Wednesday, February 1, 2012

பதிவுலகில் விழிப்புணர்வு!



தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

1.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் வலைதளம் பறவைகளுக்கு
தண்ணீர் வைக்க சொல்கிறார் வீட்டுக்கு முன் பல விசயங்களை
தாங்கி நிற்க்கும் வலைதளம்.

2.ஜீவா ஓவியகூடம் வலைதளத்தில் ஒரு வடஇந்தியர்
தமிழில் கட்டுரை எழுதியதை விளக்குகிறார் தமிழ் இனி அல்ல
எப்பொழுதும் வாழும்

3அலையல்ல சுனாமி வலைப்பதிவில் டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்? இந்த கேள்வி பல நாட்களாய் நான் சிந்தித்தது இவர் விடை சொன்னார் டீசல் வாகணத்தில் பெட்ரோல் ஊற்றினால் ஏற்படும் விளைவு அனைவரும் அறிய வேண்டும் நண்பர்களே!

4.அவிழ்மடல் வலைப்பதிவில் "பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்" இதைப்படிச்சா கண்டிப்பா இரயில் பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பீங்க.

5.ஷேர் ஆட்டோ விபத்து தலைகவசம் அவசியம் உணர்த்துகிறது,அதைப்போலவே உங்கள் மெயில் முகவரி மறைப்பது எப்படி இரண்டுமே அவசியம் நண்பர்களே!

6.பாம்பு வந்தால் என்ன செய்வது? பேசுகிறேன் பேசுகிறார்

7.பேக்கரியில் இருக்கும் உணவில் கலக்கப்படும் வேதியல் பொருள்கள்,இன்று இரசாயண கலப்பு இல்லாத உணவே இல்லை என விளக்குகிறார், எங்கள் உணவு உலகம் ஆபிசர்.

8.பள்ளி கல்லூரிகளில் பயன்படுத்த யூடியூப் சேனல் அறிமுகப்படுத்துகிறார் பொன்மலர் பக்கம்

9.நூறு வயதுவரை வாழ எளிய வழி தருகிறார் மனசாட்சி,மனசாட்சியோடு இதை கடைப்பிடித்தால் கண்டிப்பாக வாழலாம்.

10.விபத்தில்லா உலகம் படைப்போம்...,மற்றும் நவீன உலகின் பெற்றோர்களே....,வாருங்கள் பதிவர்களே....,என அருமையான விழிப்புணர்வு கட்டுரையை படைத்த நாய்நக்ஸ் நக்கீரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

11.தோத்தவன்டா செந்தில் சென்னையில் விதிமுறைகளை மீறிய வணிக நிறுவனங்கள் ஒரு நல்ல அலசல், தெரிவு படுத்துவதில் கண்டிப்பாக வெற்றியடைந்துள்ளார்.

12. மருத்துவ வியாபாரம், மூலம் அந்த துறையில் அனுபவமுள்ள, சூர்யஜீவாவின் கட்டுரை, மருத்துவ உலகத்தின் உண்மைகளை ஊடறுக்கும்.

13.கோகுல் மனதில் ஹெல்மெட்க்கு விளக்கம் தந்து அனைவர் மனதிலும் விழிப்புணர்வு தந்திருக்கிறார்.

14.விவசாயி விடும் எச்சரிக்கை கவனத்தில் கொள்க, கவளம் உணவுக்கும் வழியில்லாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமார்.
*******

  • பதிவுலகில் பாராட்டுக்குறியவர்கள்


*உணவுஉலகம் சங்கரலிங்கம்*
அவர்கள் விழிப்புணர்வு மாநாட்டில் உரையாற்றியது பதிவுலகில் இருக்கும் சக பதிவர்க்கு கிடைத்த அங்கீகாரம் நமக்கு பெருமையும் கூட....

*கவிதை வீதி சௌந்தர் அவர்கள்*
பன்னிரண்டு ஆண்டுகள் ஊர் காவல் படையில் உதவி படைபிரிவு தளபதியாக இருந்து நம்மோடும், பீடு நடை போடுகிறார்.

*மதுமதி அவர்கள்*
சினிமாவில் கவிஞராகவும், சிறந்த எழுத்தாளருமான எங்கள் கொங்கு நாட்டின் புதல்வர் தூரிகையின் தூரல் வலைதளத்தின் சொந்தக்காரர் .

********

17 comments:

  1. மாப்ள திறம்பட உங்க வலைச்சர பதிவில் நெறய பதிவர்களை பகிருகிறீர்கள் நன்றி!

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சுரேஷ். நானும் கவனித்துக் கொண்டு தான் உள்ளேன். பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் நீங்கள் அதிகம் உழைக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது. கலக்குவதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என்னையும் குறிப்பிட்டு காட்டியமைக்கு நன்றி வீடு...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அறிமுகபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சி - நன்றி.

    நன்றி - வீடு சுரேஷ்.

    எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பல பயனுள்ள செய்திகள் உள்ள வலைப்பூக்களை நமக்காக தேடிப்பிடித்து இங்கு கொண்டு வந்து சேர்க்கும் வலைச்சரத்தின் பணி சாதாரணமானது அல்ல.

    அவருடைய இந்த அறிவு தேடல் நமக்கு அறிவு விருந்தாகும்.

    என்னை இங்கு அறிமுகப்படுத்திய வலைச்சரம் நண்பருக்கு நன்றி.

    Tamil என்று கூகுள் இமேஜில் அடித்தால், பெரும்பாலும் நடிகைகளின் ஆபாசக் காட்சிகளே காண கிடக்கின்றன.

    இதற்கு காரணம் நாம் அதிகமான திரைப்படம் பற்றிய செய்திகளையே (உதாரணம் Tamil Actress ) என்று சேர்த்து இடும் போதும், எந்த பதிவுகள் அதிகமாக படிக்கபடுகிறதோ அதைதான் கூகுள் முதலில் இடும். ஒரு வெளிநாட்டினர் Tamil என்று நம் மொழியைப் பற்றி அறிய தேடினால் கிடைப்பதோ, தமிழைப் பற்றிய ஆவணமோ, வரலாற்று செய்திகளோ இல்லை.


    இது யார் தவறு என்பது அல்ல நம் கேள்வி. தவறைச் சரி செய்து, நம்மால் முடிந்தவரை பயனுள்ள பல செய்திகளை இட்டு நம் தமிழ் மொழியை கலைக் களஞ்சியம் ஆக்குவோம். எல்லோரும் ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்.நன்றி!

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்களுக்கு என் நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  7. கழுகின் தோழரை பற்றியும் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...



    கழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம் எனபதை நீங்கள் அறிவீர்களா? கழுகு குழுமம் என்னும் அமைப்பின் மூலம் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும், சமூகத்தில் நிகழும் விடயங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களையும் ஆதங்கங்களையும் விவாதித்து வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    நவீன அறிவியலின் மிகப்பெரிய ஊடகசக்தியான இணைய தளத்தின் மூலம் நமது ஆதங்கங்களையும் கருத்துக்களையும் எடுத்துச் சென்று மிகைப்பட்ட மனிதர்களிடம் சேர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.....நீங்கள் அதை நம்புகிறீர்களா?

    இணையப் பயன்பாட்டின் அத்தியாவசியத்தையும் அதை எப்படி பயன்படுத்துவது மற்றும் இதன் மூலம் எப்படி முழு பயனீட்டளாரக நாமும் நமது சந்ததியினரும் இருக்கலாம் என்று உங்களுக்கு அறிய விருப்பமா?

    மனிதப் பிரச்சினைகளின் மூலம் அறியாமையே...இந்த அறியாமைக்கு காரணம் முழுமையான வாழ்க்கை கல்வியும், மனிதவள மேம்பாடும் இல்லாமையே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா...?

    கழுகு இணையத்தளத்தை நீங்கள் ஒரு முறை வாசியுங்கள்....www.kazhuku.com

    இணையத்தின் வாயிலாக இங்கே குழுமியிருக்கும் நமது தமிழ் உறவுகளுக்கும், நமது நண்பர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நீங்களும் விழிப்புணர்வு கருத்துக்களை பகிர ஒருவேளை விரும்பினால்....

    kazhuhu@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்...., கழுகு குழுமத்தில் இணைய மேலதிக விபரங்களைத் தருகிறோம்...!

    எல்லா விசயங்களிலும் முழுமையான விழிப்புணர்வு பெறுவோம்......! ஒப்பற்ற உயரிய குடிமக்கள் ஆவோம்....!


    - கழுகு

    ReplyDelete
  8. வணக்கம் தோழர்..இன்றைய அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துகள்.என்னையும் சுட்டிக்காட்டி பாராட்டியமைக்கு மிக்க நன்றி..இன்னும் பல நல்ல பதிவர்களோடு இந்த வாரம் முழுவதும் சிறப்பாக வலம் வர வாழ்த்துகள்..மகிழ்ச்சி..

    ReplyDelete
  9. http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

    ReplyDelete
  10. நன்றி..திரு சுரேஷ்...

    கழுகு ஒரு விழிப்புணர்வு தளம்...
    நம் எல்லாருக்காகவும் செல்பட்டுகொண்டிருக்கிறது...

    ReplyDelete
  11. அடடே! வலைச்சரத்தில் நமக்கு இன்னொருமுறை இடமா?

    அங்கீகாரத்துக்கு மிக்க நன்றிங்கோ!

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வித்தியாசமான அறிமுகங்கள்

    ReplyDelete
  15. உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.பல அருமையான வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete