Wednesday, September 19, 2012

விழித்திருந்தால் பிழைத்து கொள்ளலாம்.


விழித்திருந்தால் பிழைத்து கொள்ளலாம்.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது போலாகும். கீழே உள்ள சுட்டிகள் போல அடிக்கடி விழிப்புணர்வு பதிவுகள் போல அடிக்கடி போட்டால் நிறைய பேர் உஷாராவாங்க, ம்ம் என் பிள்ளையா அவனு(அவளு)க்கு இதபற்றியெல்லாம் தெரியாது. நான் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டார்கள்.
என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாகஒரு காலகட்டம் வரை அவர்கள் செயல்களை கூர்ந்து கண்காணியுங்கள்.





மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. 








//இப்ப எல்லாம் பள்ளி ,கல்லூரிகளில் பேஸ் புக்கில் பேஸ்புக் அக்கவுண்ட் இல்லை என்றாலோ ,நண்பியோ நண்பனோ இல்லை என்றால் அவர்களையெல்லாம் ஏளன படுத்துவதும் கேலி செய்யதுமாக இருக்கிறார்களாம். கேட்டா படிப்புக்கு டிஸ்கர்சன், நாளக்கு விடுமுறையா இல்லையா என்பதெல்லாம் பேஸ்புக் மூலமாக தான். //


நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இணைய உலகம்....நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....?






இங்கே பெண் வலையில் வீழ்ந்தாள் - ஆனால், பெண்களும் இப்போது ஆண் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள்.  குழந்தை ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தம் குழந்தைகளைச் சரியான வாழ்க்கைப் பாதையில் செலுத்துவது பெற்றோரின் கடனே.






.
இது போல் பயனுள்ள பதிவுகளை மற்றவர் தளத்தில் இருந்து எடுத்து போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ரொம்ப நல்ல விஷியம் தான் ஆனால் அதே சமயம் அந்த பதிவுக்கு  கிழே  அவர்களுடைய லின்கையும் கொடுங்கள்.
அபுதாஹிர், எங்கிருந்து எடுக்க பட்டது என்ற சுட்டியையும் கீழே கொடுத்து இருக்கிறார் 

  

5.செய்திதாள் களில் வரும் பல செய்திகளில் ஒன்றானா பாலியல் பலாத்காரம் 3 வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது என்ற செய்தி தான்? கண்டிப்பாக இதற்குண்டான விழிப்புணர்வை குழந்தைகளிடத்தே கொண்டு வந்தே ஆகனும். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்??

குழந்தைகளை அதிலிருந்து எப்படி காப்பற்றாலாம் இங்கு சமூக அக்கரையுடன் எடுத்துரைக்கும் இந்த சகோதரி சொல்லும் அறிவுரைகளையும் கேளுங்கள். 







6. குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒருபாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கவனியுங்கள்.அதற்கேற்ப அவர்களுக்குஒவ்வொரு வேலையை முடித்த பிறகும்சிறிதுநேரம்இடைவெளி விடலாம்இடைவெளியை கண்காணித்துசரியான நேரத்தில்அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.





இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் குணாதிசயங்களைக் கொண்டு
  • அவசர பெற்றோர்கள்
  • அன்பு பெற்றோர்கள்
  • அடிதடி பெற்றோர்கள்
  • இராமன் இராவணன் பெற்றோர்கள்
  • குழந்தை மையப்பெற்றோர்கள்

சம்பத் குமார் தமிழ் பேரண்ட்ஸ் என்னும் வலையில் குழந்தைவளர்ப்புக்கு தேவையான அனைத்து பதிவுகளும் எழுதி வருகிறார் இது கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்.

//இப்போது உள்ள நவீன உலகில் குழந்தைகளை யாரும் சரிவர கவனிப்பதில்லை, சிலசமயம் ஓவர் செல்லம் கொடுத்து நொல்லி பப்பகளாக வளர்க்கிறார்கள். இப்படி வளர்ந்தால் சின்ன சின்ன ஏமாற்றம் , வலிகள் , எதையும் யோசித்து செயல் படும் பக்குவமும் எதையும் தாங்கிகொள்ளகூடிய சக்தியும்  வருவதில்லை. இப்படி மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவுகள் எழுதினால், அனைவருமே விழித்தெழலாம்.//


20 comments:

  1. குழந்தைகளின் விழிப்புணர்வுகளுக்காக பயனுள்ள பதிவுகளை தேடிப்பிடித்து தொகுத்து அளித்திருக்கிறீர்கள். நன்று...

    ReplyDelete


  2. மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை.

    வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.

    இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர்.

    இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை.

    நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

    மதுரை அருகேயுள்ள கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்... வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்'களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும்.

    விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர்.

    அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.

    அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்... சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது.

    அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்' பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது.

    போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள்.

    பாதிப்பிற்குள்ளான பெண்கள் தற்கொலைக்கு செய்து கொள்ள துணிந்திருக்கின்றனர்.

    இது, எங்கோ... யாருக்கோ... நடந்த சம்பவமில்லை.

    எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே.

    கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

    ‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்... இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்... ஜாக்கிரதை' என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வீடுதேடி வரும் வில்லங்கங்களை எப்படி சமாளிப்பது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

    சீனாவில் இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா'ங்கிற பேரில், டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது..

    ஆனால் தற்போது ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம் என்கின்றனர்.

    வீட்டிற்குள் உள்ள பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

    பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர் என்று வீட்டிற்குள் நுழைபவர் தெரிந்த நபராகவே இருந்தாலும் அலர்ட்டா இருக்கவேண்டும்.

    அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கவேண்டும் என்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே சென்ற உடன் வீட்டிற்குள் உள்ள பொம்மை, நைட் லேம்ப், சுவர்க்கடிகாரம் என வீட்டில் இருக்கும் பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தால் அதை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

    அதேசமயம் அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும்.

    இது குறித்து பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், "இப்படியொரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை. விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்... பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது.

    "உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும்.

    பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம்.

    புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

    இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை.

    எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே... கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.

    சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதாரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம் .

    http://tamil.oneindia.in/news/2012/09/19/tamilnadu-women-filmed-using-spycams-bedrooms-bathrooms-161745.html

    ReplyDelete
  3. //இப்படி வளர்ந்தால் சின்ன சின்ன ஏமாற்றம் , வலிகள் , எதையும் யோசித்து செயல் படும் பக்குவம் ஏதும் வருவதில்லை. //

    உண்மைதான் ஜலீலா ..இந்த கால பிள்ளைகளுக்கு எல்லாமே கிடைத்து விடுகிறது எதற்கும் அவர்கள் பிரயாசைப்படுவதில்லை ..பெரும்பாலும் பெற்றோரே ஏட்டிக்கு போட்டியா விலையுயர்ந்த பொருட்ட்களை வாங்கி தருவதால் குழந்தைகளுக்கு சிறு ஏமாற்றம் கூட பின்னாளில் தாங்க முடியல ..அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் ..உடனே அங்கே சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவுகள் அறிமுகம்...
    எல்லாரும் பார்க்க வேண்டிய பதிவுகள்.

    ReplyDelete
  5. அனைவரும் தவறவிடாமல் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவுகளை தேடித் தொகுத்திருக்கிறீர்கள்...நன்றி!

    ReplyDelete
  6. அனைவருமே படித்து பயன் பெறவேண்டிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் !

    அழகிய முறையில் விரிவாக எழுதியமைக்கு நன்றிகள் மற்றும் இது போன்ற பகிர்வுகளை அடிக்கடி நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விடை பெறுகிறேன்.

    டீன் ஏஜ் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதையோ அல்லது கண்டிப்பதையோ தவிருங்கள் இதுவே அவர்களுக்கு அஸ்திவாரமாக ஆகிவிடும்.
    உங்கள் மீது பொறாமை கொள்வதற்கு.

    ReplyDelete
  9. தேவையான விழிப்புணர்வு பகிர்வு.
    தொடருங்கள் ஜலீலா.

    ReplyDelete
  10. உண்மையில் அருமையான பதிவு ஜலீலாக்கா.

    பெற்றோரில் அதிக பங்கு தங்கியிருக்கு... மிகுதியை விதியெனத்தான் விடவேண்டும்.

    எப்பவுமே பெற்றோர், தம் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு தோழனாக, தோழியாக இருக்கும் இடங்களில் பிரச்சனைகள் வருவது குறைவாக இருக்கிறது.

    வித்தியாசமான பதிவாகச் சொல்லியிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது போலாகும்.//

    அசத்தலான ஆரம்ப வரிகள். ;)))))

    ReplyDelete
  12. thanks for the useful links

    ReplyDelete
  13. //"பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது போலாகும்."//

    உண்மை தான்...மிக அருமையான பகிர்வு ....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  14. மிக அருமையான பதிவு...இன்றைய கால கட்டத்தில் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்ப்பது "கண்ணாடி டம்ளரை உடையாம பாதுகாப்பது" போலத்தான்...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  15. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பகிர்வு.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. நல்ல விழிப்புணர்வு பதிவுகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  18. குழந்தைகள் சம்பந்தமான விழிப்புணர்வுப் பதிவு தேவையான ஒன்று ஜலீலா.அருமை.

    ReplyDelete
  19. என் தளத்தை இங்கே அறிமுகபடுத்தியதுக்கு மகிழ்கிறேன்.

    நீங்க குறிப்பிட்ட அனைத்து பதிவுகளும் மிக பயன் உள்ளவை. அவசியம் அனைவரும் ஒருமுறை படிக்க வேண்டியவை.

    உங்களுக்கு என் நன்றிகள்



    ReplyDelete