Sunday, March 18, 2012

நீயில்லாத உலகத்திலே…



ஏந்தி வருகிறாய் நீ
கைகளில்
தேனீர்க் கோப்பையையும்
இதழ்களில்
காதல் கோப்பையையும்.
எதை நான் பருகுவது...? 

என்னது இது காலையிலேயே கவிதையெல்லாம்? 

நான் என்ன பண்ணட்டும்?  நீ கையில் டீ எடுத்திட்டு வரும்போதெல்லாம் எனக்கு இதுபோல் நதிக்கரையில் வைகறை எழுதிய  தேநீர்க்கவிதைகள் தான் நினைவுக்கு வருது. எக்கச்சக்கமா எழுதியிருக்காரே. 

நீங்க இரவல் வாங்கிவரீங்களாக்கும்  

காதல் வந்தால்...

கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்!
ஆதலால் நன்றி சொல் காதலுக்கு
கண்ணே!

இதுவும் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே

கண்டுபிடிச்சிட்டியா? அழகுத் தமிழுக்கு வண்ணமடிக்கும்  முயற்சிகளில் ஒன்றா  சேகர் எழுதிய கவிதையின் ஒரு துளி இது. 

ரொம்ப அழகுதான். 

ரதி அழகா, மதி அழகான்னு  வாழ்வே பேரானந்தம் ரசிகன்கிட்ட கேட்டா, மதிதான் அழகுன்னு சொல்லிட்டு நெல்லையப்பர் கோவில் சிவனின் சிற்பத்தை சிலாகிக்கிறார். என்னைக் கேட்டால் மலர்தான் அழகுன்னு சொல்வேன்.

எந்த மலர்? 

எந்த மலரா? உன்னைத்தான்டிஆமாம். என்ன ஞாபகத்தில் இருக்கே 

நேத்து ஒரு புத்தகம் படிச்சிட்டிருந்தேன். எங்க வச்சேன்னு தெரியல. 

நீ நேத்துப் படிச்சப் புத்தகத்தைத் தேடறே? அய்யனார் விஸ்வநாத் எழுதிய கதையில் ஒரு பெண் போனவாரம் போனப் புத்தகக் கடையையே காணாமல் தேடுறா பார்.

ஞாபகத்தன்மையை மீளப்பெற முடியுமான்னு  எலியை வச்சி ஆராய்ச்சி எல்லாம் செய்றாங்களாம். மின்னல் கீற்றில் இம்ரான் ஸாகீர் எழுதியிருக்கார். அப்படி ஏதாவது செய்துதான் நினைவை மீட்கணும்போல இருக்கு. 

நீயாவது பரவாயில்லை. இங்க ஒருத்தர் தனக்கு ஞாபகமறதி இருக்கா இல்லையான்னு தெரியாமலேயே தவிக்கிற தவிப்பைத் தமிழ்த்தெருவில் .ஜார்ஜ் அழகான கதையாக்கிட்டார். 

அடப்பாவமே! நண்பர்கள் இப்படியும் இருக்காங்கபணம்னு வந்திட்டா நட்பின் நிறம் மாறும் சோகத்தை பறத்தல் பறத்தல் நிமித்தம் நிலாமகள்  அருமையான கதையில் புரியவச்சிட்டாங்க.   

பணத்தோட முக்கியத்துவம்  இப்ப பெருகிப்போச்சு. காரஞ்சன் சேஷ் எழுதியிருக்கும் கவிதையைப் படிச்சிப்பார். இந்தக் காலத்தில் பணமில்லாமல் வாழமுடியுமா?

வாழ்க்கைக்கு பணம் தேவையில்லைன்னு   வாழ்ந்து காட்டிய டோரதியோட கதையை காணொலியுடன் பகிர்ந்திருக்கார் சமரசம் உலாவும் இடமே சார்வாகன். 

பணம் இருந்தாலும் பிரச்சனை, இல்லை என்றாலும் பிரச்சனை. இருந்தும் இல்லாமல் இருந்தால்? அப்படி ஒரு பிரச்சனையை ஜெயகாந்தன் தன் கதாபாத்திரம் வாயிலாய்  என்ன செய்யட்டும் நான் அப்படின்னு கேட்கிறார் 

ஹை! ஜெயகாந்தன் கதையா? படிச்சு ரொம்ப நாளாச்சு. 

கவலையே படாதே.. அழியாச்சுடர்கள்   பக்கம் போனாகிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்கலாம். எத்தனை பெரிய சேவை 

// அப்போது எனக்கு வயது இருபது, இருபத்தியொன்று. என் உடல், மனம் சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும் வருத்தத்துடனும் புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். அவை கிறுக்கல்களாகக் கைவசம் இருந்தன. வெளியே காட்ட யோக்கியதை அற்றவை அவை. தமிழில் என்னை வெளிப் படுத்திக்கொள்வது பெரும் திணறலாக இருந்த காலம் அது. அப்போது நான் தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கவில்லை. // 

இப்படிச் சொன்னவர் ஒரு பிரபல எழுத்தாளர். தன் முதல் மொழிபெயர்ப்பு நாவலை எழுதும்போது அவருக்கிருந்த மனநிலை இது. யாருனு சொல்லு பார்ப்போம். 

எனக்குத் தெரியும். சுந்தர ராமசாமிதானே? தோட்டியின் மகன் தமிழுக்கு வந்த கதையை அவர் தளத்தில் எப்பவோ படிச்சிருக்கேன். அதிலே இருக்கும் இந்த வரிகள்.

எப்பவோ படிச்சதெல்லாம் நல்லா நினைவிருக்கேபுத்தகத்தை வச்ச இடம் மட்டும் எப்படி மறந்துபோகும்?

ஆங்இப்ப நினைவு வந்திட்டு. நேத்து பக்கத்துவீட்டுப்பெண் வந்து படிச்சிட்டுத் தரேன் அக்கான்னு வாங்கிட்டுப் போனா 

இரவல் கொடுத்திட்டியா? ஏற்கனவே குடுத்தப் புத்தகங்களோட இதையும் சேர்த்திடு. கவிதையை முன்வைத்து  வலையில் இரவல் கொடுத்தப் புத்தகத்தின்நிலையை முன்வைத்து   இந்தக் கவிதையை செல்வராஜ் ஜெகதீசன் எழுதியிருக்கார்.

 ப்ச்! கேட்கும்போது எப்படி மறுக்கிறது?  

இல்லைன்னு சொல்ல வேண்டிய இடத்தில் இல்லைன்னுதான் சொல்லணும். செல்போனுக்கு ரீசார்ஜ் பண்றதா சொல்லி எப்படியெல்லாம் ஏமாத்த முயற்சிக்கிறாங்கன்னு சாதாரணமானவள் தன் அனுபவத்தைச் சொல்லியிருக்காங்க.


சரி, நான் இனிமே எச்சரிக்கையா இருக்கேன். இப்ப டீயைக் குடிச்சிட்டு தம்ளரைத் தாங்க. 

எங்க நம்ம வாரிசுகளைக் காணோம்? 

ரெண்டும் அத்தை மாமாகிட்ட இருக்குதுங்க. இதுங்களோட இருக்கும்போது அவங்களும் குழந்தை மாதிரி ஆயிடறாங்க. பாப்பாவும் அத்தையும் நண்டு வருது விளையாட்டு விளையாடும்போது வேடிக்கையா இருக்கு. 

எத்தனை வருஷமா இந்த மாதிரிப் பாடல்களும் விளையாட்டுகளும் இருக்கு. என் வானம் அமுதா கூட இந்த மாதிரிக் குழந்தைப் பாட்டுகள் பத்தி சுவாரசியமா எழுதியிருக்காங்க. 

குழந்தைகள் உலகம் தனி உலகம். அதுக்குள் போயிட்டா வெளியில் வரது கஷ்டம். 

 // நாம் ஏதோ ஒரு கோபத்தில்/அறியாமையில் குழந்தைகளுடைய பையில் காணப்படும் அவர்களின் விளையாட்டுப் பொருட்களான சோழி, தீப்பெட்டி, சின்ன வயர், பஸ் டிக்கெட், ஆணி, ரப்பர் பேண்டு, உடைந்து போன பேனா முதலிய பலவற்றை தேவையற்றது என தூக்கிபோட்டு விடுகிறோம். நாம் தூக்கியெறிந்தது வீணான பொருட்கள் அல்ல, குழந்தைகளின் கனவுகளையும், ஆசைகளையும். //

குழந்தைகளின் உளவியலாளராய் இருந்து மரணத்தின் போதும் குழந்தைகளுடனான பிடிப்பைத் தளரவிட்டிராத  ஒரு அற்புதமான மனிதரைப் பற்றிச் சொல்லும்போது கூடம் வலையில் இராம் கோபால் இப்படி சொல்றார். 

நீங்க அடிக்கடி வெளியூர் போயிடறீங்களா? பாப்பா எப்பவும் அப்பா அப்பான்னு உங்களைப் பத்திதான் பேசுறா. அப்பாவுக்காக ஏங்கும் குழந்தையின் நிலையை  வேதா.இலங்காதிலகம் தன் கவிதையில் நெகிழ்வாக் குறிப்பிட்டிருக்காங்கஇப்படியே விட்டா முகில் சுவாதி எழுதிய எலக்ட்ரா என்றொரு பீர்பாலின் பூனைபோல் ஆயிடுவா. 

 நான் மட்டும் என்ன அங்கே சந்தோஷமாவா இருக்கேன். என் நிலையும் சிட்டுக்குருவி விமலன் எழுதினதுபோல்தான் அதுக்குதான் வீட்டிலிருக்கும்போது அளவில்லாமல் பாசத்தைக் கொட்டுறேனேபத்தாதா? 

இது நல்லா இருக்கேநாளைக்கும் சேர்த்து இன்னைக்கே சாப்பிடுங்கிற மாதிரி! 

சாப்பாடுங்கவும் நினைவுக்கு வருது. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையாச்சே! என்ன ஸ்பெஷல்? 

ம்? இன்னைக்கு சைவச்சமையல்தான். 

இப்படிப் பழிவாங்கிட்டியேடி 

காய்கறியில் அறுசுவையும் இருக்கு. அபாரமான சத்தும் இருக்கு. கலைச்சாரலில் அன்புடன் மலிக்கா எழுதியிருக்கிறதைப் படிங்க.

 அதுக்கு முன்னாடி இதமான அலைகள் யசோதா காந்த் எழுதியிருக்கிற இந்தக் கவிதையைப் படி.

ப்ச்! இப்படிக் கெஞ்சுறீங்களேபாவமா இருக்கு.. போனா போகுது. இன்னைக்கு உங்களுக்காக  KFC ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன் செஞ்சி தரேன். 

உனக்கு செய்யத்தெரியுமா? 

இன்னிக்குதான் முதல் தடவை…  சஷிகாவில் மேனகா சொல்லித்தந்திருக்கிறபடி செய்யப்போறேன். 

அப்போ... இன்னைக்கு நான்தான் சோதனை எலியா?  சும்மாசும்மா.. விளையாட்டுக்கு செல்லம்… 




என்ன நண்பர்களே... இந்த வாரம் உபயோகமா இருந்ததா?  ஒவ்வொருநாளும் தவறாமல் வந்திருந்தும் படித்தும் கருத்திட்டும் ஊக்கமளித்தும் சென்ற அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள். எனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கி, பல புதிய தளங்களையும் அறியும் வாய்ப்பை நல்கிய சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரக் குழுவினருக்கும், நம்பிக்கையோடு என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் இதயபூர்வ நன்றிகள். அடுத்துத் தொடரும் நண்பருக்கு நல்வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டு மனநிறைவுடனும் மகிழ்வுடனும் விடைபெறுகிறேன் . வணக்கம்.


இந்த மலர்களைப் போல் நம் மனமும் எப்போதும் மலர்ந்தே இருக்கட்டும்.




34 comments:

  1. இன்னும் ஒரு வாரம் கூடவே தந்திருக்கலாம் கீதா உங்களுக்கு.எத்தனை புது முகங்கள் அல்லது நாங்கள் அறியாத முகங்கள்.அருமையான வாரம் தந்த உங்களுக்கு வாழ்த்தும் நன்றியும் கீதா !

    ReplyDelete
  2. எத்தனையெத்தனை நல் அறிமுகங்கள்! ஒரு வாரப் பொழுதை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றீர்கள் கீதா! நிறைய புதிய தளங்களைப் படிக்கத் தந்த உங்களுக்கு நன்றியும், நிறைவாக ஆசிரியர் பணி செய்ததற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. உங்கள் உழைப்பு கண்டு பிரமித்துப் போனேன்
    அழகான அருமையான அறிமுகங்கள்
    துவக்கம் தொடர்ச்சி முடிப்பு அனைத்திலும்
    ஒரு திட்டம் முதிர்ச்சி கண்டு மகிழ்ந்தேன்
    அருமையான வலைச்சர வாரம் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. ஒரு வாரத்தில் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்தீர்கள். அதிலும் அதை உரையாடல்கள் போல சுவாரஸ்யமாக தொகுத்துத் தந்தது இன்னும் நன்றாக இருந்தது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அருமை.
    பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பிரமிக்க வைக்கிற உழைப்பு. சுவையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்....பல நல்ல பதிவுகள் இருக்கின்றன. அவை படிப்பவர்களைச் சென்றடைய இதை விட சிறப்பாக உதவி செய்ய முடியாது. உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    ReplyDelete
  7. வியக்கிறேன் கீதா!
    எண்ணில் பதிவர்களை வலைச்
    சரம் வாயிலாக கண்ணில் படவைத்
    துள்ளீர்
    பங்கள் உழைப்பு மகத்தானது!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. ஒரு வாரம் முழுவதும் நல்ல அறிமுகங்கள் கொடுத்த விதம் நன்று....

    சுவையான பகிர்வுகளுக்கு நன்றி....

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    ReplyDelete
  9. ஒரு வாரத்தில் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்தீர்கள். அதிலும் அதை உரையாடல்கள் போல சுவாரஸ்யமாக தொகுத்துத் தந்தது இன்னும் நன்றாக இருந்தது. மிகவும் நன்றி.

    ReplyDelete
  10. அறிமுகங்களின் பாதை அழகு..

    ReplyDelete
  11. அனைத்து அறிமுகங்களும் அருமை,என்னையும் அறிமுகப்டுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா!! ..நிறைவாக ஆசிரியை பணி செய்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. அருமையான பல அறிமுகங்களை இந்த ஒரு வாரம் முழுவதும் தந்துள்ளீர்கள்.

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் யாவும் அருமை.

    ”நீயில்லாத உலகத்திலே”
    தலைப்பும் நல்லாயிருக்கு.

    பாராட்டுக்கள்.

    அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வலைச்சர வாரத்தை சிறப்பாக செய்து விட்டீர்கள் கீதமஞ்சரி.

    எவ்வளவு உழைப்பு !

    தலைப்புகள் எல்லாம் அருமை.நிறைய புது பதிவர்கள்! பதிவுகளை எல்லாம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தாங்கள் அறிமுகப் படுத்தும் விதம் மிக அருமை! என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  16. இந்த ஒரு வாரத்தில் எத்தனை யெத்தனைப் பதிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அபரிமிதமான உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். ஆசிரியர் பணியைச் சிறப்பாகச் செய்து விடைபெறும் கீதாவுக்கு வாழ்த்துடன் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. @ சீனி,

    தொடர்ந்து வந்து ஊக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி.

    @ ஹேமா,

    உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி ஹேமா. எந்தத் தளத்துக்குப் போனாலும் உங்களது பின்னூட்டத்தைக் காணத் தவறுவதில்லை. உங்களிடமிருந்தே இப்படியொரு பாராட்டுக் கிடைத்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

    ReplyDelete
  18. @ கணேஷ்,

    ஒவ்வொரு நாளும் முதல் ஆளாய் வந்திருந்து ஊக்கம் தரும் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி கணேஷ். தங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. @ Ramani

    தங்கள் வருகைக்கும் பதிவுகளை ஊன்றிக் கவனித்து இட்ட ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  20. @ ஹாலிவுட்ரசிகன்
    தங்கள் தொடர்ந்த வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

    @ guna thamizh
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி முனைவரே.

    @ கே.பி.ஜனா
    தங்கள் வருகைக்கும் உற்சாகமானப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  21. @ புலவர் சா இரமாநுசம்,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    @ வெங்கட் நாகராஜ்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி வெங்கட்

    @ Lakshmi

    தங்கள் தொடர் வருகைக்கும் இனியப் பாராட்டுரைக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

    ReplyDelete
  22. @ irfan zarook
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.


    @ S.Menaga
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி மேனகா.

    ReplyDelete
  23. @ கோவை2தில்லி,
    தங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஆதி.

    @ வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் தொடர் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  24. @ கோமதி அரசு

    தங்கள் தொடர் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.


    @ Seshadri e.s.

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.


    @ கலையரசி,

    தங்கள் வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  25. ஜெயகாந்தனை மீண்டும் வாசிக்கத் தூண்டியதற்கு நன்றி

    ReplyDelete
  26. பலஅறிமுகங்களையும் வெளிப்படுத்திய நிறைந்த வாரம்.

    "மலர்களைப்போல் மனங்களும் மலர்ந்தே இருக்கட்டும்" என நிறைவாகச் சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.நன்றிகள்.

    ReplyDelete
  27. இந்த வாரம் பதிவுகள் பலவும் செறிவானவை. எப்பொழுதோ எழுதிய என்னுடையதையும் பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துங்கள் வளருகிறேன்.

    ReplyDelete
  28. @ Muruganandan M.K.

    தங்கள் வருகைக்கும் மகிழ்வான கருத்துக்கும் நன்றி டாக்டர்.

    @ மாதேவி,

    தங்கள் வருகைக்கும் நிறைவானப் பாராட்டுக்கும் நன்றி மாதேவி.

    @ Vijiskitchencreations
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விஜி.

    @ இராம்கோபால்,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எப்போதோ எழுதியதாயிருந்தாலும் இப்போதும் பயனுள்ளதாய் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  29. தங்கள் பணியினை மிகச்சிறப்பாகவே நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
  30. என்னையும் சக பதிவர்களையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. அன்பின் கீதா. செவ்வாய் இரவு 10.45 தங்கள் வலைச்சரம் பார்த்த போது பல அறிமுகங்களுடன் நானும் அறிமுகப் படுத்தப் பட்டது கண்டேன் மிக மிக நன்றி சகோதரி. அதை விட புது புது அறிமுகங்கள் போல தெரிகிறது. பார்க்க முயற்சிப்பேன் தங்கள் கடும் உழைப்பிற்கு நல் வாழ்த்துகள். அற்றைய அறிமுகவர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.(வலைச்சர அந்தப் பக்கம் படமாக என் முகநூல் சுவரில் போடுவேன்.)
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  32. அறிமுக‌ப்ப‌டுத்த‌லுக்கு ந‌ன்றி தோழி. ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளின் அறிமுக‌ங்க‌ளும் சுவையான‌ ப‌திவுக‌ளாயிருந்த‌ன‌. வாழ்த்துக‌ள்!

    ReplyDelete