தாயே வேலன்டைனம்மா
எம்.ஏ.சுசீலா
யவ்வனம்
தேவியர் இல்லம்
கைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா
மனவிழி
    "புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
    சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
    தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
    நடுக்கமுறுகின்றன இரவுகள்"
படித்ததும் கொஞ்ச நேரம் அப்படியே பின்சாய்ந்து வரிகளை மனதுள் உருட்டத் தோன்றவில்லை? 'சத்யாகாலம்' என்ற இக்கவிதையைப் பதிவர் கதிர்பாரதியின் யவ்வனம் வலைப்பூவில் படிக்கலாம். கவிஞர் சொல்ல வந்திருப்பது எளிதாகப் புரிகிறது. என்றாலும் உங்களை அதிகம் பாதித்தது புதுத்தாலியா, தலைக்கு ஊற்றுவதா, நடுக்கமுறும் இரவா? பாதிப்பில் இருக்கிறது புரிதல். அல்லது புரிதலில் இருக்கிறது பாதிப்பு.
தவளைகள் நீரில் அளைந்து எழுப்பும் ஒலியைப் புணர்ச்சியின் அதிரலுக்கு ஒப்பிடும் இவரது கற்பனையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. படித்ததும் வாய்விட்டுச் சிரித்தேன். நகைச்சுவையை மனதில் நிறுத்தி எழுதினாரா தெரியாது. குளம் கவிதையைப் படித்துச் சொல்லுங்கள்.
கௌரவத்தம்மாள் யார் தெரியுமா? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்து ரசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
    "முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
    முனிவனிடம் வந்தது புழுவொன்று"
ஆயிற்றா? இடுகையில் மிச்சக் க(வி)தையைப் படியுங்கள். லேசான திடுக்.
யவ்வனம் வலைப்பூ என்னைக் கவர்வதற்கு இன்னொரு மிகச்சிறிய almost subliminal காரணம் ஒன்று உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வடமொழிச் சொற்களுள் யௌவனம் ஒன்று. இளமை என்று தமிழில் பொருள் கொண்டாலும், வடமொழி யௌவனத்தில் there is more to it than youth. இந்தப் பெயர் என் யௌவன நினைவுகளைக் கிளறும். இதே பெயரில் என் விடலை நண்பர்களுடன் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்தினேன். ஆகா.. அந்த நாள் ஞாபகம்.
    அகரம் அமுதனின் "பா"ப்பதிவுகள் பிரபலம். சமீபமாக இவர் எழுதிவரும் "படப்பா"க்களின் குறும்பு, பெரும்பாலும் கரும்பு. அவசியம் படியுங்கள்.
இவர் எழுதிய 'அமுதன் குறள்' புத்தகம் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய குறட்பாக்கள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் யாருக்கு எழுதி எப்படித் தெரியவைப்பது?
தமிழ் மரபுக்கவிதையின் வேர்களை நாம் மறந்துவிடாமலிருக்க அமுதன் புரியும் பணி போற்றத்தக்கது. இவருடையப் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவைப் படித்து வெண்பா இலக்கணம் மற்றும் வடிவம் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். இவர் எனக்கு ஆசான்.
மரபுக்கவிதை மட்டுமே இவருக்கு வரும் என்று நினைத்தால், இதைப் படியுங்கள்:
    "மரபறியாத வானம்
    அம்பெறிந்த பிறகு
    வில்லை வளைக்கிறது"
வானவில் பற்றிய எத்தனை நயமான கவிதை!
அமுதனின் ஏக்கவெடி! கவிதை, குறுக வைக்கும் சுருக்.
    தமிழ்மணம் நுகர்ந்து கொண்டிருந்த போது ஒரு நாள், 'தேவியர் இல்லம் திருப்பூர்' என்ற வித்தியாசமான பெயர் என்னைக் கவர்ந்தது. அன்றிலிருந்து படித்துவருகிறேன். நிறைய அரசியல் சமூகக் கட்டுரைகள். இலங்கைத் தமிழர் இன்னல்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காரணம் என்று சிலநேரம் சொல்லும் பொழுது இவரது முகவரியைப் பெற்றுச் சந்திக்கத் தோன்றியது :).
ராஜீவ் காந்திப் படுகொலைத் தொடரில் நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார். தனிப் புத்தகமாக வெளியிட வேண்டிய படைப்பு.
இவர் எழுதியத் தொடர் நிறைய நினைவுகளைக் கிளறினாலும், அறிந்திராத விவரங்களைத் தெரியப்படுத்தியது. விறுவிறுப்பான இடுகைகள். பிரபாகரனை அசலில் உணர்த்திய சில பதிவர்களில் ஒருவர். அவரின் முனைப்புகளின் பின்புலத்தை விவரமாகப் பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். (ஹ்ம்ம்ம்.. வீர சூர அடைமொழி எதுவும் தராமல் பிரபாகரன் என்று எழுதியதற்காக ஒரு முறை எனக்குப் பல மிரட்டல் கொச்சைக் கடிதங்கள் வந்தன. நுனிப்புல் மேயும் #%ஃஸ்D^*! என்று தினம் ஒருவர் இமெயில் அனுப்பினார். திட்டுறதுனா என்னைத் திட்டுங்க, திருப்பூரை விடுங்க.)
வேன்கூவரிலும் ஹைடல்பர்கிலும் சிலகாலம் நட்புடன் பழகிய இலங்கைத் தமிழர் ஒருவர் (என் பெயரைக் கண்டு அவருக்கு ஆச்சரியம், அவர் பெயரைக் கண்டு எனக்கு) 'அந்நியத் தமிழனான' என்னால் தமிழீழ விடுதலை இயக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றார். ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டு வழியில் பத்து நொடிகள் நின்று அனுதாபம் தெரிவிக்கும் தமிழ்ச்சட்டை அணிந்தக் கோடிக்கணக்கான பாதசாரிகளில் ஒருவன் நான் என்றார். உண்மையென்றே தோன்றியது. என்னை மட்டுமே அப்படிச் சொல்கிறார் என்று மேலும் அசைபோட்ட போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலரையும் அதே வகையில் சேர்த்தது திடுக்கிட வைத்தது. "என்ன செய்வது? ரணங்களின் வடுக்கள் ரணத்தைப் போல் வலிப்பதில்லை" என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது. தேவியர் இல்லம் மற்றும் சிலரின் 'இலங்கைத் தமிழர் நிலை' பற்றியப் பதிவுகளைப் படிக்கும் பொழுது, எனக்கு நண்பரின் நினைவு வரும். தன்னலமற்றத் தலைவன் ஒருவன் தமிழினத்துக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாமலிருக்க முடியவில்லை.
இலங்கைத் தமிழரோடு நில்லாமல் உள்ளூர் அரசியல் பற்றியும் காட்டமாக எழுதுகிறார். ஊழல், பதுக்கல் விவரங்களை அம்பலப்படுத்தி எழுதுகிறார். துணிச்சல்காரர். அனேகமாக எல்லாமே நீண்டக் கட்டுரைகள். ஆய்வும் விவர உணர்வும் புலப்படுவதால் ஒரே அமரலில் படிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இவர் எழுதிய அய்யாவுக்கு அடிவாங்கும் தமிழன் எழுதுவது இடுகை.
"கடந்து போன அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுத் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்கள், சபிக்கப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்" என்ற இவரது பதிவறிமுக வரிகள் என்னைக் கவர்ந்தவை.
    சத்ரியனை வலைப் பின்னூட்டங்களில் அடிக்கடி சந்தித்திருந்தாலும், சமீபத்தில் அதீதம் மின்னிதழில் இவர் எழுதிய ஆலிங்கனா கதை வழியாக இவர் தளத்தைத் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. கதை, கட்டுரை, (நிறைய) கவிதை என்று எழுதிக் கலக்குகிறார்.
சமீபத்தில் இவர் எழுதிய
    "கண் தானம் சிறந்தது தான் என்றாலும்
    என் கண்களைத் தானம் வழங்கும் அனுமதியை
    நீங்கள் அவளிடம் தான் கேட்க வேண்டும்"
என்ற வரிகளின் குறும்பையும் காதலையும் ரசிக்க முடிகிறது, இல்லையா?
இவரின் 2010 வருடப் படைப்புகளை ஒன்று விடாமல் படியுங்கள். இந்தக் கவிதைக்கு வரும் பொழுது இவருக்கு, மனதார வாயார, ஒரு 'ஜே!' போடுங்கள்.
    "காதல் தீ சுடும் என்றேன்.
    சுட்டாலும்
    'உன்னை தீண்டும் இன்பம்
    தோன்றுதடா' என்றாய்.
    இதோ
    பற்றி எரிகிறது பார் என்கிறேன்
    'பிடில் வாசி போடா' என்கிறாய்".
beautiful!
வித்தியாசமான கற்பனை என்று நான் கருதும் இன்னொரு கவிதை:காதல் குழந்தை.
    கவிதைக்காக ஒன்று, கலந்து எழுத ஒன்று என இரண்டு வலைப்பூக்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார் சுந்தர்ஜி.
'கைகள் அள்ளிய நீர்' வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இவருடைய எழுத்து இத்தகையது என்று வேலிகட்ட முடியவில்லை. இலக்கிய ஆழம். மழலையின் வெகுளி. இயலாமையின் சோகம். எழுச்சியின் தீவிரம். அறிவின் வீச்சு. அமைதியின் இதம். எது எப்போது தாக்கும் என்று சொல்லமுடியாத எழுத்தரக்கர்.
நான் சொல்வதைச் சரிபார்க்க, இவரது சமீப முயற்சியான தஷிணாயனம் படித்துப் பாருங்கள். தொடர் எதைப் பற்றியது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை; ஒரு போதையுடன் ரசிக்க முடிகிறது என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு படிக்கிறேன். இடையே ஓய்வெடுத்தத் தொடரை மீட்டது நன்று.
பலவகை இசை, புத்தகம், சங்க இலக்கியம், ஆன்மீகம் என்று அவ்வப்போது அறிமுகம் செய்கிறார். வலைப்பூவின் sidebar கவிதைகள் பல அருமை.
இவர் வலைப்பூவில் நிரந்தரமாக இருக்கும் தாடிக்காரர் யாரென்று தெரியாமல்.. சுந்தர்ஜியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பிறகு இவருடைய பழைய இடுகைகளைத் தேடிப் படித்துத் தாடிக்காரருக்கும் இவருக்குமுண்டான பந்தம் பற்றி அறிந்து கொண்டேன்.
"வறண்டிருந்த ஏரிக்குள் இறங்குகிறேன். முதல் நாள் மிக நல்ல மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே எருமைகள் தேங்கிக்கிடக்கும் நீரில் முதுகு தெரிய மூழ்கியபடி ஏதோ ரசானுபவத்தில் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி மேலும் சில எருமைகள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை? என்று நாரைகளையும் கொக்குகளையும் ஆச்சரியத்துடன் கடந்தேன்."
யாத்ரா இடுகைகள் சுவையானவை. ஒரு wandererன் பார்வையில் profound philosophyஐக் கொண்டு வரும் எழுத்து. visualஆக நிறையக் கொண்டுவர முயல்வது unique.
    கதை, கவிதை, புத்தகம், பயணம் என்று ஒன்று விடாமல் தமிழிலக்கியச் சுவையை அளவாக ஒவ்வொரு இடுகையிலும் வழங்கும் எம்.ஏ.சுசீலாவின் வலைப்பூ, ஒரு இணைய வரம்.
வரும் இந்தியப் பயணத்தில் இவரின் 'அசடன்' மொழிபெயர்ப்பு நாவலை வாங்கிப் படிக்க வேண்டும். must be monumental. ஒரிஜினல் புத்தகச் சுருக்கத்தை (அதுவே நீளம்) கல்லூரியில் படித்திருக்கிறேன். வாங்கிப் படிக்க எண்ணியிருக்கும் இவரின் இன்னொரு புத்தகம் 'தேவந்தி'. தேவந்தி யாரென்று தெரியாமல் இருந்தேன். :)
"பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய்" போன்ற கம்பன் கற்பனையைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் இவர் பதிவு ஒரு திறந்தப் புத்தகம். சிறந்தப் புத்தகம்.
"சஞ்சலமான சூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும், அனுபவங்களும் பின்னாளில் அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப் பார்த்தாயா" என்று சீதை ஊர்மிளையிடம் சொல்வதாக இவர் எழுதிய ஒரு சிறுகதையில் வருகிறது. இவருடைய தமிழின் சரளம் வரிக்கு மெருகேற்றுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். complex எண்ணங்களை எளிமையாக, அதே நேரம் கனமாக, எழுதும் திறமை..ஆளுமை... எதனால் இப்படி எழுத முடிகிறது என்று வியந்திருக்கிறேன். இவர் தமிழாசிரியர் என்பதாலா அல்லது தமிழ்க்காதலர் என்பதாலா?
இவர் மொழிபெயர்த்தச் சிறுகதைகளில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது, குந்தியும் நிஷாதப் பெண்ணும்.
அவசியமெனில் சாடும் சமூகப்பார்வையும் இவருக்கு உண்டு. பிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம் என்ற இந்த இடுகையைப் பலமுறை படித்திருக்கிறேன். இவர் குறிப்பிடாவிடில் இது போன்ற சிவப்புக் கவிதைகளைப் படிக்க எனக்கு வாய்ப்பில்லை.
    இன்றைய shout outன் நாயகர் அரசூரான். வெடிச்சிரிப்பு நகைச்சுவையோடு நச்சென்று பதிவிட்ட நண்பர் அரசூரானுக்கு ஜே!
➤➤4. யாதும் சென்னை யாவரும் தமிழர்
|
|
சிறந்த பல படைப்பாளர்களின் அறிமுகங்கள். அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteபல்வேறு ரசனைகள் நிரம்பிய அருமையான அறிமுகங்கள்,, பாராட்டுக்கள்..
ReplyDeleteபடிப்பு ரசனைக்குத் தீனி போடும் அருமையான அறிமுகங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிமுகப்படுத்தும் Shout outs பிரமாதமாக இருக்கிறது. அதற்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். உங்களு்க்கு என் பாராட்டுக்கள் + அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பாடா. பாஸ்மார்க். 50% வாங்கிவிட்டேன். பின்னைய 3 பதிவர்களையும் அறிவேன். சத்ரியனின் காதல் கவிதைகள் , என் பல கவிதைகளுக்கு inspiration. அகரம் அமுதா எனக்கு துரோணர் எனலாம். பல சந்தேகங்களை தீர்க்கும் பதிவர்.
ReplyDeleteசுந்தர்ஜி அவ்வப்போது என்னை பயமுறுத்துபவர். எப்போதாவது வந்து பின்னூட்டம் இட்டால் உச்சி குளிர்ந்து போவேன். ஒருமுறை தொலைபேசியில் அழைத்த போது இரண்டு மூன்று நாட்கள் தூங்கவில்லை. . ஆனந்த விகடனில் அவர் கவிதை வரும்போதெல்லாம் நான் என் உறவுகளிடமும் நண்பர்களிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்வேன்.
மற்றவர்களை தெரிந்துகொள்ள காலதேவன் அருள்புரிய வேண்டும்
அப்பாதுரை அவர்களே! karthik balaji laksham என்பவரின் முக நூலை பாருங்கள்.A.I.M.S ல் டாக்டராகப் பணியாற்றுகிறார். அற்புதமான முகநூலகர்---காஸ்யபன்
ReplyDeleteபல நேரங்களில் எழுதும் சுவாரஸ்யத்துக்காகவே எழுதினாலும் என்னை நான் யாரென சில வேளைகளில் நான் பார்க்கிற கண்ணாடியிலிருந்துதான் தெரிந்துகொள்ள முடிகிறது.
ReplyDeleteஎழுத்தின் சாரத்தையும் எழுதுவதின் ஆனந்தத்தையும் பரிபூரணமாக உணர்ந்திருக்கும் உங்கள் கையால் என் பெயரும் எழுதப்படுவதை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கொள்கிறேன்.
உங்களுக்குக் கிடைத்த காலத்தை என்னைப் பற்றியும் எழுத செலவிட்டதற்கு என் நன்றிகள் அப்பாஜி.
//தாயே வேலன்டைனம்மா//தலைப்பே கலக்கிட்டீங்க போங்க பதிவுகளும் தான்
ReplyDeleteதலைப்பு போலவே அறிமுகங்களும் அருமை
ReplyDeleteபடிக்கத் தூண்டி விடக்கூடிய அறிமுகங்கள்.
ReplyDelete//எழுத்தரக்கர்//
இரசித்த வார்த்தை.
கொஞ்சம் 'ஆழமான' அறிமுகங்கள்!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது இறங்கணும் வாசிக்க.
அருமையான அறிமுகங்கள் ! அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteயெளவனம் கவிதையை வாசிச்சிருக்கேன். எம்.ஏ. சுசீலாவைக்குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன். படிக்கணும். அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteபல்வேறு ரசனைகள் நிரம்பிய அருமையான அறிமுகங்கள்,, பாராட்டுக்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகதை கவிதைன்னு எழுதறா மாதிரி அறிமுகங்களையும் சுவாரஸ்யமாச் சொல்லி அமர்க்களப்படுத்துறீங்க அப்பாஜி! ஹேட்ஸ் ஆஃப் டு யூ!
ReplyDeleteரசனை மிக்க பதிவுகளை தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteரசனையான அறிமுகங்கள்..
ReplyDeleteஅற்புதமான அறிமுகங்கள்... கைகளில் அள்ளிய நீரை அடிக்கடி பருகுவதுண்டு.. தக்ஷ்ணாயனம் பருக ஆரம்பித்துவிட்டேன்.. என் வயதையொட்டிய இளைநர் சுந்தர்ஜியின் எழுத்து என்றுமே சுகம்...
ReplyDeleteஅழகான அறிமுகம்..தேவியர் இல்லத்திற்கு உடனடியாக விஜயம் செய்யவைத்தது.. எப்புறமும் உணர்ச்சிவசப்படாமல் வெற்று உணர்ச்சியாளர்கள் பற்றியும் கவலைப்படாமல் ராஜிவ் படுகொலையை விவரித்துள்ளார்கள்..
உங்கள் அறிமுகங்கள் தேடுதலுக்கு நல்ல தூண்டுகோலாக இருக்கிறது....
வாழ்த்துகள்
வணக்கம் ஆசிரியரே,
ReplyDeleteவலைச்சரம் தொகுத்தல் பணியை சிறப்புறச் செய்ய வேண்டுமெனில் எத்தனை தூரம் பயணித்து உழைக்க வேண்டும் என்று அறிவேன் நான். இன்றைய சரத்தில் ஜோதிஜி, கதிர்பாரதி, சத்ரியன் இவர்களைப் படித்திருக்கிறேன். எஞ்சிய படைப்பாளிகளை இனிமேல் தான் படித்து இன்புற வேண்டும்.
அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteகைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா தவிர
மற்ற மூவரும் நான் விரும்பி படிப்பவர்கள்...
அழகாக அறிமுகம் செய்கிறீர்கள்.
மற்ற நால்வரும் என்று எழுத மறந்து மூவரும் என்று சொல்லிவிட்டேன். நால்வருமே அருமையான எழுத்தாளர்கள்.
ReplyDeleteமிக அருமையான பதிவுகள், அறிமுகங்கள். வாசிக்க வேண்டும். நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வணக்கம் அப்பா துரை.
ReplyDeleteசில நிமிடங்களுக்கு முன்பு தான் துளசி கோபால் உங்கள் அறிமுக விபரத்தைப் பற்றி சொன்னார். இப்போதுள்ள வேலைப்பளூ சூழ்நிலையில் வலை பக்கம் அதிகம் வரமுடியவில்லை. பொதுவாக இந்த வலைச்சரத்தில் நிறைய நண்பர்கள் தேவியர் இல்லத்தை அறிமுகம் செய்துள்ளார். நானும் ஆசிரியராக இருந்துள்ளேன். ஆனால் எந்த அளவுக்கு எனது எழுத்தை ரசித்து படித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் விவரித்த பாங்கே எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நன்றி துரை. வாங்க அவசியம் வாங்க.சந்திக்கலாம்.
எனது மின் அஞ்சல் texlords@gmail.com