ஆதலினால் காதல் செய்வீர்!
➦➠ by:
பா.கணேஷ்
வஸந்த் பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டு, ‘வொய் திஸ் கொலவெறிடி’ ‘ஹம்’ பண்ணியபடி வந்தான். கணிப்பொறியில் மூழ்கியிருந்த கணேஷ் நிமிர்ந்தான்.
‘‘வஸந்த்! ஹிஸ்டரிய க்ளிக் பண்ணிணா ஒரே அம்மணக்குண்டி படமா வர்றதுf. ஆபீஸ் கம்ப்யூட்டர்லல இதெல்லாம பாககாதன்னு சொல்லியிருக்கேன்ல...’’ என்றான் அதட்டலாக.
‘‘அதுவா... நேத்து காதல் கவிதைகள் தேடிப் படிச்சுட்டிருந்தேன் பாஸ்! நடுவுல ரிலாக்ஸேஷனுக்காக ஒண்ணு’’
‘‘கவிதையா..? என்னடா திடீர்ன்னு கவிதை மேல திடீர்னு ஈ.பா?’’
‘‘சமீபத்துல பெங்களூர் ட்ரெய்ன்ல பாத்த ஒரு ஃபைவ் பை ஃபைவ் சாலுமாலுக்கு கவிதைமேல செம இன்ட்ரஸ்ட் அதான் நாலு கவிதைய எடுத்துவிட்டு மாதமாடிக்ஸ் பண்ணலாம்னு...’’ என்றான் கண்ணாடி பார்த்து தலைசீவியபடி வஸந்த்.
‘‘நீயும்தான் பல வருஷமா ட்ரை பண்றே... ஒண்ணும் பேரலை. முன்ன ஒரு தடவை ஒரு பொண்ணை... அவ பேரென்ன ஜமுனா சிங்கா? கவிதை சொல்லி மடக்கப் பாத்தியே...’’
‘‘ஆமா பாஸ்... ஹேமாவோட காதல் சொக்லேட்-னு ஒரு கவிதைய வலையில படிச்சதைச் சொன்னேன். இம்ப்ரஸ் ஆன மாதிரிதான் பாத்தா... சட்டுன்னு பனித்துளி சங்கரோட தனிமைச் சிறையிலும் உயிர்த்தெழும் ஞாபகங்கள்ன்னு இன்னொன்ணையும் சொன்னேன் பாஸ்! அப்புறம் மெதுவா உங்களுக்கு தொப்புள்ல ஒரு மச்சம் இருக்கணுமேன்னு ஆரம்பிச்சேன். உடனே ‘வான்ட் டு ஸீ’ன்னு கிட்ட வந்தா பாஸ்... ஆடிப்பூட்டேன்!’’
‘‘உனககுன்னு வந்து மாட்றது பாரு...’’ கணேஷ் சிரித்தான். மானிட்டரைப் பார்த்து ‘ஷ்ய்’ என்று விசிலடித்தான். ‘‘என்ன பாஸ்... தேனம்மை லெக்ஷ்மணனோட மணல் சிற்பம் கவிதையப் படிச்சிங்களா, இல்ல... சத்ரியனோட தீயாடல் படிச்சிங்களா?’’
‘‘ரெண்டும் இல்லடா... கோவை.மு.சரளா எழுதின நாட்குறிப்பின் பக்கங்கள்-2 (நாடித் துடிப்பு)ன்னு ஒண்ணு எடுத்திருக்கியே... எங்கடா புடிக்கிற இதையெல்லாம்..?’’
‘‘நம்ம ரசிகை யாழினின்னு ஒருத்தி. ஏதாவது நல்ல கவிதையப் படிச்சா உடனே எஸ்.எம்.எஸ்.ல லிங்க்கை அனுப்பி வெச்சுடுவா. பாஸ்! உங்களுக்கு ‘அந்த ஏழாவது ஆள் வரட்டும்’ ஜோக் சொன்னேனோ..?’’
‘‘உதைபடுவ வஸந்த் மறுபடி அந்த ஜோககைச் சொன்னா... அந்த சங்கர் கேஸ்ல நோட்ஸ் எழுதி வெச்சுட்டியோ..’’
‘’‘அதெல்லாம் ஆச்சு பாஸ்! இன்னிக்கு டாக்டர் நரேந்திரன் கேஸ் ஹியரிங் இருக்கு. ஹலோ, அது யாரு?’’
அந்தப் பெண் உள்ளே வந்தாள். இருபது வயதிருக்கலாம். கண்களில் அடிக்கடி மையிட்டு அழித்த சுவடு தெரிந்தது. பெரிய கண்கள். வட்ட முகம், சற்றுக் குட்டையான பெண். கச்சிதமான உடலமைப்பு. நன்றாக ஓடுவாள் போலிருந்தது.
‘‘ஸார்... உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்...’’ என்றாள் கணேஷிடம். ‘‘என்கிட்ட கூட தனியாப் பேசலாமே...’’ என்றான் வஸந்த்.
‘‘ஷட்டப் வஸந்த்! என்ன விஷயம்?’’ என்றான் கணேஷ்.
‘‘தினம் தவறாம யாரோ எனக்கு ஒரு கவிதையும், ரோஜாப் பூவையும் வீட்டு வாசல்ல வெச்சிட்டு ஓடிடறாங்க. யார்ன்னு கண்டுபிடிக்கவே முடியலை. ஒரே மென்ட்டல் டார்ச்சர் ஸார்...’’ மெலிதாக அழுதாள்.
‘‘உங்க பேர் என்ன?’’
‘‘தீபா!’’
‘‘தீபான்னா பிரகாசமான்னா இருக்கணும். அழறிங்களே...’’ என்றான் வஸந்த்.
‘‘அந்தக் கவிதைகளைக் கொண்டு வந்திருக்கீங்களா?’’
அவள் எடுத்து நீட்டியதை வாங்கி சிலவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டினான் கணேஷ்.
ஏனடி இப்படி அழகானாய்!,
அவளிடம் அப்படி என்ன கேட்டு விட்டேன்?
எனை நீ மறந்ததேனோ?
பெண்ணே, நீ போனதெங்கே?
உற்றுப் பாரடி
வஸந்த் சிரித்தான். ‘‘பாஸ்! இவங்க தெருவுல இருக்கற ஏதோ ஒரு ரோமியோவோட வேலையா இருக்கும். நான் வேணா பொடிநடையா போய் விசாரிச்சுட்டு வரட்டுமா?’’
‘‘ஏய், வஸந்த், சும்மாரு! பாரும்மா... இந்த மாதிரி சின்ன கேஸ்லல்லாம் இறங்க எங்களுக்கு இப்ப டயமில்ல. நீங்க கெளம்புங்க...’’ என்றான் கணேஷ்.
‘‘ஓ.கே. ஸார்...’’ அந்தப் பெண்ணின் கண்களி்ல் ஏமாற்றம் தெரிந்தது. அது வஸந்த்தின் கண்களிலும் பிரதிபலித்தது. வஸந்துக்கு பெண்கள் என்றாலே தனி அவஸ்தைதான். அவள் வெளியேற, ‘‘குட்டி நல்லா இருந்துச்சு பாஸ்... இப்படி திருப்பி அனுப்பிட்டிங்களே...’’
‘‘கு்ட்டிங்கற வார்த்தையை உபயோகிக்காத வஸந்த்! அசிங்கமா இருககு!’’
‘‘கன்னிகைன்னு சொல்லலாம். ஆனா நிச்சயமாச் சொல்ல முடியாதே பாஸ்!’’
‘‘உனககு விமோச்சனமே கிடையாதுரா...’’ கணேஷ் மீண்டும் கவிதைகளில் ஆழ்ந்தான். ‘‘வஸந்த்! மெளனத்துக்குரிய விளிம்புகள்ன்னு இளங்கோவும், காதல் வெண்பாக்கள்ன்னு சிவகுமாரனும் அருமையா எழுதியிருக்காங்க பாரு. அதுபோகட்டும், அமைதி்ச்சாரல்- வாசனையாய் ஒரு வானவில்ன்னும், ராமலெக்ஷ்மி- சிற்றருவியின் சங்கீதம்ன்னும், ரமேஷ் ராக்ஸன் ஒரு விடியற்காலையில்ன்னும் அருமையான இயற்கை வர்ணனைக் கவிதைகள் எல்லாம் நெட்ல எழுதியிருககாங்களே... இதெல்லாம் உன் கண்ல படாதா?’’
‘‘அதெல்லாம் நீங்க படிக்கிறதுக்கு பாஸ்! எனக்கு வேண்டியது என்ன? ஸிம்பிளா ஃபிகர் மடிக்கிறதுக்கு ஒரு கவிதை. அவ்ளவ் போதும்...’’
‘‘அப்ப... காதல் ஸ்பெஷலிஸ்ட்டான தபூசங்கர் கவிதைல ஒண்ணை எடுத்து விடு. எனக்கு இரண்டு காதலிகள்ன்னு எவ்வளவு ரசனையா எழுதிருக்கார் பாரு... அப்புறம்... நினைவுகளின் வருடல்கள்ன்னு சசிகலா எழுதியிருக்கற இந்தக் கவிதையப் புடிச்சுக்கோ... அப்புறம்... பார்வையின் பதியல்கள்ன்னு மலிக்காவும், மழையும் முத்தமும்ன்னு மதுமதியும் எவ்வளவு அழகா எழுதியிருக்காங்க பாரு..’’
வஸந்த் படித்துவிட்டு விசிலடித்தான். ‘‘எனக்கு இது போதும் பாஸ்!...’’ என்றான்.
‘‘அது சரி... இதென்ன நோட்பேட்ல தனியா சில ப்ளாக் அட்ரஸ் எடுத்து வெச்சிருக்கே?’’
‘‘அதுவா பாஸ்! ப்ளாக்ல நிறையப் பேரு படக் படக்னு எழுதறதை நிப்பாட்டிட்டு காணாமப் போயிடறாங்க. அந்த மாதிரி இப்ப எழுதாதவங்க ப்ளாக்ல நான் படிச்ச கவிதைகள் அது. ஆனா இப்ப படிச்சாலும் நல்லா இருக்கு பாஸ்...’’
‘‘ம்... மழைக் கவிதைகள்ன்ற சேவியரோட கவிதைகளும் சரி, பொறுத்ததுபோதும், வந்துவிடுங்கற அம்பாளடியாளோட கவிதையும் சரி... நல்லாவே இருககுடா...’’ என்றபடி நிமிர்ந்த கணேஷ் திகைத்தான். ‘‘மைகாட் வஸந்த்! மணி ஒன்பதே முககால்! நீ சைதாப்பேட்டை கோர்ட்டுக்குப் போ்ய் சங்கர் கேஸ்ல ஒரு இன்ஜங்ஷன் வாங்கிக்கிட்டு நேரா ஹைகோர்ட் வந்து என்னோட ஜாயின் பண்ணிக்கோ.. டாக்டர் நரேந்திரன் கேஸை நான் பாத்துக்கறேன்...’’ அவசரமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் கணேஷ்.

|
|
கதை வடிவில் பதிவுகள் அருமை சார்
ReplyDeleteவித்தியாசமான அருமையான அறிமுகம்
ReplyDeleteகலக்கல் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteஐடியாவும் அருமை. பிரசண்டேஷனும் மிக அருமை. ஆனால் சுஜாதாவாக இருந்தால் அந்த வார்த்தையைச் சொல்லாமல் ஒரே அ.கு படங்கள் என்று குரிப்பிட்டிருபாரோ.... அல்லது அதுவும் பத்திரிக்கை ஆசிரியர்களின் எடிட்டிங்கில் வருமோ என்னமோ... மற்றபடி எல்லாமே நேச்சுரல். அறிமுகங்களும் அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஎப்படிங்க.....!! எப்படி?
ReplyDeleteஅட்டகாசம்! 'வாத்தியார்' இருந்துருந்தால்..... நிஜமாவே ரசிச்சுருப்பார்!
@ wesmob said...
ReplyDeleteநன்றி நண்பரே...!
@ Ramani said...
வித்தியாசமான அறிமுகம் என்று ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ ஸ்ரீராம். said...
பதிவுகளைப் பற்றி அவர்கள் பேசுவதைத் தவிர மற்ற எல்லா வார்த்தைகளும் வாத்தியார் கதைகளிலிருந்தே எடுக்கப்பட்டவை ஸ்ரீராம்! ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!
@ துளசி கோபால் said...
டீச்சர்... உங்களுக்குப் புடிச்சிருந்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்! என் மனமார்ந்த நன்றி!
மிக சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறீர்கள்:)! பாராட்டுகள். சிற்றருவியின் சங்கீதம் இங்கு ஒலிப்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஅறிமுகமாகியிருக்கும் மற்றவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி கணேஷ். என் கவிதைகளை, சுஜாதா படித்து, பாராட்டியது போன்ற ஒரு உணர்வு, மகிழ்ச்சி எனக்கு.
ReplyDeleteதுள்ளலான நடை.
வித்தியாசமான அறிமுகங்கள் சார்...
ReplyDeleteதொடருங்கள்.
@ ராமலக்ஷ்மி said...
ReplyDeleteசுவாரஸ்யமான தொகுப்பு என்ற பாராட்டிற்கும், அனைவருக்கும் வாழ்த்துச் சொன்னதற்கும் என் இதயம்நிறை நன்றிகள் தங்களுக்கு!
@ சிவகுமாரன் said...
நல்ல கவிதைகளுக்கு சிறந்த ரசிகர் சுஜாதா ஸார். துள்ளலான நடை என்ற தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி!
கலக்கிட்டீங்க கணேஷ்...
ReplyDelete@ தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவித்தியாசம் என்ற பாராட்டினால் உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா!
@ balhanuman said...
சுஜாதாவின் அதிதீவிர விசிறியான உங்களின் வாழ்த்து எனக்கு யானை பலம். தங்களுக்கு என் இதய நன்றி!
தலைவரே பாராட்டி இருப்பார் கணேஷ்... தலைவரின் கதைகளில் இருந்து எடுத்தாண்டு இப்படி பதிவு இடுவதற்கும் திறமை வேண்டுமே.
ReplyDeleteநல்ல பகிர்வு. அதுவும் எத்தனை எத்தனை அறிமுகங்கள். அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளுடன் உங்களுக்கும் பாராட்டுகள்.
தொடர்ந்து அசத்துங்க.
Super! Appadiye Sujathaavin nadai! Congrats!
ReplyDelete@ வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஅவரின் விசிறிகளான உங்களனைவரின் பாராட்டையும் நான் அப்படித்தான் கருதுகிறேன். அறிமுகங்களைப் பாராட்டி, எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!
@ middleclassmadhavi said...
தங்களின் மகிழ்வு தந்த பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி!
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வசந்த்,கணேஷ் என்ற சாகா வாரம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மூலம் பதிவர்களை அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.கதையை படித்தது போலும் ஆயிற்று, அதே நேரத்தில் நல்ல பதிவுகளைப் படிக்கவும் வாய்ப்பு.
ReplyDeleteஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! அசத்திவிட்டீர்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்!
காதல் செய்ய ஒரு நல்ல பகிர்வு. அதுவும் எத்தனை எத்தனை அறிமுகங்கள். ஆசிரியர் கணேஷ் கையால் குட்டுப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும், காதல் செய்ய கதை சொன்ன நல்ல ஆசிரியரான உங்களுக்கும் எனது பாராட்டுகள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். பல கவிதைகளைச் சென்று வாசித்தேன். அருமையான தொகுப்பு.
ReplyDeleteபதிவு, குற்றால அருவியில் குளித்தது போல் உள்ளது!
ReplyDeleteவலையிலும் புதுமை,வலைச்சரத்திலும் புதுமை
புலவர் சா இராமாநுசம்
ம்..முதல் அத்தியாய்ம் வாசித்தாகி விட்டது..படித்து முடித்தவுடன் தான் அட.. இது வலைச்சரம் ஆயிற்றே என உணர்ந்தேன் பி.கே.பி.யின் நாவல் படித்ததைப் போல 'A'னைத்தும் இருந்தது.இன்னும் ஆறு நாட்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..முதல் அத்தியாயத்திலேயே என்னையும் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.. வாரம் சிறப்புற வாழ்த்துகள்..
ReplyDeleteகவிதை தோரணமாய் வலைச்சரம்.. பாராட்டுக்கள்..
ReplyDelete@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteஒரே க்ல்லில் இரு மாங்காய்கள் என மகிழ்வுதரும் பாராட்டுத் தந்த உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி!
@ Avargal Unmaigal said...
காதல் தேனை ரசித்து ஆசிரியரைப் பாராட்டிய நண்பா... உங்களுக்கு என் மனம்கனிந்த நன்றி!
@ விச்சு said...
நற்கவிதைகளை ரசித்துப் படித்த விச்சுவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteபுதுமை என்று ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி புலவரையா!
@ மதுமதி said...
நாவல் படித்த எஃபெகட் கிடைத்ததா? தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே...
@ இராஜராஜேஸ்வரி said...
கவிதைகளை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நனறி!
சம கால கணேஷ் வசந்த்தை இழந்து தவிக்கும் வாசகர் பலரில் நானும் ஒருவன் அந்தக் குறையை போக்க நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள் என்று சொல்ல மாட்டேன், முழுவதுமாக நிவர்த்தி என்று தான் சொல்வேன்.
ReplyDeleteகாரணம் முதல் வரியே அருமை
//‘வொய் திஸ் கொலவெறிடி’ // இந்தப் பாடலை வசந்த் பாட மாட்டானா என்பது என் எண்ணம்.
//ஹிஸ்டரிய க்ளிக் பண்ணிணா// அடுத்த வரியே கணேஷின் பாத்திரப் படைப்பு அப்படியே சுஜாதா.
//‘அந்த ஏழாவது ஆள் வரட்டும்’ // இது மெக்ஸிகோ சலவைக்கரியின் நெக்ஸ்ட் வெர்சனா.
//‘‘தீபா!’’
‘‘தீபான்னா பிரகாசமான்னா இருக்கணும். அழறிங்களே...’’ என்றான் வஸந்த்.
// அப்படியே வசந்த் தான் சார். வசந்த் முழுமையாக உயிர் பெரும் இடம் இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
//‘‘கன்னிகைன்னு சொல்லலாம். ஆனா நிச்சயமாச் சொல்ல முடியாதே பாஸ்!’’// அருமை
பாஸ் ஐ ஸ்வே நா ஆடறேன். இது வசந்த் கணேஷை பார்த்து கணேசின் திறமைப் பார்த்து சிலாகித்துச் சொல்லும் வார்த்தை.
இப்போது நீங்கள் உண்மையான கணேஷ் நான் வசந்த். உங்களைப் பார்த் சொல்கிறேன்... பாஸ் ஐ ஸ்வே நா ஆடறேன்
அருமையான பதிவு. அருமையான கவிதைகளின் தொகுப்பு. உண்மையாக சொல்ல வேண்டுமானால் மன நிறைவான பதிவு.
மிக்க நன்றி சார் மீண்டும் ஒரு புதுமையான அனுபவம் கொடுத்ததற்கு. அவர் வாத்தியார் என்றால் நீங்கள் சின்ன வாத்தியார்
சுஜாதா சாரிடம் நிறையா டியூஷன் படிச்சிருக்கீங்கன்னு உங்க பதிவு பார்த்தாலே தெரியுது. வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய சிறுகதை கற்கண்டாக இனித்தது பதிவு. அறிமுக கவிஞர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இனிய சிறுகதை கற்கண்டாக இனித்தது பதிவு. அறிமுக கவிஞர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இனிய சிறுகதை கற்கண்டாக இனித்தது பதிவு. அறிமுக கவிஞர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
புதுமை புகுத்தி புகுந்து விளையாடுறீங்க.ஒரே கலக்கல்தான் கணெஷண்ணா.வலைச்சர ஆசிரியர் வரிசையில் மறக்க முடியாதவராகி விடுவீர்கள்.வாழ்த்துக்கள்.நாளை எந்த ஜோடியோ?
ReplyDeleteபுதிய நன்பர்கள் நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க அண்ணா. மிக்க நன்றி அண்ண. போய் பார்த்துட்டு வரேன்
ReplyDeleteஉங்களது எல்லா அறிமுகங்களும் அருமையோ அருமை உங்களையும் சேர்த்து கணேஷ் சார்.
ReplyDeleteபின்னிட்டீங்க போங்க.. சுஜாதா சாரின் எழுத்துகளை திரும்பவும் வாசிச்ச உணர்வு..
ReplyDeleteஎன் வானவில்லையும் இங்கே கொண்டாந்ததுக்கு ரெண்டு கணேஷுக்கும் நன்றிகள்..
கலக்கிட்டீங்க கணேஷ்...
ReplyDeletecongrats!
மிக்க நன்றி கணேஷ் . ஒரு வசந்த் கணேஷ் கதை எழுதுங்களேன்
ReplyDeleteWhat a novel way to introduce others' blogs in one blog. Really interesting. But we should get time to go through all of them to enjoy. Let me see one by one when time permis, of course while in office.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் சார்
சூப்பரப்பு..!! :) உமக்கே உரிய பாணியில் அசத்திருக்கீங்க..! அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றிப்பா..! :)
ReplyDeleteஅசத்துறிங்க போங்க தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் .
ReplyDelete@ seenuguru said...
ReplyDelete‘சி்ன்ன வாத்தியார்’ என்று சொல்லி பெரிய சந்தோஷம் கொடுத்ததற்கும், விரிவான உங்கள் கருத்துக்கும் என் இதயம் நிறை நனறி!
@ Lakshmi said...
சுஜாதா ஸாரைப் பொறுத்த வரை நான் ஏலகைவன்... ஸாரி, ஏகலைவன்மா. உஙகள் பாராட்டுக்கு என் இதய நன்றி!
@ kovaikkavi said...
தங்களின் மனமகிழ்வு தந்த பாராட்டிற்கு என் உளம் நிறைந்த நன்றி!
@ ஸாதிகா said...
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா. நாளைக்கு யாருன்னு சொல்லிட்டா த்ரில் போயிடுமே... ஸோ... கெஸ்!
@ ராஜி said...
கவிதைகளைப் படித்து ரசிக்க ஆவலான தங்கைக்கு அன்புடன் என் நன்றி!
@ புவனேஸ்வரி ராமநாதன் said...
அனைவரையும் மகிழ்வுடன் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ அமைதிச்சாரல் said...
எத்தனை வண்ணஜாலம காட்டியது உங்கள் வானவில்! ரெண்டு கணேஷுக்கும் மிஸ் பண்ணத் தோணுமா என்ன? மகிழ்வளித்த உங்கள் பாராட்டுக்கு மனம் நிறை நன்றி சாரல் மேடம்!
@ ரிஷபன் said...
நல்ல எழுத்துக்குச் சொநதக்காரரான நீஙகள் என்னைப் பாராட்டியதில் மிகமிக மகிழ்வு எனக்கு. என் உளம் கனிந்த நனறி உங்களுக்கு!
@ எல் கே said...
ReplyDeleteDear L.K. என்மேல எவ்வளவு நம்பிக்கை உங்களுககு..! உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த, மனமகிழ்வுடன் கூடிய நன்றி!
@ mohan baroda said...
அறிமுகப்படுத்திய விதம் பிடிசசிருந்ததில் மகிழ்ச்சி மோகன். மெதுவாக சமயம் கிடைக்கும் போது படித்து ரசியுங்கள். தங்களுக்கு என் இதய நன்றி!
@ செய்தாலி said...
அறிமுகங்களைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ திவ்யா @ தேன்மொழி said...
மகிழ்வு தந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி திவ்யா!
@ சசிகலா said...
மகிழ்வுடன் பாராட்டிய தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி!
கணேஸ் நீங்க கூப்பிடனாலும் இந்த வாரம் முழுக்க வருவேனே இங்க.என்ன இப்பகூட வேலைக்குப் புறப்பட்டாச்சு.பிந்தித்தான் வரமுடியும்.
ReplyDeleteஇண்ணைக்கு காதலர்கூட்டம் நிரம்பி வழிந்த பூங்காபோல ஆக்கிட்டீங்க வலைச்சரத்தை.பொறுமையாகப் படிக்க முடில.என்றாலும் உங்களால் அறிமுகப்படுப்படுத்தல் என்பது சும்மா இல்லை.அவ்ளோ சந்தோஷம் ஃப்ரெண்ட்.அன்பின் சொக்லேட்டோடு நன்றி !
பாராட்டுக்கள். உங்களுக்கே உரிய நகைச்சுவையும் அள்ளித் தெளித்திருப்பதே சிறப்பு
ReplyDeleteகவிதைகளின் அறிமுகம் கதை வடிவில்.அமர்க்களமாக இருக்கு கணேஷ். அசத்துங்க..
ReplyDelete//சரி, பொறுத்ததுபோதும், வந்துவிடுங்கற அம்பாளடியாளோட கவிதையும் சரி... நல்லாவே இருககுடா...’’ என்றபடி/// அழகான தொகுப்பு அம்பாளடியாள் ஆரமபத்தில் அதிகம் எழுத்தினவா ஏனோ இப்போது மெளனம் !!!
ReplyDeleteசுஜாதா அவர்களின் நாவலை படித்த திருப்தி ஏற்பட்டது. அறிமுகம் செய்த விதம் அருமை சார். கணேஷ் - வஸந்த் மூலம் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDelete@ ஹேமா said...
ReplyDeleteஆமாம் ஹேமா.. முந்தி வந்தாலும் சரி, பிந்தி வந்தாலும் சரி... இந்த வாரம் பூரா நீங்க வர்றது எனக்கு சொக்லேட்டை விடப் பெரிசாச்சே. அவசியம் வரணும். அருமையான, அன்பினால் இனிக்கும் சொக்லேட்டிற்கு நன்றி!
@ Shakthiprabha said...
வலைச்சரத்திலேயே நான் மிக வியந்து ரசித்த ஆசிரியர் நீங்கள் என்பதால் உங்களின் பாராட்டுரை பொம்மைக்கு ஏங்கும் குழந்தையை பொம்மை திருப்தி செய்வதைப் போல எனக்கு மிக மகிழ்வளிக்கிறது. என் இதய நன்றி!
@ RAMVI said...
கவிதை மட்டுமென்ன... இனி வரப் போற விஷயங்களும் கதை வடிவில்தான் தரப் போறேன். (தெரிஞ்சதைத்தானே செய்ய முடியம்?) தங்களின் நற்கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றி!
@ தனிமரம் said...
இயன்றவரை அவரின் எல்லாப் பதிவுகளிலும் கருத்திட்டிருக்கிறேன் நேசன். எதனாலோ இப்போது வலையுலகில் அவர் இல்லை.
@ கோவை2தில்லி said...
வாருங்கள் தோழி. அறிமுகம் பெற்ற அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் சுஜாதா சார் எங்க வலைச்சரத்துக்கு வந்தார்னு.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள்.
@ வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteசுஜாதா ஸாரை ரசித்து, என்னை வாழ்த்திய வல்லிம்மாவுக்கு என் இதயம் நிறை நன்றி!
வலைச்சரத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தும் நடையுடன் அறிமுகங்கள் அருமை அன்பரே.
ReplyDelete@ guna thamizh said...
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி முனைவரையா!
சூப்பர் கலக்கல்! சுஜாதாவின் பாணியில் எழுதி பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் மிகவும் அழகு.
ReplyDeleteஎன்ஜாய் பண்ணி படித்தேன். :)
@ மீனாக்ஷி said...
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனித்த நன்றி நட்பே!
என்னை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் கணேஷ் உங்கள் பனி தொடரட்டும் தொடர்ந்த ஊக்கம் கொடுக்கும் உங்களை போன்ற ரசனை மிக்கவர்களில் பதிவுகளை நேரத்தே பார்க்க முடியாமைக்கு வருந்துகிறேன் ( விடுப்பில் இருந்ததால் )
ReplyDeleteஅண்ணா அசத்திட்டேள். சரிதா அண்ணிக்கிட்ட முழி பித்துகின்னப்பவே நெசச்சேன் இப்படி படு சூப்பரா வலைசரத்தில் பின்னியிருப்பீங்கன்னு..
ReplyDeleteஎன்ன இருந்தாலும் அமைத்திக்கு பெயர்தான் ”சாந்தி”.. ஹா ஹா
மிகுந்த மிகுழ்ச்சின்னா.. ”பார்வைகளின் பதியலை” காதல் கவிதையாய் அங்கீகரித்து தங்களில் பதிவில் பதித்தமைக்கு.மிக்க நன்றிண்ணா..
மற்ற கவிஞர்களுக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகள்..
கோவை மு.சரளா said...
ReplyDeleteமனதைக் கொள்ளையிடும் தமிழால் அழகுக் கவிதைகள் எழுதுகிறீர்கள் நீங்கள். நானெல்லாம் உரைநடை மட்டுமே. தங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்குத்தான் மிக்க மகிழ்வு. தங்களுக்கு என் இதய நன்றி!
@ அன்புடன் மலிக்கா said...
சரிதாகிட்ட என்னை முழி பிதுங்க விட்டுட்டு கிண்டலா தஙகச்சி? இதோ தலையில குட்ட வரேன். அருமையான கவிதையை அறிமுகப்படுத்தாம இருந்துட முடியுமா என்ன? எல்லாருக்கும் வாழ்த்துச் சொன்ன உனக்கு என் இதயம் நிறை நன்றிம்மா!
என்னுடைய கவிதையும் உங்களின் வலைச்சரத்தில் இடம் பெற செய்து என்னை திக்குமுக்காட வைத்த உங்களுக்கு நன்றி கணேஷ் சார்
ReplyDeleteசூப்பர். படிக்க ரசனையாக இருக்கின்றது.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
Nice ! In the form of story .. amazing
ReplyDelete@ உங்கள் நண்பன் said...
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிகக நன்றி நண்பரே!
@ மாதேவி said...
உற்சாகம் தந்த உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ சத்தியசீலன் said...
ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
அட்டகாசம் அருமை.. திரும்ப சுஜாதா, கணேஷ், வசந்தை எல்லாம் மீட் பண்ண வச்சதுக்கு.. வசந்த நம்ம ப்லாகெல்லாம் படிச்சிருக்காரே..ஹாஹாஹ.. அருமையான சரளமான நடை. அற்புதம் கணேஷ்..:)
ReplyDelete