Friday, May 4, 2012

உருகும் விநாடிகள்

ரேந்திரன் சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அடக்கம் செய்தான். கதவைத் திறந்து இளம் புயலாக உள்ளே வந்தாள் வைஜயந்தி.

‘‘ஹாய், நரேன்...’’

‘‘ஏய்... என்ன இது?’’

‘‘இது? புது டிரெஸ்! புது டைலர் ஒருத்தனைப் பிடித்திருக்கிறேன்.’’

‘‘சரியான திருடன் போலிருக்கிறது - முதுகுப் பக்கம் துணி வைக்கவே மறந்திருக்கிறான் வைஜ்.’’

‘‘நீ இன்னும திருவிளையாடல் காலத்திலேயே இரு... இதுதான் இன்றைய ஃபேஷன்!’’

‘‘ஐயோ, ஐயோ... முதுகில் போஸ்டரே அடித்து ஒட்டலாம் போலிருக்கிறதே!’’ சொல்லிவிட்டு வைஜயந்தியின் ஹேண்ட்பேக் வீச்சிலிருந்து தலையைக் குனிந்து தப்பித்தான் நரேந்திரன். மீண்டும் கதவு திறந்து ஜான்சுந்தர் உள்ளே நுழைந்தான். ‘‘வைஜ்! இதோ நீ கேட்ட தகவல்கள் இந்த பென் டிரைவில் இருக்கின்றன...’’ என்று அவளிடம் நீட்டினான்.

‘‘ஜான்! எனக்குத் தெரியாமல் வைஜுக்காக எந்தக் கேஸுக்கு என்ன தகவல்கள் சேகரித்தாய்?’’ நரேந்திரன் கோபமாகக் கேட்டான்.  ‘‘கேஸுக்காக இல்லை நரேன். கோடை விடுமுறைக்கு என்னை வெளியூர் அழைத்துப் போவதாகச் சொன்னாயல்லவா? அதுதான் எங்கே போகலாம் என்று யோசித்து ஜானிடம் உலகின் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிக் கேட்டேன்..’’ என்று லேப்டாபில் பென் டிரைவைச் செருகியபடி சொன்னாள் வைஜயந்தி.

‘‘வைஜ்! மனிதன் ஒரு பேச்சுக்குச் சொன்னால் நிஜமாகவே நம்பி விடுவதா?’’ என்றான் நரேந்திரன். அவனை உதாசீனம் செய்து, ‘‘ஜான், இதென்ன...?’’ என்றாள் வைஜ். ஜான் விளக்கினான், ‘‘வைஜ்! முதலில் இதைப் பார். வெளியூர் டூர் போகிறீர்களா? சில டிப்ஸ் -என்று குறிப்புகள் தருகிறார் மோகன்குமார்...’’ என்றான். வைஜயந்தி படிப்பதை நரேந்திரனும பின்னால் நின்று கொண்டு கவனித்தான்.

‘‘வைஜ்! சிங்கை சந்திப்புகள்-என்று துளசி கோபால் டீச்சரும், Joyfull சிங்கப்பூர்-என்று கேபிள் சங்கரும் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டுகிறார்கள் பார்...’’

‘‘வாவ்!’’ கண்களை அகல விரி்த்தாள் வைஜயந்தி. ‘‘நரேன், நாம் இங்கே போகலாமா?’’

‘‘வேண்டாம் வைஜ்! நிறைய சினிமாக்களில் சிங்கப்பூரைப் பார்த்தாகி விட்டது. வேறு எங்காவது போகலாம்...’’ என்றான் நரேந்திரன்.

‘‘அப்படியானால் மனைவியின் மயோர்கா-என்று வி.ராதாகிருஷ்ணனும், கலாச்சார வியப்புகள்: இலண்டன்-என்று ஆர்.பாரதிராஜாவும், அற்புதத் தீவு பஹாமாஸ்-என்று சத்யப்ரியனும் எவ்வளவு அழகாகச் சொல்லியிரு்க்கிறார்கள் பார்...’’ என்றான் ஜான்.

‌வைஜயந்தி உற்சாகமாய் நரேந்திரனைப் பார்த்தாள். ‘‘ஜான் உன்னுடைய லிஸ்ட் இன்னும் முடியவில்லை போலிருககிறதே’’ என்றான் நரேந்திரன்.

‘‘ஆமாம் நரேன். ஊர் சுற்றலாம் வாங்க-பாங்காக் -என்று தாய்லாந்தை நினைவில் நின்றவையும், கிலிபி (ஆப்பிரிக்கா) -என்று ஆப்பிரி்க்காவை லக்ஷ்மியும், அக்ஷர்தாம்-உலகின் 8வது அதிசயம் -என்று திருமதி பி.எஸ்.ஸ்ரீதரும், பயண அனுபவம் -என்று இலங்கையை புதுகைத் தென்றலும், San Antonio,TX-பயணம் -என்று அமெரிக்காவை வைகையின் சாரலும் எவ்வளவு அழகாய் சுற்றிக் காட்டியிருககிறார்கள் பார்’’ என்றான் ஜான்.

‘‘அப்பனே ஜான்! நான் உனக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் என்று இப்படி என் பாங்க் பாலன்‌‌ஸைக் காலி பண்ணத் திட்டமிட்டு பழிவாங்குகிறாய்? இந்தியாவிற்குள் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் எதுவும் உன் கண்ணில் படவில்லையா?’’ பல்லிடுக்கில் பேசினான் நரேந்திரன்.

‘‘என்ன சொன்னாய் நரேன்?’’ என்றாள் வைஜயந்தி.

‘‘ஒன்றுமில்லை. ஜான், இந்தியாவிலேயேகூட பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் இருக்கின்றன என்றான். அதைத்தான் காட்டச் சொல்லிக் கொண்டிருந்தேன். என்ன ஜான்..?’’ நரேந்திரனின் முகத்தைப் பார்த்த ஜான் மிரண்டு, ‘‘ஆமாம் வைஜ்! இங்கே பாரேன்... கோனார்க் சூரியக் கோவிலின் அழகை பாருங்கோளேன்! -என்று கலை சொல்லும் இடம் நன்றாகவே இருக்கிறது. மத்தியப் பிரதேசம் அழைக்கிறது -என்று வெஙகட் நாகராஜ் விரிவாக சுற்றிக் காட்டியிருககிறார் பார். இவர் இப்போது மத்தியப் பிரதேசம் மீண்டும் அழைக்கிறது என்று மறுபடி டூர் அழைத்துப் போகிறார். அவ்வளவு பிடித்த இடமாம் அது’’ என்றான் ஜான்.

‘‘நரேன்! மத்தியப் பிரதேசம் போகலாமா?’’ என்றாள் வைஜயந்தி. ‘‘மத்தியப் பிரதேசத்தை நான் இங்கேயே பார்த்து விட்டேனே’’ என்று அவள் இடுப்பி்ல் கை வைத்தான் நரேந்திரன்.

‘‘யூ...! பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை தாஸ் உனக்குப் போதிக்கவில்லையா?’’ என்று உதடு துடிக்கக் கேட்டாள் வைஜயந்தி.

‘‘ஐயோ, பொது இடமா? நான் தொட்டது எனக்கு மட்டு்ம் சொந்தமான இடம் என்றல்லவா நினைத்திருந்தேன்’’ என்றான் நரேந்திரன்.

‘‘யூ கவர்ட் ஹையனா, ராட்டன் ஸ்டிங்கிங் மங்க்கி, கன்ட்ரி ஃபிக்’’ என்று வைஜயந்தி சரமாரியாக ஆரம்பிக்க, பாய்ந்து அவள் வாயைப பொத்தினான் நரேந்திரன். ‘‘இதோ பார் வைஜ்! கோடை விடுமுறை எனறால் வெளியூர்ப் பயணம்தானா? உள்ளூரிலேயே நாம் பார்க்காத இடங்கள் நிறைய உண்டு வைஜ். இதோ பார்... சென்னையில் தக்ஷின் சித்ரா -என்று ஒரு இடத்தை ஸாதிகா எவ்வளவு அழகாக சுற்றிக் காண்பிக்கிறார்கள் பார். நாம் மு‌தலில் இங்கே போகலாம்...’’ என்றான்.

வைஜயந்தி முகம் சிவக்க ஏதோ சொல்ல வாய் திறந்த நேரம், கதவு திறந்து ராம்தாஸ் நின்றார். ‘‘வைஜயந்தி! நாளையிலிருந்து ஒரு வாரம் சிங்கப்பூரில் இன்டர்நேஷனல் டிடெக்டிவ் கானஃபரன்ஸ் நடககப் போகிறது. நான் போகிறேன். எனக்கு அசிஸ்டெண்டாக நீ வருகிறாய். நாளை புறப்பட டிககெட் எடுத்தாகி விட்டது. நரேன்... நீ போய் உள்ளூரைச் சுற்றிப் பார்...’’ என்றார் ராம்தாஸ். ‘‘கெடுத்து விட்டதே கிழம்’’ என்று நரேந்திரன் வாய்க்குள் முனக, ராம்தாஸின் முதுகுக்குப் பின்னே நின்று அவனுக்கு பழிப்புக காட்டினாள் வைஜயந்தி.

53 comments:

  1. நரேன், வைஜ் அமர்க்களத்தில் சுற்றுலா அறிமுகங்கள். நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. சுற்றுலாத் தளங்கள் அறிமுகமா... பலே...சரி... இன்றுவரை நரேன் வைஜ் பரத் சுசீலா, கணேஷ் வசந்த் என்று ஓடி விட்டது. நாளை யார்? துப்பறியும் சாம்புவா? பெரி மேசனா?சங்கர்லாலா...அல்லது ஷெர்லக் ஹோம்சா...! எப்படியோ கலக்குங்க கணேஷ்...

    ReplyDelete
  3. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    முதல் நபராய் வந்து பாராட்டிய நண்பருக்கு என இதய நன்றி!

    @ ஸ்ரீராம். said...

    ரொம்ப சரியாச் சொல்லிட்டீங்க. நாளைக்கு யாரைக் கொண்டு வர்றதுன்னும், என்ன கேட்டகரியில தளங்களை அறிமுகப்படுத்தறதுன்னும் இன்னும் முடிவே பண்ணலையேன்னு கவலைப்பட்டுட்டுதான் இருக்கேன். நைட்டுதான் முடிவு செய்யோணும்... பாக்கலாம். நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  4. இளமை ததும்பும் இளஞ்ஜோடிகளுடன் இந்த வாரம் முழுதும் அமர்க்களமாக போகிறது.

    அசத்துங்கள் கணேஷ் அண்ணே.

    ReplyDelete
  5. சுற்றுலாப் பதிவுஅறிமுகங்கள் அருமை
    அந்த ஜாக்கெட் விஷயம் சொல்லிப் போனவிதம் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    சுவாரஸ்யம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்க வலைசர பள்ளிக்கு வந்த மாணவர்களை இந்த பதிவின் மூலம் இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் எங்கள் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இளமை ததும்பும் நகைச்சுவை உரையாடலின் ஊடே சுற்றுலா போகவேண்டிய இடங்கள் பற்றிய பதிவுகளை கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. இளமை துள்ளும் வசனங்களுடன் ஊர் சுற்றிக் காட்டும் அருமையான பாத்திரப் படைப்புகள்.

    ReplyDelete
  9. ஆஹா...... ஊர்சுத்தி சுத்திக் கால்வலிக்குதுன்னு வந்து உக்கார்ந்தா.... இப்படி வைஜயந்திக்கு சிங்கையைச் சுத்திக்காட்ட வச்சுட்டீங்களே!

    அப்படியே ஒரு நடை பாங்காக் கூட்டிப்போகவா? :-)))))))

    ReplyDelete
  10. நரேன் - வைஜ் மூலம் அடியேனுக்கும் ஒரு வலைச்சர அறிமுகம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி கணேஷ்.

    தொடர்ந்து அசத்துங்கள்.....

    ReplyDelete
  11. இத்தனை இடங்களையும் செலவில்லாம சுத்திக்காமிக்க உதவிய வைஜூவுக்கும் நரேனுக்கும் மற்றும் உங்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  12. @ சத்ரியன் said...

    உற்சாகம் தரும் கருத்தினைத் தந்தீர்கள் தம்பி! என் மனமார்ந்த நன்றி!

    @ Ramani said...

    சுற்றுலாத் தலங்களையும், ஜாக்கெட் குறும்பையும் ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

    @ Avargal Unmaigal said...

    சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியரை வாழ்த்திய நண்பனுக்கு என் இதயம்நிறை நன்றி!

    @ வே.நடனசபாபதி said...

    இளமை தெறிக்கும் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

    ReplyDelete
  13. @ seenuguru said...

    ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றிகள பல சீனு!

    @ துளசி கோபால் said...

    வைஜுவை நீங்க பாங்காக் கூட்டிட்டுப் போலாம்னா நரேன் புலம்புறானே... அதனால சிங்கையை அழகா சுத்திக் காட்டினதே போதும் டீச்சர். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தற உங்களுக்கு என் இதய நன்றி!

    @ வெங்கட் நாகராஜ் said...

    உற்சாகம் தந்த நற்கருத்தினைச் சொன்ன நண்பருக்கு உன் உளம்கனிந்த நன்றி!

    @ அமைதிச்சாரல் said...

    சுற்றுலாப் பதிவுகளை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  14. இளமை ஊஞ்சலாடும் வசனங்கள்!

    அருமை! சுபா சுபாதான்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சார்- வைஜெயந்திக்கும் வாசகர்களுக்கும் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. துளசி டீச்சர் மாதிரி ஜாம்பவான்களுடன் இந்த சிறியவனையும் இணைத்துள்ளீர்கள் மகிழ்ச்சி.

    இந்த வாரம் முழுதுமே உங்கள் வித்தியாச பாணி மிளிர்கிறது

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. ஆஹா..என்னையுமா அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.ரொம்ப சந்தோஷம் .நன்றி.

    என் பதிவைப்பார்த்து தக்‌ஷின் சித்ராவுக்கு நரேன் வைஜெயந்தி செல்வதென்றால் தகவல் தெரிவியுங்கள். சலுகை கட்டணத்தில் டிக்கெட் வாங்கித்த்ருகிறேன்:)

    ஒவ்வொரு நாளும் அறிமுகங்கள் படிக்கும் பொழுது அந்தந்த எழுத்தாளர்களின் சிறுகதையை படித்த உணர்வு ஏற்படுகின்றது.

    மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர் பணியினை மேற்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இதோ..ஞாயிற்றுக்கிழமை வரப்போகின்றது,கணேஷண்ணாவின் வலைச்சரபணி நிறைவடையப்போகின்றது என்று நினைக்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.

    May 4, 2012 8:43:00 AM GMT+0

    ReplyDelete
  18. கதா பாத்திரங்களுடன் அறிமுகம் நல்லா இருக்கு. என் பதிவின் அறிமுகத்துக்கு நன்றி.


    (இந்த வலைச்சரம் தொடுத்து முடிந்ததும் உங்க வலைப்பூவில் கதைகள் தொடருங்கள் என அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்)

    ReplyDelete
  19. வணக்கம் கணேஷ் சார்!உங்கள் வலைச்சரத்துக்கும் மைனஸ் ஓட்டா?கொடுமை!!!!!இதற்கென்றே அலைவார்கள் போலிருக்கிறது,த்தூ!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  20. சிறப்பான அறிமுகங்கள் . தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  21. பதிவர்களை பற்றிய அறிமுகம் சிறப்புங்க..மிக்க நன்றி சார்,.

    ReplyDelete
  22. இன்றைக்கு சுற்றுலாவா?? அருமை.
    சிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. எல்லோருக்கும் பயன்படும் வகையில் மிக நல்ல அறிமுகங்கள் கணேஷ். மிக்க நன்றி.

    ReplyDelete
  24. சூழ்ந்திருக்கும்
    வானக்குடையின் கீழ்- எமை
    பதிவு விமானத்தில்
    சுற்றிக் காண்பித்த நண்பரே..
    சுற்றிப் பார்த்து
    இன்பத்தில் திளைத்தோம்...

    ReplyDelete
  25. பற்றுடை சுற்றுலாப் பதிவுகள் மிக்க நன்று. கதையோட்டமும் இளமை, அருமை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  26. வணக்கம் கணேஷ் அண்ணா !
    நல்லா ஊர் சுற்றி காமித்து இருக்கீங்கள் ....
    என்னோட பதிவையும் அறிமுகம் படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா !

    ReplyDelete
  27. கணேஷ்-வசந்த்,பரத்-சுசிலா,நரேன்-வைஜயந்தி என்ற பாத்திரங்களைப்புகுத்துக் கலகிட்டிருக்கீங்க!

    ReplyDelete
  28. @ புலவர் சா இராமாநுசம் said...
    சுபாவின் பாணியை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

    @ மோகன் குமார் said...
    என் பாணியைப பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.

    @ சங்கர் நாராயண் @ Cable Sankar said...
    என்னை மதித்துப் படித்துக் கருத்திட்டமைக்கு என் உளம் கனிந்த நன்றி கேபிள்ஜி.

    @ ஸாதிகா said...
    ஞாயிறுடன் என் பணி முடிந்து விடுமே என் நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது எனற் வார்த்தைகள் எனக்கு விருக்கு சமம் ஸாதிகாம்மா. விருது தந்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  29. @ புதுகைத் தென்றல் said...
    உங்கள் விருப்பப்படியே செய்கிறேன் தோழி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ Yoga.S.FR said...
    அன்பு நண்பரே... உங்களைப் போன்ற நிறைய நட்புகளையும் உறவுகளையும் பெற்றிருக்கிறேனே... அதைவிடவா ஓட்டுக்கள பெரிது? புறந்தள்ளுங்கள், நமது பணியை நாம் தொடர்வோம், தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி

    @ சசிகலா said...
    மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி தென்றல்.

    @ Kumaran said...
    தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி குமரன்.

    ReplyDelete
  30. @ RAMVI said...
    ஆரம்ப நாட்களிலேயே இந்தச் செடிக்கு நீரூற்றியவர் நீங்கள். இன்றும் உங்களின் பாராட்டு எனக்கு உரம. மிக்க நன்றி.

    @ புவனேஸ்வரி ராமநாதன் said...
    உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.

    @ மகேந்திரன் said...
    கவிதையாய் கருத்தைச் சொல்லி மகிழவைத்த மகேனுக்கு என் இதய நன்றி.

    @ kavithai (kovaikkavi) said...
    தொடர்ந்து எனக்கு ஊக்கமளிக்கும் தங்களின் அன்புக்கு தலைவணங்கிய நன்றி.

    @ Seeni said...
    மகிழ்வளித்த தங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி.

    @ கலை said...
    உன்னுடைய வருகைக்கும் மகிழ்வளித்த கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றிம்மா.

    ReplyDelete
  31. @ சென்னை பித்தன் said...
    நீங்கள் எல்லாவறையும் படித்து ரசித்தீர்கள் என்பதில் மிக்க மகிழ்வுடன் தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  32. இண்டைக்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஊர் சுற்றுலாவா.கருவாச்சியின் அந்தச் சூரியக் கோயில் உண்மையில் என்னை பிரமிக்க வைத்தது.நன்றி ஃப்ரெண்ட் !

    ReplyDelete
  33. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அறிமுகண்க்கள் சுவாரசியமாக சொல்லிட்டு வரீங்க. கிலிபி அறிமுகத்துக்கும் நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. @ ஹேமா said...
    ஓம் ஹேமா... பாஸ்போர்ட். வீசா எண்டு ஒணடும் வேண்டாம் பாருங்கோ இப்படி உலகம் சுத்த... கருவாச்சியின் எழுத்துக்கள் எனக்கும் ரொம்பவே புடிச்சிருக்கு ஃப்ரெண்ட், உங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  35. @ Lakshmi said...
    அனைவரையும் வாழ்த்திய உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

    ReplyDelete
  36. அமர்க்களமாய் சுற்றுலா பயணப் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  37. //
    அற்புதத் தீவு பஹாமாஸ்-என்று சத்யப்ரியனும் எவ்வளவு அழகாகச் சொல்லியிரு்க்கிறார்கள்
    //

    என்னையும் மதித்து எனது பதிவின் சுட்டியை சேர்த்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டிய மற்ற சுட்டிகளையும் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  38. @ இராஜராஜேஸ்வரி said...

    சுற்றுலாப் பயணத்தை ரசித்த உங்களுககு என் மனமார்ந்த நன்றி!

    @ SathyaPriyan said...

    வாங்க சத்யப்ரியன்... மத்தவங்களோட பதிவுகளையும் படிச்சு அவங்களை உற்சாகப்படுத்தறேன்னு சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  39. அட 'ஈகிள்ஸ் ஐயும்' வந்துருச்சா ..?

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  40. என் பதிவு பற்றித் தங்கள் தளத்தில் எழுதி மேலும் பலரைப் படிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி கணேஷ் அவர்களே. மிக்க மகிழ்ச்சியும் கூட.

    ReplyDelete
  41. @ வரலாற்று சுவடுகள் said...

    ஈகிள்ஸ் ஐ-ய உருவாக்கின சுபா என் ஃப்ரெண்ட்ஸாச்சே... அவங்க வராமலா? ரசித்து, அறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி.

    @ Bharathiraja R said...

    வாங்க பாரதிராஜா! நண்பர்களின மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

    ReplyDelete
  42. என்ன கணேஷ் கலக்கிறீங்க... ஒரு பக்க கதை போன்று ஆரம்பித்து அதிலே இத்தனை வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி புதுமையான ஒன்று பாராட்டப்படவேண்டிய ஒன்று தொடரட்டும் உங்கள் பணி........
    வாழ்த்துகளுடன்
    சிங்கமணி

    ReplyDelete
  43. சுற்றுலா அனுபவக் குறிப்பு சிறப்பான தொகுப்பு . என் தங்கை கலை காட்டிய கோவிலும் சிறப்பான ஒரு இடம்!

    ReplyDelete
  44. சுற்றுலா அனுபவக் குறிப்பு சிறப்பான தொகுப்பு . என் தங்கை கலை காட்டிய கோவிலும் சிறப்பான ஒரு இடம்!

    ReplyDelete
  45. @ வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

    படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    @ S Singamani said...

    என்னை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

    @ தனிமரம் said...

    சுற்றுலாவை ரசித்து, எனக்கு உற்சாகம் தந்த உங்களுககு என் இதய நன்றி நேசன்!

    ReplyDelete
  46. //‘‘இது? புது டிரெஸ்! புது டைலர் ஒருத்தனைப் பிடித்திருக்கிறேன்.’’

    ‘‘சரியான திருடன் போலிருக்கிறது - முதுகுப் பக்கம் துணி வைக்கவே மறந்திருக்கிறான் வைஜ்.’’

    ‘‘நீ இன்னும திருவிளையாடல் காலத்திலேயே இரு... இதுதான் இன்றைய ஃபேஷன்!’’

    //

    :))))))) ரசித்தேன்

    ReplyDelete
  47. super...btw, akshar dhaamஇந்தியாவில் தில்லியில் உள்ளது. நல்ல தகவல்கள். நரேன் குறும்பு ரசிக்க முடிகிறது.

    ReplyDelete
  48. @ Shakthiprabha said...

    நரேன், வைஜ் குறும்பை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி! என்னது... அக்ஷர்தாமை இந்தியாவுக்கு மாத்திட்டாங்களா... (சரியா கவனிக்காம வெளிநாடுகள்ல சேர்த்துட்டேன். வேற எப்டி சமாளிக்கிறதாம்..?) ஹி... ஹி...

    ReplyDelete
  49. அனைவரையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை... புதுமை... வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete