07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 23, 2012

நவ காளிதசர்கள்



கம்பன் 


காளிதாசன் 



ஷெல்லி 

 இவர்களின் 
 வரிகள்  
கற்றுக் கொடுத்தது 
கவிதையை 



பாரதி 


காற்று வெளியிடைக் கண்ணம்மா ,-- நின்றன் 
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-- அமுத 
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து 
மாற்றும்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் --எனை 
வெற்று நினைவின்றித் தேற்றியே -இங்கோர் 
விண்ணவ னாகப் புரியுமே!--இந்தக் (காற்று )

நீயென தின்னுயிர் கண்ணம்மா!--எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர் 
போயின, போயின துன்பங்கள் --நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன் 
வாயினி லேயமு துருதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த் 
தீயினி லேவளார் சோதியே!-என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று )

 என் முண்டாசுக் கவிஞனின் கண்ணாம்மா பாடல், எப்போது வாசித்தாலும் கேட்டாலும் தித்திக்கும் தேன் அமுது 

''அந்த'' 
இந்த 
கவிஞர்கள் பேச்சில் வீரியம் குன்றா 
சாய மனிதர்கள் சிலர் நாட்டினில் 
வெட்கிறேன்
என் பாரதிக்கு நிகர் பாரதியே 
மெய்யறிவார்கள்
பாரதியை வாசித்தவர்கள் 



எத்தனயோ 
கவிஞர்கள்.. கவிதைகள்...
எழுத்து, சொல், நடை 
 வாசிப்பில் எனை ஆழ்த்திய 
தற்கால கவிஞர் 



இதோ 
காதல் நீர் 
கொண்டு வருகிறார்கள் 
நம் நவ காளிதர்கள்  

காதலியில் 
வெண் நிறத்தை தேடும் 
நவ உலகில் திராவிடம் தேடுகிறார் 
துரிகைத் தூரலில் கவிஞர்  மதுமதி 



இளகி உதிரும் துளிகளில் 
காதல் ரசங்கள் 

 கவிஞர் சத்ரியன்
 மனவிழியில் ஈர்க்கும் 
தாய்ப் பசு 
 

கவிதை வீதியில் 
 காதல் நியாயம் கேட்கிறார் 
  கவிஞர் சௌந்தர்

காதலின் 
வேதியல் மாற்றத்தை 
சொல்லிச் செல்கிறார் முனைவர் குணசீலன் 


காதல் ஞாபகங்களுடன் 
தோழர் மனசு சே குமார் 


மழையாடிய 
பொழுதுகளில் 
நம்மையும் நனைக்கிறார் 


 மிதிவண்டி காலங்களில் 
 நினைவுத் துளிகளை 
உதிரச் செய்கிறார் தோழர் அரசன் 


காதல் 
நினைவுச் சத்தத்தை 
அழகாய் சொல்கிறார் தோழர் அனீஷ்




 நாளை 
சிரிக்க சிந்திக்க வைக்க 
வருகிறார்கள் வலையுலக வல்லவர்கள் 

16 comments:

  1. மீசைக்காரரை எனக்கும் மிகவும் பிடிக்கும். கவிஞன் என்றால் முதலில் அவர்தான் நினைவில் நிற்பார். நவ காளிதாசர்களின் அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். அழகுத் தமிழில் எழுதி சுவாரஸ்யமாக வலைச்சர வாரத்தைக் கொண்டு செல்லும் உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்திய அனைவரும் பெருமைக்கு உரியவர்களே! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. அறிமுகப்படுத்தப்பட்ட எவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை..,

    நாளை சிரிக்கவும் சிந்திக்கவும் வருவேன் .. :)

    ReplyDelete
  4. இவர்கள் நவ காளிதாசர்கள் மட்டுமல்ல.நவீன காளிதாசர்கள்...

    ReplyDelete
  5. நவகாளிதாசர்கள் பதிவு நல்லா இருக்கு. வழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  7. @கணேஷ்

    @புலவர் சா இராமாநுசம்

    @Seeni

    @வரலாற்று சுவடுகள்

    @விச்சு

    @Lakshmi

    @AROUNA SELVAME



    பணிச் சுமை
    நிறை தோழமைகளை அறிமுகம் செய்யமுடியவில்லை
    பதிவுகளில் முனைகிறேன்

    கருத்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  8. கவிஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் எளிய கவிதை உத்தியைப்
    பயன்படுத்தியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அறிமுகங்கள் சூப்பர்!

    ReplyDelete
  10. இன்றைய நவகாளிதாசர்கள்....சிறப்பான கவிஞர்கள்.தேடல் தொடரட்டும் !

    ReplyDelete
  11. எனக்கு மீண்டும் ஒரு வலைச்சர அறிமுகம்.

    ஆறிமுகத்துக்கு நன்றி.

    அறிமுகமான மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    நீங்கள் அறிமுகம் செய்யும் விதம் அழகு.... வாழ்த்துக்கள் செய்தாலி.

    ReplyDelete
  12. அழகிய கவி அறிமுகங்கள்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. @NIZAMUDEEN

    மிக்க நன்றி உறவே

    @கலையன்பன்

    மிக்க நன்றி தோழரே

    @ஹேமா

    மிக்க நன்றி தோழி

    @சே. குமார்

    மிக்க நன்றி தோழரே

    @மகேந்திரன்

    மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  15. இத்தனை கவிஞர்கள் அறிமுகத்திற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. மேலும் தொடருவேன்..
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது