நானாகிய என்னைப் பற்றி நான்
➦➠ by:
அப்துல் பாஸித்
வலைச்சரத்தில் அதிகமான நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் தற்போது
நண்பர்(களாகிய பதிவர்க)ளை அறிமுகம் செய்வதற்காக ஆசிரியர் பொறுப்பை
ஏற்றுள்ளேன். இந்த நல்லதொரு வாய்ப்பை எனக்கு நல்கிய நண்பர் தமிழ்வாசி
பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட வலைச்சரக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி!
நான்:
இது நான் என்று சொன்னால் நம்பவா போறீங்க? |
என் பேர் அப்துல் பாஸித். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு. (இந்த இடத்துல ஒரு பின்னணி இசை ஒலிக்கிறது உங்களுக்கு கேட்குதா?). சரி, சரி, அடிக்க வராதீங்க, சொல்லிடுறேன். அது ப்ளாக்கர் நண்பன். என்னுடைய ப்ளாக் பெயரும் இது தான்.
கும்பகோணத்தில் பிறந்து, மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் வளர்ந்து, தற்போது அமீரகத்தில் வசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். அதாவது காமிக்ஸ், மாயாஜால கதைகள், ராஜேஷ்குமார் & சுபா ஆகியோரின் க்ரைம் நாவல்கள் போன்றவற்றை அதிகம் படிப்பேன். அதன் தொடர்ச்சியாக கார்டூன், அனிமேசன், சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் பார்ப்பேன். It's Hero Time!
பதிவுலகிற்கு நான் எப்படி வந்தேன்?
பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து...... கொஞ்சம் இருங்க, இதை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே? ஆங்... சாரிங்... இதை பத்தி நான் ஏற்கனவே ப்ளாக்கர் நண்பன் Version 2.0 என்ற பதிவில் சொல்லிட்டேன். அங்கே போய் படிக்கலாம்.
2010-ஆம் ஆண்டிலிருந்து ப்ளாக்கர் நுட்பங்களைப் பற்றி மட்டும் எழுதி வந்தேன். பிறகு கடந்த வருடத்தில் இருந்து பேஸ்புக், கூகிள் என்று சமூக இணையதளங்கள் பற்றியும் மற்ற இணையச் செய்திகளைப் பற்றியும் பகிர்ந்து வருகிறேன். சமீபத்தில் புது ஆன்ட்ராய்ட் மொபைல் வாங்கியதால் அது பற்றியும் எழுதத் தொடங்கியுள்ளேன்.
எல்லாரும் புத்தகத்தை முதல் பக்கத்தில் இருந்து படித்தால் நான் (அதிகமான நேரங்களில்) கடைசி பக்கத்திலிருந்து படிக்க தொடங்குவேன். அதே போல நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடரை முதலில் எழுதி ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரை பிறகு எழுதினேன். இருந்தாலும் புதிய பதிவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இணைய பயனாளர்கள் பாதுகாப்புடன் இருப்பது பற்றி இணைய பாதுகாப்பு என்ற சிறு தொடர் பதிவுகளையும் எழுதியுள்ளேன்.
தொழில்நுட்ப பதிவுகளை எழுதுவதால் நான் பாராட்டுக்களை மட்டுமே வாங்கியிருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ட்விட்டரில் நடந்த ஹேக்கிங் பற்றிய ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி என்ற பதிவிற்கு வேறுவிதமாக தலைப்பு வைத்து நண்பர்களிடம் சரியாக கொட்டுக்களை வாங்கிக் கொண்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பதிவு என் ப்ளாக்கில் பிரபல பதிவுகளில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. :D :D :D
பதிவுலகம் எனக்கு பல்வேறு நண்பர்களையும், மகிழ்ச்சியினையும் தந்திருக்கிறது. சமீபத்தில் டெரர் கும்மி விருதுகள் 2011 போட்டியில் சைபர் க்ரைம் பற்றி நான் எழுதிய பதிவு தொழில்நுட்ப பிரிவில் அல்லாமல் விழிப்புணர்வு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
ப்ளாக்கர் நண்பன் தவிர வேறு சில (???) வலைப்பதிவுகளிலும் எழுதி வருகிறேன். ப்ளாக்கர் மற்றும் தொழில்நுட்பச் செய்திகளுக்காக Techminar தளத்திலும், ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள் & விளையாட்டுகளுக்காக Park Android என்ற தளத்திலும் எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தோணும் போது எழுதி வருகிறேன். மேலும் சவால் போட்டிக்காக தடயம் என்ற க்ரைம் கதை ஒன்றையும் எழுதியுள்ளேன்.
இந்த சின்ன அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன். மேலும்நான் பகிர்ந்த பதிவுகளைக் காண ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு செல்லவும்.
அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:
ஆளைக் கடத்திப் போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!
- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்
- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்
|
|
பிளாகர் நண்பனே..வருக!வருக! நல்ல அறிமுகங்களைத் தருக!..இவ்வாரம் முழுவதும் சிறப்பாக வலைச்சரம் தொடுக்க இந்த அன்பனின் வாழ்த்துகள்..
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் சிறப்பாக வலைச்சரம் அமைய வாழ்த்துகள்..
ReplyDeleteஅறிமுகமே அசத்தல், இனி அடுத்த ஆறு நாளும் அதிரடி தான்.
ReplyDeleteஅன்புத் தம்பி பாசித்,
ReplyDeleteஇந்த வாரம் நல்ல வாரமாக அமைய வாழ்த்துக்கள்...
நான் ஒரு கட்டுரை தர்றேன் போடறீங்களா????
ஹ...ஹா..ஹா...
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
ASSALAMU ALAIKKUM W.R.B.
ReplyDeleteDEAR ABDUL BASITH,
YOU HAVE REACHED THE POSITION OF "WELL LIKED PERSON" IN TAMIL BLOGGERS WORLD IN A MANNER OF YOUR OWN.
KEEP IT UP .
BEST WISHES.
சுய அறிமுகமே அசத்தல்
ReplyDeleteதொடருங்கள் காத்திருக்கிறோம்.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
என்ட்ரி சூப்பரு தொடர்ந்து கலக்குங்க நண்பரே ..!
ReplyDeletefirst ball sixer.....
ReplyDeletecongrats my dear friend
அன்பு அபதுல் பாசித்.
ReplyDeleteஇன்று அழகான சுய அறிமுகம்.
இவ்வாரம் முழுதும் பதிவுகள் அறிமுகம் படைத்திட வாருங்கள். நானும் படித்திட வருகிறேன் (இறைவன் நாடினால்).
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteவாழ்த்துக்கள். மிக சிறப்பாக செயல்பட பிரார்த்திக்கின்றேன்.
நன்றி.
ஆசிரியர் பதவி கிட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே! :)
ReplyDeleteமற்ற பதிவுகள் எழுதி பிரபலமாவதைவிட, தொழில்நுட்பப் பதிவுகள் எழுதி, அதன் மூலம் பிரபலமும் ஆவதென்பது - மிகக் கடினம். ஏனெனில் தொழில்நுட்பப் பதிவுகள் அதிக சுவாரஸ்யமாகவோ ஈர்ப்பைத் தருவதாகவோ இருக்கது. அதனால் நிலைத்து நிற்பதற்கு ரொம்ப உழைக்க வேண்டும்.
ReplyDeleteஅந்த வகையில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!!
ஆசிரியரானதற்கு வாழ்த்துகள் நண்பா...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
ReplyDeleteஇறையருளால் தங்களுக்கு கிடைத்த இப் பணியை சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்துக்கள் சகோ..:)
ஹூசைனம்மா சொல்வது போல் கணிணியைப் பற்றி அதிகம் எழுதி பிரபல்யம் ஆவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு உங்களிடம் இருக்கிறது. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான அறிமுகம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteகலக்கலான ரசிக்கும்படியான அறிமுகம். உங்கள் பதிவுகள் பெரும்பாலும் படித்தாகிவிட்டது. ஆண்ட்ராய்டு பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்.
ReplyDeleteவணக்கம் வாத்யாரே!
ReplyDelete@மதுமதி
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி அன்பரே!
@Thomas Ruban
வாழ்த்துக்கு நன்றி நண்பா!
@Prabu Krishna
வாழ்த்துக்கு நன்றி சகோ.!
@சிராஜ்
வாழ்த்துக்கு நன்றி அண்ணா!
@VANJOOR
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்
வாழ்த்துக்கு நன்றி அப்பா!
@புதுகைத் தென்றல்
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
@வரலாற்று சுவடுகள்
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
@சம்பத்குமார்
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
@NIZAMUDEEN
வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
தொடருங்கள் காத்திருக்கிறோம்.
ReplyDeletethanks brother
@Aashiq Ahamed @Bladepedia கார்த்திக் @ஹுஸைனம்மா @சேலம் தேவா @Ayushabegum @சுவனப்பிரியன் @சசிகலா @விச்சு @koodal bala @பாத்திமா ஜொஹ்ரா
ReplyDeleteஅனைவரின் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வாழ்த்துக்கள் சார்..தொடர்ந்து எழுதுங்கள்.வருகிறேன்.
ReplyDeleteசகோதரா அப்துல் பாசித் மிக நல்ல ஆரம்பம். வாழ்த்துகள் வலைலச்சர பயணத்திற்கு.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தொடருங்கள் தொடர்கின்றோம். வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாசித், வித்தியாசமான பதிவாக வரும்னு சொன்னிங்க, நெஜமாலுமே வித்தியாசமா இருக்கு தலைப்புக்கள்...
ReplyDeleteதொடருங்கள்....
வாழ்த்துக்கள் நண்பா\
vaazhthukkal!
ReplyDeleteவாழ்த்துக்கள். மிக சிறப்பாக செயல்பட பிரார்த்திக்கின்றேன்
ReplyDeleteவாழ்த்துகள் சகோ. அறிமுகமே அமர்க்களம்!.
ReplyDeleteஆசிரியர் பொறுபேற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteஎன்ட்ரி சூப்பர் நண்பா..
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஉங்களை பற்றிய தெரியாத பல தகவல்கள் வலைசரத்தில் கலக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteபிளாக்கர் நண்பன் மட்டும் மட்டுமல்ல நீங்கள்...!! அனைவருக்கும் நல்ல நண்பர்..!! தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..! வலைச்சரத்தில் உங்கள் அரும்பணி தொடரட்டும்...!!! வித்தியாசமான அறிமுகங்களை எதிர்நோக்குகிறோம்..! வலைச்சரப் பொறுப்பேற்றமைக்கும் என்னுடைய வாழ்த்துகள்...!!!
ReplyDeleteநல்ல தொழில் நுட்ப வழிகாட்டல் இங்கும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
ReplyDeleteபாஸ் அறிமுகம் அசத்தல் பின்னிடுங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகமே டெர்ரரா இருக்கும். தொடர்ந்து கலக்குங்க பாஸ்
ReplyDelete//ப்ளாக்கர் நண்பன் தவிர வேறு சில (???) வலைப்பதிவுகளிலும் எழுதி வருகிறேன். //
எழுதி வந்தேனு சொல்லி, இப்ப Techminar மற்றும் Park Android மட்டும் தான் தொடர்ந்து இருக்குனு சொல்லனும் பாஸ் :))
பிலாக்கர் டிப்ஸ்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிதாய் புரிந்து கொள்ளும்வண்ணம் போட்டு இருக்கீங்கள்
ReplyDeleteநிச்சயமாக பல பிலாக்கர் பயனடைந்திருப்பார்கள், நானும் பயனடைந்து இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்
இது உங்கள் வாரம் பாஸித்
ஆரம்பமே அசத்தல் ! வாழ்த்துக்கள் !
ReplyDelete@Kumaran @kavithai (kovaikkavi) @ஸாதிகா @தமிழ்வாசி பிரகாஷ் @Seeni @Lakshmi @Syed Ibramsha @Uzhavan Raja @cool @PREM.S @palani vel @♔ம.தி.சுதா♔ @Mahan.Thamesh @ராஜகிரி ஹாஜா மைதீன் @Jaleela Kamal @திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதங்கள் அனைவரின் அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி!
நான் பதிவு எழுத நீங்கள் தான் காரணம்
ReplyDeleteநான் பதிவு எழுத நீங்கள் தான் காரணம்
ReplyDeleteவாங்க...
ReplyDeleteஉங்களைப் பற்றிய நல்ல அறிமுகங்கள் கொடுத்தீங்க..
பதிவுகலில் நல்ல அறிமுகங்களை எங்களுக்குக் காட்டுங்க!
வலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்,தங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.தொடர்ந்து அசத்துங்க.
ReplyDeleteநீங்க உள்ளூர் ஆளு. வாய்ப்பு கிடைச்சா நேரில் சந்திக்கலாம்னு பாத்தா, கடல் கடந்து இருக்கீங்களா? நல்ல அறிமுகம். இறைவனின் நாட்டத்துடன் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
ReplyDeleteவாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றி! நேரமின்மை காரணமாக தனித் தனியாக பதில் அளிக்க முடியவில்லை.
ReplyDelete