Friday, August 3, 2012

புதிய தென்றல் வீசுகிறது!

”அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவராலாவ தொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே”----(திருமந்திரம்)


----------------------------------------------


பஞ்ச பூதங்கள் எனப்படுபவை வடமொழியில்-பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்..

தமிழில்-நிலம்,நீர்,நெருப்பு,வளி,வெளி.சிவ பெருமானின் ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்றழைக்கப் படுகின்றன. அவையாவன--நிலம்-காஞ்சி;,நீர்-திருவானைக்கா;நெருப்பு-திருவண்ணாமலை;காற்று(வளி)-திருக்காளத்தி;ஆகாயம் (வெளி)-சிதம்பரம்


----------------------------------------------------
2011-2012 இல் வீசத்துவங்கிய தென்றல்.


1)இந்தக் கவிமனம்  கொண்ட வர் தன் பெயரை எண் கணித சாத்திரப்படி எழுதுகிறார் என நினைக்கிறேன்.முதல் பதிவே தொடர்கதைதான்.போகப் போகத் தெரியும் என்ற தொடர் கதை 18 அத்தியாயங்கள் முடிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.போகப் போக அல்ல,இப்போதே தெரிகிறது,அவர் திறமை.


2)மழை கழுவிய பூக்களின் அழகை நீங்கள் பார்த்த துண்டா?அப்படிப்பட்ட ஒரு பூ இது.சிறிது வித்தியா சமான தமிழ் நடையில் வருகிறது இந்தக் காட்சிப் பிழைகள். இவரது எழுத்து நடையில் எஸ்.பொ.வின் தாக்கம் இருப்பது போல் எனக்குத்  தோன்றுகிறது. அதிசயாவின் வலைப்பூ


3)என் ஜன்னலுக்கு வெளியே பார்த்து ரசித்தது உங்களுக்கும் என்று காட்டுகிறார் நிரஞ்சனா.நினைத்ததைத் துணிச்சலுடன் சொல்லும் தைரியம் இவரிடம் இருக்கிறது. தற்கால மாணவர் களின்  பொது அறிவு பற்றிய இவரது ஆதங்கம்  இங்கே.


4)இந்த வரலாற்று சுவடுகளைப் பின் பற்றினால் பல புதிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.அறுவை சிகிச்சை வரலாறு என்று நான்கு பதிவுகளில் அன்று முதல் இன்று வரையான அனைத்துத் தகவல்களையும் விளக்கமாக எழுதியிருக்கிறார்.அவசியம் படியுங்கள்.


5).திடங்கொண்டு போராட வருகிறார் சீனு.நான் சென்னையின்  காதலன்.சென்னைக்காதல் என்று சில பதிவுகள் எழுதினேன்.அதே சென்னை இவரது பார்வையில் எப்படி இருக்கிறது?சுவாரஸ்யம்தான்.பாருங்கள்.


நாளை ஐவர்.

17 comments:

  1. அனைத்து தென்றலுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...
    (த.ம. 1)

    ReplyDelete
  2. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தங்களால் அறிமுகம் செய்யப்பட்டதை மிகப் பெரிய விசயமாகவே கருதுகிறேன்...மகிழ்ச்சியான நன்றிகள்.... சென்னையின் பித்தனாகிய உங்களுக்கு எனது சென்னையின் பதிவு சுவாரசியமாய் இருந்த்தது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது.

    நீங்கள் அறிமுகம் செய்தததில் கவிமனம் தவிர்த்து அனைவருமே எனக்கு நண்பர்கள்... அவரையும் அறிந்து கொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....

    தனபாலன் சார் உங்களுக்கு சிறப்பானதொரு நன்றி.....

    ReplyDelete
  4. நான் இங்கே உங்களின் வாயிலாக அறிமுகமானதில் மிகமிகமிக மகிழ்வு கொள்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு என் நன்றி. என் ஃப்ரெண்ட் அருணா செல்வம் இப்படி ஒரு கதைப்பதிவும் எழுதறார்ங்கறது எனக்கு புதிய தகவல். உடனே பார்க்கறேன். அறிமுகமான மத்த எல்லாரும் என் நண்பர்கள் தான்ங்கறதுல கூடுதல் சந்தோஷம் எனக்கு. மறுபடியும் உங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  5. அறிமுகமான ஐந்து கவிகளுக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. நல்லதொரு அறிமுகங்கள்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் என் நன்றியும்
    உரித்தாகட்டும் .

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா.

    உங்களால் நான் இன்று பலருக்கு அறிமுகம் ஆனதை நினைத்து மிகவும் மகிழ்கிறேன்.
    அடுத்தது.. நான் அருணா செல்வம் என்ற பெயரில் கவிதை எழுதுவது தான் நிறைய நண்பர்களுக்குத் தெரியும். தொடர்கதை என்றால் ஒருசிலர் தான் வந்து படிப்பார்கள் என்று அதற்கென்று தனிவலை “கவிமனம்“ அமைத்து வெளியிட்டுக்கொண்டு இருந்தேன். அவ்வளவாக வாசிப்பதற்கு இல்லையென்றாலும் தொடர்பவர்களை மதித்து அவர்களுக்காகத் தொடர்ந்து எழுதினேன்.
    ஆனால் இன்றிலிருந்து உங்களுடைய அறிமுகத்தால் இன்னும் நிறையபேர் வாசிப்பார்கள் என்று மகிழ்ந்து உங்களுக்கு நான் மனமாற நன்றி கூறுகிறேன்.
    தவிர இன்றைய அறிமுகங்கள் அனைவரையும் படித்துள்ளேன். அனைவருமே பாராட்டுக்குரிவர்கள். அவர்கள் அனைவரையும் திரும்பவும் பராட்டுகிறேன்.
    எங்கள் ஐவரையும் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. தங்களது அறிமுக பட்டியலில் நானும் இடம் பெற்றது மிகுந்த உத்வேகம் தருகிறது நெஞ்சில்!மிக்க மகிழ்ச்சி ஐயா! ஏனைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    மன்னிக்க வேண்டும் தாமதமாக வந்தமைக்கு! இன்று இங்கே (பஹ்ரைன்) வார விடுமுறை ஆதலின் உடலுக்கு ஓய்வளித்துவிட்டேன் வெகு நேரம்! அதாவது தூங்கிவிட்டேன்! :)

    ReplyDelete
  10. மீண்டும் அருணா செல்வம்...

    நான் எண்கணித சாஸ்திரப்படியெல்லாம் பெயரை எழுதவில்லை ஐயா.
    பிரென்சு மொழியில் அப்படித்தான் எழுத வேண்டும். நிறைய பேருக்கு இந்த குழப்பம். மாற்றிக் கொள்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  11. Nalla muyarchi. Vaalththukkal. Appadiye namma thalaththukkum konjam varalame?

    http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  12. முதல் அறிமுகம் தவிர மற்றவர்கள் படிக்கிறேன். முதலாவது வலைப்பூவையும் படிக்க ஆரம்பிக்கிறேன்...

    அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா.ஒப்பற்ற மகிழ்வோடுமட,மனது பூரிக்கும் திருப்தியோடும் இக்கருத்தை இடுகிறேன்.தங்களின் மூலம் இங்கு அறிமுகம் பெறுவதையிட்டு பெருமகிழ்வு.சோர்ந்து போகும் தருணங்களில் கடவுள் அனுப்பும் ஆசீர்வாதங்கள் போல அமையும் இப்படியாக தருணங்களை அனுபவிப்பது நிறைவு.அங்கீகாரம் கிடைத்தது போன்ற திருப்தியும்.இங்கு தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்கள்களும் என் அன்பிற்குரிய பதிவுலக சொந்தங்கள் என்பதில் பெருமகிழ்வு.மீண்டுமொரு முறை தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.அன்பின் சொந்தங்களுக்கு அதிசயாவின் வாழ்த்துக்கள்.சந்திப்போம் ஐயா!

    ReplyDelete
  14. சிறப்பான வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்கள் ஐயா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள்...
    அழகாக அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

    அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete