வலைச்சரம் நான்காம் நாள்
மகிழ்ச்சியின் எல்லையில் சிறகு விரித்து பறக்கிறேன்
உறவுகள் உடன் இருந்தும்
தனித்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டியை போல
பல நேரங்களில்
வெற்றிடத்தை
உணர்ந்து இருக்கிறேன் .........
ஆனால் உங்கள்
அன்பின் வலிமையால்
அந்த வெற்றிடம் இப்போது
நிரப்பி இருக்கிறது
மகிழ்ச்சி உறவுகளே .....
ஆசிரியர் பனி என்பது கற்றதை உணர்த்துதல் ஆகவே தான் நான் வாழ்வில் கற்றுக்கொண்ட உணர்ந்துகொன்டத்தை உங்களுக்கு கற்றுக்கொள்ள துணிந்தேன. என் எழுத்தை நிச்சயம் உங்களால் சுவாசிக்க முடியும் என்ற அதீத நம்பிக்கையில் .
பொதுவாகவே நாம் உண்மை பேசுவதற்காக பணிக்கபடுகிறோம் . உண்மையின் உண்மையை பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .
உண்மையான மனிதனை விட சிலை அதிக நாள் வாழும் அதே போல காகித பூக்கள் நிஜப் பூக்க்களை விட நிலைத்து நிற்கும் . .
ஆனால் உண்மை என்பது நீடித்து நிற்பதில்லை உயிரோடு இருப்பது ,உயிர்த் துடிப்போடு இருப்பது . உயிரோடு இருப்பது எல்லாமே அதிக நாள் நீடித்து நிற்க இயலாது.அது சாத்தியமும் இல்லை ..
மனிதர்களும் அப்படிதான் சிலர் ஜடமாய் இருக்கிறார்கள் அசைவுகளற்று இருக்கிறார்கள், இவர்களிடம் எந்த சலனத்தையும் ,எந்த பாதிப்பையும் நாம் எதிர்பார்க்க இயலாது ..
உண்மையாய் இருப்பவர்கள் தங்களுக்குள் மலர்ச்சியை பெற்றிருப்பார்கள், ஜீவித்து இருப்பார்கள் .காண நேரம் வாழ்ந்தாலும் அந்த அழகில் நம்மை சொக்க வைப்பார்கள்.
.
ஆகவே சில நேரம் நேசித்தாலும் உயிர்ப்புடன் நேசியுங்கள் அதே பரிணாமத்துடன் அது நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் தாக்கம் நீடித்து நிற்கும் .
*****
ஆயிரம் வேலைகள்
இருந்தாலும்
ஒற்றை
புன்னகை
வீசிச் செல்
அதில்
ஓராயிரம்
அர்த்தங்களை
புரிந்து கொள்வேன்
****
புதிய உறவுகளின் தளங்கள்
தூரிகையின் தூறல்
ராஜாவின் பார்வையில்
தமிழ்ச் சமணம்
கடல் நிறைகளும் என் கவிதைகளும்
தி சுபாசினி
மீண்டும் நாளை உங்களை சந்திக்கிறேன் புதிய சிந்தனைகளுடன் .
தூரிகையின் தூறல் தவிர மற்றவை நான் படித்திராத புதிய தளங்கள். அறிமுகத்திற்கு நன்றி சகோ.
ReplyDeleteராஜாவின் பார்வையில் / சுபாஷினி இரண்டும் புதிய தளங்கள்.. நன்றி
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி சகோ.
ReplyDeleteஉண்மையின் உண்மை அருமை... உண்மை கருத்துக்கள்...
ReplyDeleteமூன்று தளங்கள் புதியவை...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் நண்பர்களும் சில புதியவர்களும் இதில் இருக்காங்க நன்றி
ReplyDeleteபுதிய அற்முகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஸ்ரீ....
ஆயிரம் வேலைகள்இருந்தாலும்
ReplyDeleteஒற்றைபுன்னகை
வீசிச் செல்அதில்ஓராயிரம்
அர்த்தங்களை புரிந்து கொள்வேன்
அர்த்தங்கள் ஆயிரம் மிளிரும் வரிகள்!
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteஎல்லோரது வலைக்குள்ளும் புகுந்தேன் எனினும்
ReplyDeleteதி.சுபாஷிணி அவர்கள் பதிவு
தித்தித்தது. ஏன் எனின்
அது தாத்தாக்கள் பற்றியது.
நானும் ஒரு தாத்தா.
அந்த பதிவில் பின்னூட்டம் போட இயலவில்லை.
அதனால் இங்கே .
தாத்தாக்கள்
தனியாக இல்லை.
தத்தம் உலகிலே
தத்தமக்கு இன்பமளிக்கும்
எண்ணங்களிலே செயல்களிலே
உலாவுபவர்கள்
தத்தம் கடமைகளில்
தொடர்ந்து செயல்படுபவர்கள்
தத்தம் வாழ்வு
தந்த அனுபவங்களால்
தாமே ஒரு உதாரண புருஷராக
நிற்பவர்கள்.
தா தா என எதையுமே கேளாதவர்கள்.
வா வா என எதையுமே அழையாதவர்கள்.
நடப்பவை எல்லாவற்றிற்குமே
நாம் ஒரு சாட்சிதான் என்ற
நிலை கொண்டு இருப்பவர்கள்.
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
எமது வலைப்பூவை அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு நன்றியும், அறிமுகமான மற்ற தோழமைகள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த வாழ்த்துக்களும்..வாழ்க வளமுடன்.:)
ReplyDeleteஉங்கள் ரசனையும், தேர்வும் அருமை.,
ReplyDeleteநடத்துங்க... நடத்துங்க...
புதுப்புது தளங்கள் தேடி சேகரித்து அறிமுகப்படுத்தியிருக்கும் உங்கள் தொகுப்பு சிறப்பு.
ReplyDeleteரசனையுடன் செயல்படுகிறீர்கள். அந்த ரசனையைப் பகிர்ந்து எங்களையும் உயர்த்துகிறீர்கள் தோழி. சிறப்பாகச் செயல்படும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதூரிகையின் தூறல் நான் பார்த்ததுண்டு. மத்தவங்க எனக்குப் புதுசுதான்க்கா. தேடித் தேடி நல்ல அறிமுகங்களைச் செஞ்சு அசத்தறீங்க. நன்றி.
ReplyDeleteஅவசர உலகத்தில் எல்லோரும் பணத்தை மட்டுமே நேசிக்கிறார்கள். உறவுகளை நேசிக்க மறந்து விடுகிறார்கள். உங்களின் கவிதைகள் நேசிப்பிற்கு உயிர் கொடுக்கிறது...வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருமே சிறப்பாய் எழுதிக்கொண்டிருப்பவர்கள்..!
ReplyDeleteசரளா, உங்களின் கவிதை எழுத்துக்களை நாங்கள் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறோம்....மேலும் தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDelete''...உறவுகள் உடன் இருந்தும்
ReplyDeleteதனித்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டியை போல
பல நேரங்களில்
வெற்றிடத்தை
உணர்ந்து இருக்கிறேன்...''
இந்த உணர்வு எனக்கும் உண்டு. உண்மைக் கருத்து.
அறிமுக தளங்களை மாலையில் பார்ப்பேன்
மிக்க நன்றியும் அனைவருக்கும் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
anaivarukkum vaazththukkaL
ReplyDelete//ஆயிரம் வேலைகள்
ReplyDeleteஇருந்தாலும்
ஒற்றை
புன்னகை
வீசிச் செல்
அதில்
ஓராயிரம்
அர்த்தங்களை
புரிந்து கொள்வேன்//
மிகவும் அழகான அர்த்தங்கள் பொதிந்த வரிகள்.
அறிமுகங்கள் யாவும் அருமை.
அனைவருக்கும் + உங்களுக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
VGK
நல்லதொரு அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html