Saturday, October 20, 2012

ஆறாம் நாளிதழ் !

நம்மாளு   : "...தேடி வலை கோடி சென்று ,
                        ஆழ்கடலில் முத்து பல எடுத்து ,
                         ...............................................................
                         ...............................................................
                        வேடிக்கை மனிதரைப் போல்,
                         நான் வீழ்வேனென்று நினைத்தாயா ?"
நான்           : அடப் பாவி அந்த ஈற்றடி நம்ம பாரதியார்டா !
நம்மாளு   : பதறாதே அப்பா  ? பாரதி இப்போது இருந்தால்
                        இப்படி பாடியிருப்பார் என்று தான் சொல்ல வந்தேன் !
நான்            : அப்பாடா இப்பத் தான் நிம்மதி ஆச்சு !
                        அந்த பாட்டு 'தேடி சோறு நிதம் தின்று ..'என்று ஆரம்பிக்கும் .
நம்மாளு  :  ஏன்  இப்படி எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிறாய் ?
                         அது சரி ..வந்த ஜோலியைப் பார்ப்போமா ?
நான்           :  ம் ..
நம்மாளு   : இந்த  வலைச்சரம் எப்படி இருக்கு ?
                         பார்வையால் பசிக்க வைப்பவன்    
                         காதலைத் தருகிறான் 'தின்'னென்று ..
                         சூப்பர் வரிகள் ...யார் தெரியுமா ?
                          http://kuzhanthainila.blogspot.ch/2012/08/2.html
நான்            : யாழ் கவிதைகளே அருமையாகத் தான் இருக்கும் !
நம்மாளு    : என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து 
                         மிதந்து போகிறேன் மேகமாய் ...
                          அட என்ன ஒரு கவித்துவம் ? 
நான்             : அற்புதம் ! யார் எழுதியது ?
நம்மாளு     : http://viyaa-ninaivugal.blogspot.in/2011/06/blog-post.html
நான்               : பேப்பர்ல ஒரு நெகிழ வைத்த நியூஸ்  பார்த்தியா ?
நம்மாளு      : என்ன ?
நான்               : கேரளாவில ஒரு  ப்ரஸ் மீட்  ஏற்பாடு பண்ணி எல்லா
                           பத்திரிகைக் காரங்களும் நம்ம நம்பி நாராயணனிடம்
                           மன்னிப்பு கேட்டாங்களாம்....
நம்மாளு      : நிரபராதியான ஒருத்தரை இப்படி அலைக்கழைக்க
                           வைத்து கடைசியில்  மன்னிப்புன்னு கேட்டா
                           சரியாப் போச்சா ?  எல்லா FIELDல இருக்கிறவங்கள விட
                           பிரஸ் ல இருக்கிறவங்களுக்கு ரொம்ப பொறுப்பு ETHICS
                           வேணும் ..தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தாத் தான்
                           தெரியும் ! எவ்ளவ் மன உளைச்சல் ?
                           அவர் என்ன சொன்னாரு ?
நான்               :  'ஆறு வருஷமா அலைந்ததில ஒண்ணும்  பண்ண முடியாம
                            போச்சு ! விண்வெளி ஆராய்ச்சில,
                            நாம் ஆறு வருஷம் பின் தங்கிட்டோம்னு' சொன்னாரு !
நம்மாளு     :   எவ்வளவு  சத்தியமான வார்த்தை !            
                            இதோ பாருப்பா திருத்தமிழ்னு ஒரு பிலாக் !
                            http://thirutamil.blogspot.in/
நான்              :  SOMETHING INFORMATIVE!
நம்மாளு     :  அட ..இதை பாருப்பா ?
                           http://enathutamilkavithaigal.blogspot.in/2012/10/blog-post.html
நான்             :  நம்ம ரேகா ராகவன் பிலாக் நல்லா இருக்கே !
                           http://rekharaghavan.blogspot.com/2012/09/blog-post_22.html
நம்மாளு    : பிரபல எழுத்தாளர் இவங்க ....இது நல்லா இருப்பதற்கு
                         கேட்கணுமா ?
நான்             : யாருப்பா அது?
நம்மாளு     : நீயே பாரேன் ! சரி வரேன்பா !!
                          http://vidyasubramaniam.blogspot.in/2012/04/blog-post.html
 
                                                  

9 comments:

  1. puthiyavarkal!

    arimukathirkku mikka nantri!

    ReplyDelete
  2. பலர் எனக்குப் புதியவர்கள். ஒவ்வொருவராய் படிக்கணும்...

    நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பொறுப்பாசிரியர் அன்பின் சீனா அவர்கள் எனது "காற்றேதான் கடவுளடா"வில் முதல் வருகை தந்து சிறப்பித்துள்ளார். அவருக்கு ஒரு பூங்கொத்து அங்கே காத்திருக்கிறது. நன்றி.http://padmasury.blogspot.in/

    ReplyDelete
  4. நல்ல பல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள், உங்க பாணியில்.

    ReplyDelete
  5. கவித்துவ அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. சில தளங்கள் அறியாதவை...

    அனைத்து தளங்களும் சிறப்பான தளங்கள்... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  7. பல புதிய அறிமுகங்கள்.. நன்றி நண்பரே

    ReplyDelete
  8. இரவு வணக்கம் (ஆர்.ஆர்.ஆர்)


    இன்று அறிமுகம் செய்த )06)தளங்கள் அத்தனையும் சுப்பர.சுப்பர் ஆறாம் நாளும் வலைப்பூவலைச்சரம் அருமையக உள்ளது.படைப்புக்கள் அத்தனையும் தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்.அண்ணா(ஆர.ஆர்.ஆர்)
    ஹேமா வின் காதல் கவிதை நன்றாக அந்த தளத்தை தேடி எடுத்து வலைச்சரத்தில் பதிவிட்டமைக்குமிக்க நன்றி.
    பார்வையால்
    பசிக்க வைப்பவன்
    காதலைத் தருகிறான்
    'தின்' னென்று !
    இந்த வரிகள் மிக அருமை.

    வியாவின் (உன்னுடன் வாழ்கிறேன்) என்ற தலைப்பில் எழுதப்பட் கவிதையில் எனக்கு பிடித்த வரி

    என்னுடன் நான் உணர்த்த
    மாற்றங்கள் உன்னால் அன்பே..
    உன்னுடன் என் இதயம்..
    உன் உறவு எனக்கு உயிர்
    உன் உறவு பிரிந்தால்
    என் உயிர் பிரியும் உன் மடியில்..

    கவிதை சுப்பர்....

    திருத்தமிழ் என்ற வலைப்பதிவை பார்த வேளையில் ஈமெயில்லை கண்டுபிடித்தது நம்மட தமிழன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

    எல்லாப்படைப்பும் அருமையக உள்ளது அனைத்தையும் தொகுத்து வழங்கிய ஆர்.ஆர.ஆர் (அண்ணா) உங்களுக்கு எனது பலதடவை நன்றி.....நன்றி.....நன்றி....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. கவித்துவ அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..

    குழந்தை நிலாவில் ஆரம்பித்து

    முழு நிலா போன்ற பிரபல பதிவர்

    திருமதி. வித்யா சுப்ரமணியம் வரை

    சும்மா தையல்காரர் போல தைத்துக்

    கொடுத்து விட்டீர்கள். சபாஷ்.


    ஆறாம் நாளும் அருமை நம்மாளு + மூவார் முத்து [R R R]

    அன்புடன்
    VGK

    ReplyDelete