Monday, August 13, 2012

நாடோடியின் பார்வையில்_கவிதைகள்


வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி விளக்க வேண்டிய விடய‌த்தை, நான்கு வரிகளில் அழகாக கவிதையாக சொல்லி விட முடியும். கவிதையை உரை நடைகளை வாசிப்பது போல விரைவாக வாசித்து செல்ல முடியாது, எனவே தான் பலர் கவிதை வாசிப்பதை சிரமமாக‌ உணர்கிறார்கள், அவசரமாக வாசிப்பதை பழக்கமாக கொண்ட‌ சிலர் "என்ன கவிதை இது" சுத்தமா புரியவில்லை என்று சலித்துக் கொள்கிறார்கள். கவிதைகளிலும் பல வகைகள் உண்டு. முன்பு தமிழில் அதிகமாக மரபுக் கவிதைகளை தான் பார்க்க முடியும். அவைகளை புரிந்து கொள்ள தனியாக விளக்க உரைகளை படித்தால் மட்டுமே எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். இப்போது எழுதப்படும் புதுக்கவிதைள் எல்லோராலும் எளிதாக  படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடியும்.

வலைத்தளங்களில் நண்பர்கள் எழுதும் சில கவிதைகளை படிக்கும் போது மனம் நம்மையறியாமல் அதில் ஊன்றி விடுவதை பார்க்க முடியும், அதன் கவர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சிறிது நேரம் எடுத்துவிடும்.

"கவிதைகளை படைப்பதால் நானும் பிரம்மா தான்" என்பதை சொல்லாமல் சொல்லும் பல நண்பர்கள் இங்கு வலைத்தளத்தில் எழுதுகிறார்கள் அவற்றில் சில எனது கண்ணில் பட்டவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

பல புத்தகங்களாக எழுத வேண்டிய அரசியல் கட்சிகளின் அவலங்களை, ஒரு பக்க கவிதையில் சொல்லியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிக்கும் ஆயிரம் விளக்கங்கள் எழுத முடியும். கடைசியில் எழுதியிருக்கும் நடைமுறை உண்மையும் சூப்பர்.

நீங்க ஆளுங்க....!!

கவிதை எழுதுவதன் சிரமத்தை இதை விட யாரும் அழகாக சொல்லி விட முடியாது. கற்பனை கலந்து, சீரிய நடையுடன் எழுதியிருக்கிறார். வாசிக்கும் போதே நம்மை அதனுள் இழுத்து விடுகிறது. நீங்களும் படிங்க!!!

கவியாகிய எழுதுகோல்கள்...!

விவ‌சாயின் கஷ்டங்களையும், பருவ நிலை மாற்றங்களையும், அழிந்து வரும் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், விஞ்ஞானத்தின் வளர்ச்சி எதை நோக்கி பயணிக்கிறது என்று பல கேள்விகளை கேட்க வைத்து சிந்திக்கவும் வைக்கும் கவிதை இது. கண்டிப்பா நீங்களும் படிங்க..

"உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!"

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

"நாரை விடு தூது" அனைவரும் படித்திருப்போம், இங்கு ஒருவர் "வலை விடு தூது" எழுதியிருக்கிறார். கல்லூரி படிக்கும் போது தேர்வு எப்போது நடக்கும் என்பதை தேர்வு துறை சரியாக சொல்லாதால் இருக்கும் மனக்குமுறலை கொட்டி எழுதியிருக்கும் கவிதை இது.

வலை விடு தூது!!!

அப்பாவிற்கும், அண்ணனுக்கும் சற்று வித்தியாசமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நீங்களும் படிங்க..

எனக்கு ...

நாம் அலட்சியமாக செய்யும் செயல்கள் எவ்வாறு உழவர்களை பாதிக்கிறது என்பதை கோபமாக எழுதியிருக்கிறார். இங்க போய் படிச்சு பாருங்க..

உழவர்களைக் கொலை செய்தல்

குழந்தையின் சிரிப்பிற்கு எவ்வளவு வலிமை என்பதை இந்த கவிதை படித்தால் புரியும்.

குழந்தையின் சிரிப்பு!! (கவிதை)

எல்லா கவிதையும் அறிமுக படுத்திவிட்டு, நான் எழுதிய கவிதையை சொல்லாமல் போனா எப்படி?.. இதையும் படிங்க..

க‌வ‌லை உன‌க்கு..

குறிப்பு: அறிமுகப் படுத்தியிருக்கும் அனைத்து பதிவுகளை படிக்க வேண்டும் என்பதே என்னுடைய் விருப்பம், அதனால் தான் நான் எனது சொந்த விளக்கங்களை அதிகம் எழுதவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்........


31 comments:

  1. வணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி.திரு தனபாலன் அண்ணா மூலம் தாங்கள் இங்கு என்னை அறிமுகப்படுத்தியிருப்பதை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.

    நிச்சயம் அனைத்து தளங்களுக்கும் செல்கிறேன்.ஒப்பற்ற இப்பணி தொடர வாழ்திதி விடை பெறுகிறேன்.அனைத்து அறிமுகபதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.சந்திப்போம்.

    ReplyDelete
  2. அனைத்து கவிஞர்கள் தளமும் சென்று படித்து விட்டு வந்தேன்... (சில அறிமுகங்கள் எனக்கு புதியவை)

    அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
  3. என்னுடைய கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன் நிச்சயமாக இது எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தருகிறது...

    அறிமுகப் படுத்தியிருக்கும் அனைத்துத் தளத்துக்கும் செல்கிறேன்

    அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  4. நீங்கள் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும் படித்தேன்... அருமை.. அரசியல், உழவன், குழந்தை, உறவு, தேர்வு, கவலை என்று பலதரப்பட்ட கலவையான அருமையான கவிசுவை.. தோழரின் பகிர்வுகள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி இதுவரை அறியப்படா தளங்களை மிக அழகாக தேர்வு செய்துள்ளீர்கள் அருமை!...
    பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  6. நல்ல தேடல் நண்பரே! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பின் ஸ்டீபன்

    அனைத்துக் கவிதைகளும் - சென்று படித்தேன் - அருமை அத்தனையும் அருமை - தேர்ந்தெடுத்து அறிமுக படுத்தியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. ennaiyum inaithathuku mikka nantri!
    nanpaa!

    neenga thaan "arounaavaa!?"

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு . நன்றி

    ReplyDelete
  10. @Athisaya said...
    //வணக்கம் சொந்தமே!!!மிக்க நன்றி.திரு தனபாலன் அண்ணா மூலம் தாங்கள் இங்கு என்னை அறிமுகப்படுத்தியிருப்பதை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்.

    நிச்சயம் அனைத்து தளங்களுக்கும் செல்கிறேன்.ஒப்பற்ற இப்பணி தொடர வாழ்திதி விடை பெறுகிறேன்.அனைத்து அறிமுகபதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.சந்திப்போம்.//

    வருகைக்கு கருத்துக்கும் ரெம்ப நன்றி. அனைத்து பதிவுகளையும் படியுங்கள்..

    ReplyDelete
  11. @திண்டுக்கல் தனபாலன் said...
    //அனைத்து கவிஞர்கள் தளமும் சென்று படித்து விட்டு வந்தேன்... (சில அறிமுகங்கள் எனக்கு புதியவை)

    அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 1)//

    வாங்க தனபாலன்,

    உங்களுக்கு சில புதியவைகளை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  12. @சிட்டுக்குருவி said...
    //என்னுடைய கவிதைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன் நிச்சயமாக இது எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தருகிறது...

    அறிமுகப் படுத்தியிருக்கும் அனைத்துத் தளத்துக்கும் செல்கிறேன்

    அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்//

    வாங்க சிட்டுகுருவி,

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    அனைத்து பதிவுகளையும் படியுங்கள்..

    ReplyDelete
  13. @Ayesha Farook said...
    //நீங்கள் பகிர்ந்த கவிதைகள் அனைத்தும் படித்தேன்... அருமை.. அரசியல், உழவன், குழந்தை, உறவு, தேர்வு, கவலை என்று பலதரப்பட்ட கலவையான அருமையான கவிசுவை.. தோழரின் பகிர்வுகள்//

    அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துக்களை பகிர்தமைக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  14. @அம்பாளடியாள் said...
    //மிக்க நன்றி இதுவரை அறியப்படா தளங்களை மிக அழகாக தேர்வு செய்துள்ளீர்கள் அருமை!...
    பணி தொடர வாழ்த்துக்கள் .//

    வாங்க அம்பாளடியாள்,

    உங்களுக்கு சில புதியவைகளை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  15. @வரலாற்று சுவடுகள் said...
    //நல்ல தேடல் நண்பரே! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!//

    வருகைக்கு வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  16. @cheena (சீனா) said...
    //அன்பின் ஸ்டீபன்

    அனைத்துக் கவிதைகளும் - சென்று படித்தேன் - அருமை அத்தனையும் அருமை - தேர்ந்தெடுத்து அறிமுக படுத்தியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    வாங்க சீனா அய்யா,

    அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துக்களை பகிர்தமைக்கு நன்றி..

    என்னுடைய தளத்தில் உள்ள‌ பதிவுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி.

    ReplyDelete
  17. @Seeni said...
    //ennaiyum inaithathuku mikka nantri!
    nanpaa!

    neenga thaan "arounaavaa!?"//

    வாங்க நண்பரே,

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    நான் அருணா இல்லை நண்பரே.

    ReplyDelete
  18. @Gnanam Sekar said...
    //அருமையான தொகுப்பு . நன்றி//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சேகர்.

    ReplyDelete
  19. ஓ! அறிமுகங்கள் எல்லாம் '' சிபாரிசு'' வின் பெயரில் தான் நடக்கிறதா? உண்மையில் திறமை யைக் காட்டியும் வேலை இல்லையா?.
    பாதிக்கு மேல அறிமுகம் பண்ணியவர்களைத் தெரியும் .இதில் அருணா செல்வத்தின் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. அனைவருக்கும், ஆசிரியருக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. @ kovaikkavi said...

    //ஓ! அறிமுகங்கள் எல்லாம் '' சிபாரிசு'' வின் பெயரில் தான் நடக்கிறதா? உண்மையில் திறமை யைக் காட்டியும் வேலை இல்லையா?.
    பாதிக்கு மேல அறிமுகம் பண்ணியவர்களைத் தெரியும் .இதில் அருணா செல்வத்தின் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. அனைவருக்கும், ஆசிரியருக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.//

    வாங்க சகோ,

    இங்கு நான் அறிமுக படுத்தியிருக்கும் பதிவுகள் அனைத்தும் நான் சொந்தமாக தேடி எழுதியவை.

    எவரின் சிபாரிசிலும் எழுதவில்லை. நான் அறிமுகப் படுத்தியிருக்கும் நபர்களுக்கு கூட‌ என்னையும், எனது தளத்தையும் கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை..

    நான் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது மிக குறைவு.. :)

    அறிமுகப் படுத்தியவர்களுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லாததால் யாரவது சொல்லி நான் எழுதியிருக்கலாம் என்று எண்ணியிருக்கலாம்..

    கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  21. வணக்கம் நண்பரே.

    நான் இதுவரையில் உங்களின் வலைப்பக்கம் வந்ததில்லை. ஆனால் நீங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
    நான் வேலை முடித்து விட்டு இப்பொழுது தான் நேரம் தாழ்த்தி வந்ததுள்ளேன்.
    உங்களின் அறிமுகத்தால் நிறையபேர் என் வலைக்குள் வந்து கருத்திட்டுச் சென்றுள்ளார்கள். அதற்குக் காரணம் நீங்கள் தான். நன்றிங்க.
    திரு. சீனு அவர்கள் சொன்ன அருணா நான் தான். அவர் என்றன் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்திடுவார். ஆனால் பெயரை கவனிப்பதில்லை போலும்.

    திருமதி. கோவைக்கவி அவர்களுக்கு இங்கே என் நன்றியைத் தெரிவித்தக் கொள்கிறேன்.

    உங்கள் வலைச்சரத்தின் அறிமுகங்களை சென்று படிக்கிறேன். உங்களுக்கும் என் வணக்கத்துடன் வாழ்த்துக்களும்.
    நன்றிங்க.

    ReplyDelete
  22. அறியாத தளங்கள்! அறிந்து வருகிறேன்!
    நன்றி!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  23. கவிஞர்களுக்கு பாராட்டுக்கள்

    வாழ்த்துக்கள் ஸ்டீபன்

    ReplyDelete
  24. @AROUNA SELVAME said...
    //வணக்கம் நண்பரே.

    நான் இதுவரையில் உங்களின் வலைப்பக்கம் வந்ததில்லை. ஆனால் நீங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
    நான் வேலை முடித்து விட்டு இப்பொழுது தான் நேரம் தாழ்த்தி வந்ததுள்ளேன்.
    உங்களின் அறிமுகத்தால் நிறையபேர் என் வலைக்குள் வந்து கருத்திட்டுச் சென்றுள்ளார்கள். அதற்குக் காரணம் நீங்கள் தான். நன்றிங்க.
    திரு. சீனு அவர்கள் சொன்ன அருணா நான் தான். அவர் என்றன் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்திடுவார். ஆனால் பெயரை கவனிப்பதில்லை போலும்.

    திருமதி. கோவைக்கவி அவர்களுக்கு இங்கே என் நன்றியைத் தெரிவித்தக் கொள்கிறேன்.

    உங்கள் வலைச்சரத்தின் அறிமுகங்களை சென்று படிக்கிறேன். உங்களுக்கும் என் வணக்கத்துடன் வாழ்த்துக்களும்.
    நன்றிங்க.//

    வாங்க சகோ,

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    உங்கள் வாழ்த்துக்கும், நீண்ட கருத்துரைக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  25. @s suresh said...
    //அறியாத தளங்கள்! அறிந்து வருகிறேன்!
    நன்றி!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html//

    வாங்க சுரேஷ்,

    அனைத்து பதிவுகளையும் படியுங்கள்..

    வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  26. @ r.v.saravanan said...
    //கவிஞர்களுக்கு பாராட்டுக்கள்

    வாழ்த்துக்கள் ஸ்டீபன்//

    வாங்க சரவணம்,

    கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  27. வணக்கம் தோழரே ...
    மிக்க நன்றி ....:-)
    முதல் முறை உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன் ...
    சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான நிகழ்வு ...
    "என் கவிதைகளுக்கான முதல் அங்கிகாரம் ...!!! "
    blog இல் எழுதுவேன் .. அதோடு சரி ...
    உங்கள் தளத்தில் நீங்கள் அறிமுகபடுத்தியதன் மூலம்...
    நிறைய வாசகர்களும் பின்னூட்டங்களும் வந்திருக்கிறது ...
    உங்கள் தளத்தின் மூலம் ஒரு புதிய நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது ....!!!
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ...!!!

    நீங்கள் அறிமுகபடுத்திய மற்ற தளங்களையும் தவறாமல் வாசிக்கிறேன் ...!

    ReplyDelete
  28. எனக்கு கவிதைகள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். சீக்கிரம் வாசித்துவிடலாம், நிறைய முறை வாசிக்கலாம். கவிதைகள் குறித்த தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  29. @ஜெயசரஸ்வதி.தி said...
    //வணக்கம் தோழரே ...
    மிக்க நன்றி ....:-)
    முதல் முறை உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன் ...
    சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான நிகழ்வு ...
    "என் கவிதைகளுக்கான முதல் அங்கிகாரம் ...!!! "
    blog இல் எழுதுவேன் .. அதோடு சரி ...
    உங்கள் தளத்தில் நீங்கள் அறிமுகபடுத்தியதன் மூலம்...
    நிறைய வாசகர்களும் பின்னூட்டங்களும் வந்திருக்கிறது ...
    உங்கள் தளத்தின் மூலம் ஒரு புதிய நட்பு வட்டம் கிடைத்திருக்கிறது ....!!!
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ...!!!

    நீங்கள் அறிமுகபடுத்திய மற்ற தளங்களையும் தவறாமல் வாசிக்கிறேன் ...!//

    வணக்கம் சகோ,

    இது என்னுடைய வலைத்தளம் இல்லை.

    இது சீன அய்யா அவர்களால் நிர்வகிக்கப்படும் தளம். இது என்னை போல் பலர், வாரம் ஒருவர் வீதம் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவார்கள்..

    என்னுடைய தளத்திற்கும் வாருங்கள்..

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    நன்றி.

    ReplyDelete
  30. @சித்திரவீதிக்காரன் said...
    //எனக்கு கவிதைகள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். சீக்கிரம் வாசித்துவிடலாம், நிறைய முறை வாசிக்கலாம். கவிதைகள் குறித்த தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி//

    எனக்கு கட்டுரையை வாசிப்பது போல் கவிதையை சீக்கிரமாக வாசித்தால் புரிவது கொஞ்சம் கடினம்.

    நானும் கவிதையை ரெம்ப ரசிப்பேன்..

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சித்திரவீதிகாரரே..

    ReplyDelete
  31. ///வணக்கம் சகோ,

    இது என்னுடைய வலைத்தளம் இல்லை.

    இது சீன அய்யா அவர்களால் நிர்வகிக்கப்படும் தளம். இது என்னை போல் பலர், வாரம் ஒருவர் வீதம் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவார்கள்..

    என்னுடைய தளத்திற்கும் வாருங்கள்..

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    நன்றி.///

    உங்கள் வலைப்பக்கம் நிச்சயம் வருகிறேன் ...:-)

    ReplyDelete