கம்பன்
காளிதாசன்
ஷெல்லி
இவர்களின்
வரிகள்
கற்றுக் கொடுத்தது
கவிதையை
பாரதி
காற்று வெளியிடைக் கண்ணம்மா ,-- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-- அமுத
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து
மாற்றும்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் --எனை
வெற்று நினைவின்றித் தேற்றியே -இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!--இந்தக் (காற்று )
நீயென தின்னுயிர் கண்ணம்மா!--எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர்
போயின, போயின துன்பங்கள் --நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன்
வாயினி லேயமு துருதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த்
தீயினி லேவளார் சோதியே!-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று )
என் முண்டாசுக் கவிஞனின் கண்ணாம்மா பாடல், எப்போது வாசித்தாலும் கேட்டாலும் தித்திக்கும் தேன் அமுது
''அந்த''
இந்த
கவிஞர்கள் பேச்சில் வீரியம் குன்றா
சாய மனிதர்கள் சிலர் நாட்டினில்
வெட்கிறேன்
என் பாரதிக்கு நிகர் பாரதியே
மெய்யறிவார்கள்
பாரதியை வாசித்தவர்கள்
எத்தனயோ
கவிஞர்கள்.. கவிதைகள்...
எழுத்து, சொல், நடை
வாசிப்பில் எனை ஆழ்த்திய
தற்கால கவிஞர்
இதோ
காதல் நீர்
கொண்டு வருகிறார்கள்
நம் நவ காளிதர்கள்
கவிதை வீதியில்
காதல் நியாயம் கேட்கிறார்
கவிஞர் சௌந்தர்
மழையாடிய
பொழுதுகளில்
நம்மையும் நனைக்கிறார்
காதல்
நினைவுச் சத்தத்தை
அழகாய் சொல்கிறார் தோழர் அனீஷ்
நாளை
சிரிக்க சிந்திக்க வைக்க
வருகிறார்கள் வலையுலக வல்லவர்கள்
மீசைக்காரரை எனக்கும் மிகவும் பிடிக்கும். கவிஞன் என்றால் முதலில் அவர்தான் நினைவில் நிற்பார். நவ காளிதாசர்களின் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். அழகுத் தமிழில் எழுதி சுவாரஸ்யமாக வலைச்சர வாரத்தைக் கொண்டு செல்லும் உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவரும் பெருமைக்கு உரியவர்களே! நன்றி
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
ada nalla arimukangal!
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட எவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை..,
ReplyDeleteநாளை சிரிக்கவும் சிந்திக்கவும் வருவேன் .. :)
இவர்கள் நவ காளிதாசர்கள் மட்டுமல்ல.நவீன காளிதாசர்கள்...
ReplyDeleteநவகாளிதாசர்கள் பதிவு நல்லா இருக்கு. வழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே!
@கணேஷ்
ReplyDelete@புலவர் சா இராமாநுசம்
@Seeni
@வரலாற்று சுவடுகள்
@விச்சு
@Lakshmi
@AROUNA SELVAME
பணிச் சுமை
நிறை தோழமைகளை அறிமுகம் செய்யமுடியவில்லை
பதிவுகளில் முனைகிறேன்
கருத்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்
கவிஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் எளிய கவிதை உத்தியைப்
ReplyDeleteபயன்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் சூப்பர்!
ReplyDeleteஇன்றைய நவகாளிதாசர்கள்....சிறப்பான கவிஞர்கள்.தேடல் தொடரட்டும் !
ReplyDeleteஎனக்கு மீண்டும் ஒரு வலைச்சர அறிமுகம்.
ReplyDeleteஆறிமுகத்துக்கு நன்றி.
அறிமுகமான மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் அறிமுகம் செய்யும் விதம் அழகு.... வாழ்த்துக்கள் செய்தாலி.
அழகிய கவி அறிமுகங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@NIZAMUDEEN
ReplyDeleteமிக்க நன்றி உறவே
@கலையன்பன்
மிக்க நன்றி தோழரே
@ஹேமா
மிக்க நன்றி தோழி
@சே. குமார்
மிக்க நன்றி தோழரே
@மகேந்திரன்
மிக்க நன்றி தோழரே
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇத்தனை கவிஞர்கள் அறிமுகத்திற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. மேலும் தொடருவேன்..
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com