Friday, September 21, 2012

அட்டகாசமான அடுப்படிகள்


அட்டகாசமான அடுப்படிகள்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் தான் அன்றாட வேலைகளை சரிவர செய்யமுடியும்.ருசியான சமையலை செய்வதற்கு நல்ல ஒரு கைப்பக்குமும், ஆர்வமும் தேவை.

வாங்க நம் தோழிகளின் வித விதமான அடுப்படிகளுக்கு சென்று வலம் வரலாம்.





கல்யாணசமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் 

http://www.youtube.com/watch?v=tDBEDNyhbSchttp://www.youtube.com/watch?v=tDBEDNyhbSc









மைக்ரோ வேவ் மில்க் பேடா
 , விஜிஸ் வெஜ் கிச்சன் சுலபமாக மைக்ரோவேவில் மில்க் பேடா செய்வது எப்படி? வெஜ் சமையலில் அசத்தும் விஜி நல்ல பாட்டு டீச்சரும் கூட...

**************************************



ரசிக்க ருசிக்க கத்திரிக்காய் வத்தகுழம்பு.. தயிர்சாதத்துக்கு தொட்டு சாப்பிட்டா தேன் போல் அமோகமாக இருக்கும்



*******************************


மகியின் சுண்டக்காய் வத்த குழம்பு ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இங்குவரை கம கம ந்னு இருக்கு.
வயிற்று வலி மற்றும் வயிற்று பூச்சிக்கு மிகவும் நல்லது.



***************************



வெயிலுக்கேற்ற ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் எப்படி செய்யலாம் வாங்க சுவையாக சொல்லி தராஙக் காஞ்சனா.

****************************************


ஓட்ஸ் கீரை கொழுக்கட்டை டயட் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதை எப்படி செய்வது சுலப முறையில் மேனகா சொல்லி தராங்க..


*****************************


அம்மு இவங்க சமையல் செய்வதை விட அதை அழகாக அலங்கரித்து பரிமாறுவதில் கெட்டி. வாங்க சுவைக்கலாம் பேசில் ப்ரைட் ரைஸ் என்ன ஆச்சுன்னு தெரியல ரொம்ப நாளா ஆளையே கானும்.


***************************



ஓவ்வொரு குறிப்பு போடும் போதும் அதை விளக்கமான பதிவாகா போடுவது மாதேவியின் தனிச்சிறப்பு..


*************************



ஹரா பர்ரா டெரர் கபாப் எப்படி செய்யலாம் வாங்க கொஞ்சம் நகைசுவையோடு படிச்சிட்டே செய்யலாம்


***************************








வெந்தய கீரை சாம்பார் விஜி பார்த்திபனில் மருத்துவ குணமுள்ள சாம்பார் சுவைத்து மகிழுங்கள்

****************************


இப்போதெல்லாம் ஆரோக்கியம் வேண்டி எல்லோரும் டயட் சமையலை நாடுகின்றனர், மசால் வடை பிடிக்கதவர்களே கிடையாது அதை பேக் செய்து பயன் படுத்தினால் வடையாகவும் சாப்பிடலாம் , பருப்பு உசிலிக்கும் ஆச்சு, வட கறிசெய்யவும் ஆச்சு

******************************


நோகாம நோன்பு கும்மிடுவது எப்படி சாரி நோகாம வடை சுடுவது எப்படி
வாங்க , ஈசியா வடை சுட்டு சாப்பிடலாம்.
அட ரொம்ப ஈசியாக இருக்கே....

****************************


ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது. தேவையான அளவு அரைத்து ஜிப் லாக்கில் போட்டு freeze செய்தால் கண்டிப்பாய் ஆறு மாதம் வரை வரும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போட்டு, நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றிக் கொண்டு, (விரலை சுட்டுக்கொள்ளாமல்) கலந்து சாப்பிட்டால், வயிற்றுக்கு நல்லது. ஜுரத்தால் அல்லது நீண்ட விமான/ரயில் பயணத்தால், வாயில் கசப்பான உணர்வு இருக்குமே, அப்போது சாப்பாடு எதுவும் வாய்க்கு ருசிக்காது. இந்த பொடிசாதம் அப்போது அருமையாக இருக்கும்.


******************************************************************************************************************

சுதாகர் சாரின் அடுப்படியையும் அப்படி எட்டி பார்த்துக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு குறிப்பு கொடுத்தமாதிரியும் ஆச்சு.



பாகற்காய் பிட்லை 


சுவையான சமையலை நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார் பித்தனின் வாக்கு.  நகைச்சுவையுடன் பதிவுகளை வாரி வழங்கி, மற்றவர்கள் பதிவுகளுக்கும் தவறாமல் பின்னுட்டம் இடுபவர்.

( காணமல் போன பதிவர்களில் இவரும் ஒருவர்)

******************************************************************


சுடு தண்ணீர் நல்ல வைக்க தெரிந்தால் தான் சமையலே செய்யமுடியும்.
வாங்க எப்படி வைப்பதுன்னு பார்க்கலாம். 
நீங்களும் சமைக்கலாம் 


 இன்றைய நீங்களும் சமைக்கலாம் பகுதியில்சுடுதண்ணீர் வைப்பது எப்படின்னு பாக்கலாம். சுடுதண்ணீர் வைக்கிறதுக்கு முன்னே யாருக்கு அது குடிக்கவா இல்ல குளிக்கவா, எத்தனை பேருக்கு , சூடு சொரனை ஆளுக்கு எத்தனைன்னு ஒரு பிளான் பண்ணிக்கோங்க. .
( காணமல் போன பதிவர்களில் இவரும் ஒருவர்)

திங்க திங்க ஆசை 


http://youtu.be/JROigL20fwA


*********************************************************************************************************





ஒரே சைவமா இருக்கே என்ன வீடு மாறி வந்துட்டோமோன்னு யோசிக்கிறீங்களா ? நாக்கு  சிக்கன், மட்டன் , மீன்  கேட்குதா??/


அடுத்து வருவது ஒரு பெரிய விருந்து


சுவையான ருசியான மீன் பிரியாணி 
எல்லா பிரியாணியும் ஈசியாக செய்துடலாம் ஆனால் மீன் பிரியாணி மட்டும் ரொம்ப பக்குவமாக செய்யனும். ருசியும் அபாரமாக இருக்கும்.

பிரியாணி பல வகையாக செய்யலாம் என்பது நாம் அறிந்ததே! இதில் மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்பதால்,அவசரமில்லாமல் சமைக்கும் நேரங்களில் செய்வதே நல்லது. இதை முறையாக செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்


மரவள்ளிகிழங்கு கேக்
அருமையா செய்து இருக்காங்க அஸ்மா சுவைத்து மகிழுங்கள்


*********************************


பிரியாணி நாஸியா, பிளாக் பெயர் பிரியாணின்னு வைத்ததும் நாங்களும் வாரா வாரம் வித விதமா சட்டி சட்டியாக பிரியாணி வந்து இறங்கும் என நினைத்து ஏமாந்தே போனோம்.
கடைசியில் தக்குடி ஒன்னு செய்தாங்க ரொம்ப ஈசியா செய்யும் முறையில் சொல்லி கொடுத்து இருகாங்க..


***********************************



சிக்கன் லேயர் பிரியாணியுடன் பிரியாணிக்காக டிப்ஸுடன் பகிர்ந்து இருக்க்காங்க சமையல் எக்ஸ்ப்ரஸ்


************************************




காயல் ஸ்பெஷல் இறால் மஞ்சள் வாடா செய்வது கொஞ்சம் சிரமம் ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.சமையல் மட்டும் இல்லை தையல் , அழகு குறிப்பு மருதாணி டிசைன் போடுவது எல்லாம் இங்குபல்சுவை.


*********************





நீரோடையுடன் , தையல், கதை கவிதை மட்டும் இல்லாமல் சமையலிலும் தூள் கிளப்புறாங்கோ பாருங்க....
அரபி சாப்பாடு கப்ஸா ரைஸ் எந்த மசாலாவும் கிடையாது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

***********************************


வஞ்சரம் மீன் ஃப்ரை 


தேனக்காவின் வஞ்சரம் சும்மா சும்மான்னு சொல்லியே நிறைய எழுதி இருக்காங்க அசத்தலான செட்டிநாடு சமையலுடன்.. சுவைத்து மகிழுங்கள்.

என்ன அடுப்படியில் பூனை வந்து விட்டதேன்னு பார்த்தீங்களா ?

அது ஒன்றுமில்லை தேனக்கா பொரித்து வைத்த மீன பார்த்து வாசனையில் உள்ளே நுழைந்துவிட்டது.


*********************************


அலிகார் பிரியாணி
அன்னுவின் அலிகார் பிரியாணி வித்தியாசமான நறுமணம் கொண்ட பிரியாணி

*******************************
நீலகிரி மட்டன் பிரியாணி


சில பேருக்கு தக்காளி சேர்த்தால் அலர்ஜி ஆகும்,
தக்காளி இல்லாமல் செய்பவர்களுக்கு இது உதவும்.

********************************

இதோடு என்னுடைய சென்னை சிக்கன் பிரியாணி இதை பார்க்கவேண்டமா??

ஜிங்கா தயிர் பிரியாணி

சென்னை சிக்கன் பிரியாணி


Chennai Chicken Biriyani




சமையல் செய்யும் போது எங்கோ கவனத்தை சிதர விட்டு கொண்டு சமைக்காதீர்கள். செல் போன் வந்ததில் இருந்து ஒரு காதில் போனும் சமையலுமாக தான் சில பேர் இருக்கிறார்கள். 
இதனால் அடிப்பிடிப்பது , உப்பு காரம் போட்டோமா என்று மறந்து போவது. ஏனோ தானோன்னு சமைப்பது. இதனால் பல அதிர்சி தரும் அபாயங்கள் ஏற்படுகின்றன.
சமைக்கும் போது நைலான் துணி வகைகளை அணிந்து கொண்டு சமைக்காதீர்கள். 
வீடுகட்டும் போது நம்மூரில் நகர்புறங்களில் சமையலறைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து கட்டுவதில்லை.அந்த காலத்து சமையலறைகள் நல்ல பெருசாகவும் காற்றோட்டமாகமும் இருந்ததால் தான் அதிக நோய்கள்,  யாரையும் தாக்கவில்லை. இப்ப உள்ள  சமையலறைகள் ரொம்ப இடுக்கம் பிடிச்ச் மாதிரி ஒரு திண்டு , இரண்டு ஷெல்ப் வைத்து முடித்து விடுகிறார்கள். போதிய காற்றோட்டமும் கிடையாது. புகை உள்ளே சுற்றி கொண்டு வருவதால் தான் பெண்களுக்கு வீசிங், தொடர் இருமல் ,கை கால் சூடு படுதல் எல்லாம் ஏற்படுவது. 



வெளிநாடுகளில் சில இடங்களில் நல்ல வசதியான சமையலறைகள் உண்டு.
ஆகையால் வீட்டில் பெண்கள் நல்ல இருந்தால் தான் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நலமே..

மேலும் மற்ற வேறு ஒரு நல்ல அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

அறிமுகப்படுத்த நிறைய பேர் இருக்கிறார்கள் எல்லாரையும் அறிமுகப்படுத்தனும் என்றுஆசை தான் என் கண்ணில் தென்பட்டவரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.

யாரும் குறை நினைத்திட வேண்டாம், என்ன ஏன் இன்று பதிவு போட இவ்வளவு லேட்டுன்னு கேட்கிறீங்களா?

என்ன செய்வது எல்லா அடுப்படியும் போய் ருசித்து எடுத்து வருவதற்குள் நேரம் ஆகிவிட்டது.


இப்படிக்கு
 ஜலீலாகமால்.

27 comments:

  1. ஒவ்வொரு அடுப்படியாக சென்று ருசித்து வந்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி ஜலீலா.

    ReplyDelete
  2. ஜலீலா இது நம்ம ஏரியா ஆச்சே. எல்லாரும் தாராளமா உள்ளே வரலாம் இல்லியா.

    ReplyDelete
  3. அனைத்தும் கம கம மணக்கும் அறிமுகங்கள் ...
    அந்த யூ டியூப் பாட்டு சூப்பரோ சூப்பர் ...:)))

    ReplyDelete
  4. படங்களே சாப்பிட தூண்டுகிறது.. அருமை

    ReplyDelete
  5. அடுக்களையில் ஆரம்பித்த அறிமுகம் அபாரம் சாப்பாடு சாப்பாடு வயிற்றைக் கிள்ளுகின்றதே மிகவும் அருமையான
    அறிமுகங்கள் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் அறிமுகமான
    வலைத்தளங்களுக்கும் .

    ReplyDelete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜலீலாக்கா.. முதலாவதும் கடசியுமா எங்கட கிச்சின் படத்தைப் போட்டதுக்கு நான் இப்பவே பிரித்தானிய நீதிமன்றத்தில சூ பண்ணப்போறேன்ன்ன்ன்:))...

    சே..சே... அதில என் பெயரைப் போடாமல் விட்டது என் தப்புத்தான்ன்ன்..

    இன்று கலக்கல் பதிவாக இருக்கே ஜலீலாக்கா.. இருங்க ஒண்ணொண்ணாப் பார்க்கிறேன்ன்.. கொஞ்சம் பொறுத்து வந்து.

    ReplyDelete
    Replies
    1. என்னையும் சமையல் பதிவரா போட்டதுக்கு அங்கேயே ஒரு பெட்டிஷனை போடுங்க ஹி..ஹி....

      Delete
  7. அனைத்துமே ருசியான சமையல்.நல்ல பகிர்வுகள்.

    ReplyDelete
  8. எத்தனை எத்தனை அறிமுகங்கள்... உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ஐந்து தளங்கள் புதியவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    இனிமேல் எந்த தளத்தையும் பார்க்க முடியாது... பசிக்குதுங்க... ஹா... ஹா...

    ReplyDelete
  9. எவ்வ்வ்வ்வ்வ்ளோ குறிப்புகள்...

    என்னையும் குறிப்பிட்டதுக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  10. //வெளிநாடுகளில் சில இடங்களில் நல்ல வசதியான சமையலறைகள் உண்டு.
    //
    Aana avangalam samikathan mattanga, 90% frozen food than, atha soodu panna mattum than kitchen.

    ReplyDelete
  11. அருமையான அடுப்படிகள் :-))

    ReplyDelete
  12. //ஒரு காதில் போனும் சமையலுமாக தான் //

    ஹி.. ஹி... எனக்கு சமையல்னாலே போரடிக்கும். அதனாலே யாருகிட்டயாவது பேசிகிட்டேதான் சமைக்கீறது. உப்பு, காரமெல்லாம் எப்படிப் போட்டாலும் அதேதான்...

    ReplyDelete
  13. அனைத்தும் சுவையாக இருக்கிறது. என் பகிர்வையும் அறிமுகம்படியதற்கு நன்றி

    ReplyDelete
  14. மிகவும் அருமையான அடுப்படிகள்...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  15. அனைத்தும் சுவையாக இருக்கிறது. என் பகிர்வையும் அறிமுகம்படியதற்கு நன்றி ஜலீலாக்கா..

    ReplyDelete
  16. உண்மையில் அட்டகாசம் பண்ணுறீங்க ஜலி

    ReplyDelete
  17. அனைத்து பதிவுகளும் ருசியாக இருக்கு...என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றிக்கா!!

    ReplyDelete
  18. ஆஹா... அட்டகாசமான அடுப்படிகள் அசத்துகின்றன! அதில் என்னுடைய அடுப்படியுமா..? :):):) ரொம்ப நன்றி ஜலீ..க்கா!

    அறிமுகத்தில் சிலரின் தளங்கள் எனக்கு புதியவை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் போய்ப் பார்க்கிறேன்.

    சீனு ஐயாவுக்கும் நன்றிகள்! :)

    ReplyDelete
  19. அருமையான் அடுப்படிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு அருமையான அடுப்படிகளை பார்க்க அழைத்து சென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. யப்பா.. எவ்வளவு சமையல் ராணிகள்.. பார்க்கவே கண் கொள்ளல. ஜலீலா அதுல என்னோட மீன் ஃப்ரையையும் போட்டதுக்கு நன்றி. ஒரு வாரமாகுமே இத்தன ப்லாகும் படிக்க..:)

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ஜலீலா, ஒரு பக்கம் உங்கள் ‘சமையல் அட்டகாசங்கள்’, மற்றொரு பக்கம் மத்தவங்களின் அட்டகாச சமையல் அறிமுகம்.
    பெண் பதிவர்களின் தலைவி ஜலீலா வாழ்க!

    ReplyDelete
  23. ஜலீ நன்றி. என் வலை தளமும் இங்கு அறிவித்திருப்பது.
    உங்களுக்கு தெரியும் நான் இப்ப தான் வந்து பதிவு போட முடிந்தது. இந்த வருடமே எங்களுக்கு ஒரு சோகமாகவே இருக்கிறது. அப்ப இழப்பு, பின் மாமியார் ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு அதில் இருந்து இன்னும் மீளவில்லை. உங்களை யாராலும் எட்ட முடியாது. யூ ஆர் தி க்ரேட்.

    ReplyDelete