அமைதிக் கடல்
தனித்து ஜனிக்கும் நீர்த்துளி, பெருகியோடி, ஆறாகவும் நதியாகவும் உருமாறி, பின் கடலில் கலக்கிறது. அது கடலில் கலந்ததால் இனி அது துளியல்ல. அதற்காக அது முடிந்தோ, இல்லாமலோ ஆகிவிடுவதில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி வேரொன்றின் அண்டவடிவில் கலந்துவிட்டது.
வாழ்கையின் மொத்த பாகத்தில் நாம் கண்ட சுக துக்கங்கள் எத்தனை! அதில் நிலைகுலைந்ததும், நிலைத்து நின்றதும் என்ன என்றால், ஒன்றுமில்லை. விளிம்பில் நின்று திரும்பிப் பார்த்தால், அத்தனையும் கனவு போல் தெரியும். காட்சிகள், மனிதர்கள் சூழ்நிலைகள் எதுவுமே நிலைக்காமல் மறைந்து விட்டிருக்கும். 'இதற்காகவா இவ்வளவு கவலை?' என்ற எண்ணம் தலை தூக்கும். "கடமையை செய்து பாதையில் பயணித்துக் கொண்டிரு.." என்பது மட்டுமே நிஜமெனப் புரியும். பாதைகள் முழுதும் சந்தித்த பாத்திரங்கள், அவர்களுடன் நாம் கொண்டாடிய சுக துக்கங்கள் எல்லாமே மறைந்து போக பெற்ற "அனுபவம்" மட்டுமே கூட வரும்.
எத்தனை சிறியது நம் பூமி, அதில் நாம், நம் மனிதர்கள், நம் சிந்தனைகள்! கூறுபோட்டால் காணாமலே போய்விடுவோம். சிறு துளி....அந்த துளியின் வழியாக உலகைப் பார்ப்பதால் விளையும் கவலை.
நம் இலக்கையும், பார்வையையும். பிரமாண்டமாக விரிவிபடுத்திக் கொண்டால் சிறு கவலைகள் பாதிக்காது. வாழ்கை என்பது என்ன என்று புரியும் பொழுது, அது ஏறக்குறைய முடிந்து போனதாகிறது. இதையே திறம்பட கூறும் எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் அவர்களின் கதை படிக்கும் பொழுதே நெகிழ்ந்தேன்.
பூவனம் ஜீவியின் "ஆன்ம விசாரம்" பதிவுகள் நிறைய சிந்திக்கத் தூண்டுபவையாய் உள்ளன. ஏறக்குறைய எழுதுவதை சேவை போல் செய்கிறார் என்றெனக்கு தோன்றுவதுண்டு. அவருக்கு மனமார்ந்த வணக்கம். புகழ்பெற்ற எழுத்தாளார்கள் லா.சா.ரா, கிருஷ்ணன் நம்பி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பலரை குறிப்பிட்டு, நினைவு கூர்ந்திருக்கும் பதிவுகள் ஏராளம். சிறுகதைகளை கதாபாத்திரத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்து எழுதுவது அனைவருக்கும் அமைந்துவிடாது. ஆக்கங்களை படிக்கையிலேயே ஜீவி காணாமல் போய் கதாபாத்திரங்கள் மட்டுமே உயிருடன் உலாவந்து மனதை ஆக்ரமிக்கும். கவிதைகள், அலசல், வாழ்கை நலம் பற்றிய கட்டுரைகள் என நீண்டுக்கொண்டே போகிறது இவரது படைப்புகள்.
முதுமையை எப்படி வாழ்வது என்பதற்கு இலக்கணமாய் திகழ்பவர்கள் சிலர். அதில் இந்த எளியவரும் ஒருவர். குறிப்பிட்டு எழுதிய பதிவர் இளங்கோவிற்கு நன்றி. முத்தாய் மூன்று பதிவுகள் கணக்கில் இடுகையிட்டாலும் அத்தனையும் பயனுள்ளதாக இருக்கிறது இவரது வலைதளத்தில். உதராணமாக சில பேர் இருக்க, 'இப்படியும் இருக்காங்களே' என்று அங்கலாய்க்க வைப்பவர்கள் கணக்கில் அடங்கா. போலி கௌரவம், "நான் அன்னிக்கு எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா" என்று கதைப்பவர்களே அதிகம். இவர்களிடம் தான் பட்ட பாட்டை சுவைபட கூறியிருக்கிறார் GMB அவர்கள்.
மௌம் சாதிக்காதது பேச்சு சாதித்து விட முடியாது. அமைதியென்றாலே புத்தர். அவர் கூறிய எண்வழிப்பாதை பலரும் அறிந்ததே. அதிலே right speech வேண்டும் என்கிறார். நல்ல மொழி என்றால் என்ன?
பிறருக்கு பயன்படக்கூடிய பேச்சு. உதிர்க்கவிருக்கும் பேச்சு பயனுடையதா என்பதற்கு சில சோதனைகள் உண்டு. நீங்கள் கூற விழையும் சொற்கள்
1. உண்மையானதா
2. பிறரை துன்புறுத்தாததா?
3. இன்னொருவரை பற்றிப் புறம் பேசாததா?
4. பேசியதால் உங்களுக்கோ மற்றவனுக்கோ பயனுள்ளதா
2. பிறரை துன்புறுத்தாததா?
3. இன்னொருவரை பற்றிப் புறம் பேசாததா?
4. பேசியதால் உங்களுக்கோ மற்றவனுக்கோ பயனுள்ளதா
என்று ஆராய்ந்து பேசுதல் வேண்டுமாம். இப்படி ஆராய்ந்தால் நம்மில் ஏறக்குறைய அனைவரும் அன்றாடம் பேசும் பேச்சையே விட்டுவிட வேண்டும். இதையே தான் சாக்ரடீஸ் தன் சீடரிடம் சொன்னாராம். குட்டிக்கதையுடன் மிக நன்றாக நூருல் அமீன் விளக்கியிருப்பதைப் படியுங்கள்.
இதுவரை இறைவன் இருக்கிறானா இல்லையா என்று ஆராய்ச்சியிலிருந்தவர்களும், இருந்தால், நாளைக்கு பேசிக்கொள்கிறேன் என தட்டிக் கழித்தவர்களும் முதுமையின் விளிம்பில் நிற்கும் பொழுது, "இனிமேல் என்ன?" என்று சிந்திப்பது தவிர்க்க இயலாது. அதுவரை இல்லாதிருந்த இறைவன், சிலர் வாழ்வில் இருப்பவானாகிப் போக, அவனிடம் முறையிடுகிறோம். இறைவனே உனக்கு என் மேல்கருணை பாசமே இல்லையா என்று கதறுகிறோம். ' 'நான் உன்னை நேசிப்பதிருக்கட்டும், நீ என்னை நேசிக்கிறாயா?' என்று இறைவன் திருப்பிக் கேட்டால்? தேனம்மை லக்ஷ்மணன் மூலமாக இதே கேள்வியைத் தான் இறைவன் கேட்கிறான். நறுக்குத் தெரித்தாற்போல் வந்து விழுந்திருக்கிறது வார்த்தைகள். என்ன பதில் சொல்லப்போகிறோம்?
காலங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று நமக்கு கிடைத்த மதிப்பும் மரியாதையும் நாளையும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நிலையாமை மட்டுமே உண்மை. தபால் உலகத்தில் வாழ்ந்த மனிதன் தொலைப்பேசியின் வரவால் தனிமைப்பட்டுப் போவதை மிக மிக பிரமாதமான குறும்படமாக்கியிருக்கிறார்கள். தேசிய விருது வாங்கிய படம். அதற்கான அனைத்து தகுதியும் இருக்கிறது. சிறப்பான நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, அனைத்திலும் தேர்வு பெறுகிறது. R.K.Narayan அவர்களின் 'மால்குடி டேஸ்' நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க. தமிழ் குறும்படங்களில் விருப்பமுள்ளோர் இந்த வலைதளத்தில் தங்கள் வேட்கை தீர்த்துக்கொள்ளலாம். நூற்றுக்கணக்கான படங்கள் அடுக்கியிருக்கிறார்கள்.
தனிமையை நோக்கிய பயணமே எஞ்சிய படிகாள்கிப் போகிறது. இறுதி பயணத்தின் எல்லையில் மீதமிருப்பது இரண்டே இரண்டு பேரப்பிள்ளைகள் மட்டுமே என ஹாஸ்யம் கலந்து நிதர்சனத்தை கூறுகிறது இக்கதை.
அதனால் மனம் தளர்ந்து விட முடியுமா என்ன? இன்றுடன் எதுவும் முடிந்து விடவில்லை. எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுகிறோம். எத்தனை துவண்டாலும், மீண்டும் புத்துணர்ச்சி ஊற்றெடுக்கும். எவற்றிற்கும், யாருக்கும் நம்பிக்கையான நாளை உண்டு. என எடுத்துக் காட்டும் இக்குறும்படத்துடன் ஏழு நிலைகளும் முற்று பெறுகிறது.
முடிந்த பின்னர் மீண்டும் தொடரும்....எனக்கூறும் அருமையான வரிகளைக் கொண்ட பாடல். ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய இந்த பாடலைக் காணத் தவறாதீர்கள்.
~~~~o~~~~
துவங்கித் தூரலாய் வளர்ந்து, மழையாகி, வெள்ளப்போக்கில் பயணித்து கடலில் கலந்து அமைதிபெறுகிறது. அமைதியான துளி தன்னை இழக்கவில்லை. தன்னிலையை மட்டுமே மாற்றிக்கொண்டது. மீண்டும் நாளை நீராவியாகி மேகமாய் பயணிக்கும்...இந்த முடிவற்ற பயணம் தொடரும். துவக்கமும் முடிவும், கோடுகளின் முனைகளல்ல. அது சக்கரத்தின் இருவேறு பகுதி.
நான் முடிக்கிறேன். நாளை முதல் அடுத்த ஆசிரியர் தொடர்வார்......
நல்ல தொகுப்பு. குறும்படத் தளம் நல்ல அறிமுகம்! பார்த்திடுவோம்:)!
ReplyDeleteஅருமையான வாரம். மிகச் சிறப்பாகச் செய்தீர்கள் ஷக்தி. மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அன்புநிறை சகோதரி,
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்.
அழகாக பலதரப்பட்ட பூக்களால் சரம் தொடுத்து
வலைச்சரத்தை நீங்கள் ஒரு வார காலமாக அலங்கரித்த விதம்
மிக அழகு.
வாழ்த்துக்கள்.
நேரம் கிடைக்கையில் என் தளம் வாருங்கள்.
ReplyDeletehttp://www.ilavenirkaalam.blogspot.com/
நன்றி9 ராமலக்ஷ்மி :)
ReplyDeleteதொடர்ந்து வந்துக்கும் ஊக்கத்துக்கும் இதயபூர்வ நன்றி :)
நன்றி மகேந்திரன். உங்கள் தளத்திற்கு நிச்சயம் வருகிறேன். தொடர்ந்து வந்து என்னை மகிழ்ச்சியிலாழ்த்தினீர்கள். இதயபூர்வ நன்றி :)
ReplyDeleteஇன்றைய அறிமுக பதிவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய கிறிச்துமஸ் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா இன்றைக்கே இரண்டு பதிவுகளா? முதலில் அதைப்பார்த்து விட்டு இங்கு வந்துள்ளேன்! வாரம் முடியப்போகிறதே என்ற கவலையில் பல குழப்பங்களில் இதுவும் ஒன்று.
ReplyDelete//எத்தனை சிறியது நம் பூமி, அதில் நாம், நம் மனிதர்கள், நம் சிந்தனைகள்! கூறுபோட்டால் காணாமலே போய்விடுவோம். சிறு துளி....அந்த துளியின் வழியாக உலகைப் பார்ப்பதால் விளையும் கவலை. //
மிகச்சரியான கூற்றுத்தான் இது.
தொடரும்....
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
எனக்கு மிகவும் பிடித்தமான் பத்திரிகையுலகப் பிரபலங்களான திருமதி வித்யா சுப்ரமண்யன் அவர்களையும், திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களையும் தாங்கள் பாராட்டி எழுதியுள்ளது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.
ReplyDeleteஅதுபோல மிகவும் அனுபவசாலிகளான என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. பூவனம் ஜீவி அவர்களையும், திரு GMB Sir அவர்களையும் குறிப்பிட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
மொத்தத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்களை இந்தப்பதிவினில் குறிப்பிடுள்ளீர்கள் போலத்தெரிகிறது.
மற்றவர்களுடன் எனக்கு அனுபவம் இதுவரை இல்லை. சென்று பார்த்துத் தெரிந்துகொள்வதில் ஆவல் மட்டும் உள்ளது. முயற்சிக்கிறேன்.
அதற்குள் இந்த வாரம் இப்படி ஓடிப்போய் விட்டதே என்ற கவலையுடன் .....
பிரியமுள்ள உங்கள்
vgk
மிக்க நன்றி ரத்னவேல் சார், லக்ஷ்மீம்மா :) தொடர்ந்து ஊக்கமளித்தீர்கள் :)
ReplyDelete//
ReplyDeleteஅதற்குள் இந்த வாரம் இப்படி ஓடிப்போய் விட்டதே என்ற கவலையுடன் .....
//
நன்றி :) நன்றி :) நன்றி :) ......
மிக்க நன்றி சக்தி..
ReplyDeleteகோபால் சாருக்கும் மிக்க நன்றி..:)
அன்பின் ஷக்திப்ரபா, வலைசரத்தில் என் பதிவு குறித்து எழுதியதற்கு நன்றி.இதை அறிமுகம் என்று நான் கூறமாட்டேன். நீங்களும் கூறவில்லை. இன்னும் பலரும் என் வலைப்பூ பற்றி தெரிந்துகொள்ள இது உதவும் என நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வைகோ சாருக்கும் என் நன்றி. பாராட்டுக்களுடனும் வாழ்த்துக்களுடனும்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாங்க தேனம்மை, ஜி.எம்.பி சார்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
அன்புள்ள ஷக்தி,
ReplyDeleteவலைச்சரத்திற்கு வாசகர்கள் ஏராளம்.
அவர்கள் பார்வையில் படுகிற மாதிரி, உங்களுக்கு மிகவும் பிடித்துப் போன 'பூவனம்' வலைத்தளத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.
கோபு சாரும் வந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது.
வலைத்தள ஆசிரியருக்கும், வாசகர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜீவி :)
ReplyDeleteவாரத்தில் ஒரு நாள் என ஒதுக்கி நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களின் பதிவுகளை படித்து பயன் பெற வேண்டுமென எண்ணிக் கொண்டேன். அமைதியான அற்புதமான அறிமுகங்கள் சகோதரி. மீண்டும் நன்றி.
ReplyDelete