Thursday, January 19, 2012

நாள் 4 டிராவல்ஸின் அடாவடியும் பதிவுகள் அறிமுகமும்

சாதாரணமாக திருவாரூரிலிருந்து சென்னை வர டிராவல்ஸ் பஸ்ஸில் 300ரூபாய் டிக்கெட் வாங்குவார்கள். நேற்று நான் 600 ரூபாய் கொடுத்து சென்னை வந்தேன். சாதாரணமாக என் காரில் 500ரூபாய்க்கு பெட்ரோல் சென்னையிலும் 500ரூபாய்க்கு பாண்டியிலும் பெட்ரோல் போட்டால் சென்னையிலிருந்து திருவாரூர் வந்து விடுவேன். என்னையும் என் மனைவியும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுக்கு400ரூபாய் ஏன் தண்டம் பண்ணனும் என்று நினைத்து பஸ்ஸில் வந்தால் அதை விட அதிகமாக புடுங்குகிறான்கள். எல்லாம் நம்ம நேரம். நானாவது பரவாயில்லை. இந்த காசை கொடுக்க முடியாமல் அரசுப்பேருந்துக்காக காத்திருந்த எவ்வளவோ பேரை நேற்று நான் திருவாரூர் பேருந்து நிலையத்தில் கண்டேன். அவர்களெல்லாம் எவ்வாறு சென்னை வந்து சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது வாழ்க ஜனநாயகம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

---------------------------

பேருந்து நிலையத்தில் அடாவடி தாங்க முடியவில்லை. சென்னையிலிருந்து ஊருக்கு போகும் போது நேரமாகி விட்டதால் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் என் பைக்கை பார்க் செய்து விட்டு சென்றிருந்தேன். நான் விட்ட நாளிலிருந்து கணக்கு செய்தால் ஒரு நாளைக்கு 20ரூபாய் வீதம் 120ரூபாய் தான் ஆனது. ஆனால் இவர்கள் ஏதோ கணக்குப் போட்டு 160 ரூபாய் கேட்டார்கள். நான் என் மனைவியுடன் நின்று சண்டை போட தயக்கமாக இருந்ததால் கேட்ட காசை கொடுத்து விட்டு நகர்ந்தேன். எவன்தான்டா இவனுங்களையெல்லாம் கேக்கிறது.

-------------------------

பதிவுகள் அறிமுகம்

தெட்சிணா என்ற பதிவரின் பதிவுகள் மிகவும் புரட்சிகரமாக இருக்கிறது. இவர் நான் தமிழன் கட்சியின் அபிமானி என்று நினைக்கிறேன். இவரின் டாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை , மற்றும் லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! , மற்றும் மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம்

வீடு சுரேஸ் குமார், இவர் புதிய பதிவர் அல்ல, எனது பதிவுலக நல்ல நண்பர். அவரது இடுகைகளும் கவனிக்கத்தக்கவை. நான் எழுதாவிட்டாலும் அவருக்கென்று பதிவுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது. இவரின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியும் தமிழனின் கோவணத்தை உறுவும் தந்திரமும் என்ற பதிவு குறிப்பிடத்தகுந்தது.

இப்படிக்கு இளங்கோ என்ற பெயரில் எழுதும் இளங்கோ அவர்களின் சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men ) என்ற உலகப்பட விமர்சனம் நன்றாக இருந்தது.


Chilled Beers என்ற பெயரில் எழுதி வரும் பதிவர் பல்சுவைகளில் கலக்குகிறார்.
செம ஹாட்டாக ஹன்சிகா, குஷ்பூ பற்றியெல்லாம் எழுதி ஈர்க்கிறார் அதேமாதிரி மதுரக்காரைங்க சினிமா என்ற பதிவில் சினிமாக்காரங்க அடிக்கும் லொள்ளைப் பற்றி எழுதியுள்ளார். ஒஸ்தி, மெளனகுரு என்று சமீப சினிமாக்களுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அதே சமயம் சாருவின் எக்சைல், வெற்றிலைக்கு அந்த வாசம் வந்த கி.ராவின் கதை என்று இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறார். இவர் எழுத்தைப்பார்த்தால் இவர் அறிமுகப்பதிவர் அல்ல என்றும் பழைய பதிவர் புதிய பெயரில் வந்து விளையாடுகிறார் என்றும் தோன்றுகிறது. இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நமது பிலாசபி பிரபாகரன் அவர்கள்.

ஆரூர் மூனா செந்தில்

15 comments:

  1. ஆக பதிவுலகப் பயணம் நல்லபடியாக நடக்கிறது. அறிமுகங்கள் அருமை... 1.

    ReplyDelete
  2. NIZAMUDEEN said...
    ஆக பதிவுலகப் பயணம் நல்லபடியாக நடக்கிறது. அறிமுகங்கள் அருமை... 1.

    ஆம் நன்றி நஜிமுதீன்.

    ReplyDelete
  3. விழாக் காலங்களில் இந்த ஆம்மினி
    பேருந்துகளில் அடிக்கும் கொள்ளை
    சொல்லி மாளாது
    இது யார் ஆட்சிக்கு வந்தாலும்
    மாறாத ஒன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. /// புலவர் சா இராமாநுசம் said...
    விழாக் காலங்களில் இந்த ஆம்மினி
    பேருந்துகளில் அடிக்கும் கொள்ளை
    சொல்லி மாளாது
    இது யார் ஆட்சிக்கு வந்தாலும்
    மாறாத ஒன்று!

    புலவர் சா இராமாநுசம் ///

    ஆமாம் ஐயா.

    ReplyDelete
  5. அறிமுகத்திற்கு நன்றி! செந்தில் அனைத்து பதிவர்களையும் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்....

    ReplyDelete
  6. நல்ல அறி முகங்கள் அனைவருக்கும்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எப்படியோ சென்னை வந்து பதிவு போட்டாச்சு... ஓகே...

    ReplyDelete
  8. /// veedu said...
    அறிமுகத்திற்கு நன்றி! செந்தில் அனைத்து பதிவர்களையும் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்....///

    நன்றி சுரேஸ். கண்டிப்பாக படியுங்கள்.

    ReplyDelete
  9. /// Lakshmi said...
    நல்ல அறி முகங்கள் அனைவருக்கும்வாழ்த்துகள் ///

    நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete
  10. /// தமிழ்வாசி பிரகாஷ் said...
    எப்படியோ சென்னை வந்து பதிவு போட்டாச்சு... ஓகே... ///

    ஆமாம் பிரகாஷ், பொங்கலுடன் சேர்ந்து வந்ததால் பல கட்டுப்பாடுகளுடன் வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று. இல்லையேல் முதல் நாளிலிருந்தே சுறுசுறுப்பாக வேலை துவங்கியிருக்கும்.

    ReplyDelete
  11. பேருந்தில் பயணம் செய்யவேண்டுமென்றால் இப்பொழுதெல்லாம் அம்பானி சகோதர்ரகள் ரேஞ்சுக்கு வாழ்க்கைத்தரம் இருந்தால்தான் முடியுமென்ற நிலை வந்துவிட்டது சகோ.

    எங்கே...செல்லும் இந்த பாதை(விலைவாசி நாட்டுநடப்பு)...தமிழ்நாட்டு மக்களில் பாதிப்பேரை சேது விக்ரம் நிலைக்கு மாற்றாமல் விடமாட்டார்கள் ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. என் வலையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் சார்!

    ReplyDelete
  13. /// கடம்பவன குயில் said...
    பேருந்தில் பயணம் செய்யவேண்டுமென்றால் இப்பொழுதெல்லாம் அம்பானி சகோதர்ரகள் ரேஞ்சுக்கு வாழ்க்கைத்தரம் இருந்தால்தான் முடியுமென்ற நிலை வந்துவிட்டது சகோ.

    எங்கே...செல்லும் இந்த பாதை(விலைவாசி நாட்டுநடப்பு)...தமிழ்நாட்டு மக்களில் பாதிப்பேரை சேது விக்ரம் நிலைக்கு மாற்றாமல் விடமாட்டார்கள் ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறேன்.///


    அதென்னமோ சரி தான், தங்களின் கருத்துக்கு நன்றி கடம்பவனக்குயில்

    ReplyDelete
  14. /// Chilled beers said...
    என் வலையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் சார்! ///

    சார் சொன்னதுக்கு நன்றி சார் (சும்மா)

    ReplyDelete
  15. பதிவு அறிமுகத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete