Wednesday, August 1, 2012

இன்னும் சில பீஷ்மர்கள்

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே”- -----(திருமந்திரம்)

சிவபெருமானின் முகங்கள் ஐந்து,அவையாவன-சத்யோஜாதம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம்.
இம்முகங்களை வணங்கும் ஸ்லோகம் ஸ்ரீருத்ரத்தில் உள்ளது.
இவை தவிர அதோமுகம் என்று ஒன்று உண்டு என்றும்
சொல்வர் 


---------------------

1)அவரே முட்டி மோதித் தெரிந்து கொண்டவற்றைப் பற்றி நம்மிடம் சொல்ல ஆசைப்படுகிறார் இவர்.2004 முதல் இன்று வரை அசராமல் எழுதி வருகிறார். .தன் எண்ணங்களை எந்த வித தயக்கமோ அச்சமோ இன்றிச் சொல்பவர். பழனி பஞ்சாமிருதம்தான் பிரசித்தி பெற்றது என்றில்லை. இவரது நங்கநல்லூர்பஞ்சாமிருதமும்தான்! டோண்டு என்றால் அறியாதவர் இருக்க மாட்டார்கள்.


2))எல்லாம் எல்லோருக்கும் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்திவருகிறார் சுரேஷ் கண்ணன்.
2004 இல் மலர்ந்த வலைப்பூ.இவரே கூறுவது போல்,இலக்கியம், திரைப்படம் போன்றவை பற்றியே அதிகம் உரையாடப்படும் ஒரு தளம்.சமீபத்தில் பில்லா 2 படத்துக்கு ஒரு விமரிசனம் எழுதியிருக்கிறார். அதன் கடைசி வரி-’நச்’
--// Final verdict: படத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லை. :)//

3)இந்தப் பினாத்தல்கள்  2004 இல் ஆரம்பித்ததுதான். எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் ஓயவில்லை.நமது கல்விமுறை பற்றி +2 சாமியார்கள் என்று ஒரு பதிவு.படித்துப் பாருங்கள்

4)பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கச் சென்ற தருமி தெரியும்.இந்தத் தருமியும் சந்தேகம் தீர்க்கும் பேராசியர்தான்.  2005 இல் மலர்ந்த வலைப்பூ இந்தத் தருமி.எல்லா விதமான செய்திகள் பற்றியும் எழுதுகிறார். தருமியின் சின்னச்சின்ன கேள்விகள் படித்துப் பாருங்கள்.

5)2006 இல் பதிவு தொடங்கி இன்று வரை எழுதிக் 
கொண்டி ருக்கும்  வல்லவர் இவர்.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்என்பதே இவர் நோக்கம். தொழிலதிபர்.முன்பு பதிவர் பட்டறை,பாசறை என்று கலக்கியவர்.துறை சார்ந்த பதிவுகள் பல எழுதி யுள்ளார்.(economics)  (பொருளாதாரம்)என்ற தலைப்பில்  50 பதிவுகள் எழுதியுள்ளார்கட்டாயம் படித்துப் பாருங்கள்.நிறைய வாசிக்கிறார்.  வாசிப்பதைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார். இவரது சமீபப் பதிவுகாலடித்தடங்கள்,நிழல்கள் மற்றும் நிதர்சனம்.”


நாளை சந்திப்போம்..

 

15 comments:

  1. எல்லோரும் எங்க காலத்து ஆட்கள்!!!!!!

    ReplyDelete
  2. அனைத்தும் எனக்கு புது முகங்கள்...
    அவரவர் தளத்திற்கு சென்று படித்து வந்தேன்..

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    [ முடிவில் உள்ள லிங்க் மட்டும் மாற்றவும்... { பொருளாதாரம்(economics) } ] - Not Found என்று வருகிறது...

    நன்றி...
    (த.ம. 2)

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இன்றி தான் வலைச்சரம் பக்கம் வர முடிந்ததது வந்து பார்த்தால் அட நீங்கள்... பித்தனான உங்களை சமீபத்தில் தான் சொக்கனாக தெரியும்... ஆசிரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. துளசி கோபால் said...

    //எல்லோரும் எங்க காலத்து ஆட்கள்!!!!!!//

    இன்னும் வரும்!
    நன்றி.

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...

    //அனைத்தும் எனக்கு புது முகங்கள்...
    அவரவர் தளத்திற்கு சென்று படித்து வந்தேன்..

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    [ முடிவில் உள்ள லிங்க் மட்டும் மாற்றவும்... { பொருளாதாரம்(economics) } ] - Not Found என்று வருகிறது...

    நன்றி...
    (த.ம. 2)//

    தனபாலன்,
    பொருளாதாரத்தில் க்ளிக்கினால்,வரவில்லை,economics இல் க்ளிக்கினால் தளம் திறக்கிறது.எனவே அதை மட்டும் லின்கில் கொடுத்துவிட்டேன்.
    நன்றி தனா .

    ReplyDelete
  7. Lakshmi said...

    // அனைவருக்கும் வாழ்த்துகள்//
    நன்றி லக்ஷ்மி அம்மா!

    ReplyDelete
  8. சீனு said...

    //இன்றி தான் வலைச்சரம் பக்கம் வர முடிந்ததது வந்து பார்த்தால் அட நீங்கள்... பித்தனான உங்களை சமீபத்தில் தான் சொக்கனாக தெரியும்... ஆசிரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்//
    தொடர்ந்து பாருங்கள்!
    நன்றி.

    ReplyDelete
  9. எல்லா அறிமுகவாளர்களிற்கும், சகோதரார் மதுரை சொக்கனுக்கும் நல்வாழ்த்து. முடிந்தளவு சென்று வாசிப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள். இன்று என்னால் சென்று படிக்க இயலாது. குறித்து வைத்துக் கொண்டேன் அவசியம் பின்னர் சென்று படிக்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
  13. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. அன்புள்ள திரு.சொக்கன்,
    நன்றி நல்ல சுட்டிகளுக்கு..

    பதிவர்களின் பெயரையும் எழுதினால்,இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    பெனாத்தலார் சுரேஷ் மற்றும் மாசிவகுமார் போன்றவர்களை பெயரைக் குறிப்பிடும் போது சட்டென்று புரியும்.

    நன்றி.

    ReplyDelete
  15. நீங்கள் எழுதியதுபோல் ‘டோண்டு என்றால் அறியாதார் இல்லைதான். மற்றைய பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete