Tuesday, July 31, 2012

பீஷ்ம பிதாமகர்கள்-நாள்-2

”ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்;ஆறு விரிந்தனன்;ஏழு உம்பர்ச்
சென்றனன்;தான் இருந்தான் உணர்ந்து எட்டே”.(திருமந்திரம்)


******************************





விநாயகப் பெருமானின் ஐந்துகரங்கள்- ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.

அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.

கும்பம்  ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் 

மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,

அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,

பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும்,

அபயகரம் அருளலையும் குறிக்கும்.

சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.


*********************************
முன்பே சொன்னேன் ,நான் 2007இல் என் வலைப்பூவைத் தொடங்கினேன் என்று.அதற்கு முன்பிருந்தே எழுதிக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள். 

பல நேரங்களில் எழுதியது போதும் கடையை மூடிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு வருவதுண்டு. ஆனால்,இவர்கள் இன்னும் அயராமல் அதே உற்சாகத் துடன் எழுதிக் கொண்டி ருக்கும் வித்தகர்கள்.

1) 2003 இல் மலர்ந்த பூ இந்தக் கவினுலகம்.முழு ஒன்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட பதிவு.இப்போதெல்லாம் எண்னிக்கை குறைந்து போனாலும் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.இவர் எழுதிய ” ஆலவட்டம்” என்ற தொடர் பதிவு  குறிப்பிடத்தக்கது


2)இவரும் 2003இலிருந்து எழுதி வருகிறார்.அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு என்று பலவும் இருக்கும் இவர் பதிவில்.2009க்குப்பின் ஒரு இடை வெளி,2012இல் மீண்டும் எழுத் துவங்கியிருக் கிறார். இப்போது பெரும்பாலும் அமெரிக்காவின் தமிழ் நிகழ்வுகள் குறித்தே எழுதுகிறார்,இந்த பாஸ்டன்பாலா. பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

3) 2003 இல் மலர்ந்த வலைப்பூ,இந்த டுபுக்கு.பல பதிவுகளில் ஒரு நகைச்சுவை இழை கலந்தே இருக்கும். படித்துப் பாருங்கள் இந்த 
  வித்துவான்




4)2003 இல் மலர்ந்த மற்றொரு வலைப்பூ இந்த நினைவுத் தடங்கள்.சிறுகதை நாவல், கவிதை,இலக்கிய அனுபவங்கள்  என்று அனைத்தும் எழுதும் இலக்கிய வாதி.கால நதிக்கரையில் என்று ஒரு குறிப்பிடத்தக்க நாவல் 2007ல் எழுதியி ருக்கிறார்.’ எழுத்துக்கலைபற்றி இவர்கள்’ என்று 40 பதிவுகளில் பிரபல எழுத்தாளர்களின் கருத்துகளைத் தொகுத்து தந்திருக்கிறார். பிரமிக்க வைத்திருக்கிறார்.

5)ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த பொருள்.வீட்டில் வைத்து வளர்த்து வழிபடுவதே நன்மை பயக்கும். மருத்துவ குணங்களும்  நிரம்பியது.மாதா என்று அழைக்கப்படுவது. ஆம்,துளசியன்றி வேறென்ன?துளசி அக்கா,துளசி றீச்சர் என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கப்படும் துளசி கோபால் அவர்களின் இந்த துளசிதளம்,2004 இல் தொடங்கப் பட்டது.ஆயிரம் பதிவுகளை அநாயாசமாகக் கடந்த பின்பும் இன்றும் அதே உற்சாகத்துடன் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது பயணக்கட்டுரைகள் படிக்க மிகவும் சுவையானவை. அவர் சென்ற இடங்களை நமக்கும் நேரில் பார்ப்பது போல் காட்டி விடுவார்.இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘பிரிஸ்பேன்பயணம்’ என்ற தொடரைப் படித்துப் பாருங்கள்.


நாளை அடுத்த ஐந்து பேர்!

10 comments:

  1. ‘பழையன பத்தரை மாற்றுத் தங்கங்கள்’ தான் என்பதை அவர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அறிமுகங்களை வலையுலக பீஷ்ம பிதாமகர்களோடு ஆரம்பித்து வைத்தது நன்று. அடுத்த பதிவுகளைக் காண ஆர்வம் அதிகரித்து விட்டது..

    ReplyDelete
  3. அரிமுகப்படுத்திய விதம் நல்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. எனக்கு இந்த என்னுடைய சீனியர்கள்ல துளசி டீச்சர் மட்டும்தான் பரிச்சயமானவங்க. மத்தவங்களை இப்பத் தெரிஞ்சுக்கறேன். நன்றி சொக்கரே...

    ReplyDelete
  5. தொடரட்டும் ஆசிரியரின் தேடல் வேட்டை!

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகம் நன்றி ஐயா.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே! தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்தி அறிமுகவாளர்களிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. அனைத்து தளங்களிலும் சென்று படித்து வந்தேன்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி.
    (த.ம. 2)

    ReplyDelete
  9. பெரும் ஆளுக்குரிய மருத்துவ குணமுடைய மூலிகையை அறிமுகப்படுத்தியதற்கு இந்த வெறும் ஆளின் நன்றிகள்.

    இன்ப அதிர்ச்சின்னுதான் சொல்லணும்.

    பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  10. அருமையான அறிமுகங்கள்.
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete