அழகான ஆழமான வாக்கியம்.
அருமையான சமூக உணர்வுள்ள பதிவர்களை
அறிமுகப்படுத்தியமை நன்று.
அத்தனை பெரும் எழுத்துச் சிற்பிகள்.
வாழ்த்துக்கள்.
ஆஹா...........
ReplyDeleteசிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவெகு அருமையான துவக்கம்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பிரியமுள்ள vgk
வாங்க அ.தங்கமணி.
ReplyDeleteநான் தான் நன்றி சொல்லணம். நம்ம சொல்ல வர விஷயதை நம்மை விட அழகா ஒருத்தர் சொல்லியிருந்தா, அதை சுட்டி காட்ட்ற சுலப வேலை தானே :)
'he n she' Prabhu ferrariயின் எழுத்துக்கள் நிறைய பேர் படிச்சிருக்கலாம். உங்கள் "தங்கமணி" கலட்டாக்கள் அதே வகையில் அருமை தமிழில் தொடர்கிறது. பல போஸ்ட்ஸ் "கலக்கல்" வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி :)
தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தறீங்க மகேந்திரன். Thankyou !!!! எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள். படித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
////எவ்வளவு அழகான ஆழமான வாக்கியம்.
///
நான் சொல்ல வந்ததை இன்னொருவரும் அதே கோணத்தில் புரிந்து மகிழ்ந்தார் என்றால் சந்தோஷம் இரட்டிப்பு.
////ஆஹா.........../////
ReplyDeleteதொடர்ந்து படித்து பின்னுட்டம் இட்டதுக்கு...நன்றி துளசி...
////சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்/////
வாங்க ருஃபீனா ராஜ்குமார். வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து வாங்க.... :)
///வெகு அருமையான துவக்கம்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பிரியமுள்ள vgk////
நன்றி நன்றி vgk sir..உங்களது ஊக்கம் தான் எனது துவக்கம் :)
சகோதரி சக்திபிரபா அவர்களுக்கு
ReplyDeleteவலைச்சரத்தில் உங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்னுடைய குறுங்கதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
நல்லதோர் துவக்கம் சகோ!பதிவுகளை
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் புதுமை.
தொடர்ந்து வளர வாழ்த்துகள்.
எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
அழகான அறிமுகங்கள், தொடருங்கள்.
ReplyDeleteநன்றி ஹைதர் அலி,
ReplyDeleteஉங்கள் கதையில் சொல்லப்பட்ட கடைசி வரி அழகு. :)
கதையைச் சேர்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.
நன்றி கோகுல்,
உங்கள் இடுகையை சேர்ததில் மகிழ்ச்சி. நிறைய நல்ல தகவல்கள் தந்தீருந்தீர்கள். நன்றி. தொடர்ந்து வந்தால் மகிழ்வேன் :)
நன்றி nizamudeen, வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மீண்டும் நன்றி :)
ReplyDeleteஅனைத்துமே அருமையான பகிர்வு ஷக்தி. தொடருங்கள்.
ReplyDeleteதங்களின் பார்வையில் மின்னும் இந்த அரிய முத்துகளை அறிய தந்தமைக்கு நன்றி சகோதரி. தொடருங்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வுகள்
ReplyDeleteஅழகான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர்ந்த வருகை தந்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteநன்றி வி.ராதாக்ருஷ்ணன். உங்கள் தொடர் வருகை எனக்கு உற்சாமகளிக்கிறது. :)
ReplyDeleteவாருங்கள் சாய் பிரசாத், மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தந்தால் மகிழ்வேன் :)
ReplyDeletekovai to delhi,
ReplyDeleteவாருங்கள் சகோதரி. உங்கள் தொடர் வருகையும், பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. :)
//அனைத்தையும் உள்ளே அடக்கியிருக்கும் பிரமாண்ட ரகசியம். பிரபஞ்சத்தின் துவக்கமே சூன்யத்தின் நிலைத்திருக்கதென்றால் சூன்யம் என்பது எப்பேர்பட்ட கனமான கருவறை!//
ReplyDeleteஎப்பேர்ப்பட்ட கருத்து எவ்வளவு எளிதில் எழுத முடிந்தது உங்களால். பாராட்டுக்கள்.
நன்றி gmb sir. தொடர்ந்து வாருங்கள். நான் பகிர்ந்த சுட்டிகளையும் படியுங்கள்.மிக்க நன்றி :)
ReplyDeleteஷக்தி தன் சக்தியை இபோதாவது வெளிக்கொண்டுவருவதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete//ஷக்தி தன் சக்தியை இபோதாவது வெளிக்கொண்டுவருவதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete//
வாங்க ஷைலஜா. உங்கள் பாராட்டு என்னை நிறைய உற்சாகப்படுத்துது. ரொம்ப நன்றி :)
ரொம்ப அழகா அறிமுகம் செய்திருக்கீங்க வாழ்த்துக்கள்.அனைவருக்கும்.
ReplyDeleteரொம்ப நன்றிம்மா. தொடர் வருகை தந்து என்னை மகிழ்விக்கறீங்க :)
ReplyDeleteGood start. It shows your capabilities as a writer. The kavidhai about vaanam is really good.Congrats for the writer (Shri prajna is it?).
ReplyDelete