Thursday, January 12, 2012

நாள்-4-நமக்குத் தொழில் கவிதை

நல்ல விருந்து உண்டாகி விட்டது. செரிக்க மருந்தும் சாப்பிட்டாகி விட்டது.  என்ன செய்யலாம்?சாய்வு நாற்காலியில் அமர்ந்து கவிதை படிக்கலாமா? ஆனால் பாட்டுக் கலந்திட பத்தினிப் பெண் இல்லை; எனவே கூட்டுக் களியும் இல்லை!(கூட்டும் களியும் திருவாதிரை யன்றுதான்!)

எனவே கவிதை மட்டுமே!



"சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
 
வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
 
காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
 
காயரைத்து வைப்பாய் கறி!"

இது இலக்கணத்துக்கு உட்பட்ட படைப்பே!ஆனால் இது கவிதை யாகுமா? இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதிய ஒரே காரணத்தால் எதுவும் கவிதையாகி விட முடியாது.இது வெறும் செய்யுள்;கவிதையல்ல.

பள்ளிப்பருவத்தில் எனக்குப் பாரதி பரிச்சயமானான். கல்லூரிப் பருவத்தில்  கம்பன் கைகோத்தான். பின், கணையாழியும், கசடதபறவும் புதுக்  கவிதையை  எனக்கு அறிமுகம் செய்து வைத்தன.மரபுக்கவிதை புதுக்கவிதை இரண்டுமே என்னைக் கவர்ந்தன.புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைப் படிப்பவன் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்ள வேண்டும்.ஒரு ஒலி நயம் வேண்டும்.வெறும் வாக்கியங்களை மடித்துப் போட்டுக் கவிதை என்று சொல்லும் ஒரு அபாயம் இருக்கிறது.அவையெல்லாம் கம்பாசிட்டர் கவிதைகளே!

பதிவுலகில் தங்கள் கவிதைகளால் கலக்கும் பதிவர்கள் பலர்.அவர்களுள் நான் ரசித்த சிலர் பற்றிய பகிர்வே இன்று.

பதிவின் பெயரே கவிதைகள் என்றால்,நான் வேறெதுவும் சொல்லவும் வேண்டுமோ?மரபுக் கவிதை மன்னன் இவர். குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லல் இயலாது.பாருங்கள்


இவர் மதுரை பாரதி.புதுக்கவிதையில் மட்டுமே தொட இயலும் என்ப வற்றை  மரபுக்கவிதையிலும் அழுத்தமாகச் சொல்பவர். ரிக்‌ஷாக்கார மாரிமுத்துவின் திருமணம் பற்றி இவர் எழுதிய கவிதை “நானாச்சு,நீயாச்சு” அருமை. 

வசந்த மண்டபத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் இவர்.நலிந்துவரும் தமிழ்நாட்டுக்கலைகள் பற்றி இவர் எழுதிய கவிதைகள்

இவர் அம்பாளடியாள்;நான் இவர் கவிதைகளடியான்.காதல் பற்றிய இவரது கவிதைகள் மகிழ வைக்கும்;கலங்க வைக்கும்;வியக்க வைக்கும்.பாருங்கள்


இவர் குட்டிக் கவிதைகளில் பெரிய விஷயங்களை நறுக்கென்று சொல்லும் கவித்துரைதுரை டேனியல்

இவர் அழகான கவிதைகள் எழுதும் கவிக்கிழவன்!


இவரது தூரிகையின் தூறல் கவிதைத் தூறல். மதி போன்ற கவிதைகளில் மது இருக்கும்-


மேலோட்டமாகப் படித்து விட்டுப் போக முடியாது இவர் கவிதைகளை. முதலில் அந்த வார்த்தை ஜாலங்கள்,பின் உள்ளிருக்கும் கருத்து; பொறுமையாய்ப் படிக்க வேண்டும்.இது கலியுகம்

இவர் ஒரு கவி மன்னர்தான்.சமீபத்திய ஒரு கவிதையில் தான் ஏன் கவி மன்னராயிருக்கிறார் என்பதை இவரே சொல்கிறார்.ரமணியம்!

கன்னங்களால் முத்தமிடுவோம்!கவிதைகளால் எழுதப்படுவோம் என்று சொல்கிறார் இவர். கவிதைகளுக்காக இவர் முத்தமிடப் படலாம்!


நதியில் விழுந்த இலை,இந்தப் பூவின் பெயர்.இவரது கடவுளும் சாத்தானும் என்ற வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை அருமை


காதலும் காதல் சார்ந்த உளறல்களும் கவிதையாய் மலர்ந்தால்?!- பாருங்கள் இந்தக் காதலில் உதிர்ந்தாய்--


கவிதைச் சரத்தில் இந்த சில ரோஜாக்கள் இல்லாவிட்டால் எப்படி? ஒவ்வோரு ரோஜாவும் ஒவ்வொரு நிறம்!


வேல்கண்ணன் கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன. படித்துப் பாருங்கள் இந்த அமிழ மறுக்கும் பந்துகள்.


இந்த மழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்.என்ன ஒரு கற்பனை இந்தக் கவிதையில்?


இன்னும் இருக்கிறார் எத்தனை எத்தனையோ.இது கடற்கரையில் நான் பொறுக்கிய சில கிளிஞ்சல்கள் மட்டுமே!

43 comments:

  1. அழகான பல கவிதை மழைகளில் இன்று நனைந்து இன்புற்றோம். பாராட்டுக்கள்.

    நன்றிகள்.

    ReplyDelete
  2. பதிவுலகக்கவி ஜாம்பவாங்களுடன் என்னையும் இணைத்து
    அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர்ந்து நல்ல படைப்புகள் தர முயலுகிறேன்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  3. மருந்துக்குப்பின் திரும்பவும் விருந்து படைத்திருக்கிறீர்கள்! அதுவும் கவிதை விருந்து!! நான் சொல்வது பதிவின் ஆரம்பத்தில் உள்ள கவிதையை.ஆரம்பமே திகட்டுகிறது. நீங்கள் கவிதைக்கடலில் பொறுக்கியவை கிளிஞ்சல்கள் அல்ல.நல் முத்துக்கள்! நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதை மழையில் நனைந்த எனக்கு சுரமும் ஜலதோஷமும் வந்து விட்டது ...ஆனால் என்ன சுலபமாக வைத்தியம் சுயமாக செய்துகொள்ள சென்னை சித்தன் பல அறிய குறிப்புகளை கொடுத்து உள்ளாரே ! உங்கள் பதிவுகள் பல் பொருள் அங்காடியை நினைவு உட்டுகிறன ....விருந்து, மருந்து, கவிதை இன்னும் என்ன என்னவோ ?! வாசுதேவன்

    ReplyDelete
  5. "சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
    வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
    காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
    காயரைத்து வைப்பாய் கறி!"//

    கவிதை அருமை.
    கவிதையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கடவுளும் சாத்தானும் நன்றாக இருக்கிறது.

    போகனின் எழுத்துப்பிழை படித்திருக்கிறீர்களோ? கவிதைப் பொக்கிஷம். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு கொஞ்சம் துணிச்சலாகப் படிக்கவேண்டும்.. அப்புறம் திரும்ப அக்கம் பார்த்துவிட்டு கொஞ்சம் துணிச்சலாக..

    ரமணி இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் நம்மூர் தாகூர் என்று பெயர் வாங்குவார் என்று நினைக்கிறேன்..

    நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  7. மிக மிக அருமை நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பதிவுலக கவிஞர்கள் மத்தியில் இந்த கலியுக கிறுக்கனையும் அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி சார்

    ReplyDelete
  9. மின்வெட்டு பிரச்சனையால் வருகை தாமதமானது..இன்றைய அறிமுகங்களில் என்னையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா..இன்றைய அறிமுகங்களில் சிலரைத் தெரியாமல் இருந்தேன்..அவர்களை அடையாளங் காட்டியமைக்கும் அவர்களது கவிதைகளை படிக்க தூண்டியமைக்கும் மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  10. அழகான பல கவிதை மழைகளில் இன்று நனைந்து இன்புற்றோம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. ரசித்து கவிநடையில் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும் அருமையான பகிர்வு.

    ReplyDelete
  12. கவி மழையில் நனைந்தோம்..

    நல்ல அறிமுகங்களை கொடுத்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நீங்கள் பொறுக்கிய கிளிஞ்சல்கள் அருமை. எனக்குத் தெரிந்த பலருடன் தெரியாத சிலரையும் படித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  14. Ennai arimugap paduththiya ungalukku en manamaarntha Nanri Sir! Ithu enakku kidaiththa perum Paakkiyamaaga karuthukiren. En computer pirachinaiyaal tamilil karuthurai ida mudiya villai. Mobile moolame karuthurai ida vendiyathagivittathu. Late m ayiduchi. Nandrigal pala.

    TM 5.

    ReplyDelete
  15. அருமையான தொகுப்பு. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  16. அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
    வணக்கம்
    பதிவுலக கவிகளுள் என்னையும் இணைத்து
    வலைச்சரத்தில் ஒரு பூவாய் அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றிகள் பல. மற்ற பூக்களுக்கும் வாழ்த்துக்கள்.
    இங்கே அறிமுகமானவர்களில் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் சிலர்
    அவர்களையும் சென்ற பார்க்கிறேன் ஐயா.

    ReplyDelete
  17. என்னையும் சேர்த்து கொண்டதற்கு
    எனது நன்றியும் அன்பும்
    (வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத அன்பும் நன்றியும் அமிழ முடியாமல் உள்ளே நிறைந்திருக்கு நிறையவே ..)

    ReplyDelete
  18. நீன்ங்களும் ஜாம்பவான்தான் ரமணி.நன்றி.

    ReplyDelete
  19. நன்றி சபாபதி அவர்களே

    ReplyDelete
  20. நீங்கள் சொன்னபடியே படித்தேன் அப்பாதுரை.பொக்கிஷம்தான்.
    நன்றி.

    ReplyDelete
  21. நீங்களும் ஒரு ந்ல்ல கவிஞர்தானே.
    நன்றி தினேஷ்.

    ReplyDelete
  22. மேன் மேலும் வளர வாழ்த்துகள்.நன்றி மதுமதி

    ReplyDelete
  23. @sury
    ஐயா ,காணொளியை மிக மிக ரசித்தேன்.செய்யுளும் கவிதையாகி விட்டது உங்கள் குரலில்.ஆனால் அக் கவிதைக்கு நான் சொந்தம் கொண்டாட முடியாது.இது ஏற்கனவே வழக்கில் இருக்கும் ஒரு கவிதையே.அன்புக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  24. நன்றி லக்ஷ்மி அவர்களே.

    ReplyDelete
  25. நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  26. நன்றி துரை டேனியல்.உங்கள் கவிதைகள் பற்றிப் பேசக்கிடைத்ததற்கு நான் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  27. மகேந்திரன்,கவிதை பற்றிப் பேசும்போது நீங்கள் இல்லாமலா?
    நன்றி.

    ReplyDelete
  28. வேல்கண்ணன்,
    உங்கள் கவிதை பற்றிச் சொன்னதில் எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  29. மிக அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  30. வெண்பா கவிபடக்கும்
    வித்தகரே! பித்தரே!
    ஒண்பா பாடியதும்
    உன்னதமே இலக்கணமும்
    தன்பால் அமைந்துவிட
    தமிழன்னை மகிழ்ந்துவிட
    பண்பால் உயர்தென்னைப்
    பாராட்டி பதிவிட்டீர்

    நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. வெண்பா கவிபடக்கும்
    வித்தகரே! பித்தரே!
    ஒண்பா பாடியதும்
    உன்னதமே இலக்கணமும்
    தன்பால் அமைந்துவிட
    தமிழன்னை மகிழ்ந்துவிட
    பண்பால் உயர்தென்னைப்
    பாராட்டி பதிவிட்டீர்

    நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. காலையில் இருந்து இதுவரை
    மின்தடை!
    கால தாமதம்! மன்னிக்க!

    த ம ஓ 8

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. அருமையான கவிதை மழையில் நனைந்தோம்....

    ReplyDelete
  34. ரமணீயமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  35. வணக்கம் ஐயா. பயணத்தில் இருந்ததால் தங்களது மின் அஞ்சலை இன்று தான் படிக்க முடிந்தது. வலைச் சரத்தில் எனது கவிதைப் பக்கத்தையும் (www.oorsuththi.blogspot.com) பகிர்ந்து கொண்டமைக்கு அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும்.

    நேசத்தின் நெகிழ்வில்
    சரவணன்.

    ReplyDelete