நாம் எழுதிய நன்றாக ரசிக்கப்படும் என்று நாம் எழுதிய சில பதிவுகள் சில சமயம் வெத்து வேட்டாக போவதுண்டு. அது போல் நான் ரசித்து சிலாகித்து எழுதியவை சில, அவை என் பதின் வயதுகளில் என்னுடைய குறும்புகளின் தொகுப்பாக இருக்கும்.
ஒரு முறை என் பெரியம்மா வீட்டுக்கு போய் திருவிழாவுக்காக ஒரு கிராமத்திற்கு வாங்கி வந்த பரபரப்பான பல்பு. ஆனால் அது அதிக பதிவர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது.
பிறகு ஏதோ ஒரு தலைவரின் கடைசி நாளை எழுதப்போக அது நன்றாக மற்ற பதிவர்களால் கவனிக்கப்பட்டு அதன் பிறகு மாதம் 10 தலைவர்களின் கடைசி நாட்களை எழுதி வருகிறேன்.
அதன் பிறகு திரை விமர்சனங்கள். எப்பொழுதும் சிபி அண்ணன் தான் முதல் விமர்சனத்தை எழுதுவார். ஆனால் நான் சென்னையில் இருப்பதால் சில பெரிய படங்களுக்கு சிறப்புக்காட்சிகள் அதிகாலையிலேயே நடக்கும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு எழுதிய சினிமா விமர்சனங்கள் தான் அதிக ஹிட்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
ஆரூர் மூனா செந்தில்
@
ReplyDeleteபிறகு ஏதோ ஒரு தலைவரின் கடைசி நாளை எழுதப்போக அது நன்றாக மற்ற பதிவர்களால் கவனிக்கப்பட்டு அதன் பிறகு மாதம் 10 தலைவர்களின் கடைசி நாட்களை எழுதி வருகிறேன்.
@
அது எப்படி தலைவர்களின்அருகில் இருந்து பார்த்தீர்களா
அத்தனையும் காபி பேஸ்ட் பதிவுகள் அதில் என்ன பெருமை உங்களுக்கு
வலைச்சரம் எழுத ஒரு தகுதியிருக்க வேண்டும் அது உங்களிடம் இல்லைஎன்று நினைக்கிறேன்.
திரைவிமர்சனம் எழுதிவிட்டால் பெரிய பதிவராக எடுத்துக்கொள்ள முடியாது
@
ReplyDeleteநாம் எழுதிய நன்றாக ரசிக்கப்படும் என்று நாம் எழுதிய சில பதிவுகள் சில சமயம் வெத்து வேட்டாக போவதுண்டு.
@
வெத்துவேட்டு என்று தாங்களே ஒத்துக்கொள்ளும்போது அது அப்படித்தான் இருக்கும்போல
குறிப்பிட்டு சொல்ல ஒரு பதிவுக்கூட இல்லையென்றால் மிகவும் கேவலம் முதலில் நல்லபதிவுகொடுங்கள் அதன்பிறகு மற்ற பதிவர்களை அறிமுகம் செய்யலாம்
பதில்சொல்லுங்க செந்தில்
ReplyDeleteகடைசி நாள் பத்தி எழுதுறீங்களா? வித்தியாசமான ஐடியா. அவசியம் படிக்கிறேன்.
ReplyDeleteஇது அனேகமாக அனைவருக்கும் ஏற்படுவதுதான்.
ReplyDeleteபுதிய ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.
ReplyDelete///யாருக்கும் பயப்படாதவன்... said...
ReplyDeleteஅது எப்படி தலைவர்களின்அருகில் இருந்து பார்த்தீர்களா
அத்தனையும் காபி பேஸ்ட் பதிவுகள் அதில் என்ன பெருமை உங்களுக்கு
வலைச்சரம் எழுத ஒரு தகுதியிருக்க வேண்டும் அது உங்களிடம் இல்லைஎன்று நினைக்கிறேன்.
திரைவிமர்சனம் எழுதிவிட்டால் பெரிய பதிவராக எடுத்துக்கொள்ள முடியா ///
தற்பொழுது நான் என் ஊரான திருவாரூரில் இருக்கிறேன். நேற்று என் தம்பியின் திருமண விஷயமாக பிஸியாக இருந்ததால் இணையத்திற்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும்.
இப்ப உங்களுக்கு மட்டும் பிடிக்கிற மாதிரி எழுத நான் என்ன உங்க பொண்டாட்டியா. எல்லாருடைய எழுத்தும் எல்லோருக்கும் பிடிக்கனும்கிற கட்டாயமில்லை. பலருக்கு பிடிக்கலாம். உங்களைப்போல் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பலருக்காக மட்டுமே நான் எழுதுகிறேன்.
அது மட்டுமில்லாமல் வரலாறு என்பதே இதற்கு முன் நடந்த சம்பவங்களே. அதில் கற்பனைகளை சேர்த்து எழுத நான் என்ன முட்டாளா. எனக்கு தெரியும் நான் நேர்மையாகத்தான் எழுதுகிறேன். தரவரிசையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பலருடைய பதிவுகளுக்கு சென்று அவசியமற்ற பின்னூட்டங்களை இடுவதோ ஒட்டுக்களை போடுவதோ, அதற்கு பலனாக நான் ஒட்டுக்களையும், பின்னூட்டங்களையும் எதிர்பார்ப்பவனுமில்லை. எனக்கு பிடித்த பதிவுகளில் மட்டுமே நான் பின்னூட்டமிடுவேன்.
நான் எனக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன். தங்களின் கருத்தைப்பற்றி எனக்கு கவலையுமில்லை, பயமுமில்லை. எனினும் தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே. மேலும் பின்னூட்டங்களை இட எனது வலைத்தளத்திற்கும் வரலாமே.
/// அப்பாதுரை said...
ReplyDeleteகடைசி நாள் பத்தி எழுதுறீங்களா? வித்தியாசமான ஐடியா. அவசியம் படிக்கிறேன் ///
கண்டிப்பாக படியுங்கள் அப்பாதுரை.
// விமலன் said...
ReplyDeleteஇது அனேகமாக அனைவருக்கும் ஏற்படுவதுதான் ///
கருத்துக்கு நன்றி விமலன்.
/// Lakshmi said...
ReplyDeleteபுதிய ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள் ///
வாழ்த்துக்கு நன்றி லட்சுமி அம்மா.