பரத் கம்ப்யூட்டரில் மும்முரமாயிருந்தான். சுசிலா கோபமாய் வந்து, ‘‘இது எத்தனையாவது மாசம் பரத்?’’
‘‘யாருக்கு..?’’
‘‘கண்டமேனிக்குப் பேசிடுவேன் பரத். விளையாடாம சொல்லுங்க. இது என்ன மாசம்? என்ன தேதி?’’
‘‘மாசம் - ஆட்டின் குரல்! தேதி - ரெண்டு’’
‘‘இன்னிக்கு என்ன நாள்ங்கறதையே மறந்துட்டிங்களா? என்கிட்ட போன வாரம் என்ன சொன்னிங்க?’’
‘‘இன்னிக்கு உன் பர்த்டேங்கறதை மறக்கலை, உன்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதையும் மறக்கல’’ என்று அவளைப் பார்த்துத் திரும்பினான் பரத். அவள் அணிந்திருந்த டிஷர்ட்டில் 'TESTED' என்று எழுதியிருந்தது. சுற்றுமுற்றும் தேடினான் பரத்.
‘‘என்ன தேடறீங்க பரத்?’’
‘‘பேனாவைத் தான்...!’’
‘‘எதுக்கு?’’
‘‘பை மீ-ன்னு எழுதி நான் கையெழுத்துப் போடவேணாமா?’’ என்றபடி பரத்தின் பார்வை போகுமிடத்தைக் கவனித்து அவன் தலையில் தட்டினாள் சுசிலா. ‘‘சுசி, ரொம்ப ஷார்ப் உன்னோட...’’
‘‘பரத்த்த்...’’ என்று சுசிலா பல்லைக் கடிக்க... ‘‘பார்வைன்னு சொல்ல வந்தேன்...’’ என்றான் பரத்.
‘‘அதுசரி... என்னை ஷாப்பிங் போகலாம்னு வரச் சொல்லிட்டு கம்ப்யூட்டர்ல என்ன பாத்துட்டிருந்திங்க?’’
‘‘அதுவா... நீ பாட்டுக்கு டிஷர்ட் வாங்க கடைக்குள்ள போயிட்டா திரும்பிவர பல மணி நேரமாகும். அதுவரைக்கும் பக்கத்துல லேண்ட் மார்க்குல நான் டிவிடிக்கள் வாங்கலாம்னு ஐடியா. அதான் என்னென்ன படங்கள் வாங்கலாம்னு நெட்ல தேடி செலக்ட் பண்ணிட்டிருந்தேன்...’’
‘‘எதும் ஐடியா கிடைச்சி்ச்சா பரத்?’’
‘‘நெட்ல புகுந்தா கொட்டிக் கிடக்குது சுசி. ஓடும் ரயிலில் ஒரு த்ரில்லர்-ன்னு மதுரை அழகுங்கறவர் ரொம்ப அழகா எழுதியிருக்கார். அவளைக் கொன்றவன் யார்?ன்னு குமரன்ங்கறவர் அருமையா சொல்லியிருக்கார் சுசி. என்னைக் கவர்ந்த த்ரில்லர் படங்கள்ன்னு இந்த சைட்ல இருக்கற தொகுப்பும் நல்லாவே இருக்கு.’’
‘‘எல்லாம் த்ரில்லர் படங்களாவே இருக்கே பரத். வேற படங்களே உங்களுக்குத் தெரியலையா?’’
‘‘எல்லா டைப்பும் பாக்கணும் சுசி. இதப் பாரு... CHILDREN OF MEN படம் பத்தி ஹாலிவுட் ரசிகனும், A SEPARATION படம் பத்தி உலக சினிமா ரசிகனும், MIDNIGHT IN PARIS பத்தி கனவுகளின் நீட்சியும், THE READER பத்தி திரை விமர்சனமும், THE ARTIST பத்தி கருந்தேளும் சொல்லியிருககதையெல்லாம் படிச்சதுமே வாங்கணும்னு லிஸ்ட் எடுத்துட்டேன் சுசி!’’
‘‘நான் பாத்த சில படங்களை நோட்பேட்ல வெச்சிருக்கேன் பரத். இதப் பாருங்க...’’ என்று காட்டினாள் சுசிலா. ‘‘யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க-ன்றது நல்லா இருக்கு பரத். அப்புறம்... சொந்த வீடு என்பதே கனவாகிப் போன குடும்பங்களின் கதை, துப்பாக்கியில் பூத்த பூ -இதெல்லாமே சுவாரஸ்யமா இருக்குது பரத்...’’ என்றபடி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சுசிலா. ‘‘என்ன, கவனிச்சிங்களா?’’
‘‘கவனிச்சேன் சுசி... இன்னிக்கு நீ கலர் ப்ரா போட்டிருக்கே...’’
அவன் பார்வையைக் கவனித்து, பனியனுக்குள் அட்ஜஸ்ட் செய்தவள், ‘‘வரவர உங்க பார்வையே சரியில்ல பரத்.’’ என்றாள். ‘‘ஒண்ணு புரியலை சுசி. வெளியில தெரியக் கூடாதுன்னா எதுக்கு பெண்கள் கலர் ப்ரா போட்டுக்கணும்?’’
‘‘ஷட்அப் பரத்! லிஸ்ட் எழுதி முடிச்சுட்டிங்கன்னா நாம கிளம்பலாம்’’ என்றாள் கோபமாக சுசிலா. ‘‘கொஞ்சம் இரு சுசி... இன்னும் ஒண்ணு ரெண்டைப் படிச்சுட்டு வந்துடறேன். இதைப் பாரு... A FISTFUL OF DOLLARS, THE SKIN I LIVE IN, ருத்ரபூமி, கிகுஜிரோ -இந்தப் படங்கள்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டேன்...’’
‘‘ஏன் பரத்... எல்லாம் இங்கிலீஷ் படங்களாவே செலக்ட் பண்ணியிருக்கீங்களே... தமிழ்ப் படங்கள் பத்தி எழுதற யாரும் உங்க கண்ணுல படலியா?’’
‘‘தமிழ் சினிமாவுல எப்படில்லாம் லாஜிக் பூந்து விளையாடுதுன்றதை சினி லாஜிக்ஸ்-ன்னு எங்கள் ப்ளாக்ல எழுதியிருக்காங்க சுசி... இதைப் படிச்சுப் பாரேன், தமிழ்ப் படம் நான் ஏன் செலக்ட் பண்ணலன்னு புரிஞ்சிடும்...’’
‘‘நீங்க பாத்தது அவ்வளவுதான் பரத். கர்ணனுக்கு வழங்கியவர்கள்-ன்னு சுகா வேணுவனம் தளத்துல எழுதியிருககறதைப் படிங்க. அசரடிக்கிறார் பரத்!’’
‘‘இந்தப் படத்தையும் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டாச்சு சுசி. கிளம்பலாமா?’’ என்ற பரத் கார் சாவியைக் கையில் எடுத்துக் கொள்ள, இருவரும் புறப்பட்டனர்.

அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஅறிமுகம் செய்த விதமும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாவ்.... நேற்று கணேஷ்-வசந்த். இன்று பரத்-சுசி! :) நல்லா இருக்கு கணேஷ்.
ReplyDeleteஅதுவும் உலக சினிமா பற்றிய பதிவுகளைத் தேடித் தேடி தந்து இருக்கீங்க.... இத்தனையும் படிக்கணுமே... பொறுமையா படிக்கிறேன்.
மேலும் தொடர்ந்து அசத்த வாழ்த்துகள்.
Tha.ma 2
ReplyDelete@ Ramani said...
ReplyDeleteமுதலாவதாய் வந்து முத்தான கருத்தைத் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ வெங்கட் நாகராஜ் said...
நிதானமாய் அனைத்தையும் படித்து ரசியுங்கள் வெங்கட். உங்களுக்கு என் இதய நன்றி!
நன்றி கணேஷ்....சினி லாஜிக்ஸ் அறிமுகத்துக்கு. பிரபலங்கள் வாயால் உச்சரிப்பதுபோல் படிக்கும்போது ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது! ம்...ஹூம் ! கணேஷ் வசந்த் எங்கள் பதிவைச் சொல்லும் வாய்ப்புப் போச்சே..... மனுஷ மனசு பாருங்க... குறை எதாவது மனசுல வந்துடுது.....!! :))
ReplyDelete@ ஸ்ரீராம். said...
ReplyDeleteஅதனாலென்ன... இன்னொரு முறை வலைச்சரம் வாய்ப்பு (தப்பித் தவறி) கிடைச்சா அப்ப கணேஷ் வஸந்தை விட்டு எங்கள் ப்ளாக்கை படிககச் சொல்லிட்டாப் போச்சு. மிக்க நன்றி ஸ்ரீராம்!
நன்றி...நண்பரே!
ReplyDeleteஇன்னும் பல நல்ல படங்களை பார்த்து அறிமுகம் செய்ய உங்கள் ஆதரவு தூண்டுகிறது.
வலைச்சரத்துக்கும் நன்றி.
தினம் ஒரு புதுமைன்னு வலைச்சரத்துக்குள்ளே(யே) வீடு கட்டி விளையாடுறீங்க!!!!
ReplyDeleteநாளைக்கு என்னவோன்னு இன்னிக்கே யோசிக்க வச்சுட்டீங்களே கணேஷ்!!!!
அப்பாடி. நேற்று அவங்க, இன்னைக்கு இவங்களா? லூட்டி அடிச்சாலும் வேலையில் குறையில்லை. எத்தனை அருமையான அறிமுகங்கள். சினிமா ரசிகர்களுக்கு அருமையான கையேடு கிடைச்சிடுச்சி. பிரமாதம். பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteதலைப்பே அபாரம். கதைகளின் ஊடே வலைப்பூக்களைப் பின்னமுடியும் என்ற வித்தையைக் கண்டுபிடித்த தங்களுக்கு ஒரு’ஷொட்டு'.
ReplyDeleteநான் இரசித்தது //‘‘மாசம் - ஆட்டின் குரல்! //
வித்யாசமாக அறிமுகம் செய்வது படிக்கவே சுவாரசியமாக இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete@ Blogger உலக சினிமா ரசிகன் said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ துளசி கோபால் said...
என்னை உற்சாகத்தி்ல் துள்ள வைக்கும் கருத்தைத் தந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி டீச்சர்!
@ கீதமஞ்சரி said...
நாளைக்கு வர்ற ஜோடியும் லூட்டியில குறையில்லாதவங்கதான் கீதா. அறிமுகங்களை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
@ வே.நடனசபாபதி said...
தலைப்பும் சரி, நீங்கள் ரசித்த வரியும் சரி... இரண்டும் PKPயுடையது. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!
நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிட்டார். வலைச்சரம் தொடுக்கின்ற யுக்தி (இரண்டு புகழ் பெற்ற கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு) உங்கள் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ReplyDeleteநன்றிங்க கணேஷ் :)
ReplyDelete//பை மீ-ன்னு எழுதி நான் கையெழுத்துப் போடவேணாமா?// சார் அருமையான ஹ்யூமர்
ReplyDeleteபதிவும் அருமை சார், பரத் சுசி பாத்திரம் எனக்கு அறிமுகம் இல்லை ஆனாலும் எழுத்தும் நடையும் அதில் விளையாடும் இளமை ததும்பும் சொற்களும் அபாரம்.
@ Lakshmi said...
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்களை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
@ kg gouthaman said...
உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு என் இதய நன்றி!
@ MSK / Saravana said...
உங்கள் வருகைக்கும் கருத்துககும் நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்? மிக்க நன்றி!
@ seenuguru said...
சீனு! பரத்-சுசிலா இளமைக் குறும்புகளுககுப் பெயர் பெற்றவர்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் புகழ்மிகக கதாபாத்திரங்கள். படித்துப் பாருங்கள்... பிடித்துப் போகும். ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி!
பட்டய கிளப்புறீங்களே
ReplyDeleteவந்துட்டேன்..பிரமாதம் போங்க..வேற என்ன சொல்ல ..சிறப்பு.. அறிமுகங்களை சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது..இரண்டு முறை வாசித்தேன்.. ரசித்தேன்..ரசிக்கிறேன்..ரசிப்பேன்..
ReplyDeleteவித்தியாசமான முறையில் அறிமுகம். வாழ்த்துக்கள்
ReplyDeleteகதைக்குள்ள சினிமாவா..நிறைய நல்ல படங்களை பற்றிய விமர்சனங்களை தேடித்தேடி தந்துருக்கீங்க.அதில் என்னையும் குறிப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஎனது பதிவப் பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி! கணேஷ் அண்ணா...!
ReplyDelete@ மனசாட்சி™ said...
ReplyDeleteமகிழ்வான பாராட்டுத் தந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய நன்றி நண்பா!
@ மதுமதி said...
ரெண்டு முறை வாசித்தேன் என்று நீங்கள் சொன்னதில் அளவற்ற மகிழ்ச்சி என்னுள். மிக்க நன்றி கவிஞரே!
@ பாலா said...
ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி பாலா!
@ Kumaran said...
என் மனசுலயும், சினிமா எழுதறவங்கள்லயும் உங்களுக்கு தனி இடம் உண்டு குமரன். வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
@ மதுரை அழகு said...
நல்ல விஷயங்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா தம்பி. தங்களுக்கு என் இதய நன்றி!
பரத் சுசிலாவை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.சூப்பர்.இப்பவே என் கனவில் விவேக் ரூபலா,வைஜெயந்தின்னு எல்லோரும் வலம் வர ஆரம்பிச்சுட்டாங்க...
ReplyDelete@ ஸாதிகா said...
ReplyDeleteகை கொடுங்க ஸாதிகா... அடுத்து நான் ப்ளான் பண்ணியிருக்கற ஜோடிகளை சரியா கெஸ் பண்ணி அசத்தினதுக்கு! மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி!
பரத் சுசி சூப்பர் அறிமுகங்கள் சிறப்பு தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteth.ma.6
ReplyDeleteஎங்க ஊரு வாத்தியார் வலைசரத்துல கலக்குறார்னு கேள்விபட்டு வந்தா நிஜமாவே பதிவு கலக்கலா இருக்கு...வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பதிவில் எனது (என்னைக் கவர்ந்த த்ரில்லர் படங்கள்ன்னு இந்த சைட்ல இருக்கற தொகுப்பும் நல்லாவே இருக்கு.’’)பதிவை பற்றி குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇது நிச்சயம் எனக்கு மேலும் சிறப்பாக எழுத தூண்டும்.
இன்னிக்கு சினிமா விமர்சகர்கள் பற்றிய பகிர்வா? பகிர்வுக்கு நன்றி அண்ணா
ReplyDelete@ சசிகலா said...
ReplyDeleteமகிழ்வு தந்த பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி தென்றல்!
@ Avargal Unmaigal said...
எத்தனை பேர்கிட்ட பாராட்டு வாங்கினாலும் நம்மவங்க பாராட்டும் போது கிடைக்கிற மகிழ்வே தனிதான். அந்த மகிழ்வைத் தந்ததற்கு என் இதயம் நிறை நன்றி!
@ scenecreator said...
செட் செட்டா நீங்க எழுதிட்டு வர்ற த்ரில்லர் படங்களை ரசிச்சுப் படிச்சு குறிச்சு வெச்சுட்டிருக்கேன். ஆனா, ‘சீன் கிரியேட்டர்’ன்னு தமிழ்ல எழுதறதுக்கு என்னவோ போல இருந்ததால வலைச்சரத்துல பேர் குறிப்பிடலை. ஸாரி. தொடர்ந்து சுவாரஸ்யமாய் எழுதி கலக்குங்க. வாழ்த்துக்கள்!
@ ராஜி said...
மகிழ்வு தந்த தங்கையின் வருகைக்கு மனம்நிறை நன்றி. நாளைய அறிமுகங்கள் உனக்கு மிகப் பிடிச்சதா அமையும்மா!
சினிமா விமர்சகர்களைப்பற்றிய பதிவை அருமையாகத் தொகுத்தளித்துள்ளீர்கள்.
ReplyDelete@ விச்சு said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்டத தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
ஆஹா.. ஜுப்பரு,.. இடுகையும் அறிமுகங்களும்.
ReplyDeleteநாளைக்கு எந்த ஜோடி வரப்போவுதுன்னு இன்னிக்கே யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் :-)
வணக்கம் நண்பரே,
ReplyDeleteநாவல்களின் குணாதிசயங்களுடன்
அழகிய உரையாடல்களுடன்
நீங்கள் சரம் தொடுக்கும் விதம்
மிக மிக அழகு..
பதிவில் உங்கள் முழு உழைப்பும்
கண்கூடாக தெரிகிறது..
அறிமுகங்களை சென்று பார்க்கிறேன் நண்பரே..
சுவையான உரையாடலின் வாயிலாக அறிமுகங்கள் நன்று. சகோ சாதிகா குறிப்பிட்டதைப் போல் விவேக் ரூபலாவும் வருவார்கள். நரேந்திரன் பெயரை விட்டுவிட்டு வைஜெயந்தி பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்குப் பின் பிரசன்னா லதாவா?
ReplyDelete@ அமைதிச்சாரல் said...
ReplyDeleteஇடுகையையும், அறிமுகங்களையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ மகேந்திரன் said...
வாங்க மகேன், என் உழைப்பினைப் பாராட்டிய தங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் இதய நன்றி!
@ NIZAMUDEEN said...
ஸாதிகா சொன்னாற் போல விவேக்-ரூபலா, நரேன்-வைஜ் நி்ச்சயம் உண்டு ஆனால் பிரசன்னா-லதா கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு ஒரு கேரக்டரைசேஷன் பண்ணவில்லை தேவிபாலா. மற்றவர்களை திட்டவும், மட்டம் தட்டவும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்ட பாத்திரங்கள் அவை. இறுதி நாளன்று ஜோடிகளுக்குப் பதில் கணேஷ் உங்களுடன் பேசுவேன். இதுதான் திட்டம். ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
அறிமுகப்படுத்தல் உங்கள் பாணியில் வித்தியாசம் ஃப்ரெண்ட்.இன்றைய அறிமுககங்களின் பதிவுகளுக்கு நான் போனதேயில்லை என்பதே உண்மை.கொஞ்சம் அல்ர்ஜி !
ReplyDelete@ ஹேமா said...
ReplyDeleteராஜி தங்கச்சி மாதிரி உங்களுககும் சினிமான்னா அலர்ஜியா ஃப்ரெண்ட்! அப்ப சரி... நாளைக்கு வர்ற கேட்டகரியை ரொம்பவே ரசிப்பீங்க. ஸோ, நாளைக்கு மீட் பண்ணலாம். நன்றி!
பரத் - சுசி ஜோடி கலக்கியிருக்காங்க....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
யாரிந்த பரத்-சுசினு கேக்க நெனச்சேன்..
ReplyDeleteஎன்னையும் பதிவில் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஇப்பதிவில் நிறையப் வலைத்தளங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், புதிய சில சுவாரஸ்யமான சினிமா ப்ளாக்ஸ் அறிமுகப்படுத்தியமைக்கு ஸ்பெஷல் நன்றிகள் சார்.
பதிவுகள் அனைத்தும் புதுமை-அறிய,
ReplyDeleteஅறிமுகம் செய்வது்ம் புதுமை
சா இராமாநுசம்
அருமையான வித்தியாசமான அறிமுகங்கள்.,, பாராட்டுக்கள்..
ReplyDeleteகணேஷ் சார், வசனங்களும் அறிமுகங்களும் சூப்பரோ சூப்பர்...
ReplyDelete@ கோவை2தில்லி said...
ReplyDeleteபரத்-சுசியை ரசித்து அறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ அப்பாதுரை said...
கேக்காமலே இப்ப தெரிஞ்சுககிட்டங்க தானே... தங்களு்க்கு என் இதயம் நிறை நன்றி!
@ ஹாலிவுட்ரசிகன் said...
நல்ல திரைப்படங்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் அருமையான செயலை நீங்களெல்லாம் செய்கிறீர்கள். அறிமுகப்படுத்தியதில் எனக்கு மிக மகிழ்வு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ புலவர் சா இராமாநுசம் said...
உற்சாகம் தந்த நற்கருத்திற்கு உளம் கனிந்த நன்றி ஐயா!
@ இராஜராஜேஸ்வரி said...
தொடர்ந்து எனக்கு ஊக்கம் தரும் உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!
@ தமிழ்வாசி பிரகாஷ் said...
வாங்க நண்பரே... உங்களின் பாராட்டு மிகமிக மனமகிழ்வைத் தருகிறது எனக்கு. என் உளம்கனிந்த நன்றி உங்களுக்கு!
இன்று காலை தங்களிற்கு கருத்திட முடியாது போய்விட்டது. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். அறிமுகங்கள், அனைவருக்கும் உங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இன்று காலை தங்களிற்கு கருத்திட முடியாது போய்விட்டது. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். அறிமுகங்கள், அனைவருக்கும் உங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
கணேஷ் அண்ணா,
ReplyDeleteகலக்கிட்டேள் போங்கோ. அந்த ‘த்ரில்லர்’ படங்களைத் தொகுத்திருக்கும் வலைப்பக்கம் எனக்கு பயனுள்ளதா இருக்கு.
//வெளியில தெரியக்கூடாதுன்னா எதுக்கு கலர் ப்ரா போடனும்?// - அதானே! (எனக்கும் இந்த டவுட் ரொம்ப நாளா இருக்குதுண்ணே.)
உங்களின் இளமைக்கும், அறியாமைக்கும் இதுவொரு எடுத்துக்காட்டு அண்ணே!
@ kovaikkavi said...
ReplyDeleteஎப்போது வேண்டுமானாலும் நீங்கள் படித்துக் கருத்திடலாம். உங்களின் வாழ்த்தைப் பெறுவதில் மிக மகிழ்ந்து உங்களுக்கு என் இதய நன்றி!
@ சத்ரியன் said...
ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி தம்பி!
vaazhthukkal!
ReplyDeletegood list
ReplyDeleteபரத்,சுசீலா திருப்பி படித்தது சுவாரசியமாக இருந்தது. படங்களைப்பற்றிய பதிவுகளின் அறிமுகம் சிறப்பாக இருக்கு. தொடருங்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை அதைவிட பின்னூட்டங்களுக்கு மதிப்பளித்து பதில் கொடுப்பதில் கணேஷுக்கு நிகர் அவரே
ReplyDelete@ Seeni said...
ReplyDeleteThankyou Verymuch Seeni!
@ arul said...
nice and encouraging comment! Thank you Arul!
@ RAMVI said...
பரத். சுசியை ரசித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
@ கோவை மு.சரளா said...
என் நல்ல பழக்கத்தைப் பாராட்டிய தங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி.
ஜோடிகள் எல்லாம் அசத்திராங்க....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
வசதியா லிஸ்ட் குடுத்திருக்கீங்க....பரத்க்கு நன்றி சொல்லிடறீங்களா? (என் சார்பா)
ReplyDelete@ மாதேவி said...
ReplyDeleteவாழ்த்துச் சொன்ன நட்புக்கு நன்றிகள் பல!
@ Shakthiprabha said...
நிச்சயமா சொல்லிடறேன். உங்களுக்கு என் நன்றியைச் சொல்லிக்கறேன்!