Saturday, August 4, 2012

தொடர்ந்து வீசும் புதுத்தென்றல்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்;அணியன் நல் அன்பர்க்கு;
தாயினும் நல்லன்;தாழ் சடை யோனே ---(திருமந்திரம்)


---------------------------------------------------------------


சிவதத்துவங்கள்
உயிரின் நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர்.


 ஐந்து காரிய அவத்தைகள்
கீழ்வருமாறு :

1) நனவு : இது வடமொழியில் சாக்கிரம் என்று
சொல்லப்படும். இந்நிலையில் உயிர்
புருவ நடுவிலிருந்து செயல்படும்.
2) கனவு : சொப்பனம்     என்று கூறப்படும்.
இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
செயல்படும்.
3) உறக்கம் : சுழுத்தி     என்று     கூறப்படும்.
இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
4) பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து
செயல்படும்.
5) உயிர்ப்படக்கம் : துரியாதீதம்     என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து
செயல்படும். 











-------------------------------
1) இரண்டு மாதக் குழந்தையால் ஓட முடியுமா?ஓடுவது மட்டுமல்லை சிந்தனைச் சிறகுகளை விரித்துப் பறக்கிறது இரண்டே மாதம் நிறைந்த இக்குழந்தை.சலனம் என்ற தலைப்பில் இரண்டு பாகத்தில் ஒரு அருமையான நீள்கதை எழுதியிருக்கிறார்.இன்னும் எதிர்பார்க்க வைக்கிறார், சாமுண்டேஸ்வரி பார்த்தசாரதி


2)அமிழ்ந்து கிடந்தது போதும் பொங்கி எழு சுனாமியாய் என்ற முழக்கத்தோடு வரும் பெண் என்னும் புதுமை இவர்,கோவை மு சரளா.இவரது நாட்குறிப்பின் பக்கங்கள்,நமக்குள்ளும் பல பக்கங்களைத் திறந்துவிடும்..


3)”என் இதயம் பேசுகிறது” என்ற தலைப்புக்குச் சரியாக அவர் இதயம் பேசும் உண்மைப் பேச்சு இந்த வலைப்பூ. ”மரித்துப் பிளைத்தவள்” என்ற தொடரில் இலங்கை யுத்தபூமியில் தன் அனுபவங்களை,வலிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்,எஸ்தர்சபி


4)ரசிக்கத்தக்க கிறுக்கல்கள்தாம் இவை.எங்கே (எவற்றை) விலை பேசுகிறோம் நாம்? என்ற கேள்வியுடன் இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறார்,யுவராணி தமிழரசன்.மழையை ரசிப்பவரா நீங்கள்?பாருங்கள் இந்த மழைநேரம்


5)பதிவு தொடங்கி இரு மாதங்களிலேயே பிரபலமாகி ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் ஹாரிபாட்டர்.
முரண்செய்  என்ற ஒரு குறு நாவல்,சீரியஸ் பதிவு என்ற புதுமை முயற்சி என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.


நாளையும் வீசும் தென்றல்!

15 comments:

  1. நான்காவது அறிமுகம் எனக்கு புதுமுகம்...

    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
  2. மதுரை சொக்கன் அவர்களுக்கு .............

    நம் மூத்தோரின் புகழ் பாடும் மந்திரங்களின் மகத்துவத்தோடு வலைசரத்தை சிறபித்த அழகு அருமை .........

    பல நல்ல புதிய தளங்களை சிறப்பாக அறிமுகப்டுத்தியதொடு என் தளத்தையும் சிறப்பித்தமைக்கு என் பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிந்தனைச் சிறகுகள் நன்றாகவே சிறகை விரிப்பதை நானும் கவனித்து மகிழ்ந்திருக்கிறேன். மற்றையவர்களும் எனக்குப் பரிச்சயப்பட்ட தளங்களே என்பதில் மிக மகிழ்ச்சி. நல்லறிமுகங்களுக்கு நன்றியும் அனைவருக்கும நல்வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  4. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மதுரை சொக்கன் அவருக்கு என் பனிவான வணக்கம்!... தத்துவங்களோடு எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க மிக்க நன்றி!.. மேலும் வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்! நான்காம் அறிமுகம் புதியவர்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  7. சிறந்த படைப்பாளிகளை அறிமுகம் செய்து வாழ்த்தி உள்ளீர்கள்! சிறப்பு!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  8. முதலாவதாக என்னை பதிவுலகத்தில் அறிமுக படுத்தி இருக்கிறீர்கள் நன்றி ஐயா.. உண்மையில் ஒவ்வொரு வாரமும் வந்து பார்ப்பதுண்டு நம்மை யாரும் அறிமுக படுத்தி இருப்பார்களா என்று..
    ஆனால் இன்று நடந்து இருக்கிறது.. நன்றி உங்களுக்கு..

    ஒரு சின்ன குழந்தையை தாலாட்டுவது போல இருந்தது உங்கள் புதியவர்கள் அறிமுகம்..

    ReplyDelete
  9. வணக்கம்!மீண்டும் ஐவர்.3 தெரிந்தவர்கள்.2 புதியவர்கள்..அறிமுகத்திற்கு நன்றி ஐயா.வாழ்த்துக்கள் சொந்தங்களே.நன்றி ஐயா!

    ReplyDelete
  10. இருவர் என் நண்பர்கள் மற்றவர்களையும் தெரிந்து கொள்கிறேன் சார்...

    ReplyDelete
  11. தம்பி ஹாரி நீ அறிமுகப்படுத்திய பலரும் இங்கே உண்டு என்பதை தாழ்மையுடன் நினைவுபடுத்தி கொள்கிறேன் (ஹி ஹி ஹி)

    ReplyDelete
  12. //சீனு said...//

    அண்ணா விடுண்ணா.. கொஞ்சம் தாழ்மையா கதைக்க விட மாட்டிங்களே..

    ReplyDelete
  13. இல்லை நண்பா இது எனது பல நாள் ஆசை நண்பா.. நமக்கு எல்லாரையும் பிடிக்கிறது வேற கதை.. நம்மள பிடிச்சு இருக்கா என்று தெரியன்னும்ல.. ஆனாலும் வலைச்சரம் ஒரு வார ஆசிரியர் மூலம் தான் நான் அடுத்த படிக்கு போனேன் என்று கூட சொல்லலாம்..

    மறு படியும் நன்றி ஐயா.. அடிக்கடி எழுதுங்கள்.. அனுபவஸ்தர்களின் எழுத்து தான் உண்மையிலே ஆணிவேர்..

    ReplyDelete
  14. எனது வலைப்பூவினை அறிமுகப்படுத்தியமைக்கு எனது நன்றிகள்!!!!!!மற்ற நான்கு பதிவர்களில் ஒருவர் எனது தோழி மூன்று புது பதிவர்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி!!

    ReplyDelete