Thursday, April 19, 2012

நான்மாடக்கூடலிலிருந்து….


ஒருமுறை டவுன்ஹால் ரோடின் உள்ளே நடந்து பாருங்கள்.உங்கள் வேலை ரீகல் தியேட்டரில் இருந்து திரும்பி ஒரு எட்டு உள்ளே நுழைவது மட்டும் தான். ஆற்றின் வேகம் போல ஜனத்திரள் தானே உங்களை அழைத்துக்கொண்டு போய் மீனாட்சி கோபுரத்தின் அருகில் சேர்த்துவிடும். அங்கும் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் வெயிலேறிய மீனாட்சிஅம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் சூடு கொதிக்கும் கல்லில் நிதானமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். - எஸ்.ராமகிருஷ்ணன்

மதுரையை அழிக்க இந்திரன் வருணன் மூலம் மேகங்களை ஏவினான். அவற்றை தடுக்க சிவபெருமான் தன் சடையில் இருந்து நாலு மேகங்களை விடுவித்தார். அந்த நான்கு மேகங்களும் நான்குமாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. இந்தக் கதை உண்மையா என்ற கேள்விகளைவிட்டு கீழ்உள்ள கேள்விகளைப் பாருங்கள். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் போது நான்கில் ஒன்று பதிலாகிறது. மற்ற மூன்றும் வேறு புதிய கேள்விகளைத் தருகிறது.

(அ) வாழ்நிலம் எந்தக்கவிஞரின் தளம்?

  1. கென்
  2. சுகுமாரன்
  3. அய்யப்பமாதவன்
  4. இசை

(ஆ) கோட் ஸ்டான்ட் கவிதைகள் யாருடையவை?

  1. தஞ்சைப்ரகாஷ்
  2. நகுலன்
  3. ஆத்மாநாம்
  4. விக்ரமாதித்தன் நம்பி

(இ) ச.தமிழ்ச்செல்வனின் தளம்?

1. தமிழில்

2. தமிழ்வீதி

3. தமிழன்வீதி

4. தமிழன்

(ஈ) மோரியுடனான செவ்வாய்கிழமைகள் குறித்த பதிவு?

  1. அங்கும்மிங்கும்
  2. பிகேபி
  3. மூன்றாம்சுழி
  4. பாரதி

(உ) கூணல் முதுகழகன் நாட்டுப்புறபாடலை வாசிக்க

  1. தமிழ்கானா
  2. வெயிலான்
  3. தாலாட்டு
  4. அகநாழிகை

(ஊ) தந்துகி யாருடைய தளம்?

  1. கோவை ஞானி
  2. ஆதவன் தீட்சன்யா
  3. ஹூசைனம்மா
  4. கவிஞர். சமயவேல்

(எ) கே.ஜே.ஜேசுதாஸ் குறித்த தளம்?

  1. பாடும்நிலா
  2. வானம்பாடி
  3. தேன்கிண்ணம்
  4. கானகந்தர்வன்

(ஏ) புலிப்பானி ஜோதிடர் சிறுகதைத்தொகுப்பு?

  1. அ.முத்துலிங்கம்
  2. காலபைரவன்
  3. க.சீ.சிவக்குமார்
  4. ராகவன்

(ஐ) படித்ததில் பிடித்தவன் யார்?

  1. டி.சே.தமிழன்
  2. பேயோன்
  3. வாமு.கோமு
  4. ஆடுமாடு

(ஒ) நான்மாடக்கூடல் படம் எந்தத்தளம்?

  1. தமிழ்பல்கலைக்கழகம்
  2. தமிழ்விக்கிபீடியா
  3. மதுரைமாநகரம்
  4. மதுரை360

மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

- சித்திரவீதிக்காரன்

12 comments:

  1. புதுப் புது அறிமுகங்கள். வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  2. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி. வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. மிகப்புதுமையான அணுகுமுறை...அறிமுகம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அப்பப்பா எத்தனை அறிமுகம்! அத்தனை பேருக்கும் வாழ்த்துகள், தங்களிற்கும். எணிதொடர.
    வேதா. இலங்காதிலகம்.
    நன்று வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. புதுமைக்கு வாழ்த்துகள். இதிலே நானும்கூட. நன்றி!!

    ReplyDelete
  7. வித்தியாசமான முறையில் அறிமுகம்

    ReplyDelete
  8. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஒரு கேள்விக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் கேள்வியின் புதுமை புரிந்தது.. நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நான்மாடக்கூடல் ங்கற தலைப்பை பார்த்து நம்ம ஊரு மாதிரி இருக்கேன்னு வந்து பார்த்தால்....அட....பாஸ் நீங்க..;-)) சீனா ஐயாக்கு நன்றி...ரசனையுள்ள ஆளை இந்த வாரம் ஆசிரியரா அழைத்ததுக்கு...தலைப்பு எல்லாம் செம...நேரம் கிடைக்கும்போது அவசியம் உங்க தேடல்களை படிச்சு பார்க்கிறேன்....சுந்தர் சார்...வாழ்த்துக்கள்....
    அன்புடன்,
    ஆனந்தி,
    மதுரை...

    ReplyDelete
  11. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. சுகுமாரன், நகுலன், தமிழ்வீதி, அங்கும்இங்கும், வெயிலான், ஆதவன்தீட்சன்யா, கானகந்தர்வன், காலபைரவன், பேயோன், தமிழ்விக்கிபீடியா எல்லாம் அந்தக் கேள்வி சார்ந்த விடைகள். மற்றவையும் அவற்றோடு தொடர்புடைய பதிவுகள்தான்.

    ReplyDelete
  12. அறிமுகங்களுக்கும், அறிமுகப்படுத்தியவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்..!!

    ReplyDelete