07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 20, 2012

இசை கேட்டால் புவி அசைந்தாடும்


வீணை
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.



புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி.



நாதசுவரம்
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.



வயலின்
தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.



மிருதங்கம்
மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.




தவில்
தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.


கஞ்சிரா
கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.



எக்காளம்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.


பூசாரிக் கைச்சிலம்பு
கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது கலகல என்று சப்திக்கும் ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் கைச்சிலம்புப் பாட்டு என்பது முக்கியமாகும். மாரியம்மன் தாலாட்டுப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.


தவண்டை
தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவி வாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது.


உடுக்கை
கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது வாசிக்கப்படும். இது ஒரு தோல் வாத்தியம் ஆகும். உலோகத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர். உடுக்கை கையினால் வாசிக்கப்படும் வாத்தியமாகும். கரகம் ஆடும் போதும் பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இவ்வாத்தியம் வாசிக்கப்படுவது உண்டு.


தம்பட்டம்

தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும். டண்டண் என்று கேட்கும் படியாக கிராம தேவதைகளின் திருவிழாக்களில் ஓர் இனத்தார் தம்பட்டங்களை வாசிப்பதை காணலாம்.


நகரா

நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது.

ஓசையின்றி ஒன்றுமில்லை,
பாசமின்றி வாழ்வில்லை,
காட்சியின்றி கனவுமில்லை,
காதலின்றி எண்ணமில்லை,
இசையின்றி இமையில்லை,
பாட்டின்றி இசையுமில்லை,
காற்றில் கலந்திருக்கும்-மூச்சு,
வாழ்வில் துணயாக-எல்லாமும்.
கவிதையாய்,காவியமாய்,
கதையாய்,ஓவியமாய்,
சிற்பமாய்,சிந்தனையாய்,
புவிவாழும் புன்னகைகள்,
பூவாய்த் தினம் மலர்ந்து,
மணம்வீச வாழ்த்துரைத்து,
வாழ்த்தி வணங்கி முடிக்கின்றேன்,
ஆக்கும் கைகள் எழுதட்டும்,
ஆயிரமாயிரம் பூமலரட்டும்,
சரமாய் நாம் இணைந்திருப்போம்,
எழுத்துலகம் வெல்லட்டும்.

மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?  அது எப்படிங்க உருகும் வாங்க வீடு சுரேஷ்குமாரை கேட்போம் .

மாமரத்தின் கீழே மாலைப்பொழுதுகளில் புத்தகங்களின் பக்கம்களைப் புரட்டியபடி இருக்கும் எழுத்துக்களைக் காதலிக்கும் சிறுவன் காணாமல் போயிருப்பான்.இனிமேல் தன் ஒவ்வொரு இலைகளையும்,கிளைகளையும் நேசிக்கும் ஒரு உற்ற நண்பனைத் தேடியபடி....என்று நாம் இழந்தவைகளைப் பற்றி கூறுகிறார் சுபேஷ் .

சொல்ல வந்த ஒரு விஷயத்தை நேர சொல்லத் தெரியாதா ? என்று கேட்கிறார் வருண் .

கவியருவியில் நனைய அழைக்கிறார் யாழ் நிதர்சனன் வாங்க போவோம் .

எல்லா நேரங்களிலும் துன்பம் இழிவானதும் அன்று. எல்லாக் காலங்களிலும் துயரம் வெறுக்கத்தக்கதும் அன்று. சில சூழ்நிலைகளில் காயங்கள் நமக்கு நன்மை அளிக்கும். அப்படியா எனக் கேட்கத் தூணுது இல்ல வாங்க நண்பர் ஹைதர் அலி  வலைப்பக்கம் போவோம் .

ஆடிய காலும் பாடிய வாயும்
வாங்கிய கையும் சும்மா இருக்காதுதான். இது நாம கேட்டிருப்போம் இதுக்கு புதுசா விளக்கம் சொல்கிறார் காட்டான் .

விடியல் வெகு தொலைவில் இல்லை எனக்கூறுகிறார் நிவாஸ் .

தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எதையும் சாதிக்கலாம் வாங்க!! என்று அழைக்கிறார் என். உலகநாதன்.

22 comments:

  1. இசைகருவிகளைபற்றி நல்ல விளக்கம் + வழக்கம் போல நல்ல அறிமுகம் உங்கள் கடுமையான உழைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இசையுடன் இசைந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. கடந்த ஒரு வாரமாக புதிய புதிய தகவல்களோடு பதிவர்களை அறிமுகப்படுத்தி அனைவரையும் திக்குமுக்காட செய்துவிட்டீர்கள்.
    நீங்கள் எழுதியபடி

    //ஆக்கும் கைகள் எழுதட்டும்,
    ஆயிரமாயிரம் பூமலரட்டும்,//

    வாழ்த்துக்கள் கிடைத்த பணியை சிறப்பாய் செய்தமைக்கு!

    ReplyDelete
  4. இசைக்கு இயைந்த பதிவுகளை
    இசைக் கருவிகளின் அறிமுகத்துடன் அழகாக
    இணைத்திருப்பது/இசைத்திருப்பது அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இன்னிசையுடன் அழகிய பதிவுகள் அறிமுகம் .. கலக்கல்

    ReplyDelete
  6. தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ள மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்காக

    மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

    ReplyDelete
  7. இசைக்கேட்டால் புவிமட்டுமல்ல.மனித மனமே அசைந்தாடுகிற பொழுதுகள் நிறைந்த நேரமாய் பதிவாகிறது நம் மனதில்/கண்ணீர் மல்க அல்லது மனம் பறிபோய் விடுகிற அளவு தொல்லைக்காட்சியின் முன் அமர்ந்து மனதிற்கு பிடித்த பாடல்களை கேட்கிற பாக்கியம் வாய்க்கப்பெறுகிற நேஅரங்கள் பெரும் பாக்கியம் செய்யப்பெற்றவையாகவே.அப்பொழுது நீங்கள் மேற் குறிப்பிட்டிருக்கிற கருவிகளின் இசை ஊடாடுவது சகஜமாகிப்போகிறது.அதிலும் இளையராஜா அவர்களது இசை எப்போழுதும் மனம் பறிப்பதாகவே/

    ReplyDelete
  8. இசைக்கருவிகளை அறிமுகம் அற்புதமாக இருக்கு இன்றைய அறிமுகங்கள்

    ReplyDelete
  9. இசையோடு இணைந்த இந்த பதிவு ரொம்ப அருமை சசி, இந்த ஒரு வார கால ஆசிரியர் பணி என்னை ரொம்ப பிரம்மிக்கவைக்கிறது...எப்படி உங்களை வாழ்த்துறதுன்னு தெரியல, மனமார்ந்த பாராட்டுகள் சசி உங்களுக்கு.......

    ReplyDelete
  10. Avargal Unmaigal...
    ரசித்து வாழ்த்தியமை கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    இராஜராஜேஸ்வரி...
    வலைச்சர வாரத்தில் என்னுடன் பயணித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    வே.நடனசபாபதி...
    மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!

    Ramani...
    கவிதை போல் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க!

    அறிவன்...
    நேரக் குறைவால் தகவல் திரட்ட இயலாமல் விடுபட்டு விட்டது. மன்னிக்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    "என் ராஜபாட்டை"- ராஜா...
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    விமலன்...
    இசைக்கு வசப்பட்டு, உங்கள் ரசனையையும் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி!

    மனசாட்சி...
    ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ரேவா...
    இந்த ஒரு வாரமா நீங்கல்லாம் தந்த ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு உண்மைல எனக்குத்தான் தெரியலைங்க...!

    ReplyDelete
  11. இசைகருவிகளைபற்றி நல்ல விளக்கம் + வழக்கம் போல நல்ல அறிமுகம் உங்கள் கடுமையான உழைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இசைக்கு மயங்காத உயிர்களுண்டோ.

    இசைக் கருவிகளின் தொகுப்பு மகிழ்விக்கின்றது.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    அழகாகத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. இசை கருவிகள்
    கவிதை இசைக்கும் வரிகள்
    தோழமை அறிகம்
    தித்திக்கும் இசையழகு

    அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  14. நிறையப்பேருக்கு இன்னைக்கு தான் பல இசைக்கருவிகலோட பெயர் நல்லா தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ..!

    அய்யய்யே ஒரு வாரம் முடியப்போகுதே சகோ ... :(

    ReplyDelete
  15. அக்கா..... இசைக்கருவிகள் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.....

    அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பதிவர்களின் அறிமுகங்களோடு எக்காளம், நகரா போன்ற இசைக்கருவிகளை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் சசி.

    ReplyDelete
  17. வழக்கம் போல நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  18. இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்ததைப் போல இசைப் பதிவைப் போட்டு முடித்தது சிறப்பு.சிறப்பான வலைச்சர ஆசிரியப் பணியை மேற்கொண்ட சகோதரி சசிகலாவிற்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. இசைகளின் சங்கமமாக இருகிறது சூப்பர் :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது