யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
1. காதழியம்
கண்களை மூடிக்கொள்ளுங்கள்,
இவர் கவிதை படிக்கும்போதல்ல....!படித்தபின்...
அப்பொழுதுதான்
அவிழ்த்து விட்ட கூந்தலின்
அவிழ்ந்து விழுந்த கனவுகளின்
சுகந்தமான மனம் தெரியும்
2. நீ அறிவாயா..?
மோகனனின் கவிதைகள்
காதலியைப் பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்கிறார்....அழகான மழலைகள்
3. தூறல்
கவிதையை சிந்தித்ததை
அழகாக விளக்கி
மரங்கொத்தி சிரிப்பு
என்று பதிவிட்டு இருக்கிறார்
அழகான மழைச் சாரல்
நீங்களும் நனைந்து பாருங்கள்
4.இணைய வானத்தில் பகல் நிலா என்கிற வலையில்
காதலியின் பெயரை பிழையாக எழுதிய சிறுமியை
திருத்துகிறார்...இந்த வானில் என்னற்ற நட்சத்திரங்கள்.
(Wordpress)
5. குகன் பக்கங்கள்
காதலியுடன் சதுரங்கம்
விளையாடும் போது
திணறுவது படைகள் மட்டுமா?
உங்கள் மனதின்
பக்கங்களுமா?
6.வசந்த மண்டபத்தின் துளையில்லா புல்லாங்குழல் மனதை பிசையும் இசை வாசிக்கின்றது.....இது தன்னம்பிக்கையின் தனல் தனியாது,
இவரின் கவிதையில் விடுகதை சிறந்த முயற்சி!
7.தோழிஅருள்மொழி பல சமூகம்,காதல், என அனைத்தையும் அலசும் வலை தென்காசிபைங்கிளி. இவருடைய கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...தேவதையின் பிச்சை நிதர்சனத்தை கூறுகிறது.
8.குடும்பங்கள் இங்கே இருக்க குழந்தைகளை பிரிந்து இருக்கும் வேதனை சொன்னால் புரியாது,மகளை பிரிந்து வெளிநாட்டில் வாழும் தந்தையின் பாசம்
என்னுள் கண்ணீரை வரவழைத்தது நிசம்,கவிதையாக இந்த அருவாளுக்குள் இருக்கும் பாசம் வெளிப்படுத்தியது.
9.மாலதியின் பக்கங்கள் விழிப்புணர்வு சமூக அக்கறை என்று பன்முகங்களில் கவிதை வடிப்பவர்,இவரின் மலட்டு விதை மான்சேன்டோ ஒரு உதாரணம்
10.ஒரு பெண்ணின் வாழ்வு திருமண பந்தம் என்பது வேறோடு பிடிங்கி நடும் மரம் போன்றது, என்பதை விளக்கிய கவிதை. இது என்னை பாதித்த கவிதை!
11.வள்ளுவர்vsஜொள்ளுவர் என்று திருக்குறளுக்கு புது விளக்கம் தந்த நம்ம லொள்ளுவர், மயில் மனிதர்களின் மருத்துவர், மனம் பிடிக்கும் கவிஞர்,
மயிலிறகு தமிழின்பம் மட்டுமல்ல, விழியின்பமும் தரும், இரசித்த புகைப்படங்களில்!
12.ரிஷ்வன் கவிதை துளிகள் திருக்குறளை கவிதைவடிவில் தருகிறார் நல்ல முயற்சி.
13.ரமணி அவர்கள் பட்டவைகள் துளிர்க்க...கவிதையில், பழகபழக பாலும் புளிக்கும் என்பதை சொல்கிறார்..சிந்திக்க வைக்கின்றது.
வணக்கம் நண்பர்களே! இது நீங்கள் படித்தவைகளாக கூட இருக்கலாம், ஆனாலும் நான் இரசித்தது நன்றி!
இனிய காலை வணக்கம் நண்பா,
ReplyDeleteகவி நடையில் இனிய அறிமுகம். ஏலவே இங்கே மலரும் நண்பர்கள் அறிமுகமானவர்கள் என்றாலும், உங்கள் அறிமுகத்தினூடாகப் படிப்பதிலும் ஓர் ஆனந்தம்!
நன்றி!
வள்ளுவர், ஜொள்ளுவர் ரொம்பவுமே வித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteExample.com to Example.in ஆக மாறியதால் தமிழ்மணம் இணையவில்லை யாராவது பதிவிடுங்கள் இதை எப்படி சரி செய்வது என்று நன்றி!
ReplyDeleteநிரூபன் காலை வணக்கம் வருகைக்கு மிக்க நன்றி....
ReplyDeleteதாங்கள் என்னை கௌரவபடுத்தியதற்க்கு நன்றி....ரிஷ்வன்... www.rishvan.com
ReplyDeleteveedu said...
ReplyDeleteExample.com to Example.in ஆக மாறியதால் தமிழ்மணம் இணையவில்லை யாராவது பதிவிடுங்கள் இதை எப்படி சரி செய்வது என்று நன்றி!//
எனக்குப் புரியலையே..
வலைச்சரம் தனியான ப்ளாக் முகவரியில் தானே இயங்குகிறது.
அறிமுகங்களை கவிதை நடையிலேயே அறிமுகப்படுத்திய விதம், அருமை சுரேஸ்.
ReplyDeleteகலக்கலா அறிமுகப்படுத்துறீங்க...நடத்துங்க வாழ்த்துக்கள் மாப்ள!
ReplyDeleteஅன்பின் சுரேஷ் குமார் - தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் - தமிழ் மண வலது பக்கத்தில் வருகிறது. ஓட்டுப்பட்டை வர வில்லை. பார்க்கலாம். அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார் - நட்புடன் சீனா
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கும்
ReplyDeleteநல்ல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து வலைகளுமே அருமை,ஒரு வீட்டில் தனியாக ஒரு குடும்பத்தைப் பார்க்கலாம்.ஆனால் இங்கே கூட்டுக் குடும்பத்தைப் பார்க்கிறேன்.சுரேஷ் அவர்களுக்கு நன்றி.வலைச்சரத்தைப் பற்றியும் நான் அதிகமாக அறிந்திருக்கவில்லை.இப்போது அறிந்து கொண்டேன்.நன்றி.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteவணக்கம் நண்பரே..
ReplyDeleteகவிதை மன்னர்கள் மத்தியில் என்னையும்
அறிமுகம் செய்தமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அறிமுகம் செய்யப்பட அனைத்து பதிவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதை சரமாக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ என்னை அறிமுகம் செய்ததற்க்கு...ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..தொடருங்கள் உங்களுக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteகவிதை அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteதாங்கள் என்னை கௌரவபடுத்தியதற்க்குமனமார்ந்த நன்றி
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி..