Friday, August 31, 2012

மனிதனும் அடையாளங்களும்

வலைச்சரம்  ஐந்தாம் நாள்

அடையாளங்கள்  பற்றி இன்று பேசபோகிறேன் நிச்சயம் நம்மையும் அடையாளம் காண முடியும் .பொதுவாக நாம் ஒருவரை பார்க்கும் முன்பே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறது மனம் .

அதன் பின் அந்த அடையாளத்தோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது சில நேரம் அந்த அடையாளத்தோடு  பொருந்தாத போது வருத்தபடுகிறது ..

இந்த ஒப்பீடு என்பது முதலில் தோற்றம் ,ஆடைகள் ,இவைகளோடு தான் தொடங்குகிறது இதனால் அந்த நபர் நம் அருகே இருந்தாலும் நம் கற்பனையில்உருவாக்கிய தோற்றத்தோடு பொருந்தாத போது  அவர்களை நாம் தொலைத்து விடுகிறோம் .

நாளடைவில் அந்த உருவம் தொலைந்து போகிறது அவர்களின் குணநலன்களை பற்றி நினைக்கிறோம். சிரிக்கிற போது நகைச்சுவையாக பேசுபவரை  நினைத்து கொள்கிறோம்.கோபப்படும் போது அதிகமாய் கோபபடுபவர்களை நினைக்கிறோம்.

இவை அனைத்தும் ஒரு ஏமாற்று வித்தை , இதை நம்மால் எளிதில் விட முடிவதில்லை ஒப்பிடுதல் என்பது நம் உடன் பிறந்தது .

பெரிய மனிதர்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை வைத்திருப்போம் அவர்கள் அந்த இலக்கணத்தை தாண்டி வருகிற போது  அவர்களை நாம் ஏற்றுகொள்வதில்லை .

ஆகையால் அடையாளங்களை தொலைத்து இயல்பாய் இயற்கையாய் அனைத்தையும் ஏற்றுகொள்ள பக்குவ படுங்கள் அப்போது வாழ்க்கை அழகாகும் .

******

ஒவ்வொரு
முறையும்
ஒவ்வொரு
முகமூடியோடு
முகம் காட்டுகிறாய் .......

எதுவும்
என்னை
பாதிக்காத போது
அனைத்தையும்
கழற்றி எறிந்துவிட்டு
சுயத்தை வெளிகாட்டுகிறாய் ....


உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான் .......




***

புதிய தளங்கள் உங்களுக்காக

ஹிசாலியின்  கவி துளிகள் 

மனோ ஓவியம் 

நட்புடன் சௌம்யா

அன்பு உள்ளம்  

குருசந்திரன் 

நாளை மீண்டும் உங்களை நல்ல சிந்தனைகள் + தளங்களுடன் சந்திக்கிறேன்





19 comments:

  1. நான்காவது நண்பரைத் தவிர, மற்ற நான்கு தளங்களும் புதியவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி... (TM 1)

    ReplyDelete
  2. பலர் எனக்கு புதியோர் நன்றி கவிதாயினி

    ReplyDelete
  3. அருமையான அறிமுகங்கள்.

    ReplyDelete
  4. அடையாளங்கள் பற்றிய பதிவு மிகச் செரிதான் அக்கா! எல்லாமே மனதின் விளையாட்டு! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //உன் சுயத்தின்
    அப்பட்டமான பிம்பத்தில்
    அழுத்தமாய்
    பதிந்து இருக்கிறேன் நான் .......//

    உண்மை...

    உண்மையிலேயே அருமையான அறிமுகம்... தேடி தேடி அறிமுகம் செய்திருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. குருசந்திரன் மற்றுமே நான் அறிந்த பதிவர். மற்றவர்கள் புதியவர்கள். நல்லறிமுகங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அரிதான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் டீச்சர்..
    :-)

    ReplyDelete
  8. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் அருமை.
    அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இன்றைய தளத்தில் என் தளத்தையும் அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .அத்துடன் ஏனைய அறிமுகங்களுக்கும் என் இனிய
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  10. சகோ தேடிப்பிடித்த அறிமுகம் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்புள்ளம் வலை தெரிந்தது. மற்றவை புதிது தான். அனைவருக்கும் நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. நான் சிறு வேலை பளு காரணமாக பதிவுகளை கவனிக்க இயலவில்லை.. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியர் சகோ அவர்களை கண்டதில் மகிழ்ச்சி... உங்களுக்கும் நீங்கள் அறிமுக படுத்தும் மற்ற தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.. அருமை அக்கா...

    ReplyDelete
  13. உன் சுயத்தின்
    அப்பட்டமான பிம்பத்தில்
    அழுத்தமாய்
    பதிந்து இருக்கிறேன் நான்

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. ஒரு மனோதத்துவ நிபுணர் போல, நம் மனதில் ஏற்படும் பிம்பங்களைப் பற்றியும், ஒரு நிஜம் ஏற்படுத்தும் அடையாளம் பற்றியும் மிகச்சிறந்த அலசலைக் கொடுத்துள்ளீர்கள் தோழி !

    வலைப்பூவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றியோ நன்றி !

    ReplyDelete
  15. அனைத்துமே புதியவர்கள் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. வணக்கம் நட்புறவே!

    தங்களுக்கு விருந்தினர் பதிவெழுதுவதில்(Guest Post) ஆர்வமிருந்தால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து கூகிள்சிறி தளத்தில் நிர்வாகியாவதன் மூலம் உங்களுக்கு பிடித்த தலைப்பில் பதிவிடலாம்.

    தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  17. ennai arimukam seithamaiku anpu nanrikal

    ReplyDelete
  18. thozhamaikku en iniya vanakkangal.. en valaithala arimugaththirukku nandrikal pala..

    ReplyDelete
  19. வணக்கம் சகோ,
    அருமையான் கவிதை!!! வழ்த்துக்கள்
    மிக்க நன்றி

    ReplyDelete