Sunday, October 7, 2012

அன்புச் சகோதரி  மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்புச் சகோதரி ரஞ்சனி நாராயணன் பொறுப்பேற்கிறார் 

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி மஞ்சுபாஷினி - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும், கடும் உழைப்புடனும், பொறுப்புடனும், மன நிறைவுடனும் நிறைவேற்றிய பின்னர் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வலைச்சரத்தில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இவர் 56 பதிவர்களையும் அவர்களது 295 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி சாதனை செய்திருக்கிறார். அவர் பொறுப்பேற்கும் முன்னர் பயந்து பயந்து பல முறை “சாட்” டிலும் - அலைபேசியிலும் அழைத்து ஐயங்களை தெளிவு படுத்திக் கொண்டார். பதிவுகளை எழுதி எனக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டிருக்கிறார்.  நானும் இவர் எப்படி எழுதுவாரோ என நினைத்துக் கொண்டிருக்கும் போது தூள் கிளப்பி விட்டார். 

அத்த்னை அறிமுகங்களும் பதிவர்கள் படங்களுடன் அழகான விளக்கங்களுடன் வெளியாயின. அன்பு, அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம் மற்றும் நட்பு என்னும் தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டிருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ இதுவரை 422. 

அருமை நண்பர் வை.கோ வின் 312 பதிவுகளையும் படித்து அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்து 95 பதிவுகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த அறிமுகத்துடன் வெளியிட்டு இருக்கிறார். 

மிக குறுகிய காலத்தில் இவ்வளவு பதிவுகளைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்த வேண்டுமெனில் எவ்வளவு பதிவுகளைப் படித்திருப்பார் - அவற்றில் இருந்து சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்திய விதம் நன்று.

சகோதரி மஞ்சுபாஷினியினை வாழ்த்தி விடை கொடுப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் மற்றுமொரு மூத்த பதிவர் - சகோதரி ரஞ்சனி நாராயணன். இவர் ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, தற்போது பெங்களூரில் வசிக்கிறார். நடுவில் பல அவதாரங்கள்: மகளாகி, அக்காவாகி, தங்கையாகி, மனைவியாகி, மாட்டுப் பெண்ணாகி, அம்மாவாகி, ஆசிரியையாகி, பாட்டியாகி சிறு தொழில் முனைவர் ஆகி, எழுத்தாளியாகி....தற்போது வலைப்பதிவில் ஒரு சக வலைப்பதிவாளியாக உங்களில் ஒருத்தியாக வந்து நிற்கிறார். 


இவர் படித்தவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு,  புத்தகத்திலோ, செய்தித் தாள்களிலோ படிக்கும் விழிப்புணர்வுக் கட்டுரைகளை தமிழில் எழுதுவது யாருக்காவது எங்கேயாவது இருக்கும் ஒருவருக்குப் பயன்படும் என்று எழுதுகிறார்.

எத்தனை சுவை இருந்தாலும் நகைச்சுவை இல்லையானால் வாழ்க்கை ரசிக்காது என்பதால் அதை எழுத்துக்களிலும் கடைப் பிடிக்கிறார். 

இவர் 
http://ranjaninarayanan.wordpress.com

 என்னும் தளத்தில் எழுதி வருகிறார்.  

சகோதரி ரஞ்சனி நாராயணனை வர்வேற்று - வாழ்த்தி - ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி 

நல்வாழ்த்துகள் ரஞ்சனி நாராயணன் 

நட்புடன் சீனா 

33 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சிலகாலமாக வலைச்சரத்தை-
    பின் தொடர முடியவில்லை-
    வேலையின் பழுவினால்-
    இனி தொடர முயற்சிக்கிறேன்!

    மஞ்சு அவர்களுக்கும்-
    வரவிருக்கும் ரஞ்சனி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பாராட்டுகள் மஞ்சுபாஷிணி ஜி!

    வாழ்த்துகள் ரஞ்சனிம்மா.... அசத்தலான வாரம் ஆக இருக்கப்போகிறது இந்த வார வலைச்சரம்....

    ReplyDelete
  4. தம் பணியைச் செம்மையாகச் செய்த சகோதரி மஞ்சுபாஷினி அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

    ReplyDelete
  5. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. ரஞ்சனி அம்மா வாழ்த்துக்கள் உங்களுக்கு... வருக வருக, வலைச் சரத்திலே, வாரம் வரம் தாருங்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு சீனு!

    நன்றி திரு வெங்கட்!

    ReplyDelete
  8. இன்றுடன்
    முடியும்
    வாரத்தின்
    வலைச்சர
    ஆசிரியர்ப்
    பொறுப்பினை
    மிகச்சிறப்பாகச்
    செய்துவிட்டு
    நம்
    அனைவரும்
    மனதிலும்
    அன்பென்னும்
    விதைகளைத்
    தூவிவிட்டு
    வலைச்சரத்தின் பொறுப்புக்களிலிருந்து
    வெளியேறும்
    அன்புத்தங்கை

    ம ஞ் சு வு க் கு ம்


    நாளைமுதல்
    புதிய
    வலைச்சர
    ஆசிரியராகப்
    பொறுப்பேற்க
    உள்ள
    பன்முகத்திறமையாளரான
    அன்புச் சகோதரி

    ர ஞ் சு வு க் கு ம்

    என்
    மனமார்ந்த
    பாராட்டுக்களையும்
    இனிய
    நல்வாழ்த்துக்களும்
    கூறிக்கொள்கிறேன்.


    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  9. நன்றி முனைவர் திரு இரா.குணசீலன் அவர்களே!

    ReplyDelete
  10. வாங்கோ வை.கோ. ஸார்!
    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. நன்றி செழியன்!

    ReplyDelete
  12. பன்முகத்திறமையாளரான

    திருமதி ரஞ்ச்னி நாராயணன்

    அவர்களே

    வருக! வருக!! வருக !!!

    எனத்தங்களை வரவேற்பதில் பெரும்

    மகிழ்ச்சி கொள்கிறேன்.

    தாங்கள் வலைச்சர ஆசிரியராகப்

    பொறுப்பேற்க உள்ள நாளை முதல்

    துவங்கும் வாரம் வெற்றிகரமாகவும்

    மிகச்சிறப்பாகவும் அமைய என் நல்

    வாழ்த்துகள்.


    நாளைய பதிவினில் சந்திப்போம்.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் எழுத்துக்களைப் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
    உங்கள் அன்புள்ள மாட்டுப்பெண்
    ஐஸ்வர்யா மாதவ்

    ReplyDelete
  14. நன்றி மாட்டுப்பெண்ணே!

    ReplyDelete
  15. வணக்கம் ரஞ்சனியம்மா.

    வலைச்சரம் வலைப்பூவை பார்தேன் இன்று நீங்கள்ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
    உலகின் எல்லாப் பாகங்களிலும் தமிழில் வலைப்பூவை பதிவுசெய்யும் படைப்பாளிகளை இனங்கண்டு.அதிலும் மிகசிறந்த வலைப்பூவை நீங்கள் அறிமுகம் செய்து வவைக்கின்றிர்கள் மிக்க நன்றியம்மா.இதன் மூலம் ஒவ்வெரு படைப்பாளிக்கும் அவர்களி மனதில் இன்னும் படைப்புக்களை படைக்க வேண்டும் என்ற மன உறுதி வலுப்பெறும் இந்த வாரம் மிகலகலகலப்பாத்தான் இருக்கும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. தங்கள் பணியை சிறப்புடன் செய்தவர்க்கும், சிறப்புடன் செய்யப் போகும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. மனம் நிறைந்த அன்புநன்றிகள் சீனா அண்ணா.. நீங்கள் சொன்னது உண்மையே... மிகவும் பயந்து என்னால் செய்யமுடியுமா என்று இருந்தேன். ஆனால் வை.கோ அண்ணாவும் நீங்களும் தந்த ஊக்கம் ஏனைய அன்பு உள்ளங்களும் என்னை எழுத வைத்தீர்கள்....

    அனைவருக்கும் மனம் கனிந்த அன்பு நன்றிகள் மீண்டுமொருமுறை...

    ரஞ்சும்மாவின் எழுத்தைக்காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ஆசிரியர் பொறுப்பேற்கும் ரஞ்சும்மாவிற்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகளுடன் வரவேற்கிறேன் அம்மா...

    சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியாற்ற வாருங்கள் வாருங்கள் என்று அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  18. மஞ்சு சுபாஷினி,
    ரஞ்சனி
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மஞ்சும்மாவின் இனிய வாரம் கடக்கிறது.
    நல்ல வாரத்திற்கு நன்றி.
    ஓ! சகோதரி ரஞ்சனி நாராயணனா!...அறிமுகமானவர் தான்!..
    வாங்கோ!...வாங்கோ!..சகோதரி. வந்து கலக்குங்கள்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. //இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி மஞ்சுபாஷினி உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    வலைச்சரத்தில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இவர் 56 பதிவர்களையும் அவர்களது 295 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி சாதனை செய்திருக்கிறார்.

    ஏழு பதிவுகள் இட்டிருக்கிறார்.

    பெற்ற மறுமொழிகளோ இதுவரை 422. //

    அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு

    என் அன்பான வணக்கங்கள் ,

    தங்களின் மேற்படி அறிவிப்பை அடியேன் அப்படியே முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன், ஐயா.

    நான் இதுவரை தங்களிடம் 15 பெண்மணிகளை வலைச்சர ஆசிரியராக நியமிக்குமாறு பரிந்துரை செய்துள்ளேன்.

    தாங்களும் அதுபோல நான் பரிந்துரைத்த 15 பெண்மணிகளுக்கும் வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.

    அனைவருமே மிகச் சிறப்பாக தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியை நிறைவேற்றியுள்ளார்கள்.

    அதுபோல என் அன்புத்தங்கை மஞ்சுவும் சமீபத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்கள்.

    //இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இவர் 56 பதிவர்களையும் அவர்களது 295 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி சாதனை செய்திருக்கிறார். //

    என்ற தங்கள் கருத்தினைப் படித்ததும் நான் நேற்று இரவு தூங்காமல் ஒரு சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன், ஐயா.

    அதன்படி, நான் முதன்முதலாக தங்களிடம் பரிந்துரை செய்து, தாங்களும் வலைச்சர ஆசிரியராக 20.06.2011 முதல் 26.06.2011 வரை வாய்ப்பளித்துக் கொடுத்த பெண் பதிவராகிய

    திருமதி இராஜராஜேஸ்வரி [வலைத்தளம்: “மணிராஜ்”] அவர்களின் சாதனைகளையும், சமீபத்திய வலைச்சர ஆசிரியரான என் அன்புத்தங்கை மஞ்சுவின் சாதனைகளையும் ஓரளவு நான் ஒப்பிட்டுப் பார்த்தேன் ஐயா.

    நம் மஞ்சு அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள பதிவுகளின் எண்ணிக்கையும், வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை சற்றே அதிகம் தான் ஐயா.

    நானும் ஒப்புக்கொள்கிறேன்.

    இருப்பினும் நம் மஞ்சு அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களின் எண்ணிக்கை 56 மட்டுமே என்பதும், அதுவே
    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் அறிமுகத்தில் 252 எனவும் தெரிகிறது, ஐயா.

    அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் [இரண்டு வேளையும்] இரண்டு இடுகைகள் வீதமும்,

    ஒவ்வொரு இடுகையிலும் சுமார் 15 முதல் 20 பதிவர்கள் வரை வீதமும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார்கள், ஐயா.

    என் அன்புத்தங்கை மஞ்சு அவர்களிடம் நான் அன்பும், பாசமும், பிரியமும் மட்டுமே வைத்திருப்பதும்,

    அந்த திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் மீது நான் பக்தியே வைத்திருப்பதும் தங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த விஷயம் தானே ஐயா.

    என்னைப்பொறுத்தவரை இவர்கள் இருவருமே பெண்மணிகள் மட்டுமல்ல என் இரு கண்மணிகள் போலவே நான் நினைக்கிறேன் ஐயா.
    .
    நம் இரு கண்களில் எதை ஒஸத்தியாகவும் எதைத் தாழ்த்தியாகவும் நாம் நினைக்க முடியும்? சொல்லுங்கள், ஐயா.

    ஏதோ இந்தத்தகவல்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரணும் என என் மனதுக்குத் தோன்றியது, ஐயா.

    அதனால் இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தும் விட்டேன், ஐயா.

    தாங்களும் நான் சொல்லுவது சரியா என சரிபார்த்துக்கொள்ளவும், ஐயா.

    இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2011/06/blog-post_8977.html

    தலைப்பு:
    SUNDAY, JUNE 26, 2011
    சென்று வருக இராஜராஜேஸ்வரி - வருக ! வருக ! ஆர்.வி,.எஸ்

    நான் சொல்வதில் ஏதாவது தவறு இருப்பின் என்னை மன்னிக்கவும், ஐயா.

    தங்களின் அன்புள்ள,
    வை. கோபாலகிருஷ்ணன் [VGK]

    ReplyDelete
  21. அன்பின் வை.கோ

    தங்களின் தகவல் தவறானதாக இருக்க வாய்ப்பே இல்லை - தாங்கள் தூக்கத்தினைத் துறந்து ஆய்வு செய்து தகவல் கொடுக்கும் போது அத்தகவல் மிகச் சரியானதாகத் தான் இருக்கும். ஐயமே இல்லை. இங்கு நான் மஞ்சுபாஷினி இராஜ இராஜேஸ்வரியினை விட சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றோ அவரது சாதனையை இவர் முறியடித்து விட்டார் என்றோ கூறவில்லை.

    அவரைப் பாராட்டும் விதமாக “அறிமுகப் படுத்தப் பட்ட இடுகைகளீன் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.” என்று அன்றே எழுதி இருக்கிறேன்.

    அன்பு நண்பர் வைகோ - தங்களின் பரிந்துரைகள் அனைத்துமே அருமை - ஒருவர் கூட சோடை போகவில்லை. பொதுவாக இங்கு எழுதும் போது ஒருவரின் சாதனையினை மற்றொருவர் முறியடித்தாரா எனறெல்லாம் பார்ப்பதில்லை. அவரவரைப் பற்றி வார இறுதியில் பாராட்டுவோம் அவ்வளவுதான். நாங்கள் ஆசிரியர்களுடைய ஸ்டாடிஸ்டிக்ஸ் வைத்துக் கொள்வதில்லை.

    தங்களுடைய ஆதங்கத்தினைப் புரிந்து கொள்கிறேன். இருவரும் இரு கண்கள் எனவும் இரு கண்களில் எது சிறந்தது எனவும் நாம் ஆராய்ச்சி செய்ய வில்லை. அது தேவையுமில்லை.

    வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்பவர்கள் அனைவரும் சிறப்பாகத்தான் ப்ணி புரிகிறார்கள். அனைவரையுமே பாராட்டுகிறோம். ஒப்பு நோக்கிப் பாராட்டுவதில்லை.

    தங்கள் மனது வருத்தமடைந்திருந்தால் - அதற்காக மிக்வும் வருந்துகிறேன். தாங்கள் என்னை விட மூத்தவர். தாங்கள் மன்னிப்பு என்ற பெரிய சொற்களை எல்லாம் பயன் படுத்த வேண்டாம்.

    இராஜ இராஜேஸ்வரியின் தினசரிப் பதிவுகள் அனைத்துமே சிறந்தவை - அவர் செய்யும் ஆன்மீகப் பணி மிகச் சிறந்த பணி. பல பதிவுகளில் மனம் நெகிழ்ந்து மறு மொழிகள் இட்டிருக்கிறேன். தங்களுக்குத் தெரியாததல்ல.

    மேன்மேலும் பரிந்துரை செய்க.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. ஒப்பிட்டு நோக்கலின்றி பாராட்டிடும் போது உரிமையுடையோர் மகிழ்வர் என்பது எந்தன் தாழ்மையான கருத்து.

    அத்தோடன்றி காண்பவருக்கும் உறுத்திடா

    நன்றி

    ReplyDelete
  23. மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ரஞ்சனிம்மா வந்து விட்டார்கள்... இனி அமர்க்களம் தான்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  24. cheena (சீனா) said...

    //அன்பு நண்பர் வைகோ - தங்களின் பரிந்துரைகள் அனைத்துமே அருமை - ஒருவர் கூட சோடை போகவில்லை. //

    நவரத்தினங்களின் ஒன்றாக ஜொலிப்பதாக என் மனதுக்குப் படுபவர்களை மட்டுமே, இதுவ்ரை நான் தங்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன் / செய்துகொண்டு இருக்கிறேன் / இனியும் செய்ய இருக்கிறேன்

    அதனால் அவைகள் என்றும் சோடை போக வாய்ப்பேதும் இல்லை தான்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  25. Cheena [சீனா] said...

    //பொதுவாக இங்கு எழுதும் போது ஒருவரின் சாதனையினை மற்றொருவர் முறியடித்தாரா எனறெல்லாம் பார்ப்பதில்லை. அவரவரைப் பற்றி வார இறுதியில் பாராட்டுவோம் அவ்வளவுதான். //

    அது தான் நல்லது. மிகச்சிறந்த வழியும் கூட. அப்படியே செய்யுங்கள்.

    //நாங்கள் ஆசிரியர்களுடைய ஸ்டாடிஸ்டிக்ஸ் வைத்துக் கொள்வதில்லை. //

    தகவலுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  26. Cheena [சீனா] said....

    //இராஜ இராஜேஸ்வரியின் தினசரிப் பதிவுகள் அனைத்துமே சிறந்தவை -

    அவர் செய்யும் ஆன்மீகப் பணி மிகச் சிறந்த பணி.

    பல பதிவுகளில் மனம் நெகிழ்ந்து மறு மொழிகள் இட்டிருக்கிறேன்.

    தங்களுக்குத் தெரியாததல்ல.//

    தெரியும் ஐயா ....

    மிக நன்றாகவே தெரியும் .....

    அந்த உரிமையில் மட்டுமே உங்களிடம் சற்றே மனம் விட்டுப்பேசி விளையாட்டாக வம்பு செய்துள்ளேன்.

    இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்குமே இதுவிஷயத்தில் சில உண்மைகள் தெரியவந்து, ஓர் தெளிவு பிறந்திருக்கக்கூடும் அல்லவா!

    அதனால் மட்டுமே இந்த என் திருவிளையாடலை நடத்தினோம்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  27. Cheena [சீனா] said ...


    //மேன்மேலும் பரிந்துரை செய்க.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    என் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் சமயங்களிலெல்லாம், ஐயா அவர்கள் என்னிடம் வேண்டி விரும்பிக் கேட்கும் போதெல்லாம், ஆபத்பாந்தவனாக இந்த கோபாலகிருஷ்ணன் நிச்சயம் உதவி செய்யக் காத்திருப்பான்.

    நேற்றே நமக்குள் நடந்த தொலைபேசி உரையாடலில் இதைத்தங்களுக்கு நான் உணர்த்தியுள்ளேன் அல்லவா?

    இந்த அக்டோபர் மாதம் பிறந்ததுமே வரிசையாக முதல் மூன்று வாரங்களும் என் அன்புக்குரியவர்கள் தானே வலைச்சர ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்! ;)))))

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    ReplyDelete
  28. நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி

    நல்வாழ்த்துகள் ரஞ்சனி நாராயணன்

    ReplyDelete
  29. வாழ்த்துகள் மஞ்சுபாஷிணி.
    வாழ்த்துகள் ரஞ்சனிம்மா.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. ரஞ்சனி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete