முதலில்
வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு அனுமதி தந்த குழுமத்திற்கு
நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குருவி தலையில் பனங்காய் போல இருந்தாலும்
என்னால் முடிந்ததை இந்த வாரம் முழுக்க முயற்சிக்கிறேன். பதிவுலக
ஜாம்பவான்கள் எழுதிய இந்த பகுதியை ஹாரி பாட்டரை போல 40 நாள் குழந்தைக்கு
நம்பி அளித்து இருக்கிறார்கள் நன்றி.
அதே
போல பதிவுலகதிற்கு வந்ததில் மிக குறுகியதாய் இருந்தாலும் நல்லதொரு நண்பர்
வட்டம், சில பழைய பதிவர்களின் அறிமுகம் ,5 வாரத்தில் 50000 ஹிட்ஸ்
என தொடர்ச்சியாக இந்த வலைச்சர ஒரு வார ஆசிரியர் பதவி என ஒரு அழகிய
சம்பவங்கள் சரங்களாகி போகின்றன என் வலையுலக வாழ்வில்.. ஆதரவு அளித்த
ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..
சரி விடயத்துக்கு வருவோம்..
சீனா
ஐயாவின் அறிவித்தலுக்கு அமைய எனது முதல் பதிவாக என்னுடைய பிளாக்கினை
அறிமுக படுத்துகின்றேன். (ஹி.. ஹி.. காரணம் என்னை யாரும் இதற்கு முதல் இந்த
இடத்தில அறிமுக படுத்தவில்லை. ஆகவே நானாகவே என்னை அறிமுக படுத்தி
கொள்கிறேன்)
ஹாரி பாட்டரும் சுயபுராணமும்
நள்ளிரவு நேரம் திடிரென தூக்கம் கலைய விழித்து கொண்டேன். நேற்று தான் ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் முக்கிய எக்ஸாம் எல்லாம் முடிந்தது. இதனால் எனது புதிய நண்பன் ரோன் உடன் 2 நாட்கள் தொடர்ச்சியான தூக்கம் இல்லாத படிப்பு.
"யப்பா சாமி முடியல டா.. எவன் தான் இந்த எக்ஸாம கண்டு பிடிச்சானோ.."
எக்ஸாம் தான் முடிஞ்சே ஒரு படம் பார்த்தா தான் ஜென்ம சாபத்த கழிக்கலாம் என்று சொல்லி அஞ்சு DVD எடுத்து வந்தன். அடிங் கொக்க மக்கா 2 DVD படங்கள் ஒரே கதை , ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்.. நமக்கு படிப்புல லாஜிக் மண்டைல ஏறாடியும் படத்துல இல்லாட்டி டென்ஷன் ஆகிடுவேன்.. ஆமா..
சரி மூணாவதா ஒரு DVD செம படங்க A WALK TO REMEMBER என்று.. ஐயோ.. சூப்பருங்க.. ஒரு அழகான காதல் தாலாட்டுங்க.. அந்த படத்துல தூங்குனவன் தான்.. இப்ப தூக்கம் கலைஞ்சு எழும்பினன். சரி மிச்சம் இருக்கிற DVD ய போய் பார்க்கலாம் என்று போனன் அங்க இருந்தது டைட்டானிக்கும், TWILLIGHT உம்..
நைட்டுல இனி காதல் படம் பார்த்தா நான் இன்னும் டென்ஷன் ஆயிடுவன் என்ற சுய பயத்துல வீட்டுக்கு பின்னுக்கு இருக்குற கால எந்திரத்த பார்க்க போனன்.
சரி அதுல ஏறி இன்னிக்கு யார பார்க்க போகலாம் என்று யோசிச்சுட்டு இருக்ககுல யாராவது உலக தலைவர்களை பார்க்க போவம் என்று நினைச்சன். உலக தலவரிங்க எல்லாரையும் பத்திரிகைகாரங்க பாத்துக்குவாங்க ஸோ நாம ஏதும் கட்டிடம் பார்க்கலாம் என்று நினைச்சன். (அட நீ என்ன கொத்தனாரா..) அப்ப இப்படி உள்ளே ஒரு குரல் கேட்டதால அந்த பிளானும் கான்சல் பண்ணிட்டு யாரும் நம்ம நடிகர்கள பார்க்கலாம் என்று நினைச்சன்.. ரஜினி, விஜய், அஜித் எல்லாருமே ஷூட்டிங்ல பிஸி.. ஸோ அவங்களும் வேணாம்.. கடைசி விஜய், அஜித் சண்டைய போய் FACEBOOKலயாவது பார்க்கலாம் என்று நினைச்சன்..
அசால்டா எடுக்க வேண்டிய முடிவ அரை மணி நேரமாகியும் எடுக்காததால கடுப்பான கால எந்திரம் என்னை அப்பிடியே அள்ளி தூக்கி கொண்டு தண்ட பாட்டுக்கே கொண்டு போனது.
பழைய காலத்துக்கு போகும் போது ஜன்னலால எட்டி பார்த்தன் நம்ம சே குவாரா மோட்டார் சைக்கிள்ல போய்கிட்டு இருந்தாரு.. அவருக்கு கைய காட்ட கைய தூக்கினன் அதுகிடையில இந்த நாசமாப்போன வண்டி 2 ஆம் உலக போருக்கே போய்ற்று.. வண்டி கொஞ்சம் மெதுவாகி இருந்தாலும் ஹிட்லர் போட்ட 2 குண்டுகள் எங்கள் வண்டியை பஞ்சர் ஆக்கி இருக்கும்.
அட என்னடா இது.. என்று கையை கொஞ்சம் விலக்கினேன் பக்கத்துல இருந்த டாவின்சி கோட் புத்தகம் தவறி விழுந்து எதோ சுவிட்ச்ல பட்டு மாயன் காலத்துக்கே போய்ட்டு..
இந்த ஆட்டமே சரி இல்ல.. நடக்குற சம்பவங்கள் எல்லாம் பார்த்தா நம்ம உசிருக்கு உத்தரவாதம் இல்ல.. நம்ம ஹாக்வார்ட்ஸ்கே போய்டலாம் என்று விசையை அழுத்தினேன் (என்னா தமிழு)..
எனக்கு நடந்த கொடுமை பாதி வழியிலே வண்டி பழுதாகி போனது. வெடித்து சிதறும் எலார்ம் ஒன் ஆகியது . இதற்குள் இருந்தால் சாவு கன்பர்ம் என்று இயந்திரத்தில் இருந்து பாய்ந்தேன்.
எங்கு இருக்கிறேன்..
எங்கு இருக்கிறேன்..
என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை..
முழுவதும் கல்லறைகள்..
ஒரு மனிதனும் இல்லை..
ஒரே ஒரு அறை..
மிகுதி எல்லாம் வெட்ட வெளி..
சூரியன் கூட அந்தகார பட்டு இருந்தது..
அந்த அறைக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன்..
எனக்குள் ஒரு உறுதி நான் தான் உலகத்தின் கடைசி மனிதன்..
கொஞ்சம் தலை சாய்த்து படுக்க எண்ணினேன்..
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது..
(புரிந்தவர்கள் ரசித்து இருப்பீர்கள்)
( குறிப்பு - மேலுள்ள எனது சில பதிவுகள் ஆங்கில இணையங்களில் இருந்து எடுத்து வெல்டிங், டிங்கரிங் பண்ண பட்டவைகள் - HOLLYWOOD MISTAKES போன்றன)
ஆரம்பமே கலக்கல் ! தொடருங்கள் .... வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteஅன்பின் ஹாரி பாட்டர் - அருமையான துவக்கம். அறிமுகங்கள் சென்று பார்க்கிறேன். தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களைப் போன்ற புதியவர்கள் பலரை அறிமுகப் படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ReplyDeletewww.bhageerathi.in
//5 வாரத்தில் 50000 ஹிட்ஸ்//
ReplyDeleteஇந்த இரகசியத்தை பற்றி அடுத்த பதிவில் விரிவாக சொல்ல போவதற்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்! ;)
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஆரம்பமே கலக்கல் ! தொடருங்கள் .... வாழ்த்துக்கள் நண்பரே !//
நன்றி தனபால் அண்ணா
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ஹாரி பாட்டர் - அருமையான துவக்கம். அறிமுகங்கள் சென்று பார்க்கிறேன். தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நன்றி ஐயா
//எல் கே said...
ReplyDeleteஉங்களைப் போன்ற புதியவர்கள் பலரை அறிமுகப் படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//
முயற்சிக்கிறேன் அண்ணா
//Karthik Somalinga said...
ReplyDelete5 வாரத்தில் 50000 ஹிட்ஸ்
இந்த இரகசியத்தை பற்றி அடுத்த பதிவில் விரிவாக சொல்ல போவதற்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்! ;)//
ஏன் நண்பா இந்த கொலைவெறி
வலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பா! அறிமுகம் எனக்கு(ம்) பிடித்த ஹாரிபாட்டர் பாணியில் சொல்லியிருப்பது அருமை.
ReplyDeleteஅறிமுகம் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்னைக்கு தான் உங்க ப்ளாக் பக்கம் போய்ப் பார்த்தேன். நன்றாக அமைத்துள்ளீர்கள்.
இந்த வாரம் அசத்தலாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே..
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்., துவக்கம் அருமை., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.!
ReplyDeleteஅறிமுகப்பதிவோடு ஆரம்பம் ஆகியிருக்கும் சகோவிற்கு வாழ்த்துக்கள், இந்த வாரம் சிறப்பான பதிவுகளின் அறிமுக வாரமாய் அமையட்டும் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹாரி.....
ReplyDeleteஉங்கள் வெற்றி நடை வலைசரத்திலும் தொடர வாழ்த்துகள் நண்பா
ReplyDelete//Abdul Basith said...
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பா! அறிமுகம் எனக்கு(ம்) பிடித்த ஹாரிபாட்டர் பாணியில் சொல்லியிருப்பது அருமை.//
நன்றி நண்பா..
//Lakshmi said...
ReplyDeleteஅறிமுகம் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.//
நன்றி
//இந்திரா said...
ReplyDeleteஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு பாராட்டுக்கள்.
இன்னைக்கு தான் உங்க ப்ளாக் பக்கம் போய்ப் பார்த்தேன். நன்றாக அமைத்துள்ளீர்கள்.
இந்த வாரம் அசத்தலாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே..//
நன்றி.. என் பிளாக்கை சென்று பார்வை இட்டதற்கு..
//வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்., துவக்கம் அருமை., தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.!//
நன்றி
//ரேவா said...
ReplyDeleteஅறிமுகப்பதிவோடு ஆரம்பம் ஆகியிருக்கும் சகோவிற்கு வாழ்த்துக்கள், இந்த வாரம் சிறப்பான பதிவுகளின் அறிமுக வாரமாய் அமையட்டும் :)//
நன்றி
//தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹாரி.....//
நன்றி annaa..
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஉங்கள் வெற்றி நடை வலைசரத்திலும் தொடர வாழ்த்துகள் நண்பா//
நன்றி நண்பா..
நல்ல ஆரம்பம்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் வெற்றி நடை.
வாழ்த்துக்கள்.
வாயா ஹாரி பாட்டர் ஆங்கில படம் பற்றிய உன் விமர்சனம் சூப்பர்யா அதே மாதிரி A WALK TO REMEMBER எனக்கும் பிடிச்ச படம்ல ....கொளுத்து கொளுத்து
ReplyDeleteVery interesting - a Harry Potter fan.
ReplyDelete//சே. குமார் said...
ReplyDeleteநல்ல ஆரம்பம்.
தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.
வாழ்த்துக்கள்.//
நன்றி
//கவிதை நாடன் said...
ReplyDeleteவாயா ஹாரி பாட்டர் ஆங்கில படம் பற்றிய உன் விமர்சனம் சூப்பர்யா அதே மாதிரி A WALK TO REMEMBER எனக்கும் பிடிச்ச படம்ல ....கொளுத்து கொளுத்து //
நன்றியா கவிதை நாடா
//middleclassmadhavi said...
ReplyDeleteVery interesting - a Harry Potter fan.//
Thank you for your comment
vaazhthukkal nanpaa!
ReplyDelete//கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது..// உலகின் மிகச் சிறிய திகில் கதையாக சுஜாதா இதனைக் குறிப்பிடுவார்.
ReplyDeleteதங்கள் வலைச் சர பணி சிறக்க வாழ்த்துக்கள்
//Seeni said...
ReplyDeletevaazhthukkal nanpaa!//
Thanks for your comment..