தூங்காநகரம் குறித்த முருகேசபாண்டியனின் கட்டுரை வாசித்தால் நீங்களும் மதுரையை விரும்புவீர்கள். ஆளுமைகளை நாம் அறிந்து கொள்ள அவர்களது எழுத்துக்களும், அவர்களைக் குறித்த எழுத்துக்களும், அவர்களோடான உரையாடல்களும்தான் பெரிதும் உதவுகின்றன.
மாவீரன் பிரபாகரன் குறித்து தமிழ்நதி, எஸ்.ராமகிருஷ்ணன் குறித்து அஜயன்பாலா, ஜி.நாகராஜனின் ஆக்கங்களைத் தொகுத்த ராஜமார்த்தாண்டனைக் குறித்த கடற்கரையின் கட்டுரைகளை வாசித்துப்பாருங்கள்.
ச.தமிழ்ச்செல்வன் தமிழ்வீதியில் தன் சகபயணிகளைப் பற்றி எழுதும் பதிவின் மூலம் பல ஆளுமைகளை நாம் அறிந்து கொள்ளலாம். அதில் வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்தன் குறித்த பதிவுகளை வாசித்தால் நீங்களும் அவர்களை நேசிப்பீர்கள். பவா செல்லத்துரையும் தன் தளத்தில் தினம் தினம் கார்த்திகை என்ற பதிவின் கீழ் தனக்கு நெருக்கமான ஆளுமைகளைப் பற்றி எழுதிவரும் பதிவு நெகிழ்ச்சியூட்டக்கூடியது. அதில் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி குறித்த பதிவுகளை வாசித்துப்பாருங்கள்.
பவாசெல்லத்துரை குறித்த அய்யனாரின் பதிவையும், ராஜம்கிருஷ்ணன் குறித்த ஜீ.வியின் பதிவையும், இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுத்துவரும் நம்மாழ்வார் பற்றிய பதிவையும் வாசித்துப்பாருங்கள்.
வண்ணநிலவனுடனான உரையாடலை வாசித்துப்பாருங்கள். அவரது எளிமை தெரியும். கவிதை குறித்து ஜெயமோகனுக்கும், யுவனுக்குமான உரையாடலை வாசியுங்கள். நெருப்புத்தமிழன் உதயகுமாருடனான நேர்காணலை வாசியுங்கள். அணுஉலைகளினால் ஏற்படும் ஆபத்தை அறியலாம். எழுத்தாளர் அம்பையுடனான சுசீலாம்மாவின் கலந்துரையாடலை வாசியுங்கள். எழுத்தாளர் பாவண்ணனின் நேர்காணலை வாசித்துப்பாருங்கள்.
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவின் தீவிர வாசகன் நான். தொ.ப’வுடனான நேர்காணலை வாசித்துப்பாருங்கள். உறவுப்பெயர்கள், தமிழர்உணவு குறித்து அவர் எழுதிய கட்டுரைகளை வாசியுங்கள். தமிழர்பண்பாடு, நாட்டுப்புறவியல், தமிழ்நாட்டுவைணவம் குறித்து நிறைய அறிந்து கொள்ளலாம். கமல்ஹாசன் தொ.ப’வின் வாசகர். கமல்ஹாசனின் சித்திரங்களைப் பாருங்கள். ஷெனாய் வாத்தியம் பற்றிய வேணுவனம் சுகாவின் பதிவை வாசியுங்கள். நானும் கதைகளும் என்ற கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவை வாசித்துப்பாருங்கள்.
அணிலாடும் முன்றிலில் கலாப்ரியா கவிதை பற்றிய பதிவையும், வித்யா சுப்ரமணியம் அவர்களின் முன்னுரை, முகவுரை குறித்த பதிவையும், அன்பேசிவம் தளத்தில் வண்ணதாசனின் எழுத்து, சேர்தளம் பற்றியும் வாசியுங்கள். அறிவியல் குறித்த தகவல்களை எளிமையாகத் தமிழில் வாசியுங்கள். ஆகிய, முதலிய, போன்ற வார்த்தைகளுக்கிடையேயென்ன வேறுபாடை அறிய கவிஞர் மகுடேஸ்வரனின் பதிவை வாசியுங்கள்.
மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.
வித்யாசமான வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தி வரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநிறைய நல்ல பதிவர்களை இந்த பகிர்வின் மூலம் அறிந்துக்கொண்டேன்.சகோ..மிக்க நன்றி.
ReplyDeleteபல வித பதிவர்களுக்கும், தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
eppadi iththanaiyum-
ReplyDeletepadiththu pakirnthu alikkireenga?
vaazhthukkal!
வாழ்த்துகள் !!!
ReplyDeleteபல முத்தான பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சுந்தர். தமிழ் தொகுப்புகள் தளத்தை பிரபலபடுத்தியதற்கு, மேலும் நிறைய பணிகள் செய்யவேண்டும், உங்களை போன்றோரின் ஆதரவே அதை நிறைவேற்றும்.....
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
சிங்கமணி
வித்தியாசமான அறிமுகங்கள்
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_08.html