Sunday, August 12, 2012

நாடோடியின் பார்வையில்_சுயப் புராணம்


அனைவருக்கும் வணக்கம். சீனா அய்யா அவர்களின் அழைப்பால் இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் நான் எழுதுகிறேன். முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகப் பதிவு என்பதால், என்னைப்பற்றியும், எனது தளத்தில் எழுதிய பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நான் ”நாடோடியின் பார்வையில்” என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். எனது சொந்தப் பெயர் ”ஸ்டீபன்”. கல்லூரிப் படிப்பை முடித்தது முதல் பணியின் காரணமாகப் பல நகரங்கள் மற்றும் நாடுகள் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கும் நிலையாக இருந்தது இல்லை அதனால் தான் ”நாடோடி” என்று பெயர் வைத்து வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன். படிக்கும் காலத்தில் தமிழின் மீது அதிக ஆர்வம் உண்டு. அப்போதே பல கட்டுரைப் போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்துப் பரிசுகள் வாங்கியது உண்டு. படிப்பு முடித்து வேலைப் பார்க்கத் தொடங்கிய பிறகு எழுதுவது பற்றியும், பேசுவது பற்றியும் மறந்தே போனேன் என்றே சொல்லலாம். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் வலைத்தளங்களைப் பற்றி அறிந்தேன். சில வருடங்கள் வாசிப்பாளனாகவும், பார்வையாளனாகவும் இருந்தேன்.

ஒரு நாள் ”நாமே எழுதினால் என்ன” என்று வலைத்தளம் ஆரம்பித்து எழுதத் தொடங்கினேன். ”அடுத்தவர் முகம் சுழிக்கும் பதிவுகளையும், படங்களையும்” எனது வலைத்தளத்தில் இடக் கூடாது என்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது, அதை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகிறேன். எழுதத் தொடங்கிய வருடத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதினேன், பணியில் சூழலும் சாதகமாக அமைந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக அதிகமாக எழுதவில்லை. சொந்த வாழ்க்கையிலும், பணியிலும் நடந்த மாற்றங்களால் என்னால் எழுதமுடியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களை படிக்க தவறுவது இல்லை.

நண்பர்களின் அழைப்பால் பல தொடர்பதிவுகளில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை எழுதியிருக்கிறேன். நேரம் இருந்து பொறுமையாகப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் படிக்கலாம்.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!

தொட‌ர்ப‌திவு_ஒரு நிமிட‌ பேச்சு

என்றும் நினைப்போம்_தொட‌ர்ப‌திவு

ஒருவரின் அனுபவங்களும், கற்பனைகளுமே எழுத்துக்களாக உருப்பெறுகிறது. எனது அனுபவங்களுக்கு சில வண்ணங்கள் பூசியே நான் அதிகமான பதிவுகள் எழுதியிருக்கிறேன். அந்த வகையில் இக்கால பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும், நான் படிக்கும் காலத்தில் இருந்த முறையையும் விளக்க முயன்ற பதிவு இது.

ப‌ள்ளி வாழ்க்கை_அனுதாப‌மா? ஏக்க‌மா?

வெளிநாடுகளில் பணிச்செய்யும் தந்தைகளின் மனநிலைகளை ஊரில் வசிக்கும் பிள்ளைகள் புரிந்து நட‌க்கிறார்களா என்பதை பற்றி இப்பதிவில் எழுதியிருப்பேன்.

வெளிநாடு வாழ்க்கையில்...

இன்றைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருவது பற்றி கற்பனை கலந்து எழுதிய ஒரு அனுபவ பதிவு.

ஒளிம‌ய‌மான‌ எதிர்கால‌ம்?_க‌ண்முன்னே ந‌ட‌ந்த‌ மாற்ற‌ங்க‌ள்

வாகனங்களின் உதிரி பாகங்களை வாங்குபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்களை நான் படித்த(மெக்கானிக்கல் இஞ்சினீயர்), வேலைப்பார்த்த(ஆட்டோமொபைல்) அனுபவங்களை வைத்து எழுதிய பதிவு.

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

வேலை வாங்கி தருகிறேன் என்று பொய்யை தவிர வேறு எதையும் பேசாத மேன் பவர் கன்சல்டன்சி பற்றி நான் எழுதிய அனுபவ‌ பதிவு.

மேன்ப‌வ‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்சி_இண்ட‌ர்வியூ

மைக்ரோ சாப்ட் எக்ஸலில் எனக்கு தெரிந்த இரண்டு பார்முலா மற்றும் அப்பிளிக்கேசன் பற்றி எழுதிய தொழிற்நுட்ப பதிவு.

மைக்ரோசாப்ட் எக்ஸ‌ல்(Microsoft Excel) ப‌ய‌ன்பாடு_ அசாப் யுட்டிலிட்டிஸ்(ASAP Utilities)

எக்ஸ‌லில்(MSEXCEL) விலுக்க‌ப்(VLOOKUP) ம‌ற்றும் ஹெச்லுக்க‌ப்(HLOOKUP)

என்னைப் பற்றியும், எனது பதிவுகளின் அறிமுகங்களும் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் சில பதிவுகளை அறிமுகப் படுத்தி எழுதுகிறேன். அறிமுகப் பதிவுகளை கீழ் கண்டத் தலைப்புகளில் வகைப்படுத்தி தொகுக்கலாம் என்று இருக்கிறேன்.

1)கவிதைகள்
2)இலவச நூல்கள்
3)மருத்துவம்
4)சினிமா
5)விவசாயம்
6)பல்சுவைப் பதிவுகள்

மீண்டும் நாளை சந்திப்போம்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

28 comments:

  1. தோழரே! உங்களின் அறிமுக உரைக்கு நன்றி... உங்களின் பதிவுகளை கண்டேன்.. உபயோகமான தகவல்கள் உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அறிமுக பதிவு மிக அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்று நன்று ஸ்டீபன் - சுய அறிமுகம் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. சுய அறிமுகம் நல்லா இருக்கு...

    நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களின் முதல் ஐந்து பதிவுகளைப் படித்து பார்த்தேன்... அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில்...!

    ReplyDelete
  6. அறிமுகம் அருமை....தொடருங்கள்...

    ReplyDelete
  7. தங்கள் பதிவுகளை இதுவரை நான் பார்த்ததில்லை , படித்தவுடன் என்னை நானே நொந்துகொண்டேன் இதுபோல் அனுபவ பதிவுகளை பார்க்கவில்லை என்று . நன்றி . தொடருங்கள்

    ReplyDelete
  8. அறிமுக உரை அருமை ஸ்டீபன் தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சுய அறிமுகம் நல்லா இருக்கு தொடருங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. // அடுத்தவர் முகம் சுழிக்கும் பதிவுகளையும், படங்களையும்// அருமை ஸ்டீபன்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நல்ல அறிமுகம்! தொடருங்கள் நண்பா!

    ReplyDelete
  12. வலைச்சர ஆசிரியர் பணிக்கு நலவாழ்த்து.
    அறிமுகம் நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. @Ayesha Farook said...
    //தோழரே! உங்களின் அறிமுக உரைக்கு நன்றி... உங்களின் பதிவுகளை கண்டேன்.. உபயோகமான தகவல்கள் உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!//

    கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ..

    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  14. @Jaleela Kamal said...
    //அறிமுக பதிவு மிக அருமை.
    வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி சகோ..

    ReplyDelete
  15. @விச்சு said...
    //வாழ்த்துக்கள்.//

    வாங்க விச்சு

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி..

    ReplyDelete
  16. @cheena (சீனா) said...
    //நன்று நன்று ஸ்டீபன் - சுய அறிமுகம் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    வாங்க சீனா அய்யா

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.. எல்லா பதிவுகளுக்கு கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீகள் நன்றி..

    ReplyDelete
  17. @திண்டுக்கல் தனபாலன் said...
    //சுய அறிமுகம் நல்லா இருக்கு...

    நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களின் முதல் ஐந்து பதிவுகளைப் படித்து பார்த்தேன்... அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில்...!//

    வாங்க தனபாலன்

    பெறுமையாய் பதிவுகளை படித்திருக்கிறீர்கள், ரெம்ப நன்றி..

    ReplyDelete
  18. @கோவை நேரம் said...
    //அறிமுகம் அருமை....தொடருங்கள்...//

    தங்களின் கருத்துக்கு ரெம்ப நன்றி கோவை நேரம்

    ReplyDelete
  19. @Gnanam Sekar said...
    //தங்கள் பதிவுகளை இதுவரை நான் பார்த்ததில்லை , படித்தவுடன் என்னை நானே நொந்துகொண்டேன் இதுபோல் அனுபவ பதிவுகளை பார்க்கவில்லை என்று . நன்றி . தொடருங்கள்//

    பெறுமையாய் பதிவுகளை படித்திருக்கிறீர்கள், ரெம்ப நன்றி சேகர்..

    ReplyDelete
  20. @Lakshmi said...
    //சுய அறிமுகம் நல்லா இருக்கு தொடருங்கள் வாழ்த்துகள்.//

    தங்களின் கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ..

    ReplyDelete
  21. @r.v.saravanan said...
    //அறிமுக உரை அருமை ஸ்டீபன் தொடருங்கள் வாழ்த்துக்கள்//

    வாங்க சரவணன்,

    நீங்க என்னோட பதிவு எல்லாம் அதிகமா படித்து இருப்பீங்க.. கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  22. @சீனு said...
    // அடுத்தவர் முகம் சுழிக்கும் பதிவுகளையும், படங்களையும்// அருமை ஸ்டீபன்

    கருத்துக்கு ரெம்ப நன்றி சீனு..

    ReplyDelete
  23. @வரலாற்று சுவடுகள் said...
    //வாழ்த்துக்கள் நல்ல அறிமுகம்! தொடருங்கள் நண்பா!//

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி ச‌கோ..

    ReplyDelete
  24. @ kovaikkavi said...
    //வலைச்சர ஆசிரியர் பணிக்கு நலவாழ்த்து.
    அறிமுகம் நன்று.
    வேதா. இலங்காதிலகம்.//

    கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி ச‌கோ..

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஸ்டீபன்,நீண்ட நாட்கள் கழித்து உங்களை வலைச்சரத்தில் பார்ப்பது மகிழ்ச்சி.இந்த வாரம் களைகட்டும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

    ReplyDelete
  26. வலைச்சர ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. @Asiya Omar said...
    //வாழ்த்துக்கள் ஸ்டீபன்,நீண்ட நாட்கள் கழித்து உங்களை வலைச்சரத்தில் பார்ப்பது மகிழ்ச்சி.இந்த வாரம் களைகட்டும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?//

    வாங்க சகோ..

    உங்களின் பின்னூட்டம் ரெம்ப மகிழ்ச்சியை தருகிறது.. ரெம்ப நன்றி சகோ..

    ReplyDelete
  28. @இராஜராஜேஸ்வரி said...
    //வலைச்சர ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ..

    ReplyDelete