Monday, January 16, 2012

வலைச்சரத்தில் ஆரூர் மூனா செந்திலாகிய நான் இன்று முதல்.

சக பதிவர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்கும் நான், இந்த பொறுப்பிற்கு என்னை பரிசீலித்து நியமனம் செய்த அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும், திரு. தமிழ்பிரியன் அவர்களுக்கும், சகா. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். திமுகவினருக்கு மட்டும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (துவங்கியவுடனே உள் குத்தா).

இன்று என்னைப் பற்றிய சுய அறிமுகம் என்று சொன்னார்கள். எனக்கெல்லாம் தேவையா என்று நினைத்தாலும் பெரியோர்களுக்காக அவையடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

என் இயற்பெயர் செந்தில் குமார். கடந்த ஒரு வருடமாக தோத்தவன்டா என்ற வலைப்பதிவை ஆரூர் மூனா செந்தில் என்ற பெயரில் நடத்தி வருகிறேன். இதனால் எனக்கு கிடைத்த பலன் அறிவு சார் நண்பர்கள் மட்டுமே.

எனது பூர்வீகம் திருவாரூர். பிழைக்க சென்னை. ஆனால் என் அப்பாவுக்கு பூர்வீகம் பட்டுக்கோட்டை. பிழைக்க திருவாரூர். சரி என் பாட்டனாரை எடுத்துக் கொணடால் பூர்வீகம் திருக்காட்டுப்பள்ளி, பிழைக்க பட்டுக்கோட்டை. முப்பாட்டனார் நீடாமங்கலம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் பிழைக்க வந்தது திருக்காட்டுப்பள்ளிக்கு. இதனால் என்ன தெரிகிறது என்றால் யாருடைய பூர்வீகத்தை எடுத்துக் கொண்டாலும் இரு தலைமுறைகளுக்கு மேல் ஒரே ஊராக இருந்திருக்க வாய்ப்பில்லை. (போதும்டா மொக்கை என்பவர்களுக்காக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.)

நான் திருவாரூரில் உள்ள வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவன். பட்டயப்படிப்பிற்காக சென்னையில் உள்ள ஐசிஎப்பில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து முடித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக 10 வருடம் வேலை பார்த்தவன். தற்போது ரயில்வேயில் பொறியாளராக பணியில் சேர இருக்கிறேன்.

நாளை முதல் இரண்டு பாராவாக எழுத இருக்கிறேன். முதல் பாரா என்னுடைய பதிவு, இரண்டாவது பாரா புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகம். தினம் ஒருவராக அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

ஆரூர் மூனா செந்தில்.

23 comments:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் செந்தில் !

    என்னது தினம் ஒரு பதிவர் அறிமுகமா? ஒரு வாரம் எழுதி மொத்தம் ஏழு பேரை தான் அறிமுக படுத்துவீன்களா?

    சீனா சார்.. வலை சரம்னா என்ன என செந்திலுக்கு சொல்லி குடுங்க.

    ReplyDelete
  3. பொங்ல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நண்பரே, பெரிய ஆளாயிட்டீங்க !
    பொங்ல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள் செந்தில்.உங்கள் அறிமுகங்களுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  7. வெல்கம் செந்தில். வலைச்சரத்தில் நல்ல மாலை தொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அறிமுகங்களைக் காண காத்திருக்கேன்.

    ReplyDelete
  8. /// இராஜராஜேஸ்வரி said...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ///

    நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே.

    ReplyDelete
  9. /// மோகன் குமார் said...

    வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் செந்தில் !

    என்னது தினம் ஒரு பதிவர் அறிமுகமா? ஒரு வாரம் எழுதி மொத்தம் ஏழு பேரை தான் அறிமுக படுத்துவீன்களா?

    சீனா சார்.. வலை சரம்னா என்ன என செந்திலுக்கு சொல்லி குடுங்க. ///

    அப்படியல்லண்ணே, தினம் ஒரு பதிவர் அவருடைய பல பதிவுகள் அப்படி அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன். பிரகாஷ் அதை பற்றி விவரித்ததும் அது போல் செய்கிறேன் அண்ணே.

    ReplyDelete
  10. /// கோவி.கண்ணன் said...

    பொங்ல் நல்வாழ்த்துகள் ///
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் கோவி கண்ணன்.

    ReplyDelete
  11. /// ஷர்புதீன் said...

    நண்பரே, பெரிய ஆளாயிட்டீங்க !
    பொங்ல் நல்வாழ்த்துகள் ///

    நன்றி அண்ணே.

    ReplyDelete
  12. /// சென்னை பித்தன் said...

    வாழ்த்துகள் செந்தில்.உங்கள் அறிமுகங்களுக்குக் காத்திருக்கிறேன். ///

    கண்டிப்பாக அய்யா.

    ReplyDelete
  13. /// மகேந்திரன் said...

    வாழ்த்துகள் நண்பரே. ///

    வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  14. /// கணேஷ் said...

    வெல்கம் செந்தில். வலைச்சரத்தில் நல்ல மாலை தொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அறிமுகங்களைக் காண காத்திருக்கேன். ///

    கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete
  15. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியரான தங்களுக்கு
    முதற்கண் வாழ்த்தும்,அத்துடன்
    புத்தாண்டு+பொங்கல் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. //திமுகவினருக்கு மட்டும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (துவங்கியவுடனே உள் குத்தா)//

    வெளிக்குத்தை உள்குத்து என்று சொன்னதில் ஏதேனும் உள்குத்து உள்ளதா?

    ReplyDelete
  19. வணக்கம்! வழக்கம் போல குறும்பாகவே தொடங்கி விட்டீர்கள். தஞ்சை மண்ணுக்கே உரிய வால்தனம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. உங்க இஷ்டம் போல எழுதுங்க செந்தில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் , உங்கள பற்றியும் உங்க்ள் கொள்ளு தாத்தா பற்றியும் அறிமுகமா??

    ReplyDelete