Saturday, December 24, 2011

கிருஸ்மஸ் கொண்டாட்டங்கள் - நேரடி ரிப்போர்ட்

துவளும் நதிகள்



மலர்கள் முதியோர் ஆசிரமம் கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தன்னையே புதுப்பிச்சுட்டு இருந்தது.

முதியோர் இல்லங்களை விட முதியோருக்கான ஆசிரமங்கள்  பரவாயில்லை. இங்க வரவங்க சொந்த செலவுல ஆயுள் சந்தா கட்டி பாதுகாப்பு, துணைக்காக தேடி வரவங்க. பிள்ளைகளுடன் ஒட்டு உறவு இருக்கும். முதியோர் இல்லத்துல  ஆதரவில்லாம ஏழ்மையால அவதிப்பட்டு வரவங்களுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த மாதிரி ஆசிரமங்களுக்கு  விரும்பியே வரவங்களும் உண்டு. தியானம், ஜபம், பஜனை, அன்றாட பேச்சுனு ஓரளவு கலகலப்பா இருக்கும். அடிக்கடி டாக்டர்கள் முகாம் நடந்து ஆரோக்கியத்துக்கும் கேடு வராம பாதுகாப்பாங்க.

இன்னிக்கு வரப் போகும் சிறப்பு விருந்தினர்களாக முன்னமே பத்திரிகை அனுப்பிய விநாயகமுருகன், அமைதிச்சாரல், (ஊர்சுத்தி)பி.ஜி.சரவணன், எவனோ ஒருவன், பிகிலு, யாத்ரிகன் யாத்ரா, பனித்துளிஷங்கர், டான் அஷோக், வி.ராதாக்ருஷ்ணன், குறிஞ்சி-மலர்கள் சுந்தரா, முனைவர் இரா.குணசீலன் எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்துட்டு இருந்தாங்க.

முதலில் எழுத்தாளார் அமைதிச்சாரலின் ஓடமும் ஓர் நாள் கதையை சிலாகிச்சு பேசினாங்க மலர்கள் காப்பாளர் தர்ஷினி. சில முதியோர்கள் இக்கதையை தங்கள் வாழ்கையின் பிரதிபலிப்பாக உணர்ந்தாங்க. கோலப்போட்டிகள் பத்தி தகவல் தெரிவிச்சதும் அதில கலந்து கொள்ள பலபேர் ஆர்வமா முன்வந்தாங்க.

வயதான ஒருவர்  குழந்தைகளின் ஹீரோவாக ஆகும் கதையை டான் அஷோக் பகிர்ந்து, எத்தனை வயதிலும் மகிழ்ச்சியாகவும் உபயோகமாகவும் இருக்கும் வழியை அந்தந்த மனிதனே கண்டு புடிக்கணம்னு சொல்லி முடிசார்.  அப்புறம் புத்தக அறிமுகம் நடந்துச்சு. முதலாவதா அறிமுகப்படுத்திய

பதிப்பகம்: யாத்ரா யாத்ரிகன்
தொகுப்பு : நரன் கவிதைகள்
எல்லாருக்கும் ஒவ்வொரு புத்தகம் வழங்கினாங்க. வாழ்கையின் ஒவ்வொரு கணத்துக்கும்  பொருந்தி வரதா இருந்தது அந்த கவிதைத் தொகுப்பு.

அடுத்த அறிமுகம் பிஜி சரவணனுடையது. அவரோட 'முகில் பூக்கள்' புத்தக பிரசுரம் பத்திப் அறிமுகப்படுத்தி, ஆளுக்கு ஒவ்வொரு பிரதி குடுத்தாங்க. மனசுக்கு புத்துணர்ச்சி தர இயற்கை அழகை, அதை விட அழகா கவிதைல வடிக்கற திறமை சரவணனிடம் இருப்பதாக எல்லாரும் புகழ்ந்தாங்க. சிந்தனையில் பூக்கற கவிதைகளை ஓவியமாகவே நம் கண் முன்ன கொண்டு வருவதாக பாராட்டி சிறந்த எதிர்காலம் இருக்கும்னு  வாழ்த்து தெரிவிச்சாங்க. அவங்க பங்கேற்கும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பற்றி சொன்ன போது இப்படிபட்ட இளைஞர்களால நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்பிக்கை பிறப்பதாக கூறினாங்க.

கைப்பேசியில் பேசும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளைப் பத்தி சுருக்கமா பேசி முடிச்சு, பிகிலு-நேரம்  பகுதில "மீல்ஸ் ரேடி" குட்டி குறும்படம் காமிச்சாங்க.  சில பேருக்கு தங்கள் வாழ்க்கைத்துணை நியாபகம் வந்துச்சு. மலையாளக் குறும்படம் என்றாலும் "புஷ்பக்" படம் போல மொழியைத் தாண்டிய மௌனத்துல மனசுல இடம் பிடிச்சுடுது. வயசான காலத்துலையும் உழைச்சு சாப்புடற அவரோட தன்மானம் பிடிச்சு போய் நேகிழ்ந்தாங்க. வயசான காலத்து காதலை பார்த்து ரெண்டு மூணு பாட்டி தாத்தாக்களுக்கு வெக்கமா போய்டிச்சு. உடனே பனித்துளி சங்கர் "முதுமையிலும் காதல்" வரும்னு தன் கருத்தை பகிர்ந்துகிட்டார். 'முதுமையா இருந்தா என்ன உடம்பு தானே முதுமை மனசு என்னிக்கும் இளசு'னு தர்ஷினி பேசினதுக்கு ஏக கரகோஷம்.

புதுக்கவிதை உலகத்துல தனக்கென ஒரு பேர் எடுத்து வரும் விநாயகமுருகன் கவிதைகளை சுட்டிக் காட்டி குஞ்சுண்ணி கவிதையை பகிர்ந்திகிட்டாங்க. குஞ்சுண்ணி மாதிரி தான் எல்லோரும் வார்த்தையை தவிர வேற எதையுமே சுவாசிக்கறதில்லை. நம்ம உலகத்த விட்டுப் போன பிறகும் எஞ்சி நிற்பது இந்த வார்த்தை தான்னு குட்டி உரை ஆற்றினார்  முக்கால்வாசி மனிதர்கள் கருத்துக் கந்தசாமிகளாத் தான் இருக்காங்க என்றார் விநாயகமுருகன். எல்லாரும் ரசிச்சு ஆமோதிச்சாங்க.  அமைதி அவங்க மனசுல வந்துதா என்பது கேள்விக்குறி தான்.


இறை தியானம், உண்மையான ஞானத் தேடல் இருக்கறவன் தன்னுள்ளே தன்னை தேட முயற்சிப்பான். உங்க குறைகளை இறைவனிடம் சொல்லுங்க, உங்க ஆழ்மனசின் சக்தியை பெருக்கிக்குங்க.போலி சாமியாரை தேடி ஓடாதீங்கன்னு எவனோ ஒருவன் உரையாற்றியதும், இந்த மாதிரி ஒரு சாமியார் வந்து போன அனுபவம் பத்தியும் பேசியது இந்த காலத்துக்கு பெரிதும் தேவையான விஷயமா இருந்தது. மாயை பத்திய  ஆழமான கருத்துக்கள்  பேசினால் பலருக்கும் புரியுமோனு தயங்கி அதை பேசாமையே  முடிச்சுகிட்டார்.

அடுத்து பேச வந்த வி.ராதாகிருஷ்ணன், தன்னுடைய "ஜீரோ எழுத்து" பற்றி அறிமுகம் செஞ்சு வெச்சார். இது பற்றி தான் தொடர் எழுதப்போவதாக கூறினார். அவரோடைய வித்தியாசமான abstract எழுத்தும் பேச்சும் பலருக்கும் பிடித்தமாய் போனது.

முனைவர் குணசீலன், விழாவிலேயே முதியோர் தினத்தை கொண்டாடி, தன் அன்பைப் பகிர்ந்து குட்டிக்கதைகள் மூலம் சிற்றுரையாற்றியது பலரது மனசை கொள்ளை கொண்டுச்சு. கிருஸ்மஸ் கொண்டாட்டதை முன்னிட்டு சிற்றுண்டி, சிப்ஸ், கேக், என்று பந்தி விரிக்கப்பட்டிருப்பதை தர்ஷினி தெரிவித்தார். வயதான காலத்தில் பாதி பேருக்கு ஷுகர் இருக்க, நம் செலவில் இவர்கள் கேக்  சாப்பிடுகிறார்கள் என ஒரு முதியவர் காது  படவே குறை கூறினார். அவரை சமாதானப்படுத்தி செலவு முழுவதும் ஸ்பான்ஸர் செய்ய பட்டதை கூறினர் காப்பாளர்கள்.

எத்தனை வயதானாலும் முரண்டு பிடித்து இடக்கு பேசும் வயதானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலம் அவங்களை முறுக்கி விட்டிருக்கலாம்.  பார்க்க முரடாக இருக்கும் சிலர் பலாப்பழம் போன்றவர்கள். அவங்களோட உண்மை சுபாவம் பழகியவர்களுக்குத் தான் புரியும். சுந்தராவின் கவிதை அவள் நினைவுக்கு வந்து சிறு புன்னகை உதிர்த்தாள்.

இறுதியாக film festival 2011ல் பேசப்பட்ட  "துருவ நட்சத்திரம்" படம் திரையிடப்பட்டு, அதன் விமர்சனமும் காண்பிக்கப்பட்டது. டெல்லிகணேஷ் மற்றும் குட்டிப் பையனின் நடிப்பை அனைவரும் பாராட்டினாங்க. முடிவுரை முடிந்தபின்  விநாயகமுருகன், அமைதிச்சாரல்,  (ஊர்சுத்தி) பி.ஜி.சரவணன்,  எவனோ ஒருவன், யாத்ரிகன் யாத்ரா, பனித்துளிஷங்கர், பிகிலு,  டான் அஷோக், வி.ராதாக்ருஷ்ணன்,  குறிஞ்சிமலர்கள்-சுந்தரா, முனைவர் இரா.குணசீலன் ஆகியோருக்கு சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. சிற்றுண்டியுடன் விழா இனிதே முடிந்தது.

வலைச்சரத்திற்காக- ஷக்திப்ரபா

~~~o~~~

முதியோர்கள் என்பதால அவர்கள் எல்லா விஷயத்திலும் சரியென்றும்  சொல்லிட முடியாது.  விட்டுக்கொடுத்து காலமாற்றத்தை ஏற்றுக்கொண்டு வாழ அவர்களும் பழகிக்கொள்ள வேண்டும். காலம் மாறும். மாற்றம் நல்லதல்ல என்றால் அறிவுரை செய்வது அவர்கள் கடமை. வாழ்ந்து அனுபவித்த அவர்கள் சொல்வதை சரியான கோணத்தில் ஏற்று சிறிதேனும் விட்டுக்கொடுப்பதும் மற்ற தலைமுறையின் கடமையாகிறது.

முன் காலத்தில், இல்லறத்துக்கு அடுத்து வானப்ரஸ்தம் என்ற நிலை இருந்தது. அதில் பக்குவப்பட்ட பின்னே சன்யாஸி ஆக முடியும். வானபிரஸ்த நிலை என்பது, ஒட்டுதல் பற்றுதல் நீங்கி, பொறுப்பை இளையவர்களிடம் ஒப்படைத்து தன்னிலை ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகும். அன்றாட வாழ்வின் போக்கில் அதிகம் தலையிடாமல்,  அன்பும், விட்டுக்கொடுத்தலுடன் வாழ்ந்தால் முதுமை இனிமை.

முதியவர்களை ஏசாமல், நோகடிக்காமல், நம் நலனுக்காகவே வாழ்ந்த அவர்களின் உள்ளுணர்வை  புரிந்து நடந்தால் எல்லா வீடும் கோகுலம். நிறைவான பாராட்டுகள் செய்யாத விந்தையே இல்லை. அன்போடு அரவணைத்து, அவர்கள் செய்த தியாகங்கள், அருமைகளை சொல்லி பாராட்டினால், குழந்தைகளாகி நம்மிடம் குழைந்து வருவார்கள்.

எல்லாம் அனுபவித்த  பக்குவத்தில், கணநேர விரக்தியால் வரும் தேடலை ஞானமென்று   கூறும்  பாடலாக இது அமைகிறது.




துவங்கி வளர்ந்து ஓடிய துளிகள் அடுத்து இறுதியாய் அமைதி பெறும்.













26 comments:

  1. அருமையான கதைக்களங்கள் அமைத்து அதன் மூலம் பதிவுகளை வித்தியாசமாக அறிமுகபடுத்தி காட்டி இருப்பது பாராட்டுக்குரியது. அறிமுகங்களுக்கு மேலும் நன்றிகள் சகோதரி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி வி.ஆர் தங்களுக்கும் குடும்பத்துக்கும் க்ருஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி :)

    ReplyDelete
  3. ஒவ்வொரு நாளும் புதிய உற்சாகத்தோடு
    சரம் தொடுக்கிறீர்கள்.
    பதிவில் உங்களின் உழைப்பின் பொருள்
    விளங்குகிறது.
    அமைத்ச்சாரல் மற்றும் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின்
    எழுத்துக்களை படித்திருக்கிறேன். மற்றவர்கள் எனக்குப்
    புதியவர்களே...
    சென்று பார்க்கிறேன் சகோதரி.
    இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல உத்தியுடன் நீங்கள் அறிமுகப்படுத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படிக்கத் தூண்டுகிறது. நிரந்தர ஆசிரியராக தங்களை வலைச்சரம் நியமித்தால் மிக மகிழ்வேன். அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மேலே தோழர் கணேஷ் அவர்கள் சொன்னதையே நான் வழிமொழிகிறேன்..
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. புதுமையான முறையில் அறிமுகங்களின் அணிவகுப்பு அனைத்தும் அருமை . ங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறீர்கள் ஷக்தி. மகிழ்ச்சியாக உள்ளது. முதியோர் பற்றிய பகிர்வும் சிறப்பு.

    ReplyDelete
  8. நல்லதொருப் பதிவு...

    பதிவின் முடிவில் முத்தாய்ப்பாக..
    ///முதியவர்களை ஏசாமல், நோகடிக்காமல், நம் நலனுக்காகவே வாழ்ந்த அவர்களின் உள்ளுணர்வை புரிந்து நடந்தால் எல்லா வீடும் கோகுலம். நிறைவான பாராட்டுகள் செய்யாத விந்தையே இல்லை. அன்போடு அரவணைத்து, அவர்கள் செய்த தியாகங்கள், அருமைகளை சொல்லி பாராட்டினால், குழந்தைகளாகி நம்மிடம் குழைந்து வருவார்கள்.///

    அருமை... ஒரு முதியவள் தன ஒரே மகனிடம் மன்றாடும் கவிதை ஒன்றை எனது பதிவில் போட்டிருந்தேன் அதையும் வந்து பாருங்களேன் என் சகோதர தமிழ் விரும்பிகளே!
    இதோ இங்கே சுட்டி..
    http://tamizhvirumbi.blogspot.com/2011/09/blog-post_20.html

    ReplyDelete
  9. அமைதி[மழை]ச்சாரலில் ஆரம்பித்த அறிமுக மழை கொட்டோகொட்டெனக் கொட்டி, கடைசியில் எங்களை டாக்டரிடமல்லவா கொண்டுபோய்ச் சேர்த்து விட்டீர்கள்!

    அதாவது டாக்டர் [முனைவர்] இரா. குணசீலன் அவர்களிடம் ... டாக்டர் மிகவும் நல்ல கைராசியானவர் தான். அவர் பதிவில், நான் பலமுறை நல்ல நல்ல மருந்துகளாக வாங்கிச் சாப்பிட்டுள்ளேன்.

    அதுவும் விநாயகர் மட்டுமல்லாமல் முருகனும் சேர்ந்தல்லவா, விநாயக முருகனாக இன்றைக்கு வரப்போகும் சிறப்பு விருந்தினர்களாக முன்னமே பத்திரிகை அனுப்பியுள்ளார். ;)))) மிக்க மகிழ்ச்சி.

    துவளும் நதிகள் துவளாமல் துள்ளிக் குதிக்கத்தான் நிச்சயம் நினைக்கும், தங்களின் அன்புப்பார்வை பட்டதனால்.

    மனமார்ந்த பாராட்டுக்கள் ஷக்தி.

    ReplyDelete
  10. வித்தியாசமான அறிமுகங்கள் ..

    ReplyDelete
  11. அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  12. வாங்க மகேந்திரன். நன்றி. உங்களுக்கும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  13. வாங்க கணேஷ். பாராட்டுக்கு நன்றி :)
    தொடர்வருகை தந்து மகிழ்விக்கிறீர்கள்.
    உங்களுக்கும் க்ருஸ்மஸ் மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. நன்றி மதுமதி :)
    வருகைக்கும் பாராட்டுக்கும் :)

    ReplyDelete
  15. வாங்க சங்கர், உங்களோட சிறப்பான கவிதை இங்க தொடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி :) மிக்க நன்றி.

    ReplyDelete
  16. ரொம்ப ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி.... :)

    ReplyDelete
  17. வாங்க தமிழ்விரும்பி :) நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்...

    ReplyDelete
  18. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மாதேவி :)

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜபாட்டை ராஜா :)

    ReplyDelete
  20. ///துவளும் நதிகள் துவளாமல் துள்ளிக் குதிக்கத்தான் நிச்சயம் நினைக்கும், தங்களின் அன்புப்பார்வை பட்டதனால்.

    மனமார்ந்த பாராட்டுக்கள் ஷக்தி.
    ///

    வாங்க வை.கோ சார். தாங்க்ஸ். உங்கள் ஊக்கத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றி :)

    ReplyDelete
  21. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி லக்ஷ்மீம்மா! :)

    ReplyDelete
  23. தனித்துவமான முயற்சி..

    அருமை..

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  24. அருமையான தொகுப்புக்கும் அறிமுகத்துக்கும் ரொம்ப நன்றி சகோ..

    சால்வை ஜூப்பரா இருந்துச்சுப்பா. எனக்கு பிடிச்ச கலர்ல வேற கொடுத்துட்டீங்களா!! ரொம்பவே பிடிச்சுப் போச்சு :-)

    ReplyDelete
  25. நன்றி குணா தமிழ், அமைதிச்சாரல் :)

    ReplyDelete