மக்களே வணக்கம், அனைவரும் என்னை மன்னிக்கவும். நேற்று என்னால் இணையத்திற்கு வரமுடியவில்லை. சென்னையில் இருந்தால் நான் பொதுவாக ஒரு நாளில் குறைந்தது 15 மணிநேரம் இணையத்தில் இருப்பேன். பொங்கல் பண்டிகைக்காக நான் திருவாரூர் வந்துள்ளேன். இங்கு நான் எனது கடைக்கோ, கடை திறக்காத நாட்களில் பிரவுசிங் சென்டருக்கோ சென்று தான் இணையத்தில் வருவேன். நேற்று என் தம்பியின் திருமண விஷயமாக பெண் வீட்டார் எங்களது வீட்டிற்கு வந்து விட்டனர். எனவே நேற்று முழுவதும் நான் வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம். இன்றும் ஒரு பதிவு மட்டுமே. இன்றிரவு புறப்பட்டு நாளை சென்னை சென்று விடுவேன். நாளை முதல் நமது பக்கம் களைகட்டும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
பொங்கலெல்லாம் நல்லபடியாக இருந்திக்கும் என்று நினைக்கிறேன். நான் கிராமத்தான். எங்கள் வீட்டில் பொங்கல் மற்றும் இதர மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தான் மற்ற விஷேசங்களை விட சிறப்பாக இருக்கும். அதிலும் மாட்டுப் பொங்கலன்று எங்கள் வீட்டு மாடுகளையெல்லாம் சிறப்பாக குளத்தில் குளிப்பாட்டி விட்டு நாங்களும் அவற்றுடன் நீந்தி விளையாடி விட்டு மாட்டின் கொம்புகளுக்கு வர்ணமடித்து மாலைகள் சூட்டி ஊரில் உள்ள மற்ற மாடுகளுடன் ஊர்வலம் நடத்தி அவற்றுக்கென பிரத்யேகமாக செய்யப்பட்ட பொங்கலை படைத்து விட்டு மாட்டுக்கு சாப்பிடக் கொடுப்போம். அதற்குள் எங்கள் வீட்டில் அன்றிறவு எங்கள் தாத்தாவுக்கு படைப்பதற்காக அனைத்து வகை அசைவங்களையும் சமைத்திருப்பர். மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், கருவாடு, காடை, பயிறு பாயசம், முருங்கைக்கீரையுடன் எங்கள் தாத்தாவுக்கு மிக்வும் பிடித்த சார்மினார் சிகரெட், ஒரு குவாட்டர் ஆகியவற்றை படைத்து நாங்கள் சாப்பிட்டோம். ஆகா மீண்டும் அடுத்த மாட்டுப்பொங்கலுக்காக காத்திருக்கும் அளவுக்கு இருக்கும் அந்த விருந்து.
--------------------------------------------------
இன்று கவிதைப் பதிவுகள்
முதலாக எனது மதிப்பிற்குரிய அண்ணன் திரு. கேஆர்பி அவர்களின் அவர்களுக்கு வீடென்று எதுவும் இல்லை. அடுத்த கவிதை பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?). அடுத்த கவிதை மழை நாட்கள்...
மதிப்பிற்குரிய பெரியவர் புலவர் ராமனுசம் அவர்களின் எத்தனை காலம் ஆனாலும் !, அடுத்ததான என்றும் இளமை குன்றா மொழியே. அடுத்த கவிதையான மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே.
சாய்ராம்ஸின் கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்.
குருசு சாக்ரடீசின் உள்ளங்கை தீவுகள்.
பாலகுமாரின் கந்தழி வட்டப்புள்ளி (அ) தனித்திருப்பவன் காமம்.
ரியாஸின் மழலையாகிறேன்..!
ராஜா சந்திரசேகரின் மழையில்.
நாகேந்திர பாரதியின் வயதும் வருடமும்.
நன்றி.
ஆரூர் மூனா செந்தில்
ரைட்டு.
ReplyDeleteதாத்தாவுக்கு படைத்த குவார்டரை காலி செய்தது யாரு?
ரைட்...ட்டு.
ReplyDeleteநாக்கில் நீர் ஊறும் நல்ல படைப்பு.
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் அறிமுகப்படுத்திய வருக்கும்வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது வாழ்த்துகள். அறிæமுகங்களிற்கும் வாழ்த்துகள். சகோதரா....
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
/// மோகன் குமார் said...
ReplyDeleteரைட்டு.
தாத்தாவுக்கு படைத்த குவார்டரை காலி செய்தது யாரு ///
ஹி ஹி ஹி அது எங்க அப்பா அண்ணே.
/// அப்பாதுரை said...
ReplyDeleteநாக்கில் நீர் ஊறும் நல்ல படைப்பு
///
நன்றி அப்பா துரை.
/// Lakshmi said...
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் அறிமுகப்படுத்திய வருக்கும்வாழ்த்துகள்
///
நன்றி லட்சுமி அம்மா.
/// kavithai (kovaikkavi) said...
ReplyDeleteமிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது வாழ்த்துகள். அறிæமுகங்களிற்கும் வாழ்த்துகள். சகோதரா....
வேதா. இலங்காதிலகம்
///
நன்றி வேதா.
//NIZAMUDEEN said...
ReplyDeleteரைட்...ட்டு.//
எனக்கு நன்றி தேவை......யில்லை!!!
அன்பின் இனிய சகோ!
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும்
அறிமுகப் படுத்தி யுள்ளதை இன்று
தான் கண்டேன்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அன்பின் இனிய சகோ!
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும்
அறிமுகப் படுத்தி யுள்ளதை இன்று
தான் கண்டேன்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
/// NIZAMUDEEN said...
ReplyDelete//NIZAMUDEEN said...
ரைட்...ட்டு.//
எனக்கு நன்றி தேவை......யில்லை!!! ///
அப்படியில்லை நஜிமுதீன் டெம்ப்ளேட் கமெண்டாக இருந்தால் அது கண்டிப்பாக கடமைக்கு தான் இருக்கும். வெறும் என்ட்ரி பின்னூட்டம் அவசியமில்லை. ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நன்றாக இருந்தால் நிஜமாக பாராட்டுங்கள். மற்றப்படி தங்களின் பின்னூட்டத்திற்கு கடமையென பதிலளிக்க விரும்பிவில்லை.
/// புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஅன்பின் இனிய சகோ!
வலைச்சரத்தில் என்னையும்
அறிமுகப் படுத்தி யுள்ளதை இன்று
தான் கண்டேன்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம் ///
அய்யா, ஒரு சிறு திருத்தம். நான் தங்களை அறிமுகப்படுத்தவில்லை. அந்த அளவு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. நான் ரசித்த தங்களின் கவிதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே. மற்றபடி தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.