Sunday, October 21, 2012

ஏழாம் நாளிதழ் !

நான்          : நம்மாளு ..வா ....எங்க  கொட்ற மழையில ஜுட்
                       அடிச்சிடுவியோன்னு  பயந்துட்டேன் !
நம்மாளு : ஆமா....வரல்லைன்னா ஏன் வரலைங்க வேண்டியது !
                      வந்தா டேரா போடறான்னு பிரண்ட்ஸ்கிட்ட சொல்ல        
                      வேண்டியது ....
நான்         :  இந்த மழையில இவ்ளவ் சூடா இருக்கியே ?
                       என்ன விஷயம் ?
நம்மாளு : அது சரி வைகோ சார் கிட்ட என்ன சொன்னே ?
நான்          : அவ்ளாவ் தூரம் சிகாகோ போனீங்களே ! முன்னாடியே
                       சொன்னா வடுமாங்கா, புளியோதரை மிக்ஸ் , அரிசி
                       அப்பளம் கட்டு கொடுத்து அனுப்புவேன்னு சொன்னேன் !
நம்மாளு  :  அதை விட்டுத் தள்ளு ..என்னவோ வியட்னாம் வீடு ...டே பை டே ..
                        என்ன விளையாட்டு இது ?
நான்          :  அட..அதைப் போய் நீ பெரிசா எடுத்துக் கிட்டு ? சும்மா ஜோக்குக்கு
                        சொன்னது இது ? நீ யாரு ..நீ வேற ..நான் வேறயா ...கோச்சுக்காத
                        கண்ணா ..இந்த கொட்ற மழையில யாரும் கமென்ட் போட
                        வரல்லேங்க்கிற வருத்தத்தில இருக்கேன்..நீ வேற நம்மள
                         ரூட்ல விட்டானா, அவ்ளவ் தான் கதை கந்தல் ஆயிடும் !
நம்மாளு  : சரி..சரி...உன்னை கோபித்துக் கொள்ளவே முடியல ..ஏன்னா
                       நீ நம்மாளா போயிட்ட ..ஆனா ..ஒரு கண்டிஷன் ..
 நான்          : என்ன ?
நம்மாளு   : இது முடிஞ்சதும் நான் என் ஊரைப் பார்க்க கிளம்பிடறேன் ..
                        சரின்னா உட்காருகிறேன் !
நான்           : கோபம் கொள்ளாதே ..மானே தாபம் கொள்ளாதே !!
நம்மாளு   : இந்த பிசினஸே வேண்டாம் ..என்ன சொல்றே ?
நான்            : நானே டயலாக் தெரியாத டிராமாவில நடிச்சுக்கிட்டு
                        இருக்கேன் ..சரி..சரி..
நம்மாளு   : அப்படி வா வழிக்கு ! இந்த பிலாக் நல்லா இருக்குல்ல  !
                        http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html
நான்           : நிஜம்மாவே நல்லா இருக்கு !
நம்மாளு  : இதப் பாரேன் !
                       http://vannathasan.wordpress.com/2012/10/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/
நான்          : அட ...எப்படி நம்மாளு, வலையில உனக்கு மட்டும் நல்ல
                        மீனாக் கிடைக்குது ?
நம்மாளு  : இந்த ஐஸ் எல்லாம் வாணாம் ! இந்த பிலாக் பாரேன் !
                       http://blog.richmondtamilsangam.org/2007/10/3.html
நான்           : இந்திரா நூயிப் பற்றி தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம்
                        ரொம்ப நாளா இருந்தது எனக்கு !
நம்மாளு   : அட இது கூட நல்லா இருக்கே ?
நான்            : எது ? 
நம்மாளு    : நல்ல இலக்கியம் எல்லாரையும் சென்றடைய வேண்டும்
                        என்கிற உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப் பட்ட பிலாக் !
                        http://azhiyasudargal.blogspot.in/2012/10/blog-post_20.html
நான்            : அலை கடலை விட வலை கடல் ஆழம அதிகம் தான் !
நம்மாளு   : நிச்சயமாக ..எவ்ளாவ் விஷயங்கள் தெரியுது தெரியுமா ?
                        இதைப் பாரேன் !
                        வழி நெடுகிலும் கவிதைகள் ......கவித ...சூப்பர் !
                         http://govipoems.blogspot.com/2012/08/blog-post_31.html
நான்           : நல்லா இருக்குப்பா !
நம்மாளு   : தேனம்மை கவிதைகள் நல்லா எழுதறாங்கப்பா !
                        http://honeylaksh.blogspot.in/2012/10/blog-post_18.html
நான்            : இதோ நம்ம வேல் கண்ணன் கவிதை !
                        http://rvelkannan.blogspot.in/2011/08/blog-post.html
நம்மாளு    : 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை
                         நன்றாக தமிழ் செய்யுமாறே' ங்கிற நம்ம சிவாவை
                         மறந்துட்டியா நீ ?
நான்             : இதோ !
                         http://arutkavi.blogspot.in/2012/07/blog-post_27.html
நம்மாளு     : நிறைய கவிதையா குடுத்திருக்கோம் !
நான்              : கவிதையும், பாடலும் தான் நம்ம வாழ்க்கை !
                          நம் ஒவ்வொருவரின்  வாழ்வு தாலாட்டில் ஆரம்பித்து
                          ஒப்பாரியில் தானே முடிகிறது ...
                          கவிதையே வாழ்வாய் தான் வாழ்கிறோம் !
நம்மாளு      : அதுக்குள்ளே ஏழாம்  நாளும் வந்து விட்டதே !
                           மனதுக்கு ரொம்பவும் நிறைவாக இருக்கு !
நான்              : அரியாசனத்தில் அரசரோடு சரியாசனத்தில்
                           வைத்த தாயன்பு கொண்ட சீனா சாருக்கும் ,
                           இந்த எளியேனையும் ஒரு பொருட்டாய் கருதி
                           அறிமுகம் செய்த வை.கோ . சாருக்கும்,
                           மின்தடை ..இடைவிடா மழை ...கொலு ...
                           போன்ற எல்லாவற்றையும் தாண்டி,
                           இங்கு வந்த அன்புள்ளம் கொண்ட அனைவர்க்கும்
                           என் சிரம் சாய்த்து , கரம் தாழ்ந்து நன்றி !
                           எல்லாருக்கும் தமிழ் என்றால்  தாய்
                           ஆனால் எனக்கு அவள் காதலி !
                           இதோ என்னருமை தமிழ்க் கன்னிக்கு
                            இந்த காதலனின் கவிதை ....!
                         
                            உப்பு சப்பில்லாததற்கு
                           கோபிப்பதில்  நீ வல்லினம் !
                           உன்னை நான் புகழ்கையில்
                           நாணுகின்ற  நீ மெல்லினம் .
                           உன் அன்பில் அகப்பட்ட
                           நான்ஒரு  இடையினம் !
                           அருந்தமிழே , நீ அருகிருக்கையில்
                           அமிழ்தும் கசக்குமே  தினம்தினம் .   ..

          (அனைவருக்கும் நன்றி : வருகிறேன் ....வணக்கம் ...)

 அன்புடன் ,
 "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி .
   
                              
        

44 comments:

  1. ஏழு நாட்களும் சிறப்பாகப் பணி செய்தமைக்கு வாழ்த்துகள்.

    நம்மாளு ஏன் ஊருக்குப்போவேன்னு பயமுறுத்தரார். இன்னும் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பதவி எக்ஸ்டெண்ட் பண்ணலாமான்னு யோசனை இருக்காம்.. :)

    த.ம. 1

    ReplyDelete
  2. "தேனம்மைலஷ்மணன்" சிறந்த வலப்பதிவாளராக [சினேகிதி என ஞாபகம்] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சிறப்பாக எடுத்து பதிகிறீர்கள்.

    ReplyDelete
  3. இங்க மழையே இல்லையே இராமமூர்த்தி சார்.... ஆனா வேலைப்பளு அதிகம்பா... அதனால் தான் ரெண்டு நாளா எட்டிப்பார்க்கமுடியல... அதுக்காக கமெண்ட் வரலை என்று வருத்தமா இருக்கேன்னு சொல்லவே கூடாது..
    கரெண்ட் ஆஃப் காரணமா கூட இருக்கலாம்லப்பா?

    இப்ப தான் வேலை முடிச்சிட்டு ருசியா ராகி ரொட்டியும் வெள்ளரிக்கா தயிர் பச்சடியும் சாப்பிடலாம்னு பார்த்தால் இங்க சரி ஓடிவந்து கமெண்ட் போட்டுடலாம்னு வந்தேன். பார்த்ததும் போட்டுட்டு இதோ இப்ப தான் சாப்பிடப்போறேன்..

    நம்மாளு கூட சேர்ந்துக்கிட்டு நீங்க அடிக்கிற கலாட்டா செம்ம அசத்தல்...

    புதிய அறிமுகங்கள் பகுதியில் எனக்கு மிகவும் பிடித்த தேனம்மை லட்சுமணன் வலைதளம் அறிமுகம் ஆகிருப்பது சந்தோஷம் சார்....

    மீதி இருப்போர் வலைதளமும் ஒரு ரௌண்ட் போயிட்டு வரேன்....

    அசத்தலா சுவாரஸ்யமா ஒவ்வொரு நாளும் நீங்க கொண்டு போறது அருமை சார்...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு நண்பர்களுக்கும் அன்புவாழ்த்துகள்...

    த.ம.2

    ReplyDelete
  4. வணக்கம் ஆர்.ஆர்,ஆர்.

    இன்று வலைப்பூ வலைச்சரத்தில் இறுதி நாளை அடைந்துள்ளிர்கள் 7 நாட்களும் சிறப்பாக படைப்பை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி (அண்ணா). இனி உங்களை நான் உங்கள் வலைப்பக்கம் சந்திப்போம்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. 7 நாளும் அசத்தி விட்டீர்கள்..

    சிறப்பான பணி.. அருமை ..

    முத்தாய்ப்பான கவிதை

    அமிழ்தான பதிவுகளுக்கு அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அலை கடலை விட வலை கடல் ஆழம அதிகம் தான் !

    அறிமுகப்படுத்திய வலைகளும் அருமைதான் ..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. எல்லாருக்கும் தமிழ் என்றால் தாய்
    ஆனால் எனக்கு அவள் காதலி !
    இதோ என்னருமை தமிழ்க் கன்னிக்கு
    இந்த காதலனின் கவிதை ....!
    உப்பு சப்பில்லாததற்கு
    கோபிப்பதில் நீ வல்லினம் !
    உன்னை நான் புகழ்கையில்
    நாணுகின்ற நீ மெல்லினம் .
    உன் அன்பில் அகப்பட்ட
    நான்ஒரு இடையினம் !
    அருந்தமிழே , நீ அருகிருக்கையில்
    அமிழ்தும் கசக்குமே தினம்தினம் . ..
    //

    ஆஹா! அருமையோ அருமை.

    -=-=-=-=-=-=-

    Mrs. ராமமூர்த்தியிடம் போட்டுவிட
    கீழ்க்கண்ட வரிகளை மட்டும் தனியே சேமித்து வைத்துள்ளேன்.

    //ஆனால் எனக்கு அவள் காதலி ! இதோ என்னருமைக் கன்னிக்கு இந்த காதலனின் கவிதை ....!//

    தொடரும்....

    ReplyDelete
  8. நம்மாளு : அது சரி வைகோ சார் கிட்ட என்ன சொன்னே ?

    நான்: அவ்ளாவ் தூரம் சிகாகோ போனீங்களே ! முன்னாடியே சொன்னா வடுமாங்கா, புளியோதரை மிக்ஸ், அரிசி அப்பளம் கட்டு கொடுத்து அனுப்புவேன்னு
    சொன்னேன் !

    நம்மாளு : அதை விட்டுத் தள்ளு ..என்னவோ வியட்னாம் வீடு ...டே பை டே .. என்ன விளையாட்டு இது ?

    நான்: அட..அதைப் போய் நீ பெரிசா எடுத்துக் கிட்டு ? சும்மா ஜோக்குக்கு சொன்னது இது ?

    நீ யாரு ..நீ வேற ..நான் வேறயா ...கோச்சுக்காத கண்ணா .. இந்த கொட்ற மழையில யாரும் கமென்ட் போட வரல்லேங்க்கிற வருத்தத்தில இருக்கேன்..நீ வேற நம்மள ரூட்ல விட்டானா, அவ்ளவ் தான் கதை கந்தல் ஆயிடும் !//

    ஆஹா! உங்களைவிட எனக்கு உங்களிடம் ஒளிந்துள்ள நம்மாளை மிகவும் பிடிச்சுப்போச்சு.

    நம்மாளுக்காகவும், உங்களுக்காகவும்
    கொட்டும் மழையிலும் குடைபிடித்து
    ஏராளமான கமெண்ட்களை தாராளமாக [தொடர்த் தும்மல் போல] போட்டுச்செல்வது என்ற முடிவோடு வந்திருக்கேன்.

    தொடரும்....

    ReplyDelete
  9. //நான்: அலை கடலை விட வலை கடல் ஆழம அதிகம் தான் !//

    ஆழம் தெரியாமல் காலைவிட்ட அனுபவமல்லவா பேசுகிறது.

    அச்சா, பஹூத் அச்சா

    [ஹச்சு ஹச்சு ஹச்சு தொடர்தும்மல் பாடாய்ப்படுத்துகிறது]

    ReplyDelete
  10. அலை கடலை விட வலை கடல் ஆழம அதிகம் தான் !

    அறிமுகப்படுத்திய வலைகளும் அருமைதான் ..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    அதே, அதே, ச பா ப தே !

    த தா ஸ் து !!

    ReplyDelete
  11. //நம்மாளு: அதுக்குள்ளே ஏழாம் நாளும் வந்து விட்டதே ! மனதுக்கு ரொம்பவும் நிறைவாக இருக்கு !//

    எனக்கு மனதுக்கு மிகவும் வருத்தமா இருக்கு.

    இனி நம் ராமமூர்த்தி சாரை வேண்டுமானாலும் நினைத்தால் பார்க்கலாம்.

    ஆனால் அவருடன் பின்னிபிணைந்து பின்னிப்பெடலெடுத்து வந்த நம்மாளைக் காண முடியாதே என வருத்தத்தில் நான் இப்போது.

    ஏழு நாட்களே தான் பழக்கம் என்றாலும் ஏதோ ஏழேழு ஜென்மமாகப் பின்தொடர்ந்து வரும் உறவு போல இன்பம் தந்தவராயிற்றே.


    மறக்க மனம் கூடுதில்லையே !

    தொடரும்...

    ReplyDelete
  12. இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல...

    த.ம. 3

    ReplyDelete
  13. //நான் :

    அரியாசனத்தில் அரசரோடு சரியாசனத்தில் வைத்த தாயன்பு கொண்ட சீனா சாருக்கும்//

    ஆஹா ஆஹா ஆஹா
    ”தாயன்பு” என்பது மிகச்சரியான சொல்லாடல். பாராட்டுக்கள்.

    தாங்கள் அமர்ந்ததால் தான் அந்த அரியாசனத்திற்கே ஓர் தனி அழ்கு ஏற்பட்டுள்ளதாக தாயன்புடன் நம் அன்பின் சீனா ஐயா நினைக்கலாம் என எனக்கு நினைக்கத்தோன்றுகிறது.


    //இந்த எளியேனையும் ஒரு பொருட்டாய் கருதி அறிமுகம் செய்த வை.கோ. சாருக்கும்,//

    நீர் எளியேனா?
    நீங்கள் எனக்கு நம்மாள் அல்லவோ!
    நம் நட்பு இன்று நேற்றா?

    எவ்வளவு நாட்கள் மரத்தடியிலும், கேண்டீனிலும், பஸ் பயணங்களிலும் நேரம் காலம் தெரியாமல், பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடம் மறந்து, மெய்மறந்து கதைத்திருப்போம்.

    நடுவிலே வந்த இந்த என் பணி ஓய்வல்லவா நம்மை வில்லன் போல பிரித்து விட்டது.

    அப்படியும் வலைமூலம் நம் நட்பை வலை பின்னிக்கொண்டு விட்டோமே.

    தாங்கள் என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, தங்கள் சம்சாரத்தோடு வராத தைர்யத்தில், ஏதேதோ பேசினீர்கள். அந்த வீடியோ கேஸட் என்னிடம் பத்திரமாக உள்ளது.

    இப்போது ’தமிழ்’ என்ற பெயரில் ஓர் காதலியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள்.
    அதையும் நான் எனக்கு சாதகமாகவே சேமித்து வைத்துள்ளேன்.

    மேலும் கொழுக்கட்டை + பூர்ணம் பற்றியும்

    சுண்ணாம்பு + சுடிதார் பற்றியும்

    ஏராளமான மேட்டர் நமக்குள் தனியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியது உள்ளது.

    நம்மாளையும் கூட்டி வந்தீர்களானால் எல்லாவற்றையும் அவரைவிட்டே பஞ்சாயத்து செய்யச்சொல்லி பேசி தீர்த்துக்கொள்ளலாம், ஸ்வாமீ.


    தொடரும்.....


    ReplyDelete
  14. //மின்தடை .. இடைவிடா மழை ...கொலு ... போன்ற எல்லாவற்றையும் தாண்டி, இங்கு வந்த அன்புள்ளம் கொண்ட அனைவர்க்கும்
    என் சிரம் சாய்த்து, கரம் தாழ்ந்து நன்றி !//

    வருகை புரிவோருக்கு தினமும் காரசாரமாக சுண்டல் தரப்படும் என அறிவித்திருந்தால் இன்னும் சிலர் வருகை புரிந்திருக்கக்கூடும்.

    ஏனோ அவ்வாறு அறிவிக்கவில்லை.
    நம்மாளும் ஞாபகப்படுத்தவில்லை.

    தினமும் வருகைதந்த எங்களில் சிலருக்கு மட்டுமாவது ஒரு 10 கிலோ நிலக்கடலை சுண்டல், காரசாரமாக, நிறைய தேங்காய் துருவிப்போட்டு, செய்யச்சொல்லி, ஆளுக்கு ஒரு கிலோ வீதம் சூடாகத் தரக்கூடாதா? மழைக்கு ஜோராக இருக்குமே சாப்பிட .....

    பார்த்து ஏதாவது செய்யுங்கோ ஸ்வாமீ.

    ReplyDelete
  15. அன்பின் இராமமூர்த்தி சார்,

    மிகக்குறுகிய கால அறிவிப்புடன் ஒரு சவாலாக இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்றுக்கொண்டு, நன்றாக் நகைச்சுவையாக எழுதி அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்று, எனக்கும் பெருமை சேர்த்து, அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் மகிழ்ச்சியினைத்தந்து விட்டீர்கள்.

    அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுடன் பிரியாவிடை தரும்,
    தங்கள் அன்பு நண்பன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  17. எங்கள் ரிச்மண்ட் தமிழ் சங்கப் பதிவு சுட்டிக்கு நன்றி.

    தொடரட்டும் உங்கள் சுவையான தொகுப்புகள்...

    ReplyDelete
  18. அருமை ராமமூர்த்தி ஸார்!
    உங்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் கவிதை ரொம்பவும் ரசிக்க வைத்தது.

    நம்மாளுடன் உங்கள் உரையாடல் சூப்பர்!


    நீங்கள் குறிப்பிட்டிருந்த தளங்களுக்கு நவராத்திரி கெடுபிடியில் உடனே போக முடியவில்லை.

    நிச்சயம் சென்று பார்க்கிறேன், தீபாவளிக்குள்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. வாங்க சந்திர வம்சம்!

    அன்புடன் ......

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  20. நம்மாளுக்கும் ஏக வருத்தம் வெங்கட் !

    போகும் போது '.....எந்த ஊரில் எந்த நாளில்

    எங்கு காண்போமோ ?.."

    என்று பாடிட்டுத் தான் போனார் !!

    ReplyDelete
  21. ருசியான ராகி ரொட்டியும் வெள்ளரிக்கா தயிர் பச்சடியும் சாப்பிடாம

    கமெண்ட் போட்ட உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம் !

    ராகி தோசை சாப்பிட்டிருக்கிறேன் ...ராகி ரொட்டின்னா என்ன ?

    ReplyDelete
  22. மிக்க நன்றி குணசீலன் !

    தமிழ் அறிந்ததினால்

    தங்களை அறிந்தேனோ?

    தங்களை

    அறிந்ததினால் தமிழ்

    அறிந்தேனோ ?

    ReplyDelete
  23. ரிஷபனுக்கு,

    'அந்த ஏழு நாட்கள்'

    அருமையாகப்

    போச்சு !

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி மேடம்....

    அவ்ளாவ் தான் ஆட்டம் க்ளோஸ்

    படுதா காலி !!

    ReplyDelete
  25. வை. கோ ..சார் ஒரு 2 மினிட்ஸ்

    இருங்க .....நிறைய பேசணும் !!

    ReplyDelete
  26. வாருங்கள் திண்டுக்கல் தனபாலன் !

    அடிக்கடி நம்ம வலைப் பக்கமும் வாங்க !

    ReplyDelete
  27. வாருங்கள் நாகு !

    புதியதாய் கேள்விப்

    படுகிறேன்

    தங்கள் பெயர் !!

    ReplyDelete
  28. ரஞ்சனி மேடம் ....

    வாங்க வணக்கம் !!

    ReplyDelete
  29. வாங்க வை. கோ .சார் ..

    என்னல்லாம் கேள்வி கேட்டீங்க ?

    சார்...சார்...சார்....

    தமிழ்க்கன்னி இல்ல சார்

    தமிழ்த் தாய் தான் சார் அது !

    '..நீராரும் கடலுடுத்தன்னு ..'

    தமிழ்த் தாய் வாழ்த்து

    கேள்விப்பட்டிருப்பிங்களே...

    அதாண்ணா இது !

    கொஞ்சம் மாடர்னா பாடிப்

    பார்த்தேன் ..

    போட்டுக் கொடுத்திங்கன்னா

    என் BODY போயிடும் !!

    சும்மா லோலோ கட்டைக்குச்

    சொன்னேன் ....

    இதெல்லாம் போய்

    போட்டுக் குடுத்துடாதீங்க !

    அப்புறம் புவ்வாக்கு நான்

    எங்க போறது ?

    இப்ப பிரிட்ஜ் எல்லார் வீட்டிற்கும்

    வந்ததால, 'ராப்பிச்சை'ங்கிற

    இனமே அழிஞ்சிப போச்சாம்

    தமிழ்நாட்டில !

    ATLEAST

    எனக்காவது அந்த ப்ரிட்ஜ்ல

    இருந்த பழங்குழம்பு,பழரசம்

    (அதாங்க அரதப் பழசு ரசம் )

    பழம் பொரியல் அல்லாம்

    இத்தனை நாள்

    கிடைச்சு வந்தது !

    அதுக்கும் வைக்காதீங்ணா வேட்டு !

    ஏதாவது எலக்ஷன்ல

    நில்லுங்க..நான்

    உங்களுக்கே போடறேன் ஓட்டு !!



    ReplyDelete
  30. பார்த்தா தொடர் தும்மல்

    போடற ஆளாத் தெரியலியே!!

    தொடர் குண்டு இல்ல

    போடப் போறீங்க !!

    நாக சாமியா ..நாகேஷ் மாமியா ..

    ஜப்பான்ல அமெரிக்காக் காரன்

    அணுகுண்டு போட்டானே

    அது மாதிரி இல்ல

    போடப் போறீங்க !!


    ReplyDelete
  31. வை. கோ. விற்கு மூன்றாம் கேள்விக்கான பதில் இதோ ..



    "..அட ராகவா, ஆழம் தெரியாம காலை

    விட்டுட்டேன் போல் இருக்கே !!!!!!!!!!!!"

    ReplyDelete
  32. வாஸ்தவம் தான் வை.கோ சார் ...

    நம்மாளு என்னோட பின்னிப் பிணைந்து

    பின்னி பெடலெடுத்துட்டார் நிஜமாகவே !!

    ReplyDelete
  33. வைகோ சார் ...

    நம்மாளு எதுக்கு ?

    நானே வரேன் ...

    உங்கள அப்படியே

    அலாக்கா மடக்கிப் போட

    கையில KSKV னு

    பயங்கரமான ஆயுதம்

    ஒண்ணு

    வைச்சிருக்கேன்....

    பயப்படாதீங்க ...

    எதுவுமே முடியலேன்னாத் தான்

    அதை எடுப்பேன் !!!!!



    ReplyDelete
  34. சுண்டலா ?

    அந்த 'கஷ்டம்'

    என்னோடப்

    போகட்டும்

    ReplyDelete
  35. அன்பின் வைகோ சார் !

    மிக்க நன்றி

    'அந்த ஏழு நாட்களுக்கு '

    ReplyDelete
  36. வை.கோ சாருக்கு .....

    கடைசியா ஒண்ணு ......

    அந்த KSKV

    வேற ஒன்றுமில்ல ...

    K என்றால் கதவை

    S என்றால் சாத்தி

    K என்றால் காலில்

    V என்றால் விழு...

    ரொம்ப மிரட்டினீங்கன்னா..

    கதவை சாத்தி

    காலில் விளுந்து

    அளுதுடுவேனாக்கும் !!

    ஆமாம் !!!!!!



    ReplyDelete
  37. அன்பின் இராமமூர்த்தி சார்,

    வணக்கம்.

    //அந்த KSKV
    வேற ஒன்றுமில்ல ...//

    விள்க்கம் கண்டேன். விபீஷண சரணாகதி போல இருக்குது.

    இதை நானும் வ்ழுவட்டை ஸ்ரீநிவாஸன் [வ்.வ.ஸ்ரீ] என்பவரும்
    வேறு மாதிரியாகச் சொல்லுவோம்.

    உங்களுக்கு இந்த கற்பனை நண்பர் ‘நம்மாளு’ போல எனக்கு நிஜ நண்பராக வ.வ.ஸ்ரீ இருந்து வந்தார் 1975 முதல் 1980 வரை. ஆபீஸில் என் பக்கத்து சீட்டு. எனக்கு அப்போது ஓடும் பாம்பை மிதிக்கும் வயதான் 24-25

    அவருக்கு ஒரு 40-45 க்கு மேல் இருக்கும் அப்போதே. இப்போ எங்கே இருக்கிறாரோ தெரியாது.

    இந்த வ.வ.ஸ்ரீ. பற்றிய என் நகைச்சுவைக்கதையொன்று 8 பாகம் வெளியிட்டிருந்தேன். நீங்கள் அதை முழுவதுமாகப் படித்தீர்களோ இல்லையோ, எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒருசில கமெண்ட்ஸ் மட்டும் கொடுத்திருந்தீர்கள்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

    ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.!
    புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.”
    உதயம்: பகுதி 1 / 8

    தொடரும்.....

    ReplyDelete
  38. VGK யின் தொடர்ச்சி....

    ஒருநாள் நானும் வ்.வ.ஸ்ரீ அவர்களும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். வழக்கம் போல் வெட்டிப்பேச்சு தான். அவர் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கிடடத்தட்ட நம் துக்ளக் ஆசிரியர் “சோ” மாதிரி தான் அவரும். உருவம் பேச்சு குணம் எல்லாமே.

    ஏதோ ஒரு குட்டி அதிகாரி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஜீ.எம். ரூமிலிருந்து வெளியே வந்தார். எங்களைக் கிராஸ் செய்து போக இருந்தார்.

    நம்மாளு, வ.வ.ஸ்ரீ சும்மா இருப்பாரா?

    “வாங்கோ மிஸ்டர் x x x x
    என்னாச்சு? ஏதாச்சு?” என அன்பாக விசாரித்தார்.

    [வ.வ.ஸ்ரீ. யின் அனுபவத்தில் அவருக்கு, பாட்டுவிடும் பல ஜீ.எம். களையும், அடிக்கடி பாட்டு வாங்கும் குட்டி அதிகாரிகளையும் பற்றி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இணங்க நன்றாகவே அத்துப்படியாகி தெரிந்துவிடும்.]

    தொடரும்....

    ReplyDelete
  39. VGK யின் தொடர்ச்சி...

    அந்தக்குட்டி அதிகாரிக்கு, தன்னைப் பாட்டுவிட்ட ஜீ.எம். மேல் கோபமான கோபம் போலிருக்கு.

    ஜீ.எம். அவர்களைப்பற்றி காரசாரமாகத்திட்டி வ.வ.ஸ்ரீ.யிடம் நடந்த கதைகளை சுருக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

    வ்.வ.ஸ்ரீ.யும் அவருக்கு சற்றே ஆறுதலாக ஏதோ சொல்லி அனுப்பி வைத்தார்.

    உடனே நான் வ்.வ.ஸ்ரீ.யிடம் கேட்டேன் :

    “ஏன் சார், இவர் இப்படி ஜீ.எம்மைப் போய் கன்னாப்பின்னான்னு திட்டுகிறாரே? மிகவும் தைர்யமானவராக இருப்பாரோ” என தூபம் போட்டுக் கேட்டேன்.

    அதற்கு வ.வ.ஸ்ரீ. அவர்கள் என்னிடம் என்ன தெரியுமா சொன்னார்?

    இவன் சுத்த A.K., இங்கு நம்மிடம் இப்படித்தான் ஏதாவது பேசுவான், மிகவும் வீராப்பாக. உள்ளே பிறகு போய் K.K.T.K வேலை செய்துட்டு வந்துடுவான் என்றார்.

    தொடரும்....




    ReplyDelete
  40. VGK யின் தொடர்ச்சி...

    நான் உடனடியாக "AK என்றால் என்ன? KKTK என்றால் என்ன?" என்றேன் மிகுந்த ஆர்வமுடன்.

    "இது கூடத்தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே” என்றவர், AK என்றால் என்னவென்று சொன்னார். அது சற்றே ”அம்மண” மாக ஆரம்பித்ததால் இங்கு அதை நான் சொல்ல விரும்பவில்லை.

    KKTK என்றால் GM ரூமுக்கு உள்ளே போய் “காலைக் கழுவி தண்ணி குடித்தல்” என்று விளக்கினார்.

    நீங்கள் சொன்ன KSKV ஐப் படித்ததும் ஏனோ எனக்கு இந்த பழைய ஞாபகங்கள் வந்தது, ஸ்வாமீ.

    பிறகு ஒருநாள் AK ஐப்பற்றியும் நேரில் சொல்லிப் புரிய வைக்கிறேன். உங்களுக்கே இந்நேரம் புரிந்திருக்கும் தான். இதெல்லாம் புரியாவிட்டால் நாம் எப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும்?

    BYE FOR NOW ......

    With kind regards & Best Wishes...
    VGK




    ReplyDelete
  41. தங்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி மூவார் சார்

    ReplyDelete