நானும் ஒரு கார் வைத்து இருக்கேன் நானும் ஒரு வீடு வாங்கிட்டேன். என்பது போல் நானும் ஒரு பிளாக் வைத்து இருக்கேன் எல்லாரும் பிளாக் எழுத ஆரம்பிச்சாச்சு, எல்லாருக்குமே ஆசை இருக்காதா என்ன ?
ஆனால் அதில் வரும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது. பிளாக் எப்படி ஆரம்பிப்பது, பெயர் எப்படி வைப்பது , எப்படி பாலோ பண்ணுவது, டெம்லேட் எப்படி மாற்றுவது, டெலிட் ஆகிய பதிவ எப்படி மீட்பது, பதிவுகளை எப்படி பாதுகாப்பது. அதன் தொழில் நுட்பங்கள் நன்கு தெரியவேண்டாமா?
பிளாக்கர் டிப்ஸ் என்றதும் போரடிச்சிக்க வேண்டாம் இந்த பாட்டை கேட்டு கொள்ளுங்கள்
வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்
வீடியோ இனைப்பு சரியா வரல அதான் லின்க் கொடுத்துட்டேன்.
முதல் முதல் இந்த பிலாக் உலகில் நுழைந்த்தும் தட்டு தடுமாறி என் இஷ்த்துக்கு எனக்கு தெரிந்த கோட்களை நானா சேர்த்து கொண்டு இருந்தேன். மற்றவர்கள் யாரும் அறிமுகமில்லை, பிலாக் சந்தேகங்கள் இப்ப நிறைய பேர் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள். அப்போது சுஹைனா அறுசுவை மூலம் அறிமுகமாகி பிலாக் உலகில் பலருக்கு ஏற்படும் சந்தேகத்தை தெளிவாக விளக்கமாக சொல்லி கொடுத்தார்.
முதல் முதல் எனக்கு தெரிந்து பிளாக்கர் டிப்ஸ் எழுதியது சுஹைனா தான். நிறைய சந்தேகங்களுக்கு உடன் மெயில் அனுப்பி விளக்கி இருக்க்காங்க. என் நான்கு பிளாக்க ஒன்றாக்கி எனக்கே என்க்காக ஒரு புதிய டெம்ப்லேட்டும் வடிவமைத்து கொடுத்தாங்க , எனக்கும் அந்த டெம்ப்லேட் ரொம்ப பிடிச்சி இருந்தது. ஆனால் பதிவுகள் அதிகமாக அதிகமாக பிளாக் ஓப்பன் செய்வதே சிரமமாக போய்விட்டது. ஆகையால் நானே எனக்கு பிடித்த டெம்லேட்களை அப்ப அப்ப மாற்றி கொள்வேன்.
பிளாக்கர்களுக்கு தெளிவாக பதிவெழுதிய சுஹைனா இடையில் மேற்படிப்புக்காக பிளாக் உலகில் காணாம போய் இப்போது மறுபடி மீண்டும் பதிவெழுத ஆரம்பித்து இருக்காங்க.
அவங்க பதிவுகளில்
பிளாக் எழுதுபவர்களுக்கு - பல பயனுள்ள் ப்திவுகளை எழுதி இருப்போம். பிளாக்கே டெலிட் ஆகிவிட்டாலும் கவலை பட தேவையில்லை.இந்த பதிவில் சுஹைனா சொல்லி உள்ளது போல் செய்யுங்கள்.
இலவச டெம்லேட் - 5 இது எனக்காக வடிவமைத்தது.
2. பிளாக்கர் டிப்ஸ் எழுதிய சுஹைனாவிற்கு அடுத்து பொன்மலர் இவர்கள் இருவரை தான் எனக்கு முதலில் தெரியும்.
உங்களிடம் MS-ஆபிஸ் பதிப்பு 2007 அல்லது 2010 இருப்பின் திறந்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சிட்ட அல்ல புதியதாக தட்டச்சிடுகிற கோப்புகளிலும் வாட்டர்மார்க் இடமுடியும். ரிப்பன் மெனுவில் Page Layout என்பதைக் கிளிக் செய்தால் Watermark என்ற மெனு தெரியும்.
Ms word watermark
பொன்மலர் பதிவெழுத ஆரம்பத்தில் இருந்து , பிளாக்கர் டிப்ஸ், வேர்ட், எக்சல், பல பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து எழுதி சிறந்த தொழில் நுட்ப வலைப்பூ என ஆனந்த விடகன் வரவேற்பரையில் இடம் பெற்றுள்ளது.
பொன்மலர் பதிவெழுத ஆரம்பத்தில் இருந்து , பிளாக்கர் டிப்ஸ், வேர்ட், எக்சல், பல பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து எழுதி சிறந்த தொழில் நுட்ப வலைப்பூ என ஆனந்த விடகன் வரவேற்பரையில் இடம் பெற்றுள்ளது.
3.தமிழில் எழுத
பிளாக்காக இருந்தாலும், சாட்டிங் வசதிக்கு கணணியில் இருந்து நேரடியாக தமிழில் டைப் செய்வது ரொம்ப வசதி இல்லையா? தமிழில் டைப் செய்ய நல்ல தொரு பல தமிழ் பாண்ட் இருந்தாலும் மற்றவர்கள் இதை பற்றி விளக்கி இருந்தாலும் பைஜலின் , படியுங்கள் சுவையுங்கள் இந்த பதிவில் மிகவும் இலகுவான முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்கு. மிகவும் அழகான முறையில் டவுண்ட்லோட் செய்வது பற்றி போட்டு இருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த பிறகு தான் எனக்கு மிக எளிதாக புரிந்தது. அதுவரை முன்பு 2 வருடகாலமாக 300 குறிப்பு மேலே எழுத்துதவி மூலம் தான் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்து வந்தேன்.ஆகையல் நிறைய தவறுகள் வரும்.இப்ப இதை டவுண்ட்லோட் செய்ததில் இருந்து ரொம்ப வசதியாக இருக்கு.
இதை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவும்.
4. முன்பு யாரும் தொழில் நுட்ப பதிவுகள் போடாத போது கடந்த 4 வருடமாக பல பயனுள்ள பதிவுகளும் போட்டாஷாப் பாடம் எளிமையாக வும் கற்று தருகிறார் வேலன் சார்.
போட்டோஷாப் கற்று கொண்டால் நொடியில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை எப்படி ரெடி செய்யலாம் என்று இங்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் கம்ப்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம்.
பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம்.
கணினியின் அனைத்து விபரங்களும் அறிந்து கொள்ளலாம். இது போல் பல பதிவுகள் மொத்தம் 782 பதிவுகள் இருக்கின்றன. அதில் சில பதிவுகள் லின்க் கொடுத்துள்ளேன்.
5.பிளாக் தொடங்குவது எப்படி ?? இங்க வாங்க மொததம் 25 பதிவுகளாக மிகத்தெளிவான முறையில் விளக்கி இருக்கிறார்.
பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு,
இன்னும் திட்டிகளின் ஓட்டுப்பட்டை எப்படி இனைப்பது?
மால்வேர் பிரச்சனைகள் எப்படி கண்டறிவது இப்படி பல தொழில் நுட்ப பதிவுகளை இங்கு காணலாம்வோர்ட் எக்சல் பைல்களை எப்படி பாஸ்வேர்ட் போட்டு எப்படி பாதுகாக்கலாம் விகடன் குட் பிளாக் பகுதியிலும் இவர் பிளாக் இடம்பெற்றுள்ளது.
எனக்கு இதில் சில பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தது. பாஸிக்கு மிக்க நன்றி.
எனக்கு இதில் சில பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தது. பாஸிக்கு மிக்க நன்றி.
6..வர வர இணையதளங்களில் பாதுகாப்பு மிகக் குறைந்து வருகிறது. வலைத்தளங்கள் ஹேக் செய்யப் படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதை ஹேக் செய்தவன் அதை அழிக்காவிட்டால்
பிரச்சனை இல்லை. ஆனால் அழித்து விட்டால் ??கடத்தல் மன்னர்கள் பதிவில் எல் கே என்ன சொல்கிறாருன்னு பாருங்கள்.
எல்.கே. கதை , கவிதை, கட்டுரை, தொழில் நுட்பம், என கலக்கலனா பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
7. திருட்டு போவுதுங்கோஓஓஓஓஒ களவானிபசங்க உங்க அகவுண்ட திருடமா இருக்குனுமா இதபாருங்கள் கற்போம் வாருங்கள்
இதன் படி செய்யுங்கோஓஓஓஓஓஒ , உஷாராவுங்கோஒ ஓஓஓஓஓஓஓஒ
இதன் படி செய்யுங்கோஓஓஓஓஓஒ , உஷாராவுங்கோஒ ஓஓஓஓஓஓஓஒ
8.என் பையனைப் பத்திக் கவலையில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான். சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில்.
அது என்ன ஏதுன்னு உங்களுக்கு விளாவாரியா தெரியவேண்டாமா? வாங்க அதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொறியியல் முடித்தவுடன் ஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்?
பென் - ட்ரைவ் என்றால் என்ன அதன் பயன் மிக்க சில தகவல்களை இங்கே காணலாம்.
கற்போம் ஆனது இணையத்தில் மாதாமாதம் வரும் முதல் தமிழ் தொழில்நுட்ப இணைய இதழ் ஆகும்.
9. அன்பைத்தேடி கணிணி மூலம் பகுதி நேரத்தில் சம்பாதிக்கனுமா? இண்டர்நெட் டிப்ஸ்கள்,பிளாக்கர் டிப்ஸ்கள் கணனியை எதுக்கு பேக்கப் செய்யவேண்டும் போட்டோ எடிட்டிங், ஸ்கைப் நோக்கிய மொபைலை எப்படி பர்மேட் செய்வது போன்ற பல பயனுள்ள தொழில் நுட்பங்களை தொகுத்து அளித்துள்ளார்.
10. பிளாக்கரின் வாசகர்களை அதிகரிக்க வழி துளசி தாசன், ஜீமெயில் அகவுண்டை இழந்தால் பிளாக்கையும் இழந்து விடுவீர்கள் அதற்கு என்ன வழி , நீங்கள் எழுதும் பதிவை திரட்டிகளில் இணைத்தால் தான் ஓரளவுக்கு பிரபளமாகும். அதற்கு 17 திரட்டிகளை அறிமுக படுத்தி இருக்கிறார்.
//ம்ம் ஒரு திரட்டியில் இனைப்பதே எனக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது? 17 திரட்டிகளா
சில நேரம் யுசர் நேம் பாஸ்வேர்ட் வேற மறந்து போகுது அதுக்கு என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்களே//
11.பிளாக்கருக்கான அழகிய ட்ராப் டவுன் மெனு
, பிளாக்கர் லேபிளை எப்படி இரண்டாக பிரிக்கலாம், பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை ( அறிவுகெட்ட களவானி பசங்க என்ன சொன்னாலும் திருட தான் செய்வாங்க) பிளாக்கை அழகு படுத்த இன்னும் பல பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்களுக்கு இங்கு சென்று பயனடைந்து கொள்ளலாம்.
12. தங்கம்பழனி
பதிவுகளை எழுதி முடிச்சிட்டு அப்பாடா வேலை முடிந்த்து என்று நாலு பேருக்கு போய் பத்திரிக்கை வைத்தால் தான் பதிவு போட்ட்து தெரியவரும்.
அதாங்க திரட்டியில் இனைப்பது பற்றி தான் சொல்றேன். அதிலும் தமிழ்மணம் ஓட்டு பட்டை இனைப்பது எல்லாருக்குமே பயம். அங்க கொடுத்துள்ள பாக்ஸில் அப்ப்டியே எப்ப்டி நம் ஹெச் டி எம் எல்லை கொடுப்பது என்று அதுக்கு எப்ப்டி ஈசியாக செய்யலாமுன்னு வீடியோவோடு இந்த பதிவைபாருங்கள்.
//நம்ம் ஹெச் டி எம் எல் கோடை அங்கு கொடுத்து அளி என்ற பட்டனை அழுத்தினால் ஓட்டு பட்டை அதில் சேர்ந்துடும். நீங்க உடனே இருக்கும் உங்கள் கோட்டை தமிழ்மணம் பாக்ஸில் இருந்து கட் செய்து உங்கள் எடிட் ஹெச் டி எம் எல்லில் சேர்த்து விட்டு சேவ் கொடுதான் வேலை முடிந்தது.//
13 . "உன் துணி அலமாரியைக் (wardrobe) காட்டு, நீ யாரென்றுநான் சொல்கிறேன்" என்று ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்னார். அதே போல, உன் கணிணியைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன் என்றும் சொல்லலாம். நாள்பட்ட கோப்புகள், பயன்படாத ப்ரோகிராம்கள், வாழ்க்கையில் 3 அல்லது 4 முறை மட்டுமே பார்க்கப் படும்
சில நேரம் நாம் அனுப்பும் பைல் பெரியதாக இருக்கும் டவுண்ட் லோட் செய்ய முடியாது அதை எப்படி இலகுவாக டவுண்ட்லோட் செய்யலாம்.
சில மெயில்கள் அனுப்பும் போது ஜீமெயிலில் அட்டாச் செய்ய முடியாது அதை எப்படி அட்டாச் செய்யலாம்
பல பிளாக்கர் டிப்ஸ்கள், ஃபிரி சாப்ட்வேர், கூகிள் டிப்ஸ்கள், பேஸ்புக் டிப்ஸ்கள் என கலக்கி கொண்டு இருக்கிறார்.
டிஸ்கி:
எல்லா நினைக்கலாம் என்ன ஒரு ஒருபதிவ அறிமுகப்படுத்துவீங்கன்னு பார்த்தால் இத்தனை லிங்கா என்று. அள்ள அள்ள குறையாது என்பது போல பிளாக்கர் டிப்ஸ் வந்து கொண்டே இருக்கு பெரும்பாலும் எல்லோரும் தேடும் முக்கியமான லின்குகளை கொடுத்து விட்டேன்.
சந்தேகம்:
பொன்மலர் வேர்ட் டாக்குமெண்டில் போட்டுள்ள வாட்டர் மார்க் போல் நாம் பிளாக்கில் நம் பதிவுக்கு பின்னாடி எப்படி வரவழைப்பது . பதிவு தனியா ஓவ்வொன்றாக வேர்ட் டாக்குமெண்டில் டைப் செய்து அட்டாச் செய்வது சிரமம் ஆச்சே. நேரடியாக பிளாக்கில் வாட்டர் மார்க் போட்டு எழுத முடியாதா? அப்படி செய்தால் காப்பி அடிப்பதை தவிர்க்களாமே யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சோதனை மறுமொழி
ReplyDeleteகமெண்ட் ஆப்ஷன் இப்ப வொர்க் ஆகுது
அறிமுகங்கள் அருமை.தொடருங்கள்.
ReplyDeleteஇப்ப வொர்க் ஆகுது.. என் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி
ReplyDeleteநீங்கள் சொல்வது போல வாட்டர்மார்க் வேண்டும்னா டைப் செய்து அதை ஒரு இமேஜ் பைலாக மாற்றி பிளாக்கில் போட்டால் தான் உண்டு. ஆனால் எழுத்துகளின்றி படங்களாகப் போடுவதில் SEO பிரச்சினைகளும் இருக்கிறது அக்கா . என் பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஎப்பாடி....ஒரே பதிவுல எத்தனை அறிமுகங்கள்!
ReplyDeleteநன்றி தொடருங்கள்!
யப்பாஆஆஆஆஆ.....
ReplyDeleteஒரு பதிவுல எவ்வளவு நல்ல அறிமுகம்?
நன்றி ஜலீலா....
இன்னும் நிறைய நல்ல வலைப்பதிவர்களை அறிமுகம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்....
தொடரட்டும் உங்கள் அசத்தல் பணி....
அனைத்தும் பயனுள்ள தளங்கள். என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிகவும் அருமையான பகிர்வு தொடருங்கள் என்கபக்கமும் வந்து பாருங்கள்
ReplyDeleteஒவ்வொரு அறிமுகமும் அருமை. குறிப்பாக சகோதரி சுஹைனா அவர்களின் தளத்தை முதன்மைப் படுத்திய எழுதியமை பிடித்திருந்தது.
ReplyDeleteதங்கம்பழனி வலைத்தளத்தையும் அறிமுகங்களோடு இணைத்தமைக்கு மிக்க நன்றி..!!
அனைத்துமே பயனுள்ள தளங்களாக இருந்தது சகோ என்னுடைய தளத்தையும் அறிமுகபடுதியமைக்கு நன்றி
ReplyDeleteஅனைத்துமே அட்டகாசமான பயனுள்ள தளங்கள் ஜலீலா .
ReplyDeleteஎனக்கும் ஓடும் எழுத்துக்கள் போடணும்னு ரொம்ப நாளா ஆசை ..இப்ப லிங்க் கிடைச்சு ..அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றி
பல பயனுள்ள தகவல்களுடன் என்னை முதலாவதாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அக்கா! வலையுலகை நான் மறந்தாலும் என்னை மறக்காத வலையுலக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ReplyDeleteபயனுள்ள பகிர்வுகள்.அருமை ஜலீலா.
ReplyDeleteநல்லதொரு பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !by. www.99likes.blogspot.com
ReplyDeleteபெரும்பாலும் எல்லோரும் தேடும் முக்கியமான லின்குகளை கொடுத்து விட்டேன்.//
ReplyDeleteஆமாம் உண்மை மிக்கியமான் லின்குகளை எல்லோருக்கும் பயன்படும் லின்குகள்.
நன்றி ஜலீலா.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
அனைத்தும் பயனுள்ள தளங்கள்...
ReplyDeleteகரண்ட் கட் அதிகம் என்பதால், இன்று தான் படிக்க முடிந்தது... நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அறிமுகத்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteஇத்தன பேர் தொழில் நுட்பப்பதிவு எழுதுறாங்களா..அடேயப்பா. :)
ReplyDeleteபயனுள்ள பகிர்வுகள் அக்கா
ReplyDelete