Wednesday, August 29, 2012

நட்பின் வலிமை

வலைச்சரம் மூன்றாம் நாள் 

நட்பை பற்றி பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு  ஆனால் அது ஒரு ஆற்றல் நம் வாழ்வின் நகர்விற்காக நாம் உட்கொள்ளும் ஒரு மகத்தான சக்தி .இதை நமக்கு அந்தந்த காலகட்டத்தில் யாரோ ஒரு மனிதர்மூலம் கிடைக்கபெருகிறது 

நாம் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் பலரை சந்திக்கிறோம் சிலர் நம் எண்ணங்களோடு ஒத்து இருந்தால் சில தூரங்கள் அதிகமாக அவர்களோடு பயணிக்கிறோம் அப்படி இல்லையெனில் அவர்களிடம் ஏதாவது ஒன்றை கற்றுகொள்வோம் .......அந்த ஏதாவது ஓன்று 

1) சகிப்புத்தன்மை 
2) துரோகம் 
3) வன்மம் 
4) அவமானம் 
5) அன்பு 
6) காதல் 
7) நட்பு 

இன்னும் இந்த வரிசையில்  இல்லாத பலவற்றை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது . ஆகையால் நாம் சந்திக்கும் நபர்கள் நம்மை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்துபவர்களாக இருக்கிறார்கள் .அப்படி இல்லையெனில் நமக்கு ஏதாவது பாடத்தை கற்பிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற கோணத்தில் எதிர்நோக்கினால் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத சமநிலை வாழ்வை அடைய முடியும் 

********
உன் நட்பை 
வரைய எண்ணி 
வண்ணத்தை தேடுகிறேன் 

வண்ணங்களுக்கு 
அப்பாற்பட்டு 
நிற்கிறது - உன் 
நட்பு 

ரோஜாவை  
வரையலாம் 
அதன் மணத்தை 
நுகர மட்டுமே 
முடியும்  .......

ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்






நாளை வேறு  புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன் உறவுகளே 

கருத்துகளால் இதயம் நனைத்த அணைத்து உள்ளத்திற்கும் நிரப்புகிறேன் என் 

அன்பை நன்றிகளுடன் .

25 comments:

  1. ஒரு பதிவில் முழுக்க பெண்கள் அறிமுகம் அடுத்ததில் முழுக்க ஆண்கள் அறிமுகம். கவிதாயினி நல்லா பேலன்ஸ் பண்றீங்க. அடுத்த அறிமுகம் கலந்து இருக்கும் என நினைக்கிறேன் (சும்மா ஜாலிக்கு கலாய்க்கிறேன். வெறுமனே வாழ்த்துவதில் என்ன குஷி இருக்கும் அதான் தவறாய் எண்ணாதீர்கள் )

    ReplyDelete
  2. இந்த பதிவை தமிழ் மணத்தில் சேர்த்து ஓட்டும் போட்டிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளேன் :)

    ReplyDelete
  3. /// ரோஜாவை
    வரையலாம்
    அதன் மணத்தை
    நுகர மட்டுமே
    முடியும் ....... ///

    அருமை... வாழ்த்துக்கள்...


    மூன்று தளங்கள் புதியவை...

    அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

    ReplyDelete
  4. அய்யனார் விஸ்வநாத் கவிதைகளை விட, அவருடைய கதைகளின் ரசிகன் நான்

    ReplyDelete
  5. // உன் நட்பை
    வரைய எண்ணி
    வண்ணத்தை தேடுகிறேன்

    வண்ணங்களுக்கு
    அப்பாற்பட்டு
    நிற்கிறது - உன்
    நட்பு //

    அழகான நட்பான வரிகள்.

    அறிகங்கள் அருமை...

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)
    ****
    அலோ ! TM 1 நானு ! கியூவில் வாங்க தனபாலன் சார் :))

    ReplyDelete
  7. புதிய அறிமுகங்கள் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி TM 4

    ReplyDelete
  8. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள். மாலையில் வீடு வந்து அனைவரையும் படிக்கிறேன்.

    அறிமுகங்கள் தொடரட்டும்...

    நாங்களும் தமிழ்மணம்-ல ஓட்டு போட்டுட்டோம்! :) [மோகன்குமார் கவனிக்க!]

    ReplyDelete
  9. மோகன் குமார் said...

    திண்டுக்கல் தனபாலன் said...
    அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)
    ****
    அலோ ! TM 1 நானு ! கியூவில் வாங்க தனபாலன் சார் :))//


    ஹா ஹா கலக்கல் விவாதம்

    ReplyDelete
  10. எனக்கு அனைத்து தளங்களுமே புதியது தான் நன்றி

    ReplyDelete
  11. நட்பு பற்றிய பகிர்வும் கவிதையும் அறுமை அக்கா! அறிமுகங்களும்தான்! நன்றி!

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  13. சில புதிய தளங்கள். அருமையான அறிமுகங்கள். அசத்துகிறீர்கள் கவிதாயினியே...

    ReplyDelete
  14. ''...சந்திக்கும் நபர்கள் நம்மை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்துபவர்களாக இருக்கிறார்கள் .அப்படி இல்லையெனில் நமக்கு ஏதாவது பாடத்தை கற்பிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற கோணத்தில் எதிர்நோக்கினால் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத சமநிலை வாழ்வை அடைய முடியும் ...''
    சரியாகக் கூறினீர்கள். நன்றி.
    அறிமுகவாளர்களிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும், தங்களுக்கும், என் அனபான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    VGK

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  17. // உன் நட்பை
    வரைய எண்ணி
    வண்ணத்தை தேடுகிறேன்

    வண்ணங்களுக்கு
    அப்பாற்பட்டு
    நிற்கிறது - உன்
    நட்பு
    //

    well said
    :-)

    ReplyDelete
  18. சகோ எனக்கும் எல்லோரும் புதிய அறிமுகங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
  19. அழகிய நிதர்சனம் உரைக்கும் கவிதை வரிகள் நட்பை மேன்மைப்படுத்தி....

    அறியாத அசத்தலான அறிமுகங்கள்....

    வித்தியாசமான வர்ணனை...

    ரசிக்கவைத்த பகிர்வு தோழியே....

    உங்களுக்கும் அறிமுகப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்பா..

    ReplyDelete
  20. தொடரட்டும் சிறப்பான அறிமுகங்கள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  21. OOPS! வண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது நட்பு. -வார்த்தைகளிலேயே சொக்க வெச்சுட்டீங்க. அதைத் தாண்டி வரவே நேரம் ஆச்சு. வந்து பார்த்தா... புதுப்புது தளங்கள். அருமையான அறிமுகங்களுக்கு நன்றிக்கா. அறிமுகம் பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. எதிர் பார்ப்பு ஏதும் இல்லாதது நட்பு...

    ReplyDelete
  23. என்னோட வாரணம் பதிவை இங்க அறிமுகம் செய்து வைத்ததற்கு ரொம்ப நன்றிங்க. நன்றி சொல்ல தாமதம் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க

    ReplyDelete