Tuesday, May 8, 2012

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி

அழகுக் குட்டிச் செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்துப் போனேன்

 ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

எத்தனை முறை இவ்வரிகளைப் படித்தாலும் மனதிற்குள்ளே ஒருவித பரவசம் பரவி கண்களில் கண்ணீர் வருகிறது. எத்தனை கவலைகள் மனதில் குடிக்கொண்டாலும் அவற்றையெல்லாம் ஒரு நொடியில் காணாமல் செய்துவிடுகிறது குழந்தையின் சிரிப்பு. என்னை விட்டால் பதிவு முழுக்க குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பேன். அதனால் குழந்தைகள் பற்றிய நண்பர்களின் பதிவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பரிந்துரைகள் சற்று பெரிது என்பதால் பொறுமையுடன் அனைத்தையும் படிக்கவும்.

ஒரு குழந்தை உயிர்ப்பெறுவதை அழகிய கவிதையாய் வடிக்கும் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்கள் மற்ற விசயங்களைப் பற்றி ஒன்றிரண்டு பதிவுகள் இட்டிருந்தாலும் அதிகமான பதிவுகள் குழந்தைகளைப் பற்றியதாகும். ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய தளம்.

பிறந்த  குழந்தைகளுக்கு தாயின் அன்பிற்கு அடுத்தப்படியாக தேவைப்படுவது தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசிய குறிப்புக்களை பகிர்ந்து கொள்கிறது 4Tamilmedia தளம்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அவர்களை எளிதில் நோய்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதுவும் தற்போது கோடை வெயில் வேறு துவங்கிவிட்டது. குழந்தைகளுக்கு வெயிலினால் வரக்கூடிய வியர்க்குருவைத் தடுப்பது பற்றி கூறும் டாக்டர் ராஜ்மோகன் அவர்கள் குழந்தைகள் நலன் பற்றி மேலும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

குழந்தைகளை தூங்க வைப்பது என்பதும் ஒரு சுகமான அனுபவமாகும். இன்று எத்தனை பெற்றோர்கள் தாலாட்டு பாடல் பாடி தூங்க வைக்கிறார்கள்? எனத் தெரியவில்லை. தாலாட்டுப் பாடத்தெரியுமா? எனக் கேட்கும் நண்பர் குணா அவர்களின் பதிவை படிக்கும் போது என் தங்கையை தோளில் சுமந்து பாடிய தாலாட்டு தான் நினைவுக்கு வந்தது. நீங்களும் உங்கள் குழந்தைகளை தாலாட்டு பாடி தூங்க வைக்க முயற்சி செய்யுங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலையாகும். இதனையெல்லாமா படித்து தெரிந்துக் கொள்வது? எனக் கருதாமல் நண்பர் பாலா அவர்களின் "குழந்தை வளர்ப்பு" என்ற பதிவையும், நண்பர் உதயசந்திரன் அவர்களின் "தாயின் கருவிலிருந்து கல்வி" என்ற பதிவையும் அவசியம் படியுங்கள்.

வளரும்  குழந்தைகளுக்கு அவசியமானது விளையாட்டு. ஆனால் இன்று விளையாட்டு என்றாலே அதிகமான குழந்தைகளுக்கு தெரிவதெல்லாம் கணினி விளையாட்டுக்கள் மட்டும் தான். தான் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்களை விவரிக்கும் நண்பர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் அவர்களின் ஓடி விளையாடு பதிவு என்னுடைய சிறு வயது காலங்களை பிரதிபலிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் மறக்கமுடியாத அனுபவங்களில் ஒன்று சர்க்கஸ். புத்தகங்களில் மட்டுமே பார்த்த (அப்போது டிவி இல்லை) யானை, சிங்கம், புலி, நீர் யானை போன்ற விலங்குகளை நேரில் கண்ட போது கொண்ட உற்சாகம் இப்போதைய சர்கஸில் இல்லை. சமீபத்தில் பார்த்து வந்த சர்க்கஸ் அனுபவங்களை பகிர்கிறார் நண்பர் சேலம் தேவா அவர்கள்.

மழலைகளின் மகத்துவம் தெரியாத மடையர்கள் செய்யும் கொலைக்குற்றம் சிசுக்கொலை. சிசுக் கொலை பற்றி சற்று காட்டமாகவே பேசுகிறது நண்பர் சீனி அவர்களின் சிசுக் கொலை கவிதை.

குழந்தைகளைப் பற்றி படிக்கும் போது தாயின் பெருமைகளைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. தாயின் அன்பினை கவிதைகளாய் வடிக்கும் பதிவுகளையும் படித்து ரசியுங்கள்.

சகோதரி காயத்ரி தேவி அவர்களின் என்னில் கலந்து விட்டவள் நீ...   

சகோதரி நிலாமதி அவர்களின் அம்மா உன் அன்பு உள்ளவரை

நண்பர்  கோகுல் அவர்களின்  அம்மாவே போதும்

நண்பர் மதுரை சரவணன் அவர்களின் பெற்ற மனம்

நீண்டநாள் பிரிந்திருக்கும் அம்மாவை சந்திக்க செல்லும் மகனைப் பற்றிய நண்பர் கணேஷ் அவர்களின் நான் இருக்கிறேன் அம்மா..! சிறுகதையின் முடிவு உங்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிடும்.

தாயின் அன்பினை அதிகம் பேசும் நாம் ஏனோ தந்தையைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தந்தையின் அருமைகளை கவிதைகளாய் வடிக்கும் பதிவுகளையும் கொஞ்சம் படித்து ரசியுங்கள்.

சகோதரி ஆனந்தி அவர்களின் அப்பாவைப் பற்றி...!

நண்பர் ரியாஸ் அவர்களின் தந்தையே உன்னை போற்றுகிறோம்...!

நண்பர் நவீன் ப்ரகாஷ் அவர்களின் அப்பா...

கவிதைகளுக்கு  விளக்கம் தேவையில்லை என்பதால் தலைப்பை மட்டும் மேலே கொடுத்துள்ளேன். அவசியம் அவைகளை படியுங்கள்.

அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:

பதிவுலகில் இவ்வளவு டாக்டர்களா?

இறைவன்  நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!

- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித் 

33 comments:

  1. சபாஷ் பாஸித்! குழந்தைகள் உலகத்தையும் அவர்கள் இழந்த விளையாட்டுகளையும், குழந்தை வளர்ப்பையும். தாய்மையின் பெருமையையும். தந்தையின் அருமையையும் ஒரே சரத்தில் தொடுத்து அசத்தி விட்டீர்கள். என்னுடைய சிறுகதையையும் நீங்கள குறிப்பிட்டிருப்பது கூடுதல் இனிப்பு. இதயம் நிறைந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள் உங்களுக்கு. நல்வாழ்த்துகள் அறிமுகம் பெற்றவர்களுக்கு!

    ReplyDelete
  2. ஆஹா...குழந்தைகளை பற்றி தெரிந்துக்கொள்ளவும், குழந்தைகள் பெற்றோரை பற்றி சொன்னதகவல்களை பார்க்கவும் அழகோ அழகு

    தொகுத்தவிதம் அருமை

    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. ஆளைக் கடத்திப் போகும்
    உன் கன்னக் குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்

    tதிரும்பத் திரும்ப படிக்கவைக்கும் அருமையான பதிவுகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்களில் சிலரைத் தெரியும்.தெரியாத முகங்களையும் இனி தெரிந்து கொள்கிறேன்..
    வலைச்சர ஆசியராக பொறுப்பேற்பவரின் புகைப்படத்தை என் தளத்தில் வைப்பது வழக்கம்.
    உங்களின் படத்தை இப்போது வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்த்துச் செல்லுங்கள்..

    ReplyDelete
  8. மிகவும் அருமை. புது வகையான அறிமுகம் சூப்பர் சகோ.

    ReplyDelete
  9. குழந்தைகளை வைத்து ஒரு பதிவு இட்டதற்கு மகிழ்ச்சி.என் பதிவையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  10. //அழகுக் குட்டிச் செல்லம்
    உன்னை அள்ளித் தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்துப் போனேன்


    ஆளைக் கடத்திப் போகும்
    உன் கன்னக் குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்// அழுகையை அடக்க முடியவில்லை சகோ. 3 மாதம் முன்பு இரண்டு வயது ஆண் குழந்தையை டாக்டரின் மெத்தனத்தால் தூக்கி கொடுத்து விட்டு ஆறுதலற்று இருக்கும் போது இந்த வரிகள் வலிகளாக இறங்குகின்றன.

    ReplyDelete
  11. anne!

    kadalukku aruke-
    karai naanum!

    nantri!

    melum ungalathu-
    arimukangalukku mikka nantri!

    ReplyDelete
  12. நல்லதொரு பாடலுடன் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அதுவும் குழந்தைச் செல்வங்கள் பற்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அறிமுகங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான பாடலின் ஆரம்பத்துடன் அருமையான அறிமுகங்கள். பல எனக்கு புதியவை. மிக்க நன்றி

    ReplyDelete
  15. அறிமுகங்கள் எல்லாமே நல்லா இருக்கு. அனை வருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

  16. ஸலாம்

    சகோ பாசித் ... நல்லா இருக்கு பா ....

    நல்லா எழுதுறீங்க .

    ===================================
    @சகோ feroz

    // 3 மாதம் முன்பு இரண்டு வயது ஆண் குழந்தையை டாக்டரின் மெத்தனத்தால் தூக்கி கொடுத்து விட்டு ஆறுதலற்று இருக்கும் போது இந்த வரிகள் வலிகளாக இறங்குகின்றன.//

    இழப்புகள் ஏற்படும் போது

    இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 1525

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா

    இதன் பொருள் :

    நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525

    இன்ஷா அல்லாஹ் ... இதை விட சிறப்பானதை தர அல்லாஹ் போதுமாவன் .....

    ===========================================

    ReplyDelete
  17. நன்றி பாஸித் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும். சகோ சிந்தனை, ஆறுதலான வார்த்தைக்கு நன்றி. தினமும் இந்த துவாவைத்தான் ஓதிக் கொண்டிருக்கிறேன். அழகான கவிதை. உணர்வுகளை தொட்டதால் அழுது விட்டேன். சில நேரங்களில் குழந்தைகளோடு சேர்ந்து நாமும் குழந்தையாகி விடுகிறோம் என்பது உண்மை.

    ReplyDelete
  20. அருமையான தொகுப்பு நண்பா...வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. mmm...... eduththa udanae kulanthaigal patriya post -aa???? oorukku oru phone pottu amma kitta sollida vendiyathuthaan :)))


    alagaana thoguppu basith, vaalthukkal :)

    ReplyDelete
  22. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. வலைசரத்தில் நான் படித்திராத தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. மிக அருமையான வித்தியாசமான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும், வாழ்த்துக்கள். எனது பதிவையும், அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. :)

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. அருமையான பதிவு நண்பா..
    தேவையான பதிவும் கூட.

    என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  27. @Feroz

    தங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை சகோ.! தங்களுக்கு இறைவன் போதுமானவன்.

    ReplyDelete
  28. வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றி! நேரமின்மை காரணமாக தனித் தனியாக பதில் அளிக்க முடியவில்லை.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. இன்னும் திருமணம் ஆகாததால் குழந்தை வளர்ப்பு பற்றி பெரிதாக படிக்கவில்லை..

    ஆனால், அனைத்து கவிதைகளும் அருமை..

    குறிப்பாக நண்பர் ரியாஸ் அவர்களின் தந்தையே உன்னை போற்றுகிறோம்...! கவிதை

    அதே போல...
    நண்பர் மதுரை சரவணன் அவர்களின் பெற்ற மனம் கவிதை.

    நான் இருக்கிறேன் அம்மா..! கதை உண்மையில் நெஞ்சைக் கனக்க வைத்தது!

    ReplyDelete