Saturday, September 1, 2012

மனிதனும் வெற்றியும்

உறவாகி
உடன் வருகிறீர்கள்
என்ற நிஜம்
வானை கூட
கைகளில் ஏந்த
துணிகிறது மனம்
என் நம்பிக்கையே
உங்களின் கருத்துக்கள் தான்

******


நம் கண்களால் பார்க்க முடியாதவைகளுக்கு நாம் எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் .அதில் இறைமைக்கு பின் வெற்றியை சொல்லலாம் .

வெற்றி கிடைக்கும் அணியின் பக்கம் தங்களை வரிசைபடுத்தி கொள்ள  பலர் காத்திருப்பார்கள் . இவர்களை பச்சோந்திகள் என்று கூட சொல்லுவார்கள் அதாவது முக்கிய பணியில் இருக்கும் போது  மட்டும் அவர்களை நாடி வந்து அன்பு பாராட்டுவார்கள் .

பிளாஸ்டிக் புன்னகைகளை உதடுகளில் பொருத்திக்கொண்டு நம்மிடம் குலைந்து பேசுவார்கள் இவர்களை நாம் பல நேரங்களில் சந்தித்து இருப்போம் .
அந்த முக்கிய பதவி நம்மிடம் இருந்து காணாமல் போகும் போது  இந்த நபர்களும் காணாமல் போய்விடுவார்கள் .அதுவரை நம்முடைய பெரும்பான்மையான நேரங்களை இவர்களே ஆக்கிரமித்து இருப்பார்கள் .

அவர்கள் காணாமல் போனதும் நாமும் இந்த உலகில் இருந்து காணாமல் போய்விடுவோம் மனரீதியாக் நம்மை அப்போதுதான் தேடுவோம் .நமக்கான சுதந்திரத்தை நாம் உணருவோம் .

முக்கியமானவர்களாக இருக்கும் போது நாம் மற்றவர்களால் பயன்படுத்த படுகிறோம் .

ஆகவே நாம் யாருக்கும் விருப்பமானவர்கள் இல்லை ,யாரும் எந்த காரணமும் இன்றி நம்மை விரும்புவதும் இல்லை . இந்த உண்மையை உணர உலகில் இருந்து தள்ளி நின்று உங்களின் உள்ளே பாருங்கள் உங்களுக்கான வெற்றியை அடையாளம் காண முடியும் .


****

நிமிர்ந்து நின்று
உற்சவம்
செல்லும் போது
செருக்குடன்
உடன் வருகிறாய்

தள்ளாடும்
வயதில்
தடுமாறி விழுகிறேன்
தாங்கி பிடிக்க
தயங்குகிறாய்

****
புதிய தளங்கள் உங்களுக்காக

இன்றைய வானம் 

கே .பி . ஜனா 

உயித்தமிழ்

விண்முகில் 

வான் மழை  போற்றுவோம் 


நாளை மீண்டும் புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன்



16 comments:

  1. sako!

    puthiya arimukangal!

    mikka nantri!

    ReplyDelete
  2. மூன்றாவது தளம் எனக்கு புதிது...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி... (TM 1)

    ReplyDelete
  3. குறிப்பிட்டுள்ள தளங்களைப் பார்வையிட்டு சிலவற்றில் கருத்தும் இட்டிருக்கிறேன். அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சரளா. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இன்று அறிமுகப்படுதப்படவர்கள் அனைவரும் அருமை . மிகவும் பிடித்தவர் . "வான் மழை போற்றுவோம் "

    ReplyDelete
  5. //.... முக்கிய பணியில் இருக்கும் போது மட்டும் அவர்களை நாடி வந்து அன்பு பாராட்டுவார்கள் ....உதடுகளில் பொருத்திக்கொண்டு நம்மிடம் குலைந்து பேசுவார்கள் ....அந்த முக்கிய பதவி நம்மிடம் இருந்து காணாமல் போகும் போது இந்த நபர்களும் காணாமல் போய்விடுவார்கள் //.

    உண்மையே.

    1987 ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை இக்கருத்துக்கு ஒரு உதாரணமாகத் தருகிறேன்.
    எங்கள் நிறுவனத்தில் ஆடிட் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம். அப்பொழுது நான் நிர்வாக அதிகாரியாக இருந்தேன்.
    ஒரு நாள் நான் சென்றிருந்த அலுலவலகத்தைப் பற்றிய அறிக்கை பற்றிப் பேச என் உயர் அதிகாரி அறைக்குள் நுழைந்தேன். அப்பொழுது
    அவருடன் அந்த பதினிரண்டு மாடிக் கட்டடத்தின் மிக உயர் அதிகாரியான ஒருவரும் இருக்கக்கண்டேன்.
    என்னை பார்த்த உடன், என் மேலதிகாரி என்ன மிகவும் முக்கியமான விஷயமா ? நீயே வந்திருக்கிறாய் என்றார்.
    மேலும், நான் பதில் சொல்ல விழையுமுன், இதோ பாருங்கள், புதுவருட வாழ்த்துக்கள் இத்தனை குவிந்திருக்கின்றன. ( அந்தக் காலத்திலே
    புது வருடம், தீபாவளி, பொங்கல், திருமணம் எல்லாவற்றிற்குமே லட்சக்கணக்கான வாழ்த்து மடல்கள் தான், தபால் அலுவலகங்களை
    நிலை குலையச்செய்துவிடும்) அதற்கு நான் பதில் போட்டாகவேண்டும் என்றார்.
    அதற்கும் நான் பதில் அளிக்கமுன்னதாகவே, என் நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரி ( கூட இருந்தவர்) எனக்கு வந்திருக்கும்
    வாழ்த்து மடல்கள் இது போன்று பத்து பங்கு. ஸார் ! என்னால் இதற்கு பதில் போட முடியாது. ஏன் என்றால் பதில் போட்டு
    முடிவதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும் என்று என் பி.ஏ. சொல்லுகிறார் என்றார்.
    இவர்கள் இருவரின் சொற்களிலுமே உண்மையை விட தற்பெருமை தனிப்பட ஒளிவிட்டது எனக்கு கொஞ்சம் அருவறுப்பு ஏற்பட்டது உண்மை. ( பெருக்கத்து வேண்டும் பணிவு ...என்பர் . எங்கே அது என்பதை வெளிச்சம் போட்டுத்தான் தேடவேண்டும்)
    என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
    ஸார் ! இந்த வாழ்த்துக்கள் எல்லாமே உங்களுக்கு வரவில்லை. உங்கள் நிலைக்காக ( டெஸிக்னேஷன்) வந்தது. நாளடைவில் தெரியும் என்றேன். அவர்கள் என் பதிலை ரசிக்கவில்லை என்றே தெரிந்தது.
    அடுத்து, நான் வந்த விஷயம் பற்றிக் கூறிவிட்டு சென்று விட்டேன்.
    என் மேலதிகார் அதற்குப்பின் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்றுவிட்டார். நானும் சென்னையிலிருந்து மாற்றுதலாகி தஞ்சைக்கு
    வந்துவிட்டேன்.
    அடுத்த ஜனவரி மாதம் ஒரு பதினைந்து தேதி வாக்கில் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. (அப்பொழுதெல்லாம் தொலைபேசியில்
    அழைப்பது என்பதே மிகவும் அவசரம் என்றால் தான் எஸ்.டி.டி. மூலம் ஃபோன் செய்தாலும் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கவேண்டும்.
    சென்னைக்கும் தஞ்சைக்கும் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் இருபது கட்டணம். )

    அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் இதுவே:

    " சூரி ! நீ அன்று சொன்னது எனக்கு எரிச்சலாக இருந்தது. உனக்கு என் மேல் எவ்வளவு பொறாமை என்று கூட நீ போன பின் நான்
    சொன்னேன். ஆனாலும் இந்த வருடம் எனக்கு இதுவரை மூன்றே மூன்று வாழ்த்து தான் வந்திருக்கிறது. அதிலும் நீ அனுப்பியது
    ஒன்று. "

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com






    ReplyDelete
  6. என் படைப்பின் வெற்றியை உறவுகள் உங்களால் உணர முடிகிறது உங்களின் கருத்துக்கள் வெறும் கருத்தாக கை கொள்ள முடியவில்லை அது வரம் எந்தவதிர்கான வரம் மேலும் சூர்யா நாராயணன் அவர்களின் பின்னூட்டம் எனக்குள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என் அனுபவங்களை உங்களுடன் பகிரும் போது அது ஒரு நூல் பிடித்து உங்களை ஒரு எல்லை வரை அழைத்து செல்வதை நினைக்கையில் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது நன்றி உறவுகள் அனைவருக்கும்

    ReplyDelete
  7. வெற்றியைப் பற்றிய கருத்தும் அறிமுகங்களும் அருமை அக்கா! சூரி அவர்களது பின்னூட்டமும் அருமை!

    ReplyDelete
  8. மிகச்சிறந்த அறிமுகங்கள்.

    அனைவருக்கும் + தங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //
    நிமிர்ந்து நின்று
    உற்சவம்
    செல்லும் போது
    செருக்குடன்
    உடன் வருகிறாய்

    தள்ளாடும்
    வயதில்
    தடுமாறி விழுகிறேன்
    தாங்கி பிடிக்க
    தயங்குகிறாய்//

    அற்புதமான படைப்பு.
    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
    vgk

    ReplyDelete
  9. இன்றையவானம் வலைபூ அறிமுகம செய்ததற்கு நன்றி
    அ.தமிழ்ச்செல்வன்

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்களுக்கு மிக்க நன்றி சகோ!

    தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் "வான் மழை போற்றுவோம்" அறிமுகம் செய்ததற்கு நன்றி. மின்னஞ்சலில் அதை தெரிவித்த திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி.

    ReplyDelete


  13. நிமிர்ந்து நின்று
    உற்சவம்
    செல்லும் போது
    செருக்குடன்
    உடன் வருகிறாய்

    தள்ளாடும்
    வயதில்
    தடுமாறி விழுகிறேன்
    தாங்கி பிடிக்க
    தயங்குகிறாய்//
    அர்த்தமுள்ள அனுபவ வரிகள்..

    ReplyDelete
  14. இன்றுதான் இத்தளத்தை அறிந்தேன் அருமை! உங்களக்கு நேரம் இருப்பின் என்னுடைய தளத்தை பார்வையிடுங்கள். உங்கள் அனைவருடைய ஆதரவு தேவை
    தமிழ் பட பாடல் வரிகள்

    ReplyDelete
  15. நாடகமே உலகம் என்பது சரிதானே!
    அறிமுகங்களிற்கும், தங்களிற்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete