Tuesday, June 26, 2012

ஹாரிபாட்டரும் பதிவர் ரகசியமும்

நேற்று வலைச்சரத்தின் மூலம் என் பதிவுகளை கண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..

சரி இன்றைய நாளில் என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் அகப்பட்டது தான் இந்த பதிவர் ரகசியம். நிஜ ஹாரி பாட்டரில் (புத்தகம் மற்றும் திரைப்படம்) கூட ரெண்டாவது பாகத்தில் ஏதோ ரகசியத்தை தான் தேடி போவார்கள். இங்கு 10 க்கும் அதிகமான பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க கூடியவர்கள் கண்டு பிடித்து வாசித்து கொள்ளுங்கள்.

 ஹாரிபாட்டரும் பதிவர் ரகசியமும்



ஹாரி - ஹாய் ரோன்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற?

ரோன் - நானா.. ப்ளாக்கர் எழுதிகிட்டு இருக்கன்..

ஹாரி - நான் கூட இப்ப தான் எழுதிட்டு அப்டேட் பண்ணிட்டு வந்தன்.. நைட் தான் போய் ரெஸ்போன்ஸ் எப்படி இருக்குது என்று பார்க்கணும்..

ரோன் - நான் கூட தான் தெனோம் 2 அப்டேட் ஆவது பண்றன்.. டெய்லி 500 ஹிட்ஸ் கூட தாண்ட முடியலியே மச்சி..

ஹாரி - ஒரு ஐடியா மச்சி.. மக்களுக்கு ஏற்ற போல புதுசா எழுது  இல்லாட்டி அவங்களுக்கு பிடிச்ச ஒரு விஷயத்த அது உனக்கு பிடிச்சு இருந்தா அத பற்றி தகவல் சேகரிச்சு சேமிச்சு அழகா எழுதி சரியா அவங்களுக்கு கொண்டு போய் சேரு..

ரோன் - எனக்கு ஒரு ஐடியா மச்சி.. 

ஹாரி - என்ன அது?

ரோன் - நாம ரெண்டு பெரும் சண்டை பிடிப்பம்..

ஹாரி - ஏன்டா? ஹெர்மாயினி உன்னை தானே லவ் பண்ணுது.. (ஹி.. ஹி..)

ரோன் - அது இல்ல மண்டு.. ப்ளாக்கில நாம ரெண்டு பேரும் சண்டை பிடிப்பம்.. ஹிட் ஆகிரலாம் ..




ஹாரி - அட போடா இவர் பெரிய புரட்சிக்காரன்.. சண்டை பிடிப்பம் என்கிறாரு..

ரோன் - இல்லாட்டிக்கு ஏதாவது  பிரபல பதிவர்கள கலாய்ச்சு, அவங்க நேம யூஸ் பண்ணி ஹிட் ஆகுவோம்.. 

ஹாரி - நீ இப்பிடி சொல்றத பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நண்பா.. சினிமா போல பதிவுலகமும், பதிவுகளும், பதிவர்களும் மக்கள் மத்தியில் ஆழமா போய் சென்றடைஞ்சு இருக்குற படியா தான் நீ அவங்கள கலாய்ச்சு ஜெயிக்கலாம் என்று சொல்ற.. 

ஆனா இன்னொன்று அவங்கள கலாய்.. SPOOF பண்ணு.. அவங்க எழுத்த மட்டும்.. அவங்க தனி வாழ்க்கையையோ குடும்பத்தையோ இல்ல.. அவர் பிரபல பதிவரா இருந்து பிழை விட்டா தனிய விஷயத்த தெரியபடுத்து.. இல்ல நீயும் போட்டிக்கு போட்டி கிளம்பினா ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்காது.

ரோன் - காணுண்டா உன் மெசேஜு.. இத நான் பண்ணாம காப்பி பேஸ்ட் பண்ணி பிரபல பதிவர் ஆகவா?

ஹாரி - எங்க இந்த விஷயம் உன்ட ஆள் சிந்தனையில இருந்து இன்னும் வரலையே என்று நினைச்சன்..

ரோன் - ஹி ஹி 

ஹாரி - ஏதோ மற்றவன் கஷ்டப்பட்டு ஒரு பதிவை தயாரிச்சு வைச்சா அத நீ திருடி உன் பதிவாக்குற.. நன்றினு அவன் பெயராவது போடுவியா? இல்லை முழு நாமமா? 

எந்த ஒரு படைப்புக்கும் மூலம் ஒன்று வேணும்.. ஒரு சிலை என்றா கண்டிப்பா பாறை என்ற மூல பொருள் முக்கியம். அந்த மூலத்தை செதுக்கி ஒருவன் சிலை ஆக்கினா அத நீ உன்டது என்று போட்ற.. அடுக்குமா நியாயமா?

சிலை எப்பிடி செதுக்கிறது என்று தெரிஞ்சுகிட்டு அந்த மூலத்தை நீ யூஸ் பண்ணு.. அப்போ மக்களுக்கு ஒரு விஷயத்துக்கு 2, 3 ஏன் 4, 5 பரிமாணம் கூட கிடைக்கும்..

இல்லாட்டி அயல் மொழிகள்ல இருக்குற நல்ல விஷ்யங்கள தமிழுக்கு ரான்சிலேட் பண்ணு.. அவங்களுக்கு நன்றி போட்டு.. மக்களும் இன்னொரு மொழியில இருக்குற முக்கிய விடயங்கள அறிஞ்சு கொள்ளுவாங்க..

அத விட்டுட்டு..

ரோன் - கண்ணா.. ராசா.. யப்பா.. டேய்.. காணும் டா.. முடியல.. விட்டுரு நான் ஓடிர்ரன்..



ஹாரி - டேய்.. டேய்.. ஓடாத.. சூப்பர் ஐடியா கவிதை எழுது மாமா..

ரோன் - வேணாம் டா.. அந்த ஆணிய புடுங்கவே வேணாம்.. கவிதையா அத நான் ஹெர்மாயினி கிட்டேயே போய் சொல்லிரன்.. BYE 

ஹாரி - ஹி .. ஹி .. BYE மச்சி 

19 comments:

  1. அறிமுகங்கள் வித்யாசமா பன்ரீங்க நல்ல யுக்தி அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஹா ஹா என்ன ஒரு வில்லத்தனம்

    ReplyDelete
  3. அட ரொம்ப வித்தியாசமா அறிமுக படுத்திறிங்க ... கலக்குங்க ..

    ReplyDelete
  4. வித்தியாசமான முறையில் பதிவ்ர் அறிமுகம் செய்தது அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நகைச்சுவையோடு சேர்ந்த அறிமுகம் :)

    ReplyDelete
  6. வணக்கம் சகோரா இரண்டு நாட்களாக வரமுடியவில்லை. இன்றைய பதிவுகள: - அறிமுகங்கள் புதிதாக உள்ளது. அத்தனை பேருக்கும், உமக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. மச்சி நீங்க எழுதும் நடை சூப்பர் ஹாரிபாட்டர்...

    ReplyDelete
  8. //திண்டுக்கல் தனபாலன்//

    நன்றி அண்ணா

    ReplyDelete
  9. //சீனு said...

    ஹா ஹா என்ன ஒரு வில்லத்தனம்//

    நன்றி நண்பா எங்க காணலையே என்று நினைச்சன்..

    ReplyDelete
  10. //"என் ராஜபாட்டை"//

    நன்றி

    ReplyDelete
  11. //Ramani said...

    வித்தியாசமான முறையில் பதிவ்ர் அறிமுகம் செய்தது அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    Thanks for your comment..

    ReplyDelete
  12. //வரலாற்று சுவடுகள் said...

    நகைச்சுவையோடு சேர்ந்த அறிமுகம் :)//

    நன்றி

    ReplyDelete
  13. //kovaikkavi said...

    வணக்கம் சகோரா இரண்டு நாட்களாக வரமுடியவில்லை. இன்றைய பதிவுகள: - அறிமுகங்கள் புதிதாக உள்ளது. அத்தனை பேருக்கும், உமக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.//

    நன்றி

    ReplyDelete
  14. //chinna malai said...

    மச்சி நீங்க எழுதும் நடை சூப்பர் ஹாரிபாட்டர்...//

    ஏன் நண்பா இதெல்லாம்?

    ReplyDelete
  15. ஒருவன் சிலை ஆக்கினா
    என்ற பதிவில் Malware detect செய்ய பட்டு உள்ளது.. எனது AV அதை இப்படி காட்டுகிறது..
    Malware Detected
    URL: http://computerintamil.blogspot.in/2012/04/blog-post_4348.html 74.125.236.75
    URL Host: computerintamil.blogspot.in
    URL Reputation: Unverified
    Media Type: text/html
    Virus Name: MGW: Heuristic.BehavesLike.JS.Suspicious.G
    User: 10.44.22.185
    Rule: Block if Virus was Found
    File name: blog-post_4348.html

    ReplyDelete
  16. தெரியவில்லை நன்றி நண்பா பார்க்கிறேன்

    ReplyDelete