07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 14, 2012

மாதங்களும் கொண்டாட்டங்களும் ...!

ஜனவரி (தை)
அறுவடையில் கிடைத்த புதுநெல்லெடுத்து ஆதவனை தொழுகின்ற உழவர் திருநாளாம் தைத் திருநாள் கோலாகலங்கள் ...



பிப்ரவரி (மாசி)
மாதங்களில் சிறியதாய் நாள் கண்டு வருகையில் இருபத்தி ஒன்பது நாளாய் லீப் வருடமாக்கும் சக்தி கொண்ட மாதமிது .



மார்ச்(பங்குனி)
பன்னிரெண்டில் கடைசியாய் சூரியனின் ஆதிக்கத்தில் வாழுகின்ற பங்குனி .




ஏப்ரல்(சித்திரை)
சுட்டெரிக்கும்  சூரியன் வெந்து மாயும் இயற்கையுமே, தமிழாண்டின் தலைமகளாய் ,கோடைகால மலர் மகளாய் வலம் வரும் சித்திரை ...





மே(வைகாசி)
விசாகத்தின் பெயரையொட்டி வைகாசியாய் பிறந்தவள் .




ஜூன்(ஆனி)
ஆனியிலே ஆரம்பிக்கும் காற்றைத் தேடி காத்திருப்போம் .



ஜூலை(ஆடி)
காவிரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். அதுவே ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்பட்டது.

இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.








ஆகஸ்ட்(ஆவணி)
ரிக்,யசுர் வேதிகளும் சாமவேதிகளும் சதூர்த்திஎன்றும் மூதாதையர்களுக்கு எள்ளும், அரிசியும் தர்ப்பணம் செய்யும் திங்களிது ...



செப்டம்பர்(புரட்டாசி)
புரட்டாதி என்பதனால் புரட்டின் அதிபதி எண்ண வேண்டாம் , முப்பத்தொரு நாட்களுடன் ஓடும் காலமிது . தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.



அக்டோபர்(ஐப்பசி)
வான் பார்த்துக் காத்திருக்கும் வாசமில்லா விவசாயிகளுக்கு வானம் திறந்து கொட்டுகின்ற வரப்பிரசாதம் மழையாக ...



நவம்பர்(கார்த்திகை)
கார்த்திகை தீபமேந்தி விண்மீன் ஒளியினிலே கணக்குகளைப் பார்க்கின்ற ஒளிமீனின்  ஆட்சியிலே வாழும் கார்த்திகை .




டிசம்பர்(மார்கழி)
பனிபொழியும் நடுங்கும் குளிர் ,புன்னகை பூக்கல்ளெல்லாம் இரவினிலே களித்திருக்கும் பகலவன் வெயில்பட்டால் கருகிப் போகும் இலை தழைகள் ...


தினசரி பூக்கின்ற கவிதைகளை
அழகாய் எழுதப்படும் கதைகளை
உயிராய் செதுக்கப்படும் சிலைகளை
உணர்வாய் வரையப்படும் சித்திரத்தை
கூடையிலே அள்ளிக் குவித்து
வீடுவீடாய் கொண்டு சேர்க்க
மனம் ஆசைப் படுகிறது .

தூது செல்லும் புறா போன்று
மழை அடையாளம் கொட்டும்  மேகமாய்
அலைந்து திரியும் நதியாக
பாடித் திரியும் குயிலாக
இயன்றவரை இனியோரின்
எழுத்துக்களை எடுத்துச் சென்று
இதயங்களிடம் சேர்க்கின்றேன் !

இன்றைய பதிவினிலே
பன்னிரெண்டு மாதங்களில்
வெளியிட்ட பதிவுகளில்
என் கண்ணில் பட்டவற்றில்
சிலவற்றை பகிர்கின்றேன்  .

தமிழ் பேச
கூச்சப்படும் தமிழா !
நான் செந்தமிழ்த்  தாய்
பேசுகிறேன்...என்று ஆதங்கப் படுகிறார் பிரேம் குமார் . தையில் பூத்த கவிதை

எங்க போகனும்னாலும் அனுமதி இல்லாம போக முடியுமா ? ஆனா இங்க பாருங்க உத்தரவின்றி உள்ளே வா! என்று அழைக்கிறார் எம்.ஞானசேகரன் .(பிப்ரவரி )

தினேஷ்குமார்  அ முதல் ஔ ..வரை ஒவ்வொரு எழுத்திலும் கவிதை பாடி நம்மை சிந்திக்க வைக்கிறார் .(மார்ச் )

மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்து  ...என்ன என்ன இப்படியெல்லாம் நான் செய்யலைங்க . சே. குமார் தான் அப்படியெல்லாம் கோவிக்கிறாராம் ஏன் என்று கேட்போம் வாங்க .(ஏப்ரல் )

 கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லுனு ஐஸ் கீரீம்!  தருகிறார் நாற்று .(மே )

 செய்யும் தொழிலே தெய்வம் ஆனால் சிலர் அதை யோசிப்பதே இல்லை இங்கே யோசிக்க வைக்கிறார் கன்னம் .காம்.(ஜூன் )

கடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன். என்று சொல்கிறார் நாகசுப்ரமணியன் .(ஜூலை )

இசைப்பள்ளிக்கு
விடுமுறை
என்னவள்
கொலுசு அணியவில்லை.. இப்படி குட்டி குட்டியா அழகான வரிகளால் நம்மை அசத்துகிறார் அழகன் .(ஆகஸ்ட் )

நம்மள திடீர்னு ”ஓடு…”ன்னு சொன்னா எப்படி ஓடுவோம்?  ஆனா வெங்கட் நாகராஜ் அவர்கள் வித்தியாசமான ஓட்டத்தைப் பற்றி சொல்கிறார் கேட்போம் வாங்க . (செப்டம்பர்)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால் ... என்னாகும் என்ன என்னவோ ஆகுதுன்னு பி.அமல்ராஜ் தனது  புலம்பலைக் கவிதையா சொல்றார் வாங்க வாசிப்போம் .(அக்டோபர் )

அழற குழந்தைக்கு பலூன் கொடுத்து சிரிக்க வைக்கலாம் . இங்க ஒரு பலூன் குழந்தையோட சந்தோசத்தை திருடி விட்டதா வைகறை சொல்கிறார் .(நவம்பர் )


இந்த காலத்துல மனுசங்க அழுதாலே யாரும் என்னவென்று கேட்பதில்லை இங்கு ஒரு நதி அழுகிறது என்று   துரைடேனியல் சொல்கிறார் .(டிசம்பர் )

நாளை மீண்டும் சந்திப்பிப்போம் .

36 comments:

  1. பருவ
    மாதங்களும்
    கொண்டாட்டங்களும்
    தென்றலின் இதாமான
    வருடல் கவிதையும்
    அழகிய தோழமை அறிமுகங்களும்

    கலக்கல் சகோ
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாதங்களை வரிசைப்படுத்தி அறிமுகங்கள் சூப்பர், முதல் பால்லயே சிக்ஸர் அடிச்சுட்டீங்க தென்றல், தொடரட்டும் ரகளையான அறிமுகங்கள், அறிமுகம் பெற்ற அனைவருக்கும மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  3. கொண்டாட்டங்களும், வித்தியாசமுமாய் துவங்கியிருக்கிறது புதிய வாரம்... குயிலாக, நதியாக, மேகமாக இந்தவாரம் இருக்குமெனக் கட்டியம் கூறுகிறது பதிவு... அத்தனை அறிமுகங்களும் அழகு.

    வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  4. எனது பதிவை பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி வலைசரத்தில் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒவ்வொரு மாதத்தினையும் விளக்கி அதற்கேற்ற பதிவுகள். நல்ல உழைப்பு. வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
  6. கலக்கலான தொகுப்பு, தொடர்ந்து கலக்குங்க ..!

    ReplyDelete
  7. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    வலைச்சரம் பார்க்கலாம் என்று வந்தால் உங்கள் பார்வையில் என் பதிவும் இருப்பது கண்டு சந்தோஷப்பட்டேன்...

    என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மாதங்களை வரிசைப்படுத்தி அறிமுகங்கள் சூப்பர், தொடரட்டும் ரகளையான அறிமுகங்கள், அறிமுகம் பெற்ற அனைவருக்கும மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  9. மாதங்களின் பெருமை சொல்லி
    மணம் மிக்க மலர்கள் கொண்டு - இங்கே
    சரம் தொடுக்க வந்த
    எம் அன்புத் தங்கையே...
    தொடுத்திடுக சிரத்தையாய்
    தொட்டிடுக சிகரத்தை.....

    அறிமுகங்களும் அதற்கான கவிதைப் பகிர்வும்
    மனதை ஈர்க்கிறது...
    வாழ்த்துக்களுடன் வணக்கங்களும்...

    ReplyDelete
  10. செய்தாலி...
    கலக்கல் எனக்கூறி எனை உற்சாகப்படுத்தும் தங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
    கணேஷ்...
    கலக்கல் ,ரகளை என கலை கட்டுகிறது வலைச்சரம் தங்களின் அனைவரது வருகையாலும் ...வருக வருக ..
    சிசு...
    தங்களது வருகையும் உற்சாகமளிக்கும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. PREM.S
    வாழ்த்துக்களோடு வந்த நண்பருக்கு நன்றி கலந்த வணக்கம் .
    விச்சு...
    ஆமாங்க அந்தந்த மாதப் பதிவை தேடிப் பிடிப்பதற்குள் ஒரு வழியாகிட்டேன் . தங்கள் வருகையே உற்சாகமளிக்கிறது நன்றிங்க .
    வரலாற்று சுவடுகள்....
    தங்களின் அனைவரது வாழ்த்துரையே எனக்கு உற்சாகமாய் . மிக்க நன்றிங்க .

    ReplyDelete
  12. சே. குமார் ...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
    Lakshmi ...
    ரசித்து பாராட்டியமை கண்டு மகிழ்கிறேன் . எல்லாம் தங்கள் ஆசியே ...

    ReplyDelete
  13. மகேந்திரன்....
    கவி வரிகளால் எனை உற்சாகப்படுத்தும் அன்புச் சகோதரருக்கு நன்றி கூறி , என்றென்றும் தங்கள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன் .

    ReplyDelete
  14. அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி

    ReplyDelete
  15. மிக அருமையான வித்தியாசமாக மாதங்களுடன் சொன்ன விதம் அழகு

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மாதங்கள் பற்றிய சிறப்புகளை கவிதையாய் வடித்து, சம்பந்தமான இடுகைகளையும் அறிமுகப்படுத்தி அசத்திட்டிங்க.....

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சிறப்பான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  18. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். என்னுடைய வலைபதிவை அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி!

    ReplyDelete
  19. பதிவுலகை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அறிமுகப்படுத்தி அழைத்த தங்களது அன்பிற்கு நன்றி சகோதரம்.

    ReplyDelete
  20. மாதங்களையும் , பண்டிகைகளையும் அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்..அந்தந்த மாதத்தில் பூத்த கவிதைகளையும் அழகாக தொடுத்துள்ளீர்கள்.இவ்வாரம் முழுவதும் அழகான அறிமுகங்கள் தொடரட்டும்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்,வித்தியாசமான பகிர்வோடு அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  22. nalla arimukangal!

    vaazhthukkal!

    ReplyDelete
  23. அன்பின் சசிகலா - அருமையான் அறிமுகங்கள் - மாதங்கள் அத்தனையையும் எடுத்து அம்மாதத்தில் நடைபெறும் விழாக்களைக் கொடுத்து - பல நல்ல படங்களுடன் விளக்கி - ஒவ்வொரு மாதத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியது நன்று. கடும் உழைப்பும் ஈடுபாடும் பாராட்டுக்குரியது. தொடர்க பணியினை. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா

    ReplyDelete
  24. ஒவ்வொருமாதமும் வெளியான பதிவுகளை அறிமுகப்படுத்திய விதம் அருமை.தொடரட்டும் உங்களது பணி

    ReplyDelete
  25. நிறைய புது வலைப்பூக்களை அறிமுகம் செஞ்சு இருக்கீங்க. போய் ஒரு விசிட் அடிச்சுட்டு வரேன். பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  26. விளைநிலமில்லாத விதைகள் வாழ்வதில்லை,
    வாய்புகள் அழைக்கும்வரை ஓய்வின்றி தேடிடுவோம்,
    எண்ணம் சிறகை விரிக்கட்டும்;கவிதைகள் பிறக்கட்டும்,
    நான்-நாமாகி;வசந்த வாழ்வு மலரட்டும்!
    அழகுமலரெடத்து-அருமையாய்த் தொடுத்து,
    வாழ்க,வளர்க -வாழ்த்துக்களுடன்!!

    ReplyDelete
  27. Nagasubramanian...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    Jaleela Kamal ...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    தமிழ்வாசி பிரகாஷ்...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    இராஜராஜேஸ்வரி...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. மாதங்கள் 12 உடன் அறிமுகங்களை இணைத்தது மிக நல்ல உத்தி. பணிக்கும், அறிமுகவாளர்களிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  29. திண்டுக்கல் தனபாலன் ....
    நண்பருக்கு வணக்கம் தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
    எம்.ஞானசேகரன் / Gnanasekaran.ம
    வணக்கம் தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
    துரைடேனியல்...
    ஆமாம் சகோ எங்கே தங்களை பதிவு பக்கம் பார்க்கவே முடியல . வருகை தந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ .

    ReplyDelete
  30. மதுமதி...
    உற்சாகமளிக்கும் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .
    Asiya Omar
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
    Seeni.
    வருக வருக தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .
    cheena (சீனா) ....
    ஐயா தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்கிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. வே.நடனசபாபதி...
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்கிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .
    ராஜி ...
    வருக தோழி மீண்டும் மீண்டும் தங்கள் வரவை எதிர்நோக்கும் தங்கை .

    d.g.v.p Sekar
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்கிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. "மாதங்களும் கொண்டாட்டங்களும்" படிக்கும்போதே மனத்தை களிப்படைய வைக்கின்றன.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. வணக்கம் சகோதரி,
    ஹாலிடேயில் இருப்பதால் இணையப் பக்கம் வரமுடியவில்லை.
    பல நூறு பதிவர்களின் முன்னே, இச் சிறியேனின் பதிவிற்கும் அறிமுகம் கொடுத்த உங்களிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    வலைச்சரத்தினூடாக ஒவ்வோர் நாளுக்கும் வெவ்வேறு சரங்களை, வித்தியாசமான தகவல்களோடு தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.

    மிக, மிக அருமை! வித்தியாசமான சிந்தனை!
    என் வாழ்த்துக்களும், நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்!

    ReplyDelete
  34. இனைத்தற்கு மிக்க நண்றி சகோதரி.....

    ReplyDelete
  35. நம்ம பதிவையும் பரிந்துரைத்தமைக்கு நன்றி.. தோழி.. கன்னம்.காம் மின் ஆசிரியருக்கும் வருகிற ஜூன் தான் பிறந்த நாளும்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது