தென்றலின் அறிமுகம் ....!
➦➠ by:
தென்றல் சசிகலா வலைச்சரத்தில்
வலைச்சர ஆசிரியராய் ஆன்றோரும்
சான்றோரும் அழகாய் அமர்ந்த இடத்தினிலே எனக்கொரு அங்கீகாரம் தந்து அமர்த்திய
தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட வலைச்சரக் குழுவினருக்கு எனது
மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி ....
வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .
தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!
இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!
எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!
நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!
தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும் பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...
கிராமத்தில் பிறந்து , வளர்ந்து ஓடியாடி நகரம் வரும்வரை சேர்த்து வைத்த பார்வைகளை கவிதைகளாய்ப் புனைந்து கதையும் சொல்லி தென்றலாய் உருமாறி எழுதிய பதிவிங்கே .
வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .
தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!
இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!
எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!
நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!
தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும் பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...
கிராமத்தில் பிறந்து , வளர்ந்து ஓடியாடி நகரம் வரும்வரை சேர்த்து வைத்த பார்வைகளை கவிதைகளாய்ப் புனைந்து கதையும் சொல்லி தென்றலாய் உருமாறி எழுதிய பதிவிங்கே .
இயந்திர வாழ்வணிந்து உண்மை வாழ்வில் நிம்மதியும், உறவும் தொலைத்து, ஓடுகின்ற ஓட்டத்தில் இழப்புகள் ஆயிரம் என்பதை உணர்த்தும் ,பகிர்வு .
மனம் நினைப்பதையெல்லாம் எல்லோரோடும் பகிர்ந்து விட முடியாமல் தவிக்கின்ற தவிப்புகளும் , ஆசையோட்டதில் விளைந்த தப்பு விதை.
விட்டுக்கொடுப்பது
என்பது வீட்டைக் கட்டிக் காப்பது போல், எடுக்க எடுக்கச் சுரக்கின்ற நீர்
ஊற்று கொடுப்பதைப் போல் நாமும் விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம் .கதை எழுத வருமா ? வராதா ? மனம் ஐயம் கொண்டாலும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதிய முதல் கதை .
மனதினில் தீமையணிந்து நல்லார் போல் வேடமிட்டு, பொல்லாங்கைக் களையப் போகும் பொல்லாரிடம் நீ என்ன யோக்கியனா எனக் கேட்கும் மனச்சாட்சி .
இயற்கையை சுயலாபத்துக்காய் உருமாற்றத் துடிக்கும் மனித இனம் ,நாளையை அழித்து, எதிர்காலத்திற்கு முடிவெழுதும் முயற்சியில் .
திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும் , வலைச்சரத்தில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் , தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து இன்று விடை பெறுகிறேன் ... நாளை சந்திப்போம்!
|
|
தென்றலின் வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteநல்வாழ்த்துகள்!
ReplyDelete//இந்தியத்தாயின் மடியினலே,
ReplyDeleteதமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து//
வானுற உயர்த்த குறிக்கோள்!
வலைச் சரப்பணிக்கு வாழ்த்து!அறிமுகக் கவிதையே அருமை!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி...
ReplyDeleteஉடன் வருகை தந்து உற்சாகமளித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ராமலக்ஷ்மி...
ReplyDeleteஉடன் வருகை தந்து உற்சாகமளித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
புலவர் சா இராமாநுசம்...
ReplyDeleteஐயா வணக்கம் எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
உங்களது கவிதுவதிர்க்கு வால்துவதைவிட வணங்குவதே உயர்வாகும்...
ReplyDeleteஇன்னும் உங்களுக்கு உயர்வான இடம் காத்திருக்கிறது அதற்க்கு உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள் , வணங்குவதற்கும் எனது கைகள் தயாராக இருக்கிறது..!
வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்தின் இவ்வார ஆசிரியராக பணியேற்கும் தங்களை வரவேற்று, இட்ட பணியை செம்மையாய் நிறைவேற்ற வாழ்த்துக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி..தாங்கள் இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியை ஆற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்! 'சமர்த்து கண்ணா...' நன்றாகவே இருககிறது!
ReplyDeleteவலைசர ஆசிரியர் சகோவுக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பமே அமர்களமாக இருக்கு சகோ.
உங்கள் திறமைக்கும் எழுத்துவளத்துக்கும் இன்னும் பல சிகரங்களை எட்டுவீர்கள். நல்வாழ்துக்கள் சசிகலா.
ReplyDeleteஅன்பின் சசிகலா - அருமையான துவக்கம் - கவிதை அருமை - தொடர்க் பணியினை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகவிதை வழியாக இனிய அறிமுகம். வாழ்த்துக்கள் சகோ.!
ReplyDeleteஅழகிய தமிழால் கவிபாடி அனைவரையும் மறவாமல் போற்றிய தென்றலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்ளும். உங்களுக்கு இன்னும் இதுபோல பல சிகரங்கள் வசப்படும். உயரம் தொடுவீர்கள். நல்வாழ்த்துக்கள். அதிரட்டும் உங்களின் வாரம்.
ReplyDeleteஅறிமுகம் நல்லா இருக்கு. வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுக துவக்கமே கவிதை வடிவில்....
ReplyDeleteவாழ்த்துக்கள்..
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தங்களை தரட்டும் சசிகலா வாழ்த்துக்கள்
ReplyDeleteHaiyoooo! Super! அருமையா கவிதை பாடி ஆரம்பிச்சிருக்கறது நல்லா இருக்குக்கா. உங்க பதிவுகள்ல பலதை நான் படிக்கலைன்னு தெரியுது. பாத்திடறேன். உங்களோட இந்த வாரம் நல்லா வரட்டும்னு சந்தோஷமா வாழ்த்தறேன்.
ReplyDeleteமகேந்திரன்...
ReplyDeleteஎன்ன நட்பே இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் நானும் உங்களில் ஒருத்தி வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி .
Riyas ...
ReplyDeleteவாழ்த்துக்களோடு வரவேற்கும் அன்பருக்கு எனது நன்றி .
அட...அட...
ReplyDeleteஅருமை அருமை சகோ
அறிமுகமும் சிறப்பு கவிதைகளும் அருமை
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வலைச்சரத்தில்
வலைப்பூ உறவுகளுடன்
அன்பால் உறவாட(வீச )வருகிறது
தென்றல்
வே.நடனசபாபதி...
ReplyDeleteதங்களின் அனைவரது வாழ்த்துக்களே எனக்கு உற்சாகமாய் ..தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மதுமதி ...
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் .
அப்பாதுரை ...
ReplyDeleteதங்களின் வருகையும் கதையும் படித்து கருத்திட்டது கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மனசாட்சி™..
ReplyDeleteஉற்சாகமளிக்கும் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கீதமஞ்சரி....
ReplyDeleteசகோ நான் உங்கள் ரசிகை தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
cheena (சீனா)..
ReplyDeleteஅருமையான வார்த்தைகளால் வாழ்த்தியது கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .
Abdul Basith ...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கணேஷ் ....
ReplyDeleteதங்களின் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Lakshmi ...
ReplyDeleteவாழ்த்துக்களோடு வருகை தந்த தங்களுக்கு எனது வணக்கத்தோடு கூடிய நன்றி .
தமிழ்வாசி பிரகாஷ்....
ReplyDeleteவாய்ப்பும் கொடுத்து வாழ்த்தவும் செய்த சகோவுக்கு நன்றி .
வாம்மா... தென்றல். வாழ்த்துக்கள். அறிமுகக் கவிதையுடன் அசத்தலாக வந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteகோவை மு.சரளா ...
ReplyDeleteதங்கள் வருகையும் வசந்த வாழ்த்துக்களையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
நிரஞ்சனா...
தங்கைக்கு வணக்கம் வாரம் முழுமையும் வருகை தர அழைக்கிறேன் . நன்றி மா .
செய்தாலி...
ReplyDeleteகவிதையாய் வரவேற்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
விச்சு ...
வாம்மா மின்னல் என்று சொல்வது போல் உள்ளது . மகிழ்ச்சிங்க தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு நன்றி .
கவிதை தூவி வலைச்சரத்தில் விதை போடுகிறீர்கள். இனிய ஆரம்பம். நல் வாழ்த்து. மேலும் உயர வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
கவித் தோரணங்களோடு வலைச்சரத்தை அழகுபடத் தொடங்கியிருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteகோவைக்கவி...
ReplyDeleteவிதைப்பது நானாக இருந்தாலும் அது செழித்து வளர நீராய் இருப்பது தங்களைப் போன்ற அன்பு சகோதர நெஞ்சங்களின் வாழ்த்துக்களே . வருகைக்கு நன்றி சகோ . அனைவரையும் தொடர்ந்து வருகை தர அழைக்கிறேன் .
அழகாய் ஆத்மார்த்தமாய்;
ReplyDeleteஇனிமையாய் ஈகையாய்;
கவிதையாய் மலர்ந்து....
அரங்கேற்றம் அற்புதமாய்!
தொடரட்டும்..அமர்க்களமாய்!!
தமிழ் மீரான்..
ReplyDeleteவாழ்த்துக்களோடு வரவேற்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .
d.g.v.p Sekar ...
அழகான வார்த்தைகளால் வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
vaazhthukkal !
ReplyDeletesasikala!
inithe amaiye!
வலைச்சரத்துல தென்றல் வீசுதா?
ReplyDeleteஹீரோ, ஹீரோயின்லாம் ஓப்பனிங்க சாங்ல அறிமுகம் ஆகுற மாதிரி கவிதையால அறிமுகம் ஆகுறீங்களா? ஓக்கே. இதுவரை படிக்காத உங்க பதிவுகளை படிக்க ஒரு வாய்ப்பு படிச்சு பார்க்குறேன் தோழி.
ReplyDeleteஅறிமுகமே சும்மா அதிருது .., பதிவுகள் எப்படி இருக்குமோ காத்திருக்கிறோம்
ReplyDeleteகவிதை அருமை ..!
இந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தில் வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்த்து செல்லுங்கள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியரான உங்கள் புகைப்படத்தை எனது தளத்தில் வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்த்து செல்லுங்கள்.
ReplyDelete"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு ; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."
ReplyDelete-பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை
வீசு தென்றல் கவிஞர் சசிகலா அவர்களே! வருக! வலைச்சரத்தினை தொடுத்திடவே! வாழ்த்துக்கள்!
அருமையான அரிமுகம் வாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteSeeni ....
ReplyDeleteதங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ராஜி ...
அறிமுகத்திற்கு வந்த சகோவை வாரம் முழுமையும் வரும்படி அன்போடு அழைக்கிறேன் .
வரலாற்று சுவடுகள் ..
தங்கள் அதிரும் வாழ்த்துக்களே அடுத்தடுத்த பதிவிற்கு உற்சாகமளிக்கிறது நன்றி .
மதுமதி ...
ReplyDeleteபார்த்தேன் சகோ மிக்க நன்றி .
தி.தமிழ் இளங்கோ...
தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.//
அறிய தகவல்களையும் கூறி வாழ்த்தியது கண்டு மிகவும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ஸாதிகா ...
வருகை தந்து வாழ்த்து கூறியது கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .
வாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
அருமையான கவிதையுடன் தென்றல் வலைச்சரத்தில் அறிமுகம் இந்த வாரம் பல காற்று வீசும் என்ற ஆசையிருக்கு எனக்கு தென்றல் என்றால் சும்மாவா. உங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் தங்கையே..
ReplyDeleteவிடுமுறை என்பதால் என்னால் வலைப்பக்கம் வரமுடியவில்லை...
மன்னிக்கவும்..
உங்களின் திறமைக்கு ராமர் அணில் உதவியது போல என்னால்
உதவ முடிந்தமைக்கு அந்த கடவுளுக்கு நன்றி..
இன்னும் பலபல சிகரங்களை நீங்கள் அடைந்திட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சியாய் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தென்றல் சசி !
ReplyDeleteகவிதை அருமை!
இதமாய் வீசும் தென்றலுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் சசிகலா
ReplyDeleteவாழ்த்துக்கள்.தாங்கள் எனக்கு எழுதிய மடல் கண்டேன்.தங்கள் அஞ்சல் தெரியாததால் இதில் எழுத நேர்கிறது.என் பதிவு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக நீங்கள் எழுதியது எது என என்னால் காண முடியவில்லை.இணைப்பு அனுப்ப வேண்டுகிறேன்.கூடவே உங்கள் மின் அஞ்சல் முகவரியும்...