அப்புசாமி எழுபத்தெட்டாவது தடவையாக ‘‘பாஹ்... பாஹ்...’’ என்று நீளமாக சங்கீத ஏப்பம் விட்டார். சீதாப்பாட்டி கோபமாக, ‘‘காலையிலிருந்து நான் சங்கீத பிராக்டீஸ் பண்ண விடாமல் பாஹ் பாஹ் என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். த்ரோட்டில் என்னமாவது ஸ்டக் ஆகியிருக்கிறதா?’’ என்றாள்.
அடுத்த கணம் அப்புசாமி, ‘‘நீயேதான் பாரேன்..’’ என்று மனைவிக்கு அருகில் வந்து வாயைத் திறந்தார் கார் பானெட்டைத் திறந்து காட்டுவது போல. ‘‘போதும்... போதும்... க்ளோத் யுவர் மெளத்! லார்ட் கண்ணன் என்று நினைப்போ? உங்கள் வாய்க்குள் ஹோல் யுனிவர்ஸ் இருக்கப் போகிறது. அதை நான் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளப் போகிறேன்.. பாடும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னா...’’
‘‘அடியேய்... உன்னை நான் பெண் பார்க்க வந்தபோது சசிக்க முடியாமல் பாடினாயே ஒரு பாட்டு, அந்த இழவுப் பாட்டைத் தவிர இத்தனை நூற்றாண்டாயிற்று, வேறு பாட்டு உனக்குத் தெரியுமோ? பாஹ்... இப்ப சங்கீதம் கத்துக்கிட்டு நீயெல்லாம் கழகத்துல பாடி... பாஹ்...’’ அப்புசாமிக்கு ஏப்பம் வந்தது. சீதாப்பாட்டிக்கு கோபம் வந்தது.
‘‘என் சங்கீதத்தைக் கெடுத்த உங்களுக்கு இன்றையிலிருந்து பேட்டா கட். ஒரு பைசாகூடக் கொடுக்கப் போவதி்ல்லை... ஃபங்ஷன் முடியற வரைக்கும் வீட்டுக்குள்ள வராதீங்க...’’ என்றுவிட்டு பா.மு.க. (பாட்டிகள் முன்னேற்றக் கழகம்)வுக்குப் போய் விட்டாள்.
விஷயம் வேறொன்றுமில்லை. பா.மு.க.வின் ஆண்டு விழா நெருங்குவதால் அதற்குள் சங்கீதம் கற்றுக் கொண்டு தானே பாட வேண்டுமென்று சீதாப்பாட்டி ஆசைப்பட்டு ஒரு சங்கீத வாத்தியாரை ஏற்பாடு செய்து பாட்டுக் கற்றுக் கொண்டிருந்தாள். அதற்கு அப்புசாமியின் அபார ஏப்பம் இடையூறு செய்ததால் வந்த விளைவு இது.
‘‘டேய் ரஸம், தாத்தனு ரண்டு திவஸா ஊட்டா, தின்டி ஏனு மாடுதில்லா. தும்ப பேஜாராகிதி... நோடப்பா...’’ என்றான் பீமாராவ்.
‘‘தாத்தா... பாட்டி பேட்டாவைக் கட் பண்ணி வீட்டுல சேர்க்காததால இப்படி நாயா அலையறீங்க. நீங்க கொஞ்சம் சங்கீதத்தை ரசிக்கக் கத்துக்கிட்டு பாட்டி முன்னால போயி நின்னா பாட்டி அசந்துடுவா..’’ என்றான் ரசகுண்டு.
‘‘அதுக்கு நான் என்னடா பண்ணறது?’’ என்றார் அப்புசாமி. ரசகுண்டு சமீபத்தில் தான் வாங்கிய லேப்டாப்பைத் திறந்தான். ‘‘இங்க பாருங்க தாத்தா... நான் காட்டற தளங்கள்ல இருக்கற பாட்டுக்களைக் கேளுங்க. பாடல் வரிகளைப் படியுங்க. சங்கீதஞானம் தானா வரும்...’’ என்றான்.
அப்புசாமி பரிதாபமாகப் பார்த்தார். ரசகுண்டு விளக்கினான். ‘‘தாத்தா... பாடும் நிலா பாலு -வுல எஸ்.பி.பியோட சாதாரண பாட்டுலருந்து அபூர்வமான பாட்டு வரைக்கும் கொட்டிக் கிடக்கு. கான கந்தர்வன் -ல கே.ஜே.ஏசுதாஸோட எல்லாப் பாட்டுக்களையும் கேக்கலாம். தமிழ் பாடல் வரிகள் -ல தமிழ்ப் பாடல்களோட வரிகளெல்லாம் இருக்கு. படிச்சு மனப்பாடம் பண்ணிக்கலாம்...’’
‘‘அடே ரசம், நீ சாதா ரசம் இல்லடா... பாதரசம்!’’ என்றார் அப்புசாமி மகிழ்ச்சியாக. ‘‘இன்னும் இருக்கு தாத்தா... தேன்கிண்ணம், பாசப் பறவைகள், பல்சுவை, நேயர் விருப்பம் இங்கல்லாம் நல்ல திரை இசைப் பாட்டுக் கேட்டு ரசியுங்க.’’
‘‘அட இஸ்கி! இவ்வளவு தளங்கள் இருக்காடா இசைக்கு?’’ என்றார் அப்புசாமி. ‘‘இன்னும் பாருங்க தாத்தா. கண்ணன் பாட்டு-லயும், இசை இன்பம்-லயும், ஈகரை-லயும் இருக்கற பாட்டுக்களைக் கேட்டும், கர்நாடக சங்கீத ராகங்களைப் பத்தின விஷயங்களைப் படிச்சும் நெட்டுருப் பண்ணிடுங்க தாத்தா...’’ என்றான் ரசம்.
‘‘மியூசிக்ல இவ்வளவு வெரைட்டி இருக்காடா? நான் எப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, எப்ப சீதேக்கிழவியப் பாக்கறது? அதுககுள்ள எனக்கு வயசாய்டுமேடா...’’ என்றார் அப்புசாமி.
‘‘ஆமா... இப்ப இளமை துள்ளுது. அதுக்குள்ள வயசாய்டுமாக்கும்... மியூசிக்ல இவ்வளவு வெரைட்டியான்னா கேட்டீங்க? இன்னும் இருக்கு தாத்தா. ஈழவயல்-ல போய் சிலோன் பொப் இசையக் கேட்டுப் பாருங்க... மயங்கிடுவீங்க. பிரியமுடன் வசந்த் வழங்கற ரொமான்டிக் ஆண் குரல் பாடல்களைக் கேட்டுப் பாருங்க... அப்புறம் இளையராஜா ஹிட்ஸ்-ல போய் ராக மழையில நனையுங்க. தவிர, பாட்டுக்கு்ப் பாட்டு தளத்துல வித்தியாசமான இசைக் கோலங்களை ரசியுங்க தாத்தா. இதைத் தவிர, கிணற்றுத் தவளை கிட்டப் போனா உங்களுக்குப் பிடிச்ச பாட்டை டவுன்லோடு பண்ணியே ரசிக்கலாம் தாத்தா. இதெல்லாம் முடிச்சப்புறமா றேடியோஸ்பதி-க்கு வந்து அங்க கேக்கற இசைப் புதிர்களை விடுவிச்சுப் பாருங்க தாத்தா... நீங்களும் இன்னொரு இளையராஜாவா ஆய்டுவீங்க’’ என்றான் ரசகுண்டு.
‘‘உங்களைத்தானே... நான் கேக்கற ரெண்டு கேள்விக்கு நீங்க சரியான பதில் சொன்னா யூ மே கம் இன்... இல்லன்னா பா.மு.க. ஃபங்ஷன் முடியற வரைக்கும் என் முன்னால வரககூடாது’’ என்றாள் சீதாப்பாட்டி. ‘‘எது வேணாலும் கேளு சீதே... டாண் டாண்ணு பதில் சொல்றேன்’’ என்றார் அப்பு. அவர் சொன்னது ரொம்பத் தப்பு.
‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எது?’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள்! அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது?’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா! அது பஹாடி ராகம். எப்பவும் திங்கறதுலயே இருங்க...’’ சீதாப்பாட்டி கோபமாக எழுந்து போய் விட்டாள்.
அடுத்த நாளே சீதாப்பாட்டி அப்புசாமியை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வந்தாள். ‘‘இந்தாங்க 500 ரூபாய் வெச்சுக்கங்க...’’ என்று தாராளமாக பேட்டா கொடுத்தாள். அப்புசாமி புரியாமல் பார்த்தார். ‘‘தயவுபண்ணி என்னை சமாதானப்படுத்த சங்கீதம் கத்துக்கறேன்னு உங்க ஃப்ரெண்ட்ஸோட பார்க்குல உககாந்து இன்னிக்குப் பாடின மாதிரி பாடாதீங்க. சுத்தி நாப்பது பேர் பாத்ததும், நாலஞ்சு பேர் ரூபா நோட்டுகளை பிச்சை மாதிரி போட்டதும்... ஹாரிபிள்! பா.மு.க.ல எலெக்ஷன் வர்ற நேரத்துல உங்களை இப்படி யாராவது போட்டோ எடுத்து மேகஸின்ல போட்டுட்டா என் இமேஜ் என்னாகறது?’’ என்றாள் சீதாபாட்டி.
‘அடக்கடவுளே...சீதேகிட்ட தோக்கறதே வாழ்க்கைல வழக்கமா இருந்தது. இப்ப எதேச்சையா ஜெயிச்சுட்டேன் போலருக்கே...’’ என்று அப்புசாமியின் மனசு குதியாட்டம் போட்டது.

என் அபிமான சீதாபாட்டி அப்புசாமி தாத்தா சங்கீதத்துடன் வலைச்சரத்தில் ஆஜரா.பேஷ் பேஷ்..ரொம்ப சுவரஸ்யமாக உள்ளது.வலைச்சர ஆசிரிய்ர பணியினை திறம்பட நிறைவேற்றிக்கொண்டிருக்கும் இந்நாள் வலைச்சர ஆசிரியருக்கு அன்பான வாழ்த்துக்கள் மீண்டும்.
ReplyDeleteஅப்புசாமியும் சீதாபாடியும் அசத்திவிட்டார்கள், இதனை வலைபூகள் இசைக்கா, கொஞ்சம் அசந்து தான் போனேன், அணைத்து பாடல்களையும் ரசித்துவிட்டு வருகிறேன், அருமையான கதைக்கு சூடாக ஒரு கப் காபி சாப்பிடுங்கள்...நன்றி சின்ன வாத்தியாரே
ReplyDeleteதாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களை அழகான சீதாப்பாட்டி
ReplyDeleteஅப்புசாமி தாத்தா ஜோடி மூலமாக நிறைவாக அறிமுகம் செய்தவிதம் அருமை. மிக்க நன்றி கணேஷ். வாழ்த்துக்கள்.
அப்பு தாத்தா சீதா விடம் நெகிழ்ச்சியுடன் தோற்கும் கதை கூட ஒன்று உண்டு... அது ஞாபகம் வந்து விட்டது. கபோதி, பகோடா நகைச்சுவைகளை மிக ரசித்தேன்.
ReplyDelete@ ஸாதிகா said...
ReplyDeleteமுதல் நபராக வந்து உற்சாகம் தந்ததற்கு என் இதய நன்றி. அப்புத் தாத்தா, சீதாப்பாட்டியை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமென்பதில் மிக்க மனமகிழ்வு எனக்கு!
@ seenuguru said...
சூடாக காஃபி தந்து என்னை அசத்திய சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ புவனேஸ்வரி ராமநாதன் said...
அப்புசாமி-சீதாபாட்டியை உங்களுக்கும் பிடித்திருந்ததா? மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!
@ ஸ்ரீராம். said...
அருமையான வாசிப்பும், ஆழ்ந்த ரசனையும் உங்களிடம் எப்பவுமே பார்த்து வியந்திருக்கேன் ஸ்ரீராம். இதுலயும் மிக அழகா ரசிச்சதை சொல்லி எனக்கு சார்ஜ் ஏத்திட்டீங்க. மிக்க நன்றி!
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களின் நகைச்சுவை கதா பாத்திரங்களான சீதாப்பாட்டி அப்புசாமி ஜோடிகள் மூலம் சங்கீத பதிவுகளைத் தந்தமைக்கு நன்றி. வழக்கம்போல நகைச்சுவைகளை இரசித்தேன்.
ReplyDeleteமிக அருமை:)!
ReplyDeleteஅறிமுகமாகியிருப்பவர்களுக்கு வாழ்த்துகள்!
தாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteசுவைகளில் சிறந்த நகைச்சுவையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ krishy said...
அருமைன்னு சொன்ன உங்களுக்கு நன்றி. Daily Lib பத்தி இப்பதான் கேள்விப்படறேன். அவசிய்ம் இணைக்கறோம்.
@ ராமலக்ஷ்மி said...
அருமை எனப் பாராட்டி, அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
சங்கீதஞானம் தானா வரும் தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete:))) கலக்கலா இருந்துது. ரசிச்சு படிச்சேன்.
ReplyDeleteஅடடே..அப்புச்சாமி தாத்தாவையும் சீதா பாட்டியையும் பாத்திரங்களாக பயன் படுத்திவிட்டீர்களா.. அருமை.. அருமை..ரசித்துப் படித்தேன்..நீங்கள் சுட்டிக் காட்டிய தளங்களில் சிலவற்றை கண்டிருக்கிறேன்..விடுபட்ட தளங்களைக் கண்டு சங்கீதத்தில் லயிக்கிறேன் நன்றி..
ReplyDelete@ Avargal Unmaigal said...
ReplyDeleteஅனைவரையும் வாழ்த்திய தங்களுக்கு அன்பான நன்றிகள்.
@ இராஜராஜேஸ்வரி said...
மகிழ்வு தந்த நற்கருத்திற்கு மனம் நிறைய நன்றிகள்.
@ மீனாக்ஷி said...
ரசனையுடன் படித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி
@ மதுமதி said...
அப்புசாமியை ரசித்து. இசையின்பத்தில் லயிப்பதாகக் கூறிய உங்களுக்கு என இதயம் நிறை நன்றி கவிஞரே...
தினம் தினம், இன்று யார் இன்று யார் என்று எதிர்பார்க்க வச்சதே உங்கள் வெற்றி கணேஷ்!
ReplyDeleteசீதாப்பாட்டி & அப்புசாமி தாத்தா சூப்பர் கேட்டோ:-))))
சங்கீத சுவரங்கள் ரசிக்கும் படியாக தந்த விதம் அருமை .
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் அசத்தலான பதிவுகள் தந்து கலக்கிவிட்டீர்கள் ..!
ReplyDeleteஅரை நூற்றாண்டு காணப்போகும் அப்புசாமி சீதாப்பாட்டி ஆகியோரை வைத்து செய்யப்பட்ட அறிமுகங்கள் யாவும் நன்று. கலக்கிட்டீங்க கணேஷ்!
ReplyDeleteFrankly speaking, I have been waiting for this blog quite a long time. Today, my happiness knows no bounds when you listed the websites pertaining to cine songs and other devotional cum karnatic songs in your blog with the help of ever green couple Seetha Patti-Appusamy. 1000s and 1000s of THANKS TO YOU.
ReplyDeleteஅப்பு சீதா
ReplyDeleteஇல்லை சாதா!
ரொம்ப கலக்கல்.
அப்புச்சாமியும், சீதாப்பாட்டியும் உங்க கவலையை போக்கிட்டாங்க..
ReplyDeleteபதிவும் அருமை
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைக்கு அப்பு சாமியும்,சீதா பாட்டியும் பாடல்களுக்கான பதிவுகளை சிறப்பாக அறிமுகம் செய்துட்டாங்க. அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇக்கதையின் ஒரிஜினல் குமுதத்தில் வேறு ரூபத்தில் வந்தது.
ReplyDeleteஏப்பத்துடன் அப்புசாமி ஒரு வட இந்தியரின் ஹிந்துஸ்தானி கச்சேரிக்கு போக, அவர் அந்த வித்வானால் சிறந்த வட இந்திய இசை விற்பன்னராக அடையாளம் காணப்பட்டு, சீதா பாட்டி மயக்கமடைவதாக கதை முடியும்.
அந்த ப்ப்ஹ் என்னும் ஏப்பத்தை பிருகாவாக அடையாளம் காண்பதாக கதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ துளசி கோபால் said...
ReplyDeleteநன்றாக இருந்ததுன்னு சொன்னதுல மகிழ்வோட உங்களுககு என் மனமார்ந்த நன்றி.
@ சசிகலா said...
ரசித்துப் பாராட்டி உங்களுக்கு என் இதய நன்றி.
@ வரலாற்று சுவடுகள் said...
உற்சாகம் தந்த கருத்துக்கு என் உளமார்ந்த நன்றி.
@ kg gouthaman said...
காலத்தை வென்ற அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
@ mohan baroda said...
உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி மோகன், மிக்க நன்றி.
@ கலையன்பன் said...
ReplyDeleteபாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலையன்பன்.
@ தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆமாம் பிரகாஷ். இரவு தனிமையில் யோசிக்கையில்தான் நானிருக்கிறேன் என்று வந்து என் கவலையைப் போக்கினார் அப்புசாமித் தாத்தா. இந்த வாரத்தில் உங்களின் தொடர் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி.
@ Lakshmi said...
எல்லாருக்கும வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிம்மா..
@ RAMVI said...
அப்புசாமி-சீதாப்பாட்டியை ரசித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.
@ dondu(#11168674346665545885) said...
ReplyDeleteஉங்களின் நினைவாற்றலுக்கு ஒரு சல்யூட் டோன்டு ஸார், நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. அந்த வட இந்தியப் பாடகர் பெரிய சங்கீத வித்வானாக அப்புசாமியை எண்ணி மரியாதை செய்ய சீதாப்பாட்டி மயக்கமடித்து விழுவதாக வரும். அந்தக் கதையை பதிவுகளை அறிமுகம் செய்யத் தோதாக வளைத்துக் கொண்டுள்ளேன். தங்களுக்கு என் இதய நன்றி.
வணக்கம் ஃபெரெண்ட்.இசையும் நகைச்சுவையும்தான் இயந்திர வாழ்வை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி வச்சிருக்கு.கலக்கிட்டீங்க பாட்டியையும் தாத்தாவையும் வச்சு.
ReplyDeleteஈழவயல்....பொப் இசை அறிமுகம் சந்தோஷமாயிருக்கு.உங்கள் அறிமுகங்களில் சில பதிவர்கள்பக்கம் மட்டுமே போயிருக்கிறேன்.நன்றி மற்றைய அறிமுகங்களுக்கும் !
@ ஹேமா said...
ReplyDeleteசின்ன வயசுல கேட்ட சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே பாட்டு எனக்கு ரொம்பவே ஃபேவரைட் ஃப்ரெண்ட்.. அதான் ஈழவயல்ல பாத்ததும் ஞாபகமா பகிர்ந்துட்டேன். இசை. நகைச்சுவை ரெண்டையும் ரசிச்ச உங்களுக்கு என்னோட அன்பும் நன்றியும்,
//‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எது?’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள்! அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது?’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா! அது பஹாடி ராகம். எப்பவும் திங்கறதுலயே இருங்க...’’ சீதாப்பாட்டி கோபமாக எழுந்து போய் விட்டாள். //
ReplyDeleteநன்று ரசித்தேன்....எவ்வளவு பாடல் தளங்கள்.....! மிக்க நன்றி.
சங்கீத கதையோடு அப்புசாமி ஊடாக சங்கீத ஞாணம் சொல்லி இசைப்பிரியகளுக்கு பிடித்த வ்லைகள் சொன்னவிதம் ரசனைமிக்கது றேடியோஸ்பதி என் விருப்புத் தளம் அதுவும் இப்போது திறக்க முடியாமல் இருக்கு கானாபிரபு சரி செய்வார் என நம்புகின்றேன் கணேஸ் அண்ணா!
ReplyDeleteஉங்கள் தளத்தின் நகைச்சுவையை ரசித்தேன் அதுவும் ஜோசியம் லாட்டிற்சீட்டு சூப்பர் அங்கே பின்னூட்டம் என் கைபேசியில் இருந்து போடமுடியவில்லை அதனால் இங்கே சேர்க்கின்றேன் நாளை வருகின்றேன் அங்கே அண்ணா!
ReplyDeletemasterpiece.
ReplyDelete@ Shakthiprabha said...
ReplyDeleteஉங்களின் ரசிப்பும் கருத்தும் மகிழ்வு தந்தன. மிக்க நன்றி.
@ தனிமரம் said...
எனக்கும் ஏன்னே புரியல நேசன், றேடியோஸ்பதில பதிவு வந்து நாளாகுது, பாக்கலாம், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி,
@ அப்பாதுரை said...
நம் மதிப்புக்குரியவர்களிடம் பாராட்டுப் பெறுவது என்றுமே உயர்வனது, உங்களின் பாராட்டும் அவ்விதமே அப்பா ஸார், மிக்க நன்றி,,,
வாரம் முழுதும் ஆரவாரம் தான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்குறீங்க.. புதுசு புதுசா யோசிச்சு.
ReplyDelete@ middleclassmadhavi said...
ReplyDeleteமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி!
@ ரிஷபன் said...
ஸ்ரீரங்கத்தாரின் பாராட்டு எனக்கு திருநெல்வேலி அல்வாவுக்குச் சமம். மிக்க நன்றி ரிஷபன் ஸார்!
பல்சுவைப் பதிவைக் குறிப்பிட்டு எழுதிய மேன்மைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteSP.VR.சுப்பையா
@ SP.VR. SUBBIAH said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!
சுவாரஸ்யமான அறிமுகங்கள்.. கலக்கலான நகைச்சுவை.
ReplyDeleteஹை அப்புசாமி, சீதாபாட்டி எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்கள். கானகந்தர்வன் அறிமுகத்துக்கு மிக்க நன்றி
ReplyDelete@ அமைதிச்சாரல் said...
ReplyDeleteநகைச்சுவையை ரசித்த உங்களுககு நன்றிகள் பல!
@ புதுகைத் தென்றல் said...
உங்களுக்குப் பிடித்த கேரக்டர்கள் வாயிலாகவே தளம் அறிமுகம் ஆனது கூடுத்ல மகிழ்வுதானே... உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
அன்பரே.. என் பள்ளி பருவத்தை நீனைவுபடுத்தி விட்டீர்கள். நீங்கள் பதிவில் பிரபலமான கதாபாத்திரங்கள் அப்பு சீதா பாட்டியின் அபிமான ரசிகன் அவர்கள் அடிக்கும் லூட்டிகளை வெகுவாக படித்து ரசித்திருக்கேன். பதிவுலகில் வந்தவுடன் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும், எனது பதிவுகளான பா.நி.பா, மற்றும் பாசப்பறவைகள் தங்கள் பதிவில் இணைத்து அனைத்து சீனியர் பதிவர்களின் பார்வைக்கு வைத்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி. அத்துடன் புன்னகை பூக்கட்டும் என்ற தளத்தின் தொடர்பு பாசப்பறவைகள் தளத்தில் தந்துள்ளேன் அன்பர்கள் அதிலும் சென்று நகைச்சுவையுடன் இனிய பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி கனேஷ் சார்.
ReplyDeleteappusami seetha patti moolam pala thalangalai intro seithatharku nandri arumai
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ் அருமையான இசை வலைப்பதிவுகளோடு றேடியோஸ்பதியை இணைத்தமைக்கும் மிக்க நன்றி சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கின்றீர்கள் :)
ReplyDelete