அனைவருக்கும் வணக்கம்., மதிப்பிற்குரிய சீனா ஐயா
அவர்கள் நேற்றைய வலைச்சர இடுகையில் என்னை இந்த வார வலைச்சர ஆசிரியராய்
அறிமுகப்படுத்தியதும்... இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை... உலகமெங்கும்
பரவியிருக்கும் என் கோடானுகோடி ரசிகர்கள்... மிக விமர்சியாக கொண்டாட ஆரம்பித்து
விட்டனர்... பல நாடுகளில்... சாலைகள் விழாக்கோலம் பூண்டன.... நான் வாழும் தேசமான
பஹ்ரைன்... ஸ்தம்பித்தது... பலர் என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது
மகிழ்ச்சியை பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.... நேற்று மட்டும் எனக்கு வந்த வாழ்த்து
தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்து.. பதிலளித்தே.. என் வாய் ஒரு ஓரமாய்
ஓரங்கட்டிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... (இங்கே பவர் ஸ்டார்
உங்கள் ஞாபகத்திற்க்கு வந்தால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல).!
ஒரு வழியாய் எல்லாவற்றையும் சரி கட்டி... முதல்
பதிவை எழுதலாம் என்று உட்கார்ந்தால்.... முதல் பதிவு நம்மை பற்றிய அறிமுக பதிவாக
இருக்க வேண்டுமாமே.... நான் தான் பிரபலபதிவர் (ஹி ஹி ஹி இதுக்கு என்னா அர்த்தம்னு
டிக்ஸ்னரியில தேட வேண்டாம்) ஆயிற்றே! நமக்கு எதுக்கு அறிமுகம் என்று நினைத்து
கொண்டிருக்கையில் தீடீரென்று என் சிந்தனையில் ஒரு அபிரிமிதமான சிந்தனை தோன்றியது.!
அதாகப்பட்டது... பிரபலமடையாமல் இருக்கும் எனது சில இடுகைகளையும் இங்கு
அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி விடலாம் என்ற குரூர சிந்தனை தான் அது....
எனக்கு எப்போது நேரம் போகவில்லை என்றாலும் உடனே விக்கிபீடியாவின்
ஆங்கில கட்டுரைகளுக்குள் புகுந்து விடுவதுண்டு.... அட ஆங்கிலத்தில் இவன் பெரிய
அப்பர்டக்கராக இருப்பான் போலிருக்கிறதே என்று... என்னை பற்றி யாரும் உயர்வாக நினைத்துக்கொள்ள
வேண்டாம்... ஏ.பி.சி.டி – யை... எப்படி ஒழுங்காய் எழுதுவது... என்று கற்றுக்கொள்த்தான்... அவ்வப்போது அங்கே.. ஒரு விசிட்டை போடுவதுண்டு.. பஹ்ரைனுக்கு வந்த புதிதில்
நேரப்போக்கிற்க்காக... ஒரு நாள் விக்கியின் ஆங்கில கட்டுரைகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருந்த
போதுதான் தற்செயலாக அஸிஷீல் ஹீக் (Azizul
Haque) பற்றி படிக்க நேர்ந்தது. யார்.. இவர் என்கிறீர்களா....
இன்று தடயவியல் துறை (Forensic Department) இத்தனை
அபிரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்றால் அதற்க்கு இவர் தான் முக்கிய
காரணம்.!
ஒரு இடத்தில்... குற்றம் நிகழ்ந்தால்... குற்றவாளிகளுக்கு
எதிரான ஆதாரங்களை சேகரிப்பதற்காக.. முதலில் அந்த இடத்திற்குள் நுழைந்து ஆய்வு
செய்வது... தடயவியல் துறை நிபுணர்களாகத்தான் இருக்கும்... அதிமுக்கியத்துவம் கொண்ட
அந்த தடயவியல் துறையில்... கைரேகை நிபுணர்களின் (Fingerprint Experts) பங்கு அலாதியானது... இன்றளவும்.. குற்றம் நிகழ்ந்த இடத்தில்...
கைப்பற்றப்படும்.. குற்றவாளிகளின் கைரேகை தான்... குற்றவாளிக்கு எதிரான வலுவான ஆதாரமாக
கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது... ஒரு மனிதனின் கைரேகையை இன்னொரு மனிதனின்
கைரேகையுடன் ஒப்பிடும்... அந்த ஒப்பீட்டு முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்
என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே... அந்த கைரேகை ஒப்பீட்டு
முறையை உருவாக்கியவர் தான்... நான் மேற்சொன்ன அஸிஷீல் ஹீக்! இதைத்தான் எனது மறைக்கப்பட்ட மாமேதைகள் என்ற இடுகையில் குறிப்பிட்டு இருப்பேன்.! எழுத வந்த புதிதில்
எழுதப்பட்ட இடுகை அது... தொடர்ச்சியற்று ஒரு மாதிரியாகத்தான் இருக்கும் (ம்ம்க்கும்...
இப்போ மட்டும் என்ன வாழுதாம்.. இப்பையும் அப்பிடித்தாண்டா எழுதுறே...) இருப்பினும்
நீங்கள தவறாமல் வாசிக்க வேண்டிய இடுகைகளில் ஒன்றாகும்.. இன்றளவும் அந்த இடுகை அதிக
அளவில் வாசிக்கபடவில்லை என்பதில்... எனக்கு எப்போதும் ஒரு வருத்தம் இருந்ததுண்டு...
நான் ரசித்து.. ரசித்து எழுதிய முதல் இடுகை சைக்கிள் உருவான வரலாறு, எழுதி முடித்து பார்த்த போது.. பதிவு இருபது பக்கங்களையும்
(MS Word-ல்)
தாண்டியிருந்தது.. அப்போது
பாகம் ஒன்று... பாகம் இரண்டு... என்று பதிவை... பிரித்து... பதிவிடலாம் என்ற
சிந்தனை தோன்றாததால்... இயன்ற அளவு பதிவை சுருக்கி பிரசுரித்தேன்... இதன் காரணமாக பதிவு... தொடர்ச்சியற்று
ஆங்காங்கே... துண்டு துண்டாய் தொங்கியது... இருந்தாலும் இதுவும் நீங்கள்
தவறவிடாமல் வாசிக்க வேண்டிய இடுகைகளில் ஒன்றுதான்.!
இந்த உலகில் எனக்கு அறவே பிடிக்காத விஷயங்களுள்
ஒன்று உணவுப்பொருட்களை வீணடிப்பது... அதை பற்றிய எனது கருத்தை உணவுப் பொருட்களை வீணாக்காதீர் என்ற இடுகையில் தெரிவித்திருப்பேன்.. வெற்றியை தேடி
தோல்வியில் துவண்டு வாடி நிற்கும் நெஞ்சங்களுக்காக எழுதிய தோல்வியால் துவண்டு போயிருக்கிறீர்களா என்ற இடுகையும் நீங்க வாசிக்க வேண்டிய
இடுகைகளில் ஒன்றுதான்.!
பொதுவாக ஒரு குரலை கேட்டதும்... அந்த குரலுக்கு
சொந்தக்காரர் ஆணா.. அல்லது பெண்ணா... என்று நம்மால் கூறி விட முடிகிறது தானே....
காரணம் இரண்டு குரலுக்கும் இருக்கும் வித்தியாசம் தான்... இதற்க்குரிய காரணத்தை
பற்றி அலசும் பதிவுதான் ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? ..... இதே பதிவில் மனிதர்கள் எப்படி பேசுகிறார்கள்....
விலங்குகளால் ஏன் மனிதனை போல் பேச முடிவதில்லை என்ற காரணத்தை பற்றியும் அலச
முயன்றிருப்பேன்..!
இதுவரை எழுதிய இடுகைகளில்… எழுத வந்ததிற்க்கான... மனநிறைவை
ஏற்படுத்திய இடுகைகளாக.. உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று, மற்றும் திப்பு சுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி, ஆகிய இடுகைகளை
குறிப்பிடலாம்.. இந்த இரண்டு இடுகைகளுமே... சகபதிவர்களால் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டது..
என்னுள் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.!
எனது முப்பத்தி ஒன்று (சத்தியமா...
அம்புட்டுதான் எழுதியிருக்கேன்.!) இடுகைகளையும் இங்கே அறிமுகப்படுத்திட... எனக்கு
ஆசைதான்... ஒருவேளை... நான் அப்படிச்செய்தால்... நீங்கள்.. பின்னூட்டத்தில் என்னை துவம்சம் செய்யும் வாய்ப்பிருப்பதால்... எனக்கான இந்த அறிமுகத்தில் வெறும் ஏழே ஏழு..
இடுகைகளுடன்... ஒருவித ஏமாற்றத்தோடு நிறைவு செய்கிறேன்.! (ஹி ஹி ஹி... இதுவே
அதிகம் தான்னு நீங்க முணுமுணுப்பது எனக்கு கேக்குது.!)
ஒரு ஜாம்பவானுக்கு பிறகு... இங்கே
நான் பொறுப்பேற்ப்பதால்... இப்போது என் நெஞ்சில் ஒருவித பதட்டம்
குடிகொண்டுள்ளது... உங்கள் பின்னூட்டங்கள் அந்த பதட்டத்தை தணிக்க உதவலாம்... எல்லாம் வல்ல அந்த விநாயக பெருமானின் ஆசியிருந்தால் நாளை
முதல்... தினமும் ஒரு புது தகவலுடன்.... வலையுலகில் நான் ரசித்து வாசிக்கும்.. சில பதிவர்களின்
பதிவுகளோடு... மீண்டும் வருவேன்... நன்றி.. வணக்கம்.!
வணக்கம் வரலாறு
ReplyDeleteவரலாறு படைக்க வாழ்த்துக்கள்
ஹா..ஹா..ஹா... ஆரம்பமே அமர்க்களம். தலைப்பும் கவிதை! ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்துமுடிக்க வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteஉலகமெங்கும் பரவியிருக்கும் என் கோடானுகோடி ரசிகர்கள்... மிக விமர்சியாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்... பல நாடுகளில்... சாலைகள் விழாக்கோலம் பூண்டன.... நான் வாழும் தேசமான பஹ்ரைன்... ஸ்தம்பித்தது..//அடேங்கப்பா..வ.சுவடுகள் வலைச்சரத்தில் வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteungalathu padaippukalai padithu vittu-
ReplyDeletepinnoottam idukiren!
varalaaru -
nichayam padaippe-
oru varalaaru!
பயபுள்ள நல்லாத்தான் எழுதுது!!!!
ReplyDeleteரைட்டு ரைட்டு..
- வாழ்த்துக்கள் நண்பரே! இந்த நிகழ்வை நாளைய வரலாறு சொல்லட்டும்! :)
ReplyDelete- நிச்சயம் உங்கள் கல்வெட்டுகளை படிக்கிறேன்! :D
- என்ன செய்ய, சிறு வயதிலிருந்தே வரலாற்றை சொந்தமாக செதுக்கிதான் பழக்கம்! ஹி ஹி ஹி
வாங்க நண்பா .. கலக்குங்கள்
ReplyDeleteஇன்று
ReplyDeleteஅஜித் : நடிகனா ? மனிதனா ?
@ மனசாட்சி
ReplyDeleteவாங்க நண்பர் மனசாட்சி.., வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அருமையான எளிய நடை ஆளை கவரும் வகையில் அசத்துறீங்க ........வாழ்த்துக்கள்
ReplyDelete@ Abdul Basith
ReplyDeleteவாங்க நண்பர் அப்துல் பாஸித்., வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ ஸாதிகா
ReplyDelete@ Seeni
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ வெளங்காதவன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)
@ Karthik Somalinga
ReplyDelete///சிறு வயதிலிருந்தே வரலாற்றை சொந்தமாக செதுக்கிதான் பழக்கம்! ஹி ஹி ஹி ////
நம்மெல்லாம் creator மாமூ.. சொந்தமாத்தான் எழுதுவோம்... யாரோ எழுதுனத படிப்போமா.? (சந்தடி சாக்கில என்னையும் creator-ன்னு சொல்லிகிட்டாச்சு ஹி ஹி ஹி)
வாழ்த்துக்கள் பாஸ்............தொடர்ந்து நன்றாக பணியாற்றுங்கள்..
ReplyDeleteமிக அரிதாய் மட்டுமே பதிவுகள் எழுதும் நம்ம நண்பரை, ஒரு வாரத்துக்கு தினம் பதிவு எழுத வைத்த சீனா ஐயாவுக்கு நன்றி !
ReplyDeleteபலரும் அறிய வேண்டிய விஷயங்களை அது பற்றி நிறைய படித்து விட்டு எளிமையாய் எழுதுபவர் வரலாற்று சுவடுகள் !
உங்கள் அறிமுகத்தில் உங்கள் நிஜ பெயர் சொல்ல கூடாதா? :-)
@ கோவை மு.சரளா
ReplyDelete@ சிட்டுக்குருவி
சகோதரர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!
@ மோகன் குமார்
ReplyDeleteதினமும் ஒரு பதிவு எழுதுவது நமக்கு கொஞ்சம் அல்ல... ரொம்பவே கஷ்டமான விசயமாகத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் நண்பரே.., ஆனால் வேறு வழியில்லை எழுதித்தான் ஆகவேண்டும்.. அக்ரிமெண்ட் போட்டாச்சே ஹி ஹி ஹி..!
இங்கே எனது நிஜப்பெயரை சொல்லியிருக்கலாம் தான்... ஆனால் தவிர்க்க இயலாத சில காரணங்களால் தான் பொதுவில் பகிர இயலவில்லை... வருந்துகிறேன் நண்பரே..
தங்களை போன்ற பிசியான பதிவர்கள்.. வருகையே உற்சாகம் அளிக்கும் விஷயம் தான்.. இதில் தங்களிடமிருந்து.. பின்னூட்டமும் கிடைத்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சியே.! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.!
// இன்றளவும் அந்த இடுகை அதிக அளவில் வாசிக்கபடவில்லை என்பதில்... எனக்கு எப்போதும் ஒரு வருத்தம் இருந்ததுண்டு. //
ReplyDeleteஆரம்பகாலத்தில் பதிவர்கள் அனைவருக்கும் நேரும் சோகம்தான் இது. இப்போது நீங்கள்தான் பிரபலம் ஆகிவிட்டீர்களே!
தலைப்பும் அருமை, சுய அறிமுகமும் அருமை...
ReplyDelete@ தி.தமிழ் இளங்கோ
ReplyDelete///ஆரம்பகாலத்தில் பதிவர்கள் அனைவருக்கும் நேரும் சோகம்தான் இது. இப்போது நீங்கள்தான் பிரபலம் ஆகிவிட்டீர்களே///
உண்மையாகவா சொல்கிறீர்கள்... நான் பிரபலம் ஆகிவிட்டேனா :) :) :)
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.!
@ Prabu Krishna
ReplyDeleteமிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்!
அறிமுகமே அசத்தலாக...நாளை எப்போது விடியும் என காத்திருக்கிறேன்.
ReplyDeleteம்ம்ம்.... அறிமுகம் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே
அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கீங்க நண்பரே... தொடரும் தினங்களில் தொடர்கிறேன். உங்களின் பெயருக்கேற்ப வலைச்சர வாரத்தில் வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் தமிழ் மொழிச்சுவடு பதிக்க நல்வாழ்த்து சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வலைச்சரத்தில் தமிழ் மொழிச்சுவடு பதிக்க நல்வாழ்த்து சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ Sasi Kala
ReplyDeleteவாங்க சகோ.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!
@ செய்தாலி
வாங்க சகோ.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!
@ பால கணேஷ்
ReplyDeleteவாங்க கணேஷ் சார்.. தங்களது வருகையும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.!
@ kovaikkavi (e) வேதா. இலங்காதிலகம்
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.!
வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteசுவாரஸ்யமாக அறிமுகம் செய்து கொண்டுள்ளீர்கள்.
@ ராமலக்ஷ்மி
ReplyDeleteவருகைக்கும்..கருத்துக்கும்..மிக்க நன்றி சகோ!
வாங்க நண்பா வாங்க..
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் நல்ல தகவல்களைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.நல்வாழ்த்துகள்..
அட்டகாசமான ஆரம்பம் நண்பா...
ReplyDeleteஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்து முடிக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றி !
அறிமுகத்தை படிக்கும்போது உங்களுடைய வேறொரு முகத்தைக் கண்டேன்.
ReplyDeleteஎல்லா பதிவுகளுமே அருமை என்றாலும்.‘உணவுப்பொருட்களை வீணாக்காதீர்’ என்ற பதிவுதான் என்னை அதிகம் ஈர்த்தது. வாழ்த்துகளுடன்.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே ### வருக வருக வரலாறு திரும்புகிறது
ReplyDeleteபாஸ்....
ReplyDeleteஆரம்பமே அட்டகாச ஆரம்பம்...
ஸ்டார்டிங் பதிவே இம்புட்டு நீளம்னா அடுத்து வர்றது எல்லாம் எவ்ளோ நீளமா இருக்கும்?
வரலாறு பதிவர்கள் வரலாறு படைக்க வாழ்துக்கள்
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
உங்கள் பெயர் மாரி என அறிகிறேன் ஆரம்பமே அசத்தல் தொடருங்கள்
ReplyDeleteBest of luck brother
ReplyDelete@ மதுமதி
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.!
@ வே.நடனசபாபதி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா! உங்களை கவர்ந்த இடுகையை நான் அறிந்ததின் மூலம்... உணவுப்பொருட்களை வீணாக்க கூடாது என்ற விசயத்தில் என் சிந்தனையோடு உங்கள் சிந்தனையும் ஒன்றிணைய காண்கிறேன்.!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.!
@ தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல.. பதிவு கொஞ்சம் நீளம் ஆகிருச்சுதான்... மன்னிக்கவும்... அடுத்த பதிவின் நீளத்தை இயன்றவரையில் குறைக்க பார்க்கிறேன்.!
புலவர் சா இராமாநுசம் said...
மிக்க நன்றி ஐயா.. வருகைக்கும் வாழ்த்துக்கும்!
@ PREM.S
ReplyDeleteதிடீரெண்டு இந்த பெயர் எப்படி தோன்றியது நண்பா.. ஓ.. நான் எனது Profile படத்திற்கு வைத்திருக்கும் பெயரை கொண்டு அனுமானிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. அது பெயரல்ல நண்பா.. அது அந்த புகைப் படத்திற்க்கான அடையாளம்... என் பெயர் பண்டைய காலங்களில்.. புகழ் பெற்று விளங்கிய அரசர்களின் பெயர்களில் ஒன்று!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா.!
@ அ.குரு
ReplyDeleteமிக்க நன்றி சகோ.. வருகைக்கும் கருத்துக்கும்!
நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்! வரலாறு படைக்க வந்த வரலாற்று சுவடுகளே!
ReplyDeleteGreat going bro...When I get a chance I will wish you in Tamil...:)
ReplyDelete@ சித்திரவீதிக்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
@ s suresh
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
@ ரெவெரி
ReplyDeleteவாங்க சகோ.. தங்களது வருகையும் கருத்தும்.. வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது :)
கலக்கல் வாரமாக அமையட்டும் நண்பரே,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@ சே. குமார்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!
பதிவர்களை ஊக்கப்படுத்தி மேன்மை படுத்தும் வலைசரத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்...!
ReplyDeleteநீங்கள் பஹ்ரைனில் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது...! [[நானும் இங்கேதான் இருக்கிறேன்]]
ம்ம்ம்ம் பதிவர் மறுபடியும் இங்கே தொடரும்னு நினைக்கிறேன்...!
நானும் பஹ்ரைனில் தான் இருக்கிறேன்...-:)
ReplyDeleteமுகவரி...
பஹ்ரைன் குறுக்குச்சந்து...
பஹ்ரைன் பேருந்து நிலையம்...
பஹ்ரைன்.
வழி தெரியாட்டி....அல் மதார்...> ஆலத்தூர்...>ல போய்..
க்யாபால் ஹெல்... குல்லு தமாம்..டிக் டாக்...ன்னு சொல்லி ரெவெரின்னு கேளுங்க...மாபி முக்னு சொன்னாலும் சொல்வாங்க...
BTW,கலக்குங்க...
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநீங்க பஹ்ரைன்லயா இருக்கீங்க.. அப்ப நேத்து நைட்டு.. பஹ்ரைன் சாலைகளை... ஸ்தம்பிக்கச் செய்த... என் ரசிகர்களின் அட்டகாசங்களை... நேரில் கண்டீர்கள் என்று சொல்லுங்கள் ஹி ஹி ஹி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாஞ்சில் சார் :)
@ ரெவெரி
ReplyDeleteவிவேகானந்தர் சாலையை விட்டுட்டீங்களே ரெவெரி சார்.!
ஆமா... க்யாபால் ஹெல்... குல்லு தமாம்..டிக் டாக்.. .மாபி முக்னு-ங்கிறது கெட்ட வார்த்தை ஒன்னும் இல்லையே.. ஏன்னா எனக்கு இங்கிலிஸ் தெரியாது.. (ஆமா நீங்க பேசுனது இங்கிலீஸ் தானே) அதுவுமில்லாம இங்க ஏதாவது ஒன்னு பண்ணுனா டக்குன்னு தலையை வெட்டிபுடுராய்ங்க.. அதுக்கப்புறமா முண்டமா தெரியமுடியாது பாருங்க.. அதான் கேட்டேன் ஹி ஹி ஹி!
உங்க ஊரு பாஷை தான் ...கடைசி வார்த்தை கெட்டதும் இல்லை நல்லதும் இல்லை நண்பரே...
ReplyDelete@ ரெவெரி
ReplyDeleteநீங்க..எத்தனை மொழிகளை தெரிஞ்சு வச்சுருக்கீங்க பாருங்க... நமக்கு தமிழ் கூட நல்ல தெரியல ஹி ஹி ஹி.!
சுவையான ஆரம்ப அறிமுகப் பதிவுக்கு வாழ்த்துக்கள் வரலாற்று சுவடுகள். இப்போதுதான் உங்களுடைய இரண்டு பதிவுகளைப் படித்து கருத்திட்டு வந்தேன். நேரமிருக்கும்போது மற்றப் பதிவுகளையும் படிப்பேன்.
ReplyDelete@ கீதமஞ்சரி
ReplyDeleteவருகைக்கும்..கருத்துக்கும்..வாழ்த்துக்கும்.. மிக்க நன்றி சகோ!
சுவையான ஆரம்பம். வலைச்சரத்தில் அசத்த வாழ்த்துகள்.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவாங்க வெங்கட் சார்.. உங்கள் வருகையும்.. வாழ்த்தும் என்னை உற்சாகமடையச் செய்கிறது!