Sunday, May 6, 2012

கணேஷ், அப்துல் பாசித்திடம் வலைச்சர பொறுப்பைத் தருகிறார்!

அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,
 
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த நண்பர் மின்னல் வரிகள் வலைப்பூ கணேஷ் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று, ஒவ்வொரு நாள் இடுகையிலும் இதழ்களில் வரும் பிரபல கதாபாத்திரங்களின் பிரபல உரையாடல்கள் மூலம் தனது மனங்கவர்ந்த இடுகைகளை பகிர்ந்து அனைத்து வாசகர்களையும் கவர்ந்து விட்டார்.

அவரது அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஏழு இடுகைகள் எழுதி 375க்கும் மேல் மறுமொழிகளைப் பெற்று தனது வலைச்சரப் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறும் கணேஷ் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை  முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூவை எழுதி வரும் அப்துல்பாசித் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். மயிலாடுதுறை அருகேயுள்ள நீடுரைச் சேர்ந்த இவர் தற்போது அமீரகத்தில் வசித்து வருகிறார். சிறுவயது முதலே காமிக்ஸ், நாவல்கள் போன்றவைகளை படிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் 2010-ஆம் ஆண்டிலிருந்து ப்ளாக்கர் நுட்பங்களைப் பற்றி எழுதி வருகிறார். ப்ளாக்கர் நுட்பங்கள் மட்டுமில்லாமல் தற்சமயம் சமூக இணையதளங்கள், இணைய பாதுகாப்பு மற்றும் இதர தொழில்நுட்பச் செய்திகளைப் பற்றியும் தனது வலைப்பூவில் பகிர்ந்து வருகிறார்.

அப்துல்பாசித் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் கணேஷ்...
நல்வாழ்த்துக்கள் அப்துல்பாசித்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

11 comments:

  1. வெல்கம் மை டியர் ஃப்ரெண்ட் அப்துல் பாஷித்! நல்லறிமுகங்களை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நான்! என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அப்துல்

    ReplyDelete
  3. வாருங்கள் அப்துல் பாஷித்.

    ReplyDelete
  4. ஆசிரியர் பணியை திறம்பட நிறைவு செய்த கணேஷ் சாருக்கு வாழ்த்துக்கள் ..!

    ஆஹா நண்பர் பாசித் ஆசிரியர் ஆகிவிட்டாரா, அப்போ வரும் வாரம் முழுவதும் வலைச்சரத்தில் சரவெடி தான் ...!

    ReplyDelete
  5. vaanga !
    nanpaa!

    nalla thakavalkalai-
    thaanga!

    ReplyDelete
  6. பிளாகர் நண்பனே வருக..நல்ல அறிமுகங்களை தருக..

    ReplyDelete
  7. பாசித் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

    ReplyDelete
  8. இவ்வார வலச்சர ஆசிரியர் பணியை சிறப்புடன் நடத்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவேற்றிய கணேஷுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள். புது ஆசிரிய பொறுப்பேர்கும் அப்துல் பாசித்துக்கு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தனது பணியினை செம்மையாக முடித்து விடைபெறும் நண்பர் கணேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    என்னை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ReplyDelete