Thursday, September 20, 2012

மசலா மிக்ஸ் கதம்பம்


       கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா
ஸ்பெஷல் அழைப்பு பதிவுலகத்தையே சிரிப்பு உலகத்தில் ஆழ்த்திய சித்ரா எங்கிருந்தாலும் வந்து மீண்டும் பதிவு போடுமாறு கேட்டு கொள்கிறேன்.


கடையில் பரிச்சயமான ஒரு நபர்"இப்போ எங்கே இருக்கீங்க?"
வெட்டி பேச்சின் பதில் : "அமெரிக்காவில தான்."
அவர்" அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே....."
வெட்டி பேச்சு : "ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க...."


நெல்லையில் எங்கள் தெருவில்ஒருவர்: "சித்ராஎன்ன லீவா?"வெட்டி பேச்சின் பதில்"லீவு ல்லைஒபாமா ஒரு முக்கியமான வேலைவிஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார்.அதான் வந்து இருக்கேன்



சும்மா தான் கூப்பிட்டேன்இன்று னக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லைசும்மாதான் இருந்தேன்சும்மா இருக்கோமே - சும்மாயாரையாவது கூப்பிட்டுசும்மா பேசலாமேன்னுசும்மா தோணுச்சு



************************************************************************
ஹாய் பதிவிலக தோழ தோழியர்களே 



மசாலா மிக்ஸ்  மாதிரி  எல்லாம் கலந்து பஃபே சாப்பாடு போல் சுவையுங்கள்.. 


***********

   
      1.  உண்மை சற்றே வெண்மை  

 ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!


முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும் என்றார்.


அவளும் சற்று நேரம் மனக்கணக்குப் போட்டு குழம்பி விட்டுஅவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சாசாமீ?”

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?


போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 


பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?




பணம் இன்று போகும் !  
நாளை வரும் !!




x=======x




திண்டுக்கல் தனபாலன். அனைவரின் பதிவுக்கும் தவராமல் சென்று ஊக்கு விக்கும் மனப்பாங்கு அனைவருக்கும் வராது
அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், மனதிலும் பதிந்து வைத்திருக்க வண்டிய கருத்துகள்... அதிலும் திருக்குறளுடன் கூறியுள்ளது 
சிந்திக வைக்கும்  சிந்தனையுடன் , திருக்குறளுடனும் நகைச்சுவையுடனும் அழகான முறையில் இவருடைய பதிவும்  அனைவருக்கும் எடுத்துரைக்கும் பாங்கு அழகானது . படித்த்தும் மனதில் பதியும் படி பயனுள்ள பதிவுகள்.

எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் இப்படி அசத்தலானதலைப்புகளுடன் உள்ள இவர் பதிவையும் பாருங்கள்


x======x






3 .இவங்க டிரங்குப் பெட்டிய ஓப்பன் செய்தால் ரகசியங்கள் எல்லாம் வெளியாகும் , இங்கு டிரங்குப்பெட்டி மேட்டர் ரொம்ப வெயிட்டாகவே இருக்கும். பல பயனுள்ள தகவல்களும் உள்ளன. அதுவும் இல்லாமல் கேன்ஸர் விழிப்புணர்வு பதிவு, மற்றும் அறிவியல் சார்ந்த பதிவுகள் , ஆன்மீக பதிவு பேபி மாதாஜி, நகைச்சுவைபதிவு , வீட்டு வாண்டுகளின் சுட்டிதனம் , விழிப்புணர்வு பதிவுகள், கதை, கட்டுரை   என எழுதிவருகிறார்.



x========x




4. இந்த பூஸார் எல்லாரையும் எப்படி கலாய்க்கிறாங்கன்னு வந்து பாருங்கள். 

ஒவ்வொருஇடத்திலும்அங்கொன்றும்இங்கொன்றுமாகப்பொறுக்கிஎடுத்துவந்து குலசாமி பின்லேடனுக்கு “குலசாமிக்குப்படைக்கிறேன்.இன்னும்பலரின்நகைச்சுவைப்பதிவுகள்மனதில்இருக்கு. 




எங்கிருக்கெனத்தேடிப்பிடிக்கஇன்னொருகிழமைபோய்விடும்..எனவே கிடைத்ததைமட்டும்போடுகிறேன்யாரும்குறைநினைத்திடாதீங்கோ
மக்கள்ஸ்ஸ்.



x=======x



கால்விரலைப் பார்ப்பதே
கஷ்டமென்று சொல்லும்படி,
மேலெழுந்து நிற்கின்ற
மத்தள வயிற்றினால்,





x=======x




6. வேலையில்லா பட்டதாரியின் வீட்டு குறிப்புகள்



வரவுக்கும் செலவுக்குமிடையில்
வட்டிக்கணக்குப் பார்த்தபடி
புட்டிக் கண்ணாடி வழியாகப்
பிள்ளைகளின் 
எதிர்காலத்தைத் தேடுபவர்...

சட்டென்று கோவப்பட்டாலும்
சம்சாரத்துக்கு முன்னால்
பெட்டிப்பாம்பு...


x=========x




7. உறவு  

அறுசுவை தோழி ஜே ஜே ஜே ஜே மாமி சைவ சமையலில் அசத்தல் மாமி, நீதிகதைகள் அருமையாக எழுதுவாங்க, இப்ப தான் புதியதாக பிளாக் ஆரம்பித்து இருக்காங்க அவங்க தளத்திலும் இணைந்து ஊக்குவியுங்கள்.உறவு பற்றின கதையை அருமையாக எழுதி இருக்காங்க பாருங்கள்.

பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறோம்.  அதற்கும் ஒரு படி மேலே போய் நடுத்தெருவில் விட்டுச் செல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.  நீங்கள் தினசரிகளில் படித்திருப்பீர்கள்.  அதன் விளைவுதான் இந்தக் கதை

x=======x



8. எல்லாரும் செல்ல பிராணிகளாகா நாய் குட்டி, பூனை குட்டி வளர்ப்பார்கள் என்றால் நியுசிலாந்து இமா டீச்சர் ஆமைவளர்ப்பு பதிவை பாருங்கள்.

ஆமை என்றாலே எல்லோரும் 
ஆமை புகுந்த வீடும் 
அமீனா புகுந்த வீடும்
உருப்படாது

என்ற  பழமொழி  சொல்வார்கள்

//ஆமை புகுந்த வீடும்...//  
 ஆமைக்கும் எனக்கும் 48 வருட பந்தம். அவற்றால் இமாவுக்கு எந்தக் குறையுமில்லை, மகிழ்ச்சி தவிர.///

x========x


காரினை எங்காவது பார்க்கிங்கில் விட்டுட்டு போய் இருக்கிறீங்களா?.பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது & இது என்ன கேள்வி என்று முறைக்கப்படாது.  இப்ப இது பற்றி தான் நான் சொல்லப்போகிறேன்.

ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே. சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது. அவர் காரைத் தான் கடத்தப்போகிறார் போல என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்
x=========x






10.எல்லாருக்குமே ஸ்லிம்மாக இருக்கனும் ,சிட்டு போல் இருக்கனும் என்று ஆசைதான் ஆனால் ஏதாவது உடற்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளனும் , எங்கே செய்ய முடியுது என்னேரமும் கணனி ,ஆபிஸ் , என்று அதிலேயே நேரம் அனைவருக்கும் போகிறது. ஏதாவது ஒரு உடற்பயிற்சி அன்றாட வாழ்வில் வழக்கத்தில் வைத்துகொண்டால் என்றுமே இளமை தான்


தொந்தி குறைய உடற்பயிற்சி ஈசியாக வீடியோவுடன் விளக்குகிறார் வந்து பாருங்கள்.

x=======x



11.  பனித்துளி சங்கர்
 கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசயம். ,கவிதைகள்,   அறிவியல் அதிசயங்கள். –, இன்று ஒரு தகவல்,வானவில்லின் அதிசயம் ,கெட்டு கெதர் நகைச்சுவை , இப்படி பல பதிவுகள் 


x=========x
  

12. விச்சு வின் கதம்ப கவிதைகள் 

 கர்ப்பத்திலிருக்கும்
குழந்தையும் 
ஹலோ! சொல்லும்
கர்ப்பமாக்கியவன் யாரென்று கேட்க?
தாய்ப்பாலில் 
தாய்மையில்லையென்று
நினைத்தோ என்னவோ?
புட்டிப்பால் அருந்தும்
மழலையும்
புளுடூத்தில்தான்
பாடல் கேட்கும்


x========x

.



13. பணத்துக்கும் பாசத்துக்கும் உள்ள சில முடியாதவர்களை ஹேமா அழகாக கவிதையாக வடித்து இருக்கிறார் பாருங்கள்










ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க


 (சிலபேர் பின்னூட்டங்கள் மனதில் என்றும் அழியாது அது போல் இந்த அந்நியனின் ஒரு பின்னூட்டம் எனக்கு இதுவரை மறந்ததே இல்லை, ஊரில் அவர் போட்ட இந்த கமெண்டை படிச்சிட்டு ஒரு குடும்பமே ஹொல்லுன்னு சிரி சிரி தான் போங்க)
அந்த லின்க் கிடைக்கல.


//அதே போல் முதல் முதல் எனக்கு தொடர்ந்து கமெண்ட் போட்டு வந்த நவாஸ் 

“ஊருக்கு போனதும் முதலில் பெட்டிய திறக்கிறேனோ இல்லையோ உங்கள் வெப்சைட்டை ஓப்பன் செய்து என் மனைவியிடம் காண்பிக்கனும் என்றார்.”///


***********




15 .வடிவேலு அமெரிக்காவுக்கு நம்ம மதுரை தமிழனிடம் வேலை கேட்டு வந்தா எப்ப்டி இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


// ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் யாருங்க மதுரை தமிழனா?????// ஐய்யோ போன எடுக்க மாட்டராரே பாஷை தெரியாத ஊரில் மாட்டிக்கிட்டோமே// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 


வடிவேல் : மதுரைத்தமிழனுக்கு போன் செய்து ரிங் டோன் போய் கொண்டிருப்பதை கேட்டதும் மனதுக்குள் நினைத்து கொண்டார்என்னடா இந்த மதுரைத்தமிழன் எப்ப போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்கிறான்பிள்ளையாரப்பா அவன் இந்த தடவை போன் எடுத்தால் உனக்கு ஒரு ஜெனரேட்டரும் ஒரு ஃபேனும் வாங்கிதரேன் என்று வேண்டிக் கொண்ட மறு நிமிடமே மதுரைத்தமிழன் போனை எடுத்தார்.

மதுரைத்தமிழன் : ஹலோ..ஹலோ..
வடிவேல் : ஹலோ..ஹலோ.. மதுரைத்தமிழனாதம்பி நல்லா இருக்கியப்பா...நாந்தான் வடிவேலு பேசுறேனப்பா...அப்பா தம்பி போனை வைச்சுடதப்பா...உன்னால எனக்கு ஒரு உதவி வேண்டுமப்பா...நாமெல்லாம் ஒரே ஊருக்காரன் என்பதால்தான் கேட்கிறேனப்பா நீ மட்டும் மாட்டேனு சொல்லிடாதப்பா.


16   . ருக்மனி அம்மாவின் பாட்டி சொல்லும் கதைகள்,
                 

65th தன் கையே தனக்குதவி, திருக்குறள் கதைகள், தெனாலிராமன் கதைகள்

இந்த காலத்தில் யாரு கதை சொல்கிறார்கள்.
என் பையன் எல்லாம் சின்ன வயதில்  இரவில் கதை சொன்னாதான் தூங்குவான்.
 கதை சொல்லி பிள்ளைகளை தூங்க வைப்பவர்களுக்கு ருக்மணி அம்மாவின் கதைகள் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.




17. எல்லாரும்மே தேடி தேடி படிபப்து உடல் குறைய டிப்ஸ் தான் ... இவர் சொல்லும் டிப்ஸையும் கேட்டுக்கோங்கோ 





18. உங்களுக்கு முடி உதிர்கிறதா...? தலை வழுக்கையாகிறதா....? முடி அடர்த்தியே இல்லாமல் காணப்படுகிறதா...? அல்லது தலையில் முடியே இல்லையா....?






ஹாய் ஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்..ஆங்...படிங்கங்கோ... ஓஒ ஓ 



19.பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ஏன் உருவாக்கப்பட்டது(அததாண்டா நாங்களும் கேக்குறோம் ஏண்டா இந்த ப்ளாக் உருவாக்குனீங்க ?). அதில் மெம்பராக(ஆமா பெரிய ப்ளூ கிராஸ், லயன்ஸ் கிளப் மெம்பெரு, வந்துட்டானுக) இருக்கும் சிங்கக்குட்டிகளின் விவரம்(அ விட்டுடீங்க ஆப்பீசர்ஸ்) இதையெல்லாம் கேட்டு தினமும் கோடிக்கணக்கான் ஈமெயில் எங்களுக்கு வந்துக்கிட்டு இருக்கு.(அத்தனை பயலுகளையும் தேடி வந்து உதைக்க போறானுக)



20.சங்கவியின் பயனுள்ள அஞ்சறைப்பெட்டி விஷியங்கள் 
தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் புழக்கத்தில் இருக்கும் சாதாரணமான வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில்    பெரும்பாலானவை அவர்களின் காதுகளை செவிடாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. 




வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!



21. .சாட்டை அடி  கவிதைகள் உணர்வுகளின் ஓசையாய் எளிமையான நடையில் ஊரெங்கும் நீரோடையாய் ஓடி கொண்டு இருக்கும் அப்பாவை விட ஒரு படி மேலே
இது மட்டுமா , தையல், ருசியோ ருசி என அசத்தும் தோழி இவங்க


*******************


என்ன மசாலா மிக்ஸ் சுவையாக இருந்ததா?

இனிவேறொரு பல்சுவையுடன் நாளை சந்திக்கலாம்.

வர்டா 

இப்படிக்கு 
ஜலீலாகமால்

26 comments:

  1. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மசாலா மிக்ஸ் நல்லாயிருக்கு ஜலீலா,பகிர்ந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மசாலா மிக்ஸ் கம கமன்னு இருக்கு அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அறிமுகமான வலைத்தளங்களுக்கும் அவைகளை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. மசாலா மிக்ஸ் நன்றாக சுவைக்கின்றது.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மசாலா மிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது.
    எவ்வளவு பேரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிறப்பான தளங்கள்! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி... இன்று தான் வலைச்சரத்தில் முந்தைய இருபதிவுகளையும் பார்க்க முடிந்தது... (கரண்ட் கட் அதிகம்)

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  9. கலக்கல் அக்கா

    ReplyDelete
  10. பதிவர்கள் அறிமுகம் சுவாரசியமாக இருந்தது...

    வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா...

    ReplyDelete
  11. ஜலீலா எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி.

    மசாலா மிக்ஸ் அருமை

    ReplyDelete
  12. Jalee super introudctions. Everything looks great. Go ahead. I will come again.

    ReplyDelete
  13. அருமையான அறிமுகங்கள் அக்கா...
    அறிமுகம் செய்தி விதம் அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  14. இப்போது தான் யதேச்சையாகப் பார்த்தேன் ஜலீலா! வலைச்சர ஆசிரியரானதற்கு என் வாழ்த்துக்கள்! அழகாக எழுதி வ‌ருகிறீர்கள்!!

    ReplyDelete
  15. கலக்கிட்டிங்க ஜல் அக்கா. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மியாவும் நன்றி, இதன் முலம் எனக்கு ஒரு புதிய உறவு கிடைச்சிருக்கு. தொடருங்கோ.

    ReplyDelete
  16. மசாலா மிக்ஸ் வெகு அருமை.
    பாராட்டுக்கள்.
    ===============

    என்னை கோபு மாமா என்று ஆசையுடன் அழைத்து வந்த நம் சித்ரா எங்கே ???????

    சித்ரா நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!!

    - அன்புடன் உங்கள் கோபு மாமா.
    ==============

    இன்றைய முதன்முதல் அறிமுகமாக என்னையும் என் மூன்று படைப்புகளான

    [1] உண்மை சற்றே வெண்மை
    [2] ஏமாற்றாதே!! ஏமாறாதே!!
    [3] பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா!

    ஆகியவற்றையும் அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ==========

    இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்துப்படைப்பாளிகளுக்கும் என் மனாமர்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    வை. கோபாலகிருஷ்ணன் [VGK]

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு அன்பு வாழ்த்துகள் ஜலீலா... கோபு அண்ணா சொல்லி தான் வந்து பார்த்தேன்.... மசாலா மிக்ஸ் ரொம்ப அருமைப்பா... அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்....

    ரசிக்கவைத்த பகிர்வுகள்....

    ReplyDelete
  18. பகிர்வுகள் அருமை ஜலீலா.:)

    ReplyDelete
  19. நன்றி
    மிக சிறப்பான தளங்களை அறிமுகபடுத்தியதற்கு

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியருக்கு , வாழ்த்துக்கள்!
    என்னையும் மறக்காமல் அறிமுகப்படுத்திய தங்களின் அன்பையும் ஆதரவையும் கண்டு நெகிழ்ந்தேன்,. மிக்க நன்றி.
    நேரம் இன்மை காரணமாகத்தான் , பதிவுகள் இட இயலவில்லை.

    ReplyDelete
  21. அக்கா, பதிவுகளை விடாமல் தொடர்ந்து ரீடரில் படித்து வருகிறேன். விருந்தினர் வருகை, வார இறுதியால் உடன் கமெண்ட் எழுதமுடியலை.

    இன்றைய இடுகையில்தான் எத்தனை பதிவுகள்? ஏயப்பா!! அத்தனையும் படிக்கவே எவ்ளோ நேரம் ஆகும்!! அப்படின்னா, இது அத்தனையும் தேடிக் கண்டுபிடிச்சு, (அதில் நானும்.. :-))) ) லிங்குகள் கொடுத்து, அழகா எழுதணும்னா எவ்வளவு சிரமம் எடுத்திருப்பீங்க!! வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  22. ஜலீலாக்கா,

    உங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் தாண்டியும் இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்குதோ??? ஹி ஹி ஹி.... என்னால நீங்க குறிப்பிட்ட பதிவுக்கெல்லாம் போக இன்னும் நேரம் கிடைக்கல. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்க்றப்ப படிச்சு, எங்க ஜலீலாக்காதேன் உங்களை பத்தி சொன்னாங்கன்னு சொல்லிடுறேன் :)

    ஹ்ம்ம்.... மசாலா மிக்ஸ் நல்லாத்தேன் இருக்கு.... புளிப்பு மட்டும்தான் மிஸ்ஸிங்... :)) எல்லாமே ஸ்பைசியா கோர்த்திருக்கீங்க... வெல் டன் :)))

    ReplyDelete


  23. ஜலீலா மேடம், மசாலா மிக்ஸ் அருமை, எனது பதிவை படித்தது அல்லாமலும் எனது தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. வலைதளத்தில் பதிவுகல் இடுவது என்பது மிக எளிது ஆனால் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்து ஒவ்வோரு நாளும் பலரை அறிமுகப்படுத்தி பதிவு இடுவது என்பது மிக கடினம். அதையும் நீங்கள் மிக அழகாக செய்திருக்கிறிர்கள் என்பதை நினைக்கும் போது மனம் மகிழ்கிறது. உங்களது முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன். என்றென்றும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  24. ஆஹா! கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க

    மசாலா வாசம் மிக அருமை

    ReplyDelete
  25. ஒரு நீண்ட விடுமுறையில் இருந்தேன். அதனால்தான் வரத் தாமதம் ஜலீ. வலைச்சரத்துக்கும் என்னை அறிமுகம் செய்த உங்கள் அன்புக்கும் என் நன்றி.

    இவ் இடுகையில் அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete